Khub.info Learn TNPSC exam and online pratice

வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்

Q1. பொழுதுபோக்குக்கு முக்கியமான ஊடகங்கள் யாவை?
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் இவை, முக்கிய பொழுது போக்கு அம்சங்களாக இன்றைய நிலையில் உள்ளது. இவற்றுடன், புத்தகங்கள் படிப்பது, சுற்றுலா செல்வது, புனித தலங்கள் செல்வது, பொதுத் தொண்டில் ஈடுபடுவது என பல வழிகள் உள்ளன. பிற்பகுதியில் சொல்லப்பட்டது அனைத்தும், அவரவர் மனநிலை, பின்னணி ஆகியவற்றை சார்ந்துள்ளது. இவையெல்லாமே தலைமுறை மாறுதல்களுக்கேற்ப மாறுதல் அடைந்துள்ளது.

Q2. பொழுது போக்கு ஊடகங்கள் எந்த அமைச்சகத்தின் மேலாண்மையில் இயங்குகின்றன?
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன.
Q3. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்புகள் யாவை?
(1) ப்ரஷார் பாரதி -- PRASHAR BHARATI: நவம்பர் 1997ல் நிறுவப்பட்டது. டெல்லியை தலைநகராகக் கொண்டு, அகில இந்திய வானொலி, தொலைக்காட்சி ஆகிய பொழுது போக்கு ஊடகங்களை மேலாண்மை செய்கிறது.
(2) மத்திய திரைப்பட தணிக்கைக் குழு -- CENTRAL BOARD OF FILM CERTIFICATION: 1952ல் நிறுவப்பட்டு, மும்பையை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது.
Q4. வானொலிப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
குக்லீம்லோ மார்க்கோனி, இத்தாலி -- 1895.
Q5. வானொலி அதிர்வெண் - Radio frequency – Hertz கண்டுபிடித்தவர் யார்?
ஹெய்ன்ரீச் ருடோல்ஃப் ஹெர்ட்ஸ், ஜெர்மனி.
Q6. இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு எப்போது தொடங்கியது?
ஜூலை 1927ல் மும்பையிலும், ஆகஸ்ட் 1927ல் கல்கத்தாவிலும் தனியாரால் தொடங்கப் பட்டது. 1930ல் ஆங்கிலேயர்கள் இதை தேசிய மயமாக்கி, இந்திய ராஜ்ய ஒலிபரப்பு சேவை “Indian State Broadcasting Service” எனப் பெயரிட்டனர். 1936ல், அகில இந்திய வானொலி All India Radio மையம் என பெயரிட்டனர்.
Q7. அகில இந்திய வானொலியை வேறு எந்த அரசு அங்கீகரித்த பெயரில் அழைக்கிறார்கள்? அப்பெயர் எவ்வாறு வந்தது?
""ஆகாஷ்வாணி"" -இந்த வார்த்தையை முதலில் கோர்த்தவர், டாக்டர் எம்.வி. கோபாலசாமி, மைசூர். பிறகு, ரவீந்திரநாத் தாகூர் பரிந்துரையின் பேரில், இந்த பெயர் 1957ல் இந்த பெயரை அகில இந்திய வானொலிக்கு வைக்க முடிவெடுத்தது.
Q8. அகில இந்திய வானொலியின் தலைமையகம் எங்குள்ளது? அதன் தலைமை நிர்வாக அதிகாரி யார்?
ஆகாஷ்வாணி பவன், புது டெல்லி -- டைரக்டர் ஜெனரல் ன் கீழ் இயங்குகிறது.
Q9. அகில இந்திய வானொலியின் பொன்மொழி என்ன?
"பகுஜன் ஹிதயா, பகுஜன் சுகயா" -- "Bahujan Hitaya, Bahujan Sukhaya"
Q10. அகில இந்திய வானொலியின் தலைப்பு இசையை title music அமைத்தவர் யார்?
பண்டிட் ரவி சங்கர்.
Q11. அகில இந்திய வானொலியின் சாதனைகள் என்ன?
(1) உலகின் மிகப்பெரிய வானொலி பிணையம் network ;
(2) 200 க்கும் மேற்பட்ட ஒலிபரப்பு நிலையங்கள்; ;
(3) ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு மண்டல அலுவலகம், மண்டல நிர்வாக அதிகாரி தலைமையில் இயங்குகிறது;
(4) சுமார் 27 மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
Q12. FM -- வானொலி ஒலிபரப்பு முறையை கண்டுபிடித்தவர் யார்?
எட்வின் H. ஆர்ம்ஸ்ட்ராங். அமெரிக்கா. 1930 களில்.
Q13. "விவித பாரதி" “Vividh Bharath” ஒலிபரப்பு எப்போது தொடங்கியது?
1957
Q14. இந்தியா மற்றும் உலகின் உயரமான வானொலி நிலையம் எங்குள்ளது?
லேஹ், லடாக். கடல் மட்டத்திலிருந்து 11800 அடி உயரத்தில்.
Q15. இந்தியாவில் சுமார் எத்தனை அகில இந்திய வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் உள்ளன?
சுமார் 232 நிலையங்கள் -- இந்தியாவின் 99 சதவிகித மக்கள் இந்த வசதியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Q16. நவம்பர் 12ம் தேதிக்கும், அகில இந்திய வானொலிக்கும் உள்ள தொடர்பு என்ன?
12.11.1947 அன்று மகாத்மா காந்தி தேச மக்களுக்கு தனது சொற்பொழிவையாற்றினார். இந்த நாள் ""பொது ஒலிபரப்பு நாள்"" என அனுசரிக்கப்படுகிறது.
Q17. இந்திய தொலக்காட்சிக்கு நிர்வாகப் பெயர் என்ன, யாருடைய தலைமையின் கீழ் இயங்குகிறது?
தூர்தர்ஷன் -- DOORDARSHAN : டைரக்டர் ஜெனரல், ப்ரசார் பாரதி அமைப்பின் கீழ், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், தன்னிச்சை அமைப்பாக இயங்குகிறது. எல்லா தனியார் தொலைக்காட்சி நிலையங்களும், ப்ரசார் பாரதி வழிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கவேண்டும்.
Q18. What is the timeline of Doordarshan’s (Television’s) development in India?
1. 15.09.1959 – சோதனை முறையில் தொடக்கம்.
2. 1965 – டெல்லியில் முதல் முறையாக தொலைக்காட்சி ஒளிபரப்பு.
3. 1972 – மும்பையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம்.
4. 1976 – இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம்.
5. 1982 – டெல்லியிலிருந்து தேசிய ஒளிபரப்பு தொடங்கியது. வண்ண ஒளிபரப்பும் துவக்கம்.
6. 1991 -- தாராளமயமாக்கல் கொள்கை அடிப்படையில், தனியார் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி துவக்கம்.
Q19. இந்தியாவில், வண்ண தொலைக்காட்சி ஒளிபரப்பு எப்போது தொடங்கியது? முதலில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி எது?
15.08.1982 – சுதந்திர தின நிகழ்ச்சியும், புது டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளும்.
Q20. இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் பிரபலமான தொடர் நிகழ்ச்சிகள் tele-serials யாவை?
1. ஹம்லோக் - இந்தி - 1984.
2. புனியாத் -- இந்தி -- 1986.
3. ராமாயண் -- இந்தி – 1987.
4. மகா பாரத் -- இந்தி – 1988.
Q21. மக்களவைத் தொலைக்காட்சி எப்போது முதல் தொடங்கியது?
2004 - மக்களவை செயலகத்தின் கீழ் இயங்கும், சம்சாத் தொலைக்காட்சி அமைப்பால் நடத்தப்படுகிறது. ஒரு நாட்டு பாராளுமன்ற அமைப்பால் நடத்தப்படும் முதல் தொலைக் காட்சி அமைப்பு இதுவே.
Q22. எந்த நாட்டில் முதல் முதலாக தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடர்ந்து ஒளிபரப்பாக தொடங்கியது?
இங்கிலாந்து -- ப்ரிட்டிஷ் ப்ராட்காஸ்டிங் கார்ப்பொரேஷன் -- சுருக்கமாக BBC எனப்படும்.
Q23. தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?
இயந்திர வகை -- ஜான் லாஜிக் பெய்ர்டு -- 1926 மின்னணு வகை – P.T. ஃப்ராம்வொர்த் -- அமெரிக்கா.
Q24. எந்த நிகழ்வினால், இந்திய தொலக்காட்சி ஒளிபரப்பு வேகமாக வளர உதவியாக இருந்தது?
1983ல் இன்சாட் INSAT செயற்கைக்கோள் அனுப்பப்பட்டதிலிருந்து. அதற்குப் பிறகு இவ்வகை செயற்கைக்கோள் பல அனுப்பப்பட்டு, தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தது.
Q25. புகழ்பெற்ற ஆங்கிலத் தொடர்களான Big Brother, Deal or No Deal, Star Academy போன்றவைகளை தயாரித்த நிறுவனம் எது?
எண்டெமோல் -- Endemol – நிறுவியவர்கள் Joop Ende மற்றும் John Mol -- நெதர்லாந்து.
Q26. இந்தியத் தொலைக்காட்சி எப்போதிலிருந்து ""தூர்தர்ஷன்"" எனப் பெயர் பெற்றது?
15 ஆகஸ்ட், 1982.
Q27. தூர்தர்ஷன் என்ற அரசாங்க தொலைக்காட்சி அமைப்பு எந்த அமைப்பின் கீழ் இயங்குகிறது?
ப்ரசார் பாரதி கார்ப்பொரேஷன் -- Prasar Bharati Corporation -- 1977.
Q28. ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷனுக்கான அடையாள இசை வடிவமைத்த இசைக்கலைஞர் யார்?
பண்டிட் ரவிசங்கர்.
Q29. தூர்தர்ஷனின் பொன் மொழி வாக்கியம் என்ன?
சத்யம், சிவம், சுந்தரம். Satyam Shivam Sundaram.
Q30. நம் நாட்டின் முதல் தொலைக்காட்சி நெடுந்தொடர் நிகழ்ச்சி எது?
"தீஸ்ரா ராஸ்தா" -- 2.5.1962 முதல் ஒளிபரப்பப்பட்டது.
Q31. திரைப்படம் என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள், அதிகமான பேருக்கு ஒரு பொழுது போக்கு படத்தை தொடர்ச்சியாக இரண்டு மூன்று மணி நேரத்துக்கு, ஒரு திரையின் மூலம் ஒளிபரப்பி இயந்திரத்தின் மூலம் போட்டுக்காட்டுவது.
Q32. இந்தியாவில் திரைப்படம் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
07.07.1896 அன்று லூமியர் சகோதரர்கள் 6 குறும்படங்களை பம்பாய் வாட்சன் விடுதியில் திரையிட்டுப் போட்டுக் காண்பித்தார்.
Q33. லூமியர் சகோதரர்கள் திரையிட்டுக் காண்பித்த 6 குறும்படங்கள் யாவை?
1. Entry of cinematography. 2. The Sea bath. 3. Arrival of a train. 4. A Demolition. 5. Ladies and soldiers on wheels. 6. Leaving the factory.
Q34. திரைப்படம் தினசரி அளவில் எப்போது காண்பிக்கப்பட தொடங்கியது?
1897ல், க்ளிண்டன் நிறுவனத்தின் Meadows Street Photography Studio என்ற துணை நிறுவனத்தால்.
Q35. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் யாரால் முதலில் தயாரிக்கப்பட்டது?
""புண்டாலிக்"" -- ""Pundalik"" - தயாரித்தவர்கள் -- N.G.Chitre and R.G. Torney, P.R. Tipnis ஆகியோரால் சுமர் 1500 அடி நீளம் -- 18.5.1912 அன்று வெளியிடப்பட்டது. இது ஒலி இல்லாத படம்.
Q36. நம் நாட்டின் முதல், முழு நீள, வணிக ரீதியான, திரைப்படம் எது?
"ஹரிச்சந்திரா" -- 1913 -- தயாரித்தவர் தாதா சாஹேப் ஃபால்கே -- இந்தி.
Q37. தென் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது?
"கீச்சக வதம்" -- தயாரித்தவர் - ரங்கசாமி நடராஜ முதலியார் -- 1918 .
Q38. தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது?
"பக்த ப்ரஹ்லாத்" -- H.M.ரெட்டி.
Q39. ஒலியுடன் கூடிய முதல் இந்திய திரைப்படம் எது?
""ஆலம் ஆரா"" – 1931. தயாரித்தவர் அர்தேஷிர் கான்-- இந்தி. இதற்கு அடுத்த படம் ""ஜமாய் சஷ்டி"" -- பெங்காலி.
Q40. இந்தியாவின் முதல் பெண் நடிகர் எனக் கருதப்படுபவர் யார்?
கமலா பாய் கோகலே. மோஹினி பீமாசூர் என்ற படத்தில் நடித்தார்.
Q41. முதல் சமஸ்கிருத திரைப்படம் எது?
"ஆதி சங்கரா" -- தயாரித்தவர் G.V.அய்யர்.
Q42. இந்திய தேசிய திரைப்பட காப்பகம் எங்குள்ளது?
பூனா -- 1964 ல் நிறுவப்பட்டது.
Q43. இந்தியாவின் முதல் முப்பரிமாண (3d) திரைப்படம் எது?
""மை டியர் குட்டிச்சாத்தான்"" -- மலையாளம் -- தயாரித்தவர்-நவோதயா அப்பாச்சான். இயக்குனர் - ஜிஜோ பன்னூஸ்.
Q44. நம் நாட்டில் அதிகமான செய்தி குறும்படங்களை தயாரித்து வெளியிட்ட அமைப்பு எது? (தொலைக்காட்சி தனியார் வசம் ஆவதற்கு முன்)
FILMS DIVISION OF INDIA - 1948ல் நிறுவப்பட்டு, பாம்பே தலைமையகமாகக் கொண்டது.
Q45. கணினி மூலம் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் எது?
"Toy Story" --1995 – வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
Q46. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி தயாரிக்கப்பட்ட படம் எது?
"Pehla Aadmi" -- தயாரித்தவர் பிமல் ராய் -- 1950.
Q47. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ண திரைப்படம் எது?
"Bilwa Mangal" -- 1932.
Q48. இந்திய திரைப்பட உலகின் முதல் பின்னணிப் பாடகர் யார்?
பங்கஜ் மல்லிக் -- பாக்யசக்ரா என்ற திரைப்படத்தில். இவர் தான் தாதா சாஹேப் ஃபால்கே விருது பெற்ற முதல் இசை இயக்குனர்.
Q49. டிசம்பர் 28, இந்திய திரைப்பட உலகில், ஒரு முக்கியமான நாள். அது என்ன?
1895ல், லூமியர் சகோதரர்கள் (ஆகஸ்டி & லூயிஸ்) , கட்டண ரீதியில், முதல் முதலாக திரைப்படம் வெளியிட்டு திரைப்படத்துறையை வணிக உலகுக்கு எடுத்துச் சென்ற நாள்.
Q50. இந்தியாவில் திரைப்பட கல்வி மையங்கள் எங்குள்ளன?
1. Film and Television Institute, Pune.
2. Asian academy of Film and Television, Noida, UP.
3. National School of Drama, New Delhi.
4. Film Institute, Taramani, Chennai.
Q51. "திரைப்பட நகரங்கள்" Film cities என்பது என்ன?
திரைப்படங்கள் தயாரிப்பதற்காக, மிகப்பெரிய பரந்த அளவிலான இடத்தில், அழகான பின்னணி அமைப்புகள், கட்டிடங்கள், ஆய்வகங்கள், பதிவு கூடங்கள் என எல்லாவிதமான வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அமைக்கப்பட்டுள்ள இடம்.
Q52. இந்தியாவில் புகழ் பெற்ற திரைப்பட நகரங்கள் யாவை?
1. ராமோஜி திரைப்பட நகரம் -- RAMOJI FILM CITY : சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில், உலகில் மிகப்பெரிய, திரைப்பட நகரம். ஆந்திர பிரதேசத்தின் புகழ் பெற்ற ராமோஜி வணிக குழுமத்தால் 1966ல் தொடங்கப்பட்டது.
2. நொய்டா திரைப்பட நகரம் -- NOIDA FILM CITY : சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், மார்வாஹ் திரைப்பட நிறுவனத்தால் நிறுவப்பட்டது.
3. எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் -- TAMIL NADU MGR FILM CITY , தரமணி, அடையார், சென்ன. அவ்வை சண்முகி, முதல்வன் போன்ற பல படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளது. 1994ல் தொடங்கப்பட்ட இந்த வசதி, தற்போது இயக்கத்தில் இல்லை.
4. மும்பை திரைப்பட நகரம் -- MUMBAI FILM CITY -- 1977ல் மகாராஷ்டிரா அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு வசதி. பல படங்கள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. .
Q53. இந்திய திரைப்பட உலகில், தயாரிப்பு, வணிகம், வேலைவாய்ப்பு, என பல வகைகளில் முன்னணியில் இருக்கும் திரைப்பட தயாரிப்பு மாகாணங்கள் யாவை? அவைகளின் சிறப்புப் பெயர் என்ன?
1. இந்தி திரைப்பட உலகம் – பாலிவுட் Bollywood.
2. தெலுங்கு மற்றும் பெங்காலி திரைப்பட உலகம் – டாலிவுட் Tollywood
3. தமிழ் திரைப்பட உலகம் -- கோலிவுட் Kollywood
4. கன்னட திரைப்பட உலகம் -- சாண்டல்வுட் Sandalwood
5. மலையாளம் திரைப்பட உலகம் -- மாலிவுட் Mollywood
6. குஜராத்தி திரைப்பட உலகம் -- தாலிவுட் – Dhollywood.
Q54. இந்திய் சினிமாத்துறையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, திரைப் படங்களை தணிக்கை செய்வதும் எந்த அமைப்பு?
மத்திய திரைப்பட கண்காணிப்பு குழு -- Central Board of Film Certification – சுருக்கமாக “Censor Board” – என்றழைப்பர். தலைமையகம் மும்பை. மண்டல அலுவலகங்கள், சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் மற்றும் கல்கத்தாவில் இயங்குகிறது.
Q55. திரைப்படங்கள் என்னென்ன பிரிவுகளில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன?
1. “U” – Universal/Unrestricted -- அனைவருக்கும் தடையில்லாதது.
2. “U/A” – Unrestricted but requires adult accompaniment. அனைவருக்கும், ஆனால், வயது வந்தோரின் மேற்பார்வையில் பார்க்க அனுமதிக்கப்படும்.
3. “A” – “Adults only” -- வயது வந்தோருக்கு மட்டும்.
4. “S” – “Special Category” – இந்த பிரிவு அங்கீகாரம் அரிதானது. ஏனெனில் இது, குறிப்பிட்ட பிரத்தியேக மக்களுக்கு காண்பிக்கப்படக்கூடியது.
Q56. திரைப்படங்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் எப்போது முதல் வழங்கப்படுகிறது?
1954 முதல். திரைப்படத் துறையின் பல பிரிவுகளுக்கு, தகுதி அடிப்படையில், பல விதமான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய அரசாங்கத்தால், நியமிக்கப்பட்ட நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படுகிறது. 1973ல் நிறுவப்பட்ட, திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் இந்த குழுவை நியமிக்கிறது. விருதுகள் குடியரசுத்தலைவரால் வழங்கப்படுகிறது.
Q57. மத்திய அரசாங்கத்தால் என்னென்ன விருதுகள் வழங்கப்படுகின்றன?
(A) தங்கத்தாமரை -- Golden Lotus: விருது. ""ஸ்வர்ண கமல்"" என்று அழைக்கப்படுகிறது. இது கீழ்க்கண்ட துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
(அ) சிறந்த திரைப்படம்
(ஆ) சிறந்த இயக்குனர்.
(இ) முழுமையான பொழுதுபோக்கு.
(ஈ) சிறந்த சிறுவர்களுக்கான திரைப்படம்.
(B) வெள்ளித் தாமரை -- Silver Lotus: ""ரஜத் கமல்"" என்றழைக்கப்படுகிறது. கீழ்க்கண்ட துறைகளுக்கு வழங்கப்படுகிறது:
(1) சிறந்த நடிகர் & நடிகை.
(2) சிறந்த துணை நடிகர்/நடிகை.
(3) சிறந்த குழந்தை நடிகர்.
(4) சிறந்த ஒளிப்பதிவு
(5) திரைக்கதை
(6) கலை இயக்குனர்
(7) உடை அலங்காரம்
(8) பாடல் வரிகள்
(9) ஆண் & பெண் பின்னணி பாடகர்கள்
(10) ஆடற்கலை
(11) ஒலிப்பதிவு
(12) தொகுத்தமைப்பு
(13) சிறப்பு விளைவுகள்
(14) இரண்டாவது சிறந்த திரைப்படம்.
(15) நடுவர் குழு விருது.
(16) சிறந்த மண்டலமொழி திரைப்படம். (17) சிறந்த ஆங்கில படம் (18) குடும்ப நலன் பற்றிய திரைப்படம்.
(19) சமூக நல திரைப்படம்.
(20) சுற்றுச்சூழல் பற்றிய திரைப்படம்.
(C) நர்கீஸ் தத் விருது --Nargis Dutt Award: தேசிய ஒற்றுமைக்கான சிறந்த திரைப்படம்.
(D) இந்திரா காந்தி விருது -- Indira Gandhi Award: முதல் திரைப்படம் எடுத்த சிறந்த இயக்குனர்.
(E) தாதா சாகேப் ஃபால்கே விருது --Dadha Saheb Phalke Award. சினிமாத்துறைக்கு வாழ்நாள் சாதனை புரிந்ததற்கான விருது. திரைப்படத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்- படுகிறது.
Q58. திரைப்பட முதல் தேசிய விருது என்று வழங்கப்பட்டது?
10 அக்டோபர் 1954
Q59. தாதா சாகேப் விருது என்பது என்ன?
திரைப்படத் துறையில் வாழ் நாள் சாதனை புரிந்தவர்களுக்காக, இந்திய சினிமாவின் தந்தை எனப்படும் தாதா சாகேப் ஃபால்கே நினைவாக வழங்கப்படும் விருது. 2016 நிலையில் 10 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும், சால்வையும் வழங்கப்படுகிறது.
Q60. திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் ஃபால்கே விருது முதன் முதலில் பெற்றவர் யார்?
தேவிகா ராணி -- 1969 -- இந்தி.
Q61. திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் ஃபால்கே விருது பெற்ற தமிழ் திரைப்பட கலைஞர்கள் யாவர்?
1. எல்.வி. ப்ரசாத். 1982,
2. சிவாஜி கணேசன் 1996
3. கே. பாலச்சந்தர் -- 2010.
Q62. திரைப்படத் துறையின், சிறந்த நடிகர் மற்றும் நடிகை விருதுகளை முதலில் பெற்றவர்கள் யாவர்?
நடிகர் -- உத்தம் குமார்.
நடிகை -- நர்கீஸ் தத்.
Q63. தாதா சாகேப் விருதுகள் பெற்றவர்கள் பட்டியல்:
எண் வருடம் பெயர்/மொழி
1. 1969 தேவிகா ராணி -- இந்தி
2. 1970 பிரேந்திரநாத் சர்க்கார் -- பெங்காலி
3. 1971 ப்ரிதிவிராஜ் கபூர் -- இந்தி
4. 1972 பங்கஜ் மல்லிக் -- பெங்காலி
5. 1973 ரூபி மெயர்ஸ் (சுலோச்சனா) -- இந்தி
6. 1974 பி.என்.ரெட்டி -- தெலுங்கு
7. 1975 திரேந்திரநாத் கங்குலி -- பெங்காலி
8. 1976 கனன் தேவி -- பெங்காலி
9. 1977 நிதின் போஸ் -- பெங்காலி
10. 1978 ராய்சந்த் போரால் -- பெங்காலி
11. 1979 சொஹ்ராப் மோடி -- இந்தி
12. 1980 பைதி ஜெயராஜ் -- இந்தி
13. 1981 நௌஷாத் -- இந்தி
14. 1982 எல்.வி.ப்ரசாத் -- தமிழ்
15. 1983 துர்கா கோட்டே -- இந்தி
16. 1984 சத்யஜித் ரே -- பெங்காலி
17. 1985 வி. சாந்தாராம் -- இந்தி
18. 1986 பி.நாகி ரெட்டி -- தெலுங்கு
19. 1987 ராஜ் கபூர் -- இந்தி
20. 1988 அசோக் குமார் -- இந்தி
21. 1989 லதா மங்கேஷ்கர் -- இந்தி
22. 1990 நாகேஸ்வரராவ் -- தெலுங்கு
23. 1991 பெல்ஜி பந்தார்கர் -- மராத்தி
24. 1992 பூபேன் ஹசாரிகா -- அஸ்ஸாமீஸ்
25. 1993 மஜ்ரூஹ் சுல்தான்புரி -- இந்தி
26. 1994 திலீப் குமார் -- இந்தி
27. 1995 ராஜ் குமார் -- கன்னடம்
28. 1996 சிவாஜி கணேசன் -- தமிழ்
29. 1997 கவி ப்ரதீப் -- இந்தி
30. 1998 பி.ஆர். சோப்ரா -- இந்தி
31. 1999 ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி -- இந்தி
32. 2000 ஆஷா போன்ஸ்லே -- இந்தி
33. 2001 யாஷ் சோப்ரா -- இந்தி
34. 2002 தேவ் ஆனந்த் -- இந்தி
35. 2003 ம்ரினால் சென் -- பெங்காலி
36. 2004 அதூர் கோபாலகிருஷ்ணன் -- மலையாளம்
37. 2005 ஷ்யாம் பெனெகல் -- இந்தி
38. 2006 தபன் சின்ஹா -- பெங்காலி
39. 2007 மன்னா டே -- பெங்காலி
40. 2008 வி.கே.மூர்த்தி -- இந்தி
41. 2009 டி. ராமா நாயுடு -- தெலுங்கு
42. 2010 கே. பாலச்சந்தர் -- தமிழ்
43. 2011 சௌமித்ர சட்டர்ஜி -- பெங்காலி
44. 2012 ப்ரான் -- இந்தி
45. 2013 குல்ஸார் -- இந்தி
46. 2014 சஷிகபூர் -- இந்தி
47. 2015 மனோஜ்குமார் -- இந்தி
48. 2016 .............
49. 2017 ..............
50. 2018 ............
Q64. திரைப்பட தேசிய விருது 2016 (2015க்கான)
எண் விருது பெயர்/படம்/துறை
1. தாதா சாகேப் ஃபால்கே விருது மனோஜ்குமார்
2. சிறந்த திரைப்படம் பாஹூபலி--தெலுங்கு
3. முதல் திரைப்பட இயக்குனர் மாசான் -- இந்தி
4. முழு பொழுதுபோக்கு பஜ்ரங்கி பைஜான்-இந்தி
5. சிறந்த சிறுவர் படம் ட்யூரோண்டோ-இந்தி
6. சிறந்த இயக்குனர் சஞ்ச்ய் லீலா பன்சாலி -- பாஜிராவ் மஸ்தானி
7. சிறந்த நடிகர் அமிதாப் பச்சான் -- பிக்கு
8. சிறந்த நடிகை கங்கனா ரனௌட் -- தனு வெட்ஸ் மனு ரிடர்ன்
9. சிறந்த துணை நடிகர் சமுத்திரக்கனி -- விசாரணை
10. சிறந்த துணை நடிகை தன்வி ஆஸ்மி -- பாஜிராவ் மஸ்தானி
11. சிறந்த ஆண் பின்னணிபாடகர் மகேஷ் காலே -- மராத்தி
12. சிறந்த பெண் பின்னணிபாடகி மொனாலி தாகூர் -- இந்தி
13. சிறந்த இசை இயக்குனர்-பாடல் எம். ஜெயச்சந்திரன் -- மலையாளம்.
14. சிறந்த இசை இயக்குனர் இளையராஜா -- பின்னிசை
15. பிரத்தியேக நடுவர் விருது கல்கி கோச்லின் - நடிகை.
Q65. இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்துபவர்கள் யார்? என்ன விருதுகள் வழங்கப்படுகின்றன?
இந்திய திரைப்பட விழா செயலகத்தால் - Indian Directorate of Film Festivals மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. 1952ல் முதல் சர்வதேச திரைப்பட விழா நடத்துவது தொடங்கியது. 1975 முதல் இது ஒரு வருடாந்திர விழாவக நடத்தப்படுகிறது. ஆசிய, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகள் திரைப்படங்கள் இதில் பங்கு பெறுகின்றன. சிறந்த இயக்குனருக்கு தங்க மயில் + 10 லட்சம் ரொக்கப் பரிசும், திறமை உள்ள புதிய இயக்குனருக்கு வெள்ளி மயில் + 5 லட்சமும், மற்ற துறைகளுக்கும் இதே போன்ற பரிசுகள் வழங்கப்படுகின்றன.
Q66. "ஹாலிவுட்" என்ற உலகப்புகழ் பெற்ற திரைப்பட அமைப்பு எங்குள்ளது?
லாஸ் ஏஞ்செல்ஸ், கலிஃபோர்னியா, அமெரிக்கா. 1910ல் நிறுவப்பட்டது. இது ஒரு மாவட்ட அந்தஸ்து பெற்ற இடம்.
Q67. திரைத்துறைக்கு அளிக்கப்படும் தேசிய விருதுகளின் ரொக்கப்பரிசு விவரம்:
1. ரூ.10,00,000 -- தாதா சாகேப் ஃபால்கே விருது.
2. ரூ.2,50,000 -- சிறந்த படம், சிறந்த இயக்குனர்.
3. ரூ.2,00,000 -- முழு பொழுதுபோக்கு, நடுவர் விருது.
4. ரூ.1,50,000 -- சிறந்த படம் - சிறுவர், தேசிய ஒற்றுமை, சமூக நலன், சுற்றுச்சூழல்.
5. ரூ.1,25,000 -- சிறந்த முதல் பட இயக்குநர்.
6. ரூ. 50,000 -- இதர அனைத்து துறைகளுக்கும்.
Q68. ஹாலிவுட் ல் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது?
“In Old California” 1910/1911ல், D.W. க்ரிஃபித் என்பவரால் தயாரிக்கப்பட்டது.
Q69. உலகளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படுவது எது?
ஆஸ்கார் விருது/அகாடமி விருது எனவும் அழைக்கப்படுகிறது.
Q70. ஆஸ்கார் விருதுகள் எந்த அமைப்பால் வழங்கப்படுகிறது?
""அம்பா"" -- Academy of Motion Pictures Arts and Science (AMPA) – என்ற தொழில்ரீதியான அமைப்பு. 11 ஜனவரி 1927ல் நிறுவப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.
Q71. ஆஸ்கார் விருது என்பது என்ன?
ஆஸ்கார் என்ற பெயர் கொண்ட ஒரு உருவச்சிலை.
Q72. ஆஸ்கார் சிலையை வடிவமைத்தவர் யார்?
அம்பா அமைப்பின் உறுப்பினராக இருந்த செட்ரி கில்டன்ஸ் Cedric Gildons, என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ஜார்ஜ் ஸ்டான்லி என்ற கலைப்பளி மாணவரால் களிமண்ணில் செய்யப்பட்டு, பிறகு டின் மற்றும் தாமிர உலோகத்தால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டது. இது உண்மையாக, நியூயார்க் நகர விடுதியில், 1929ல் ஐந்தே நிமிடங்களில் மேசைத்துணியில் வடிவமைக்கப்பட்டது.
Q73. ஆஸ்கார் சிலையின் வடிவ அளவுகள் என்ன?
உயரம் -- 13.5 அங்குலம்/34 செ.மீ., எடை -- 3.85 கிலோ. இந்த உருவச்சிலையில், ஒரு போர் வீரர் கையில் வாள் ஏந்தியது போல் காணப்படும்.
Q74. "ஆஸ்கார்" என்ற பெயர் எவ்வாறு வந்தது?
இந்த சிலையின் வடவமைப்பை அகாடமியின் நூலக காப்பாளர் மார்கரெட் ஹென்ரிக் பார்த்துவிட்டு, அது அவருடைய மாமா ஆஸ்கார் போன்று உள்ளது என குறிப்பிடவே, அந்த பெயர் நிலைத்துவிட்டது.
Q75. ஆஸ்கார் விருதைப் பெற்ற முதல் திரைப்படம் எது?
1928 – "Wings".
Q76. ஆஸ்கார் விருது பெற்ற முதல் வண்ணத் திரைப்படம் எது?
“Gone with the Wind” -- 1939.
Q77. ஆஸ்கார் விருது வழங்கும் விழா முதலில் எங்கு நடந்தது, இப்போது எங்கு நடக்கிறது?
16.51929 முதல் ரூஸ்வெல்ட் விடுதி, நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. இப்போது தொடர்ந்து Dorothy Chandler Pavilion, Los Angeles County Music Centre, நியூயார்க் நகரில் நடத்தப்படுகிறது.
Q78. எந்த திரைப்படங்கள், அதிகமான ஆஸ்கார் விருதை பெற்றுள்ளன?
ஆஸ்கார் விருது, திரைப்படத்துறையின் பல பிரிவுகளுக்கும் வழங்கப்படுகிறது. அவ்வகையில், ஒரே திரைப்படம் பல பிரிவுகளில் இந்த விருதைப் பெறலாம். அதன்படி, ""பென்ஹர்"" Benhur மற்றும் ""டைட்டானிக்"" Titanic மற்றும் ""லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்"" Lord of the Rings என்ற மூன்று திரைப்படங்களும் 11 விருதுகளை பெற்றுள்ளன.
Q79. எந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அதிகமான ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளது?
வால்ட் டிஸ்னி நிறுவனம் -- 26 ஆஸ்கார் விருதுகள்.
Q80. அதிகமான ஆஸ்கார் விருதுகளை வென்ற நடிகை யார்?
கேத்தரின் ஹெப்பர்ன் -- Katherine Hepburn – நான்கு முறை -- திரைப்படங்கள்: 1) Morning Glory, 1932. 2) Guess Who is Coming to Dinner, 1967. 3) The Lion in Winter, 1968. 4) On Golden Pond – 1981.
Q81. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அதிகமான ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளனர்?
Walter Houston (1950 ), John Houston (1982,1985 ), and Angelica Houston (1985).
Q82. ஆஸ்கார் விருதுகளைப் புறக்கணித்தவர்/கள் யார்?
ஜார்ஜ் ஸ்காட் -- George Scott -- திரைப்படம் “Patton” மற்றும் மார்லன் ப்ராண்டோ -- Marlon Brando -- திரைப்படம் “Godfather” ஆகியோர் சில சொந்த காரணங்களுக்காக.
Q83. ஆஸ்கார் விருதைப் பெற்ற இந்திய திரைப்பட வல்லுனர்கள் யாவர்?
1. சத்யஜித் ரே – பெங்காலி திரைப்பட இயக்குனர் -- வாழ்நாள் சாதனை விருது -- 1992.
2. பானு அத்தையா -- உடை அலங்காரம் -- திரைப்படம் ""காந்தி"" -- 1982.
3. ஏ.ஆர். ரகுமான் -- இசை -- திரைப்படம் ""Slum Dog Millionaire"" – 2009.
4. ரெசூல் பூக்குட்டி -- ஒலி அமைப்பு – திரைப்படம் ""Slum Dog Millionaire"" – 2009.
5. குல்ஸார் -- பாடல் வரிகள் – திரைப்படம் ""Slum Dog Millionaire"" – 2009.
6. ராகுல் தக்கார் -- அறிவியல் தொழில்நுட்பத்துக்காக -- 2016
7. காட்டெலேங்கோ லியோன் -- அறிவியல் தொழில் நுட்பத்துக்காக -- 2016.
Q84. 1950 முதல், ஆஸ்கார் விருது பெறுபவர்கள், ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அது என்ன?
"ஆஸ்கார் விருதை விற்கமாட்டோம்" என்ற உறுதிமொழி.
Q85. புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க், தனது திரைப்படம் “Schindler’s List” ஆஸ்கார் வென்றவுடன், அதை எவ்வாறு வர்ணித்தார்?
"“Oh! Wow! This is the best drink of water, after the largest drought of my life” -- பொருள் -- என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெருத்த வறட்சிக்குப் பிறகு, நான் அருந்திய நல்ல குடிநீர்"" .
Q86. ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டு 20 வருடங்களுக்குப் பிறகு, எந்த திரைப்படத்துக்காக புகழ் பெற்ற நடிகர் சார்லி சாப்ளின் ஆஸ்கார் விருது பெற்றார்?
"" Lime Light "" என்ற திரைப்படம் 1952ல் வெளியிடப்பட்டு, 1972ல் ஆஸ்கார் விருது பெற்றார்.
Q87. ஆஸ்கார் விருதை ஏற்றுக்கொண்டு, நீண்ட நேரம் நன்றி சொற்பொழிவு ஆற்றியவர் யார்?
க்ரீன் கார்ஸன் – 1984ல் “Mrs.Miniver” என்ற திரைப்படத்து விருது வென்று, சுமார் ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றினார்.
Q88. ஆஸ்கார் விருதைப்பெற்ற ஒரே சண்டைப்பயிற்சி நடிகர் யார்?
Yakhima Canuti -- 1967ல் -- Benhur திரைப்படத்தில் ரதச்சண்டை பட அமைப்புக்காக.
Q89. சிறந்த நடிகர் ஆஸ்கார் விருதைப் பெற்ற முதல் கருப்பு இன நடிகர் யார்?
சிட்னி பாய்ஷர்.
Q90. மறைவுக்குப் பின் ஆஸ்கார் விருதை பெற்ற முதல் நடிகர் யார்?
பீட்ட்ர் ஃபிஞ்ச். Peter Finch – 1976.
Q91. ஆஸ்கார் நடுவர் குழுவில் இடம் பெற்ற இரு இந்திய திரைப்பட பிரமுகர்கள் யார்?
பானு அத்தைய்யா மற்றும் அஷுதோஷ் கௌரிக்கர்.
Q92. உலகளவில் நடத்தப்படும் புகழ்பெற்ற திரைப்பட விழாக்கள் யாவை?
1) கேன்ஸ் திரைப்பட விழா: Cannes Film Festival: 1939 முதல் ஃப்ரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடத்தப்படுகிறது. Golden Palm/Plame D’ மிகப்பெரிய விருது.
2) பெர்லின் திரைப்பட விழா: Berlin Film Festival: 1951 முதல் ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் நடத்தப்படுகிறது. Golden Bear & Silver Bear விருதுகள் வழங்கப்படுகின்றன.
3) வெனிஸ் திரைப்பட விழா: Venice Film Festival: இத்தாலியின் வெனிஸ் நகரில் 1932 முதல் வருடந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழா.. Golden Lion -- உயரிய விருது.
4) மாஸ்கோ திரைப்பட விழா : Moscow Film Festival: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் 1935 முதல் வருடந்தோறும் நடத்தப்படுகிறது. St. George சிலை விருது வழங்கப்படுகிறது.
Q93. உலகின் மிகப் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் எது? எவ்வாறு நிறுவப்பட்டது?
MGM (Metro Goldwyn Meyer): மெட்ரோ, கோல்ட்வின் மெயெர் நிறுவனங்கள் இணைந்து உருவானது. “Art for Arts Sake” ""கலை கலைக்காக"" என்பது அதன் பொன்மொழி. கர்ஜிக்கும் சிங்கம் இதன் சின்னம். இந்த சின்னத்தை பயன்படுத்திய முதல் திரைப்படம் “White Shadows in the South Seas”
Q94. ஆஸ்கார் சிலையின் கையில் உள்ள ஆயுதம் எது?
வாள். Sword.
Q95. ஆஸ்கார் விருதைப்பெற்ற முதல் கருப்பு இன நடிகை யார்?
Halle Berry. திரைப்படம் -- “Monster’s Ball”
Q96. 1991ல் சிறந்த பட விருது பெற்ற முதல் animated திரைப்படம் எது?
Beauty and the Beast”.
Q97. ஒரே படத்துக்காக அதிகமான ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற ஆங்கில திரைப்படங்கள் யாவை?
11 விருதுகள் – Benhur (1958), Titanic (1991), The Lord of the Rings and The Return of the King (2003).
10 விருதுகள் – West Side Story (1961).
9 விருதுகள் – Gigi (1958), The Last Emperor 1981), The English Patient (1953), Slum Dog Millionaire (2009)
8 விருதுகள் – Gone With the Wind (1939), On the West Front (1954), My Fair Lady (1964), Gandhi (1982), Cabaret (1972), Amadeus (1984).
Q98. ஆஸ்கார் விருதுக்கு, திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட துறைக்கு, எத்தனை போட்டி தாக்கல்கள் nominationsஏற்றுக்கொள்ளப்படுகின்றன? How many are there for a particular category?
Five.
Q99. ஆஸ்கார் விருதுக்கு அதிக முறை பெயர் முன் வைக்கப்பட்ட நடிகை யார்?
மெரில் ஸ்ட்ரீப் -- Meryl Streep.
Q100. 89 வது ஆஸ்கார் விருதுகள் -- பிப்ரவரி 2017:
சிறந்த திரைப்படம் -- Best Picture - "" Moon Light ""
சிறந்த இயக்குனர் -- Best Director - Damien Chazelle  -- "" La La Land  ""
சிறந்த நடிகர் -- Best Actor - Cassey Afflock  -- "" Manchester by the Sea ""
சிறந்த நடிகை -- Best Actress --Emma Stone  -- "" La La Land  ""
சிறந்த துணை நடிகர் -- Best Supporting Actor - Mahershala Ali  -- "" Moon Light  ""
சிறந்த துணை நடிகை -- Best Supporting Actress - Viola Davis  -- " The Fences ".
சிறந்த திரைக்கதை -- Best Screen Play -- "" Manchester by the Sea ""
சிறந்த இசையமைப்பு -- Best Original Score(Music) - Justin Huritz  -- ""La La Land ""
சிறந்த ஒளிப்பதிவு -- Best Cinematography -- ""La La Land "".
சிறந்த உடையலங்காரம் -- Best Costume Design  --  Linus Sandgren  -- "" La La Land "".
சிறந்த தொகுத்தமைப்பு -- Best Editing - John Gilbert  -- "" Hacksaw Ridge "".

திரைப்பட பிரபலங்கள் -- CINEMA LEGENDS

Q101. திரைப்பட பிரபலங்கள் -- CINEMA LEGENDS
1. சார்லி சாப்ளின் -- CHARLIE CHAPLIN : Sir Charles Spencer Chaplin
பிறப்பு: 16.04.1889, மறைவு: 25.12.1977
முதல் திரைப்படம் -- “Making A Living”
இவருடைய புகழ்பெற்ற பாத்திரம் -- “The Tramp” -- திரைப்படம் “Kid Auto Races at Venice”
இவர் நிறுவிய திரைப்பட நிறுவனம் -- “United Artists”
இவர் இயக்கிய முதல் திரைப்படம் -- “The Kid”
இவரது முதல் ஒலியுடன் கூடிய திரைப்படம் -- “The Great Dictator”
பெருங்கொலையாளியாக நடித்த படம் -- “Monsieur Verdoux”
ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் -- “Lime Light” (1952ல் வெளியாகி 1972ல் விருது பெற்றது).
இவருடைய கடைசி படம் -- “Countess From Hong Kong” -- 1967.
1978 ல் இவருக்காக இந்திய அரசாங்கம் தபால் முத்திரை வெளியிட்டது.
இவர் சுமார் 82 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரே வருடத்தில் 39 படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.
2) ஸ்டேன் லாரல் & ஆலிவர் ஹார்டி -- STAN LAUREL & OLIVER HARDY உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை ஜோடி நடிகர்கள்.
இவர்களுடைய இயற் பெயர்: Stan Laurel: 16.6.1890ல் ஆர்தர் ஸ்டான்லி ஜெஃபர்சன் என இங்கிலாந்தில் பிறந்தவர். இவருடைய மறைவு 23.2.1965.
Oliver Hardy: 18.1.1892 அன்று அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் நார்வெல் ஹார்டி என்ற இயற்பெயரில் பிறந்து, 7.8.1957ல் மறைந்தார்.
இவர்களுடைய முதல் படம் “The Lucky Dog” . இருப்பினும், “The Second Hundred Years” தான் முதல் படம் என பதிவுகள் தெரிவிக்கின்றன.
இவர்களுடைய முதல் வண்ணப்படம் -- “The Rogue Song”.
இவர்களுடைய கடைசி திரைப்படம் “Atoll K” .
3. தாதா சாஹேப் ஃபால்கே -- DADHA SAHEB PHALKE :
1. இவருடைய இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் ஃபால்கே.
பிறப்பு - 30.04.1870. மறைவு-16.02.1944.
2. இந்திய திரைப்படத் தந்தை என அழைக்கப்படுகிறார்.
3. 1913ல் இந்தியாவின் முதல் முழுநீள திரைப்படம் ""ஹரிச்சந்திரா"" வை தயாரித்தவர்.
4. இவருடைய பெயரில், ""வாழ் நாள் சாதனை விருது"" இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. (விருதுகள் பகுதியில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது)
4. ராஜ் கபூர் -- RAJ KAPOOR :
1. பிறப்பு : 14.12.1924 -- மறைவு -- 02.06.1988.
2. முதல் திரைப்படம் -- "இன்குலாப்" 1935 .
3. கதாநாயகனாக அறிமுகம் -- "நீல் கமல்" -- 1947.
4. இவர் நிறுவிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் -- R.K.Studio, மும்பை.
5. இயக்குனராக அறிமுகம் -- Aag – 1948.
6. 1971ல் பத்ம பூஷன், 1987ல் தாதா சாகேப் ஃபால்கே விருது பெற்றவர்.
7. பர்சாத், ஆவாரா, ஸ்ரீ 420, சங்கம், மேரா நாம் ஜோக்கர் போன்றவை இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள்.
8. ரஷ்யாவில், மற்றும் இதர நாடுகளில் இவருக்கு ஏற்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
5. சத்யஜித் ரே -- SATYAJIT RAY - இயக்குனர்.
1. பிறப்பு : 02.05.1921; மறைவு : 23.04.1992
2. முதல் திரைப்படம் -- பாத்தேர் பாஞ்சாலி.
3. கடைசி திரைப்படம் -- Agartuk
4. மொத்த திரைப்படங்கள் -- 37
5. புகழ் பெற்ற திரைப்படங்கள் -- Aparajito, Charulata, Pratidwandi, Shatranj Ke Kiladi, மற்றும் பல.
6. விருதுகள்: பத்மஸ்ரீ (1958), பத்ம பூஷன் (1965), ராமன் மகசஸே (1967), பாரத் ரத்னா (1992), தங்க சிங்க விருது, வெனிஸ் திரைப்பட விழா (படம்-அபரஜிதா 1957), தாதா சாஹேப் ஃபால்கே விருது (1984) .
6. சிவாஜி கணேசன் -- SIVAJI GANESAN – தமிழ் திரைப்பட நடிகர்.
1. பிறப்பு: 1.10.1927; மறைவு: 21.07.2001
2. இயற்பெயர் -- விழுப்புரம் சின்னைய்யா பிள்ளை கணேசன்.
3. முதல் படம் -- பராசக்தி -- 1952
4. கடைசி படம் -- படையப்பா.
5. சுமார் 40 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில், 300 படங்கள் நடித்துள்ளார். சில இந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.
6. 1980களில் மாகாண சபை Rajya Sabha உறுப்பினராகவும் இருந்தார்.
7. பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய இந்திய விருதுகளையும், ""செவாலியர்"" Chevalier என்ற ஃப்ரான்ஸ் நாட்டு விருதையும் பெற்றுள்ளார்.
8. அமெரிக்காவின் நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயர் கௌரவத்தையும் பெற்றுள்ளார்.
7. அமிதாப் பச்சான் -- AMITABH BACHAN
1. பிறப்பு -- 11.10.1942
2. முதல் படம் -- சாத் ஹிந்துஸ்தானி
3. அவருடைய இயற்பெயர் -- ஸ்ரீவத்ஸவா.
4. இவருடைய தந்தை, ஹரிவன்ஷ்ராய் பச்சன், இந்தி மற்றும் உருது மொழியில் சிறந்த கவிஞர்.
5. ""பச்சன்"" என்ற பெயர் இந்த குடும்பத்தின் புனைப்பெயர். அதுவே நாளடைவில் நிலைத்தது.
6. திரைத்துறையில் நுழைவதற்கு முன், அமிதாப் Bird & Co. என்ற கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணி புரிந்தவர்.
7. “Kaun Banega Crorepathi” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியானதானது.
8. 1984ல், அலகாபாத் தொகுதியிலிருந்து, மிகப்பெரும் அரசியல் வாதியான், H.N. பகுகுணா வைத் தோற்கடித்து, மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
9. ""Coolie"" என்ற திரைப்பட தயாரிப்பின் போது, படுகாயமடைந்து, உயிர் பிழைத்தவர் -- 1982ல்.
8. எம்.ஜி. ராமச்சந்திரன் -- M.G.RAMACHANDRAN
1. இவருடைய இயற்பெயர் -- மருதூர் கோபால ராமச்சந்திரன் மேனன்.
2. பிறப்பு : 17.07.1917; மறைவு :24.12.1987
3. இவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர்.
இவருடைய முதல் மனைவிகளான தங்கமணி மற்றும் சதானந்தவதி, இருவரும் மறைந்ததையடுத்து, ஜானகி என்பவரை மணம் முடித்தார்.
4. இவருடைய முதல் படம் -- சதி லீலாவதி -- 1936.
5. இவருடைய அடுத்த படம் ""ராஜகுமாரி"" 1947, இவருக்கு பேரும் புகழும் ஈட்டியது.
6. 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
7. ஒரு மாகாணத்தின் முதலமைச்சரான முதல் சினிமா நடிகர். தி.மு.க. என்ற அரசியல் கட்சியிலிருந்து விலகி, தனது சொந்த கட்சி ""அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்"" தொடங்கி, 1977ல் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1987 வரை பதவியிலிருந்தார்.
8. இவருடைய மறைவுக்குப் பிறகு, இவரது துணைவியார் ஜானகி, முதலமைச்சர் பதவியேற்று இரு வாரங்களே பதவியிலிருந்தார்.
9. 1960ல் பத்மஸ்ரீ விருதை, அது இந்தியில் எழுதப்பட்டிருந்ததால், நிராகரித்தார்.
10. 1972ல் ""ரிக்ஷாக்காரன்"" என்ற திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றார்.
11. 1988ல், மறைவுக்குப் பின், பாரத ரத்னா விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
9. என்.டி. ராமராவ் -- N.T.RAMA RAO
1. அவருடைய இயற்பெயர் -- நந்தமூரி தாரக ராமா ராவ்.
2. பிறப்பு - 28.05.1923; மறைவு - 18.01.1996.
3. ஆந்திர பிரதேசத்தின் "சௌத்ரி" பிரிவைச் சேர்ந்தவர்."4. புராண பாத்திரங்களான, ராமா, கிருஷ்ணா போன்ற வேடங்களில் முக்கியமாகவும், இதர வேடங்களிலும் நடித்து, ஆந்திர மக்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.
5. இவருடைய முதல் படம் ""மனதேசம்"" 1949; இவருடைய கடைசி படம் ""ஸ்ரீ நாத கவி சார்வாபோம்மா"".
6. 1982 ல் ""தெலுங்கு தேசம்"" கட்சியை நிறுவி, 1982/1983 களில், ஆந்திர பிரதேசத்தின் முதல் அமைச்சராகி, 1989 வரை பதவியிலிருந்தார்.
7. 1960ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
11. ரஜினிகாந்த் -- RAJINIKANTH.
பிறப்பு -- 12.12.1950 -- பெங்களூரு.
இயற்பெயர் -- சிவாஜி ராவ் கேய்க்வாட்.
பட்டப் பெயர் -- சூப்பர் ஸ்டார்.
ஆரம்ப தொழில் -- போக்குவரத்து நடத்துனர், பெங்களூரு.
முதல் திரைப்படம் -- அபூர்வ ராகங்கள் -- 1975
விருதுகள்: பத்மபூஷண் (2000) மற்றும் பத்மவிபூஷண் (2016)
100வது படம்: ஸ்ரீ ராகவேந்திரா -- 1985.
ஆங்கிலப்படம்: Blood Stone (1988) . (பல இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்)
12. கமலஹாசன் KAMAL HASAN.
பிறப்பு: 7.11.1954 -- பரமக்குடி.
இயற்பெயர்: பார்த்தசாரதி
பட்டப்பெயர் -- உலகநாயகன்.
முதல் திரைப்படம் -- களத்தூர் கண்ணம்மா (குழந்தை நட்சத்திரமாக) முதல் நாயகனாக திரைப்படம்: அபூர்வ ராகங்கள் -- 1975
100 வது திரைப்படம் : ராஜ பார்வை
திரைப்பட நிறுவனம்: ராஜ்கமல் ஃபிலிம்ஸ்.
முதல் தேசிய விருது: மூன்றாம் பிறை - 1983.
விருதுகள்: பத்மஸ்ரீ (1990), பத்மபூஷண் (2014), கலைமாமணி, தேசிய விருதுகள் என பல.
13. மனோரமா MANORAMA.
பிறப்பு: 1987 ; மன்னார்குடி; மறைவு: 10.10.2015
இயற்பெயர்: கோபிசாந்தா
பட்டப்பெயர்: ஆச்சி
முதல் படம்: மாலையிட்ட மங்கை 1958 (கதாநாயகியாக)
சாதனை -- 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்.
விருதுகள்: கலைமாமணி, பத்மஸ்ரீ (2002).
14. ராஜ்குமார் RAAJKUMAR (கன்னடம்)
பிறப்பு: 24.4.1929; மறைவு:12.4.2006
இயற்பெயர்: சிங்கநல்லூரு புட்டசாமியைய்யா முத்துராஜூ பட்டப்பெயர்: அப்பாஜி, அன்னாவ்ரு
முதல் படம்: பேதாரா கண்ணப்பா 1953
சாதனை: 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்.
கடைசி படம்: ஷப்தவேதி 2000.
விருதுகள்: பத்ம பூஷண் 1983; தாதா சாகேப் ஃபால்கே விருது, 1995.
15. ப்ரேம் நசீர்: PREM NAZIR (மலையாளம்)
பிறப்பு: 16.12.1929; மறைவு: 16.1.1989.
இயற்பெயர்: அப்துல் காதர்
பட்டப்பெயர்: நித்யஹரித நாயகன்.
முதல் படம்: மருமகள் 1952
சாதனை: 700க்கும் மேற்பட்ட படங்கள். ஷீலாவுடன் 100க்கும் மேற்பட்ட படங்கள்.
கடைசி படம்: கடத்தநாடன் அம்பாடி 1990. (மறைவுக்கு பின் வெளிவந்தது) விருதுகள்: பத்மபூஷண் -- 1983; மேலும் பல விருதுகள்.
16.ப்ரூஸ் லீ -- BRUCE LEE.
பிறப்பு -- 27.11.1940; மறைவு -- 20.7.1973.
இடம் -- சான் ஃப்ரான்சிஸ்கோ, அமெரிக்கா
இயற் பெயர் -- Lee Jun fan.
திரைப்பட அறிமுகம்: குழந்தையாக Golden Gate Girl படத்தில். 18 வயதுக்குள் சுமார் 20 படங்கள் நடித்திருந்தார்.
அமெரிக்காவில் பல படங்களில் துணை நடிகராக நடித்த பிறகு, ஹாங்காங் சென்று தனது தனிப்பட்ட முழு நீள திரைப்படம் The Big Boss 1971 நடித்தார். அதற்கு பிறகு, Fist of Fury, Way of the Dragon, Game of Death, Enter The Dragon, போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்தார். தற்காப்புக் கலை இவரால் உலகில் மிக பிரபலமானது.
17.லதா மங்கேஷ்கர் -- LATHA MANGESHKAR
பிறப்பு -- 28.9.1929 -- இந்தூர்.
இயற்பெயர் -- ஹேமா என பெயரிடப்பட்டு, பிறகு லதா என மாற்றம்.
இந்தி சினிமா உலகின் மிக மிக புகழ் பெற்ற பின்னணி பாடகி.
தொடக்கம் -- Kiti Hasaal -- Marathi -- 1942. 2015ல், Fan மற்றும் Ishq Forever இந்தி திரைப்படங்களில் கடைசியாக பாடியுள்ளார்.
பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார்.
விருதுகள்: தாதா சாகேப் ஃபால்கே (1989), பத்ம பூஷன் (1969), பத்ம விபூஷன் (1999), பாரத ரத்னா (2001) மற்றும் பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார்.
18. இளைய ராஜா -- ILAIYA RAJAA
பிறப்பு -- 2.6.1943 -- பண்ணைப்புரம், தேனி, தமிழ்நாடு.
இயற்பெயர் -- ஞானதேசிகன்
சிறப்புப்பெயர் -- இசைஞானி
முதல் திரைப்படம் -- அன்னக்கிளி 1975
1000 மாவது திரைப்படம் -- தாரை தப்பட்டை
6000 பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். மேற்கத்திய Symphony இசையமைப்பிலும் வல்லவர்.
விருதுகள் -- 2010ல் பத்ம பூஷன் விருதும், 5 முறை தேசிய விருதும், மேலும் பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளும் பெற்றுள்ளார்.
Q102. புகழ் பெற்ற இந்தி திரைப்படம் ""ஷோலே"" “Sholay” எந்த திரைப்படத்தை பின் பற்றியது?
Flame of the Sun.
Q103. தாதா சாகேப் ஃபால்கே விருது பெற்ற இரண்டு தமிழ் திரைப்படத் துறையினர் யாவர்?
சிவாஜி கணேசன் -- 1996 மற்றும் கே. பாலச்சந்தர் -- 2010.
Q104. ஃப்ரான்ஸ் நாட்டு விருதான ""செவாலியர்"" விருதைப் பெற்ற ஒரே இந்திய திரைப்பட நடிகர் யார்?
சிவாஜி கணேசன். 1995.
Q105. பாரத ரத்னா விருது பெற்ற ஒரே திரைப்பட நடிகர் யார்?
எம்.ஜி.ராமச்சந்திரன். 1988.
Q106. சினிமா நடிகர் ஒருவர் முதலில் மாகாண முதலமைச்சானவர் யார்?
எம்.ஜி.ராமச்சந்திரன் 1977.
Q107. எந்த வரிசை முறை திரைப்படம் ஆஸ்கார் விருதைப் பெற்றது?
God Father I & II.
Q108. "ஜேம்ஸ் பாண்ட்" என்ற கதா பாத்திரம் எந்த திரைப்படத்தில் அறிமுகமானது?
Casino Royale. இயன் ஃப்ளெமிங் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது.
Q109. புகழ் பெற்ற இயக்குனர் சத்யஜித் ரேயின் முதல் படம் எது?
பாத்தேர் பாஞ்சாலி.
Q110. ரஜினிகாந்த் நடித்த ஆங்கிலப்படம் எது?
Blood Stone.
Q111. இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் எது?
காகஜ் கி ஃபூல் Kagaz Ki Phool.
Q112. பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திரைப்பட நடிகர் யார்?
நர்கீஸ் தத் -- இந்தி – 1958.
Q113. ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்தில் முதல் நடிகர் யார், அவருக்கு பின் வந்தவர்கள் யாவர்?
சிட்னி பாய்ஷியர்; இவருக்கு பின் இந்த கதா பாத்திரத்தில் நடித்தவர்கள்: ரோஜர் மூர், டேனியல் க்ரெய்க், சீன் கானரி, பியர்ஸ் ப்ராஸ்னன், திமோதி டால்டன், ஜார்ஜ் லேஸன்பி, டேவிட் நிவென், பேரி நெல்சன்.
Q114. தாதா சாகேப் ஃபால்கே விருதினை முதலில் பெற்றவர் யார்?
தேவிகா ராணி ரோரிச், 1959.
Q115. ஃபூலான் தேவி என்ற கொள்ளைக்காரியைப் பற்றிய திரைப்படம் எடுத்தவர் யார்?
சேகர் கபூர்.
Q116. “the Guide” (வழிகாட்டி) என்ற ஆங்கில நாவலை தேவ் ஆனந்த் திரைப்படமாக எடுத்தார். அந்த நாவலை எழுதியவர் யார்?
ஆர்.கே. நாராயண் -- திரைப்படத்தின் பெயரும் அதுவே -- தேவ் ஆனந்த் & வஹீதா ரெஹ்மான்.
Q117. ""காந்தி"" என்ற புகழ்பெற்ற ஆங்கில திரைப்படத்தியவர் யார்? காந்தி, நேரு வாக நடித்தவர்கள் யாவர்?
சர் ரிச்சர்டு ஆட்டென்பரோ.
காந்தி -- பென் கிங்ஸ்லீ
நேரு -- ரோஷன் சேத்.
Q118. ""க்ளேடியேட்டர்"" “The Gladiator” என்ற ஆஸ்கார் விருது பெற்ற ஆங்கில திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் யாவை?
மேக்ஸிமஸ், டெசிமஸ், மெரிடியஸ். Maximus, Decimus, Meridius.
Q119. ""டைம்ஸ்"" என்ற புகழ் பெற்ற ஆங்கில இதழில், உலகின் 100 சிறந்த திரைப் படங்களுள் இடம் பெற்ற ஒரே இந்தி படம் எது?
ப்யாஸ் -- Pyas
Q120. இந்தி திரை உலகின் சிறந்த இசை இயக்குனர்களில் நௌஷாத் என்பவரும் ஒருவர். இவருடைய இந்த பெயரில் உள்ள சிறப்பு என்ன?
நௌஷாத் என்றால் ""புதிய மகிழ்ச்சி"" என்று பொருள். 1919ல் இவர் பிறந்த நாளன்று இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததால் இவருடைய பெற்றோர்கள் இப்பெயரை இவருக்கு வைத்தனர்.
Q121. உலகில் முதல் முதலாக, சர்வதேச திரைப்பட விழா, எங்கு நடந்தது?
20.9.1946- கேன்ஸ், ஃப்ரான்ஸ்.
Q122. வட்டவடிவ திரையில் திரைப்படம் திரையிடுவதை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
சர்க்கோராமா. Circorama
Q123. பாகிஸ்தானின் “Nishan-e-Imtiaz” என்ற பொது விருதைப் பெற்ற ஒரே இந்திய நடிகர் யார்?
திலீப் குமார் -- 1997
Q124. ரிச்சர்டு கேரே என்பவர் ஹாலிவுட் திரைப்பட உலகின் சிறந்த நடிகர்களுள் ஒருவர். இவர் எந்த மதத்தை தழுவினார்?
புத்த மதம்.
Q125. உலகின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் எது?
The Robe -- 1954.
Q126. உலகின் முதம் முப்பரிமாண 3D திரைப்படம் எது?
House of Wax – 1953.
Q127. "கரா திரைப்பட விழா" என்பது எங்கு நடைபெறுகிறது?
கராச்சி, பாகிஸ்தான்.
Q128. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனப்படும் ரஜினிகாந்த் அவர்களின் இயற்பெயரும், முந்தைய தொழிலும் என்ன?
சிவாஜி ராவ் கெய்க்வாட் -- பஸ் கண்டக்டர்.
Q129. எந்த திரைப்படத்தின் தயாரிப்பின் போது, இந்தி நடிகர் அமிதாப் பச்சன் படுகாயமடைந்து, உயிர் பிழைத்தார்?
கூலி -- Coolie
Q130. ஹாலிவுட் திரை உலகின் எந்த இரு நகைச்சுவை நடிகர்கள், தங்களிடையே கருத்து வேறுபாடால் பிரிவு ஏற்படும் பட்சத்தில், காப்பீடு செய்து கொண்டனர்?
Bud Abbot மற்றும் Lou Costello.
Q131. குஜராத்தி மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது?
நரசிம் மேத்தா -- 1932.
Q132. மர்லின் மன்றோ ஆங்கில திரையுலகின் புகழ் பெற்ற நடிகை. அவருடைய இயற்பெயர் என்ன? என்ன தொழிலில் இருந்தார்?
Norma Jeanne Mortenson. விமான தொழிற்சாலையில் சரிபார்ப்பு ஆய்வாளர்.
Q133. 1954ல், அறிமுக நிலையில், சிறந்த படத்திற்கான தேசிய விருதான தங்கப் பதக்கத்தை வென்ற முதல் திரைப்படம் எது?
ஷ்யாம்ச்சி ஆய் -- தயாரித்தவர் P.K.Atre.
Q134. ப்ரூஸ் லீ எந்த வருடம் மறைந்தார்?
1973
Q135. திரைப்படங்கள் தயாரிப்பில் (எண்ணிக்கையில்) முதல் மூன்று திரை உலகங்கள் எது?
பாலிவுட், மும்பை ; ஹாலிவுட், அமெரிக்கா; நாலிவுட், நைஜீரியா.
Q136. திரைப்படங்களில், அதிக எண்ணிக்கையில் கதாநாயகனாகவும், ஒரே கதாநாயகியுடன் அதிக படங்களில் நடித்து, சாதனை புரிந்துள்ள இந்திய நடிகர் யார்?
ப்ரேம் நசீர் -- கதா நாயகனாக 725 படங்கள், கதாநாயகி ஷீலாவுடன் 130 படங்களும் நடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.
Q137. மிகப் பழமையான சர்வதேச திரைப்படத் திருவிழா எது?
வெனிஸ், இத்தாலி -- 1932ல் தொடங்கப்பட்டது.
Q138. உத்தம் குமார் (பெங்காலி), அனில் கபூர் (இந்தி) மற்றும் ரஜினி காந்த் (தமிழ்) இந்த மூன்று நடிகர்களிடையே உள்ள ஒரு ஒற்றுமை என்ன?
மூவருமே "நாயக்" “Nayak” என்ற தலைப்பு கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
Q139. அல்ஜீரியாவின் சஹராவி அகதிகள் முகாமில் நடத்தப்படும் திரைப்பட விழாவின் பெயர் என்ன?
சர்வதேச சஹாரா திரைப்பட விழா. International Sahara Film Festival.
Q140. கண்ணில் ஒரு பாதிப்பு இருந்த போதிலும், குடியரசுத்தலைவராக இருந்த, டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன் பார்த்த இந்தி திரைப்படம் எது?
ஹக்கீகத் -- Haqueqat – 31.12.1964 – தேசியப்பற்று பற்றிய ஒரு திரைப்படம்.
Q141. அமெரிக்காவின் விண்வெளி அமைப்பு NASA வில் திரைப்படம் தயாரிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், இந்திய படம் ஒன்று இங்கு எடுக்கப்பட்டது. அது எது?
ஸ்வதேஸ் -- Swades – ஷாருக் கான் நடித்து, அஷூதோஷ் கௌரிகர் தயாரித்தப் படம்.
Q142. எந்த இந்திய மாகாணத்தில், திரைப்படம் தயாரிப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படுகிறது?
மணிப்பூர்.
Q143. உலகத் திரைப்பட உலகில் ஜார்ஜ் ஆல்பெர்ட் ஸ்மித் 1906ல் செய்த சாதனை திருப்பம் என்ன?
Kinema Color – முதன் முதலில் வெற்றிகரமாக இவ்வகை வண்ணத் திரைப்படம் தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இது 1908 முதல் 1914 வரை பழக்கத்தில் இருந்தது.
Q144. உலகின் மிக குள்ளமான திரைப்பட நடிகர் யார்?
ஃபக்ரூ Fakroo – 2’10” (இரண்டு அடி, 10 அங்குலம்) -- கேரளா -- கின்னஸ் சாதனை.
Q145. உலகின் மிகப்பெரிய தனி திரையரங்கம் எது?
Radio City Music Hall, நியூயார்க் -- 6015 பேர் அமரும் வசதி -- 1932ல் தொடங்கப்பட்டது.
Q146. உலகின் மிகப்பெரிய திரையரங்க வளாகம் (complex) எது?
Kinepolis Madrid Movie Complex, Spain -- 25 திரைகள் -- 9200 பேர் மொத்தமாக பார்க்கும் வசதி.
Q147. சிறந்த இயக்குனருக்கான முதல் தேசிய விருதைப் பெற்றவர் யார்?
B.R. சோப்ரா -- திரைப்படம் “Humraaz”.
Q148. வெனிஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படும் உயரிய விருது?
தங்க சிங்கம். Golden Lion.
Q149. “Bounce Card” என சினிமாத் துறையில் பேசப்படும் சினிமா தயாரிப்புத் துறைப் பொருள் என்ன?
ஒரு வெள்ளை/வெள்ளி போன்று மின்னும் ஒரு அட்டை. இது ஒளியை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு ஒளி மாற்றம் செய்ய உதவும் ஒரு உபகரணம்.
Q150. ஒரு பெண் நடிகர், ஆண் வேடத்தில் நடித்து, ஆஸ்கார் விருது பெற்றவர் யார்?
லிண்டா ஹண்ட் -- Linda Hunt – பில்லா க்வான் என்ற கதாபாத்திரத்தில், திரைப்படம் “The Year of Living Dangerously” 1982ல் நடித்தார்.
Q151. திரைப்பட விழா இயக்ககம் எங்கு அமைந்துள்ளது?
டெல்லி.
Q152. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வலைதளம் மூலமாக வெளியிடப்பட்ட ஆவணப்படம் எது?
"தேசாய்" “Dhesai” -- தமிழ்நாட்டின் வெங்கடேசன் என்பவரால் தயாரிக்கப்பட்டது.
Q153. ""க்ளேடியட்டர்"" “Gladiator” ஆஸ்கார் விருது பெற்ற படம், எந்த ரோமாபுரி மன்னரை மேலோட்டமாக அடிப்படையாகக் கொண்டது?
Commodus.
Q154. இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் திரைப்படம் எது?
"மதர் இண்டியா" -- தயாரித்தவர் - மெஹபூப் கான் -- 1958.
Q155. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் எது?
தெய்வ மகன் -- 1969
Q156. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய திரைப்படங்கள் யாவை?
1) மதர் இந்தியா -- 1957 ; 2) சலாம் பாம்பே -- 1988; 3) லகான் -- 2001.
Q157. ப்ரூஸ் லீ யின் மறைவால், நிறைவுப்படாத திரைப்படம் எது?
“Game for Death” -- 20th July 1973 அன்று அவர் மறைந்ததால்.
Q158. தாதா சாஹேப் ஃபால்கே அவர்களின் இயற்பெயர் என்ன?
துண்டிராஜ் கோவிந்த் ஃபால்கே.
Q159. பெங்காலி திரை உலகம் “Tollywood” என அழைக்கக் காரணம் என்ன?
பெங்காலி திரைப்பட உலக தயாரிப்பு வளாகங்கள் studios அனைத்து, கல்கத்தாவின் டாலிகஞ்ச் என்ற பகுதியைச் சுற்றியே அமைந்துள்ளது.
Q160. Pink Panther தொடர் திரைப்படங்களுடன் சம்பந்தப்பட்ட நடிகர் யார்?
பீட்டர் செல்லர்ஸ் -- Peter Sellers.
Q161. உலகின் சிறிய வயது திரைப்பட இயக்குனர் என கருதப்படுபவர் யார்?
கிஷன் -- Kishan – பெங்களூரு -- 10 வயது -- திரைப்படம் -- “Care of Foot Path”.
Q162. “Goodbye Bafana” என்ற திரைப்படத்தில், நெல்சன் மண்டேலா கதாபாத்திர்த்தில் நடித்தவர் யார்?
Dennis Haysbert. அமெரிக்கர் -- 2007ல்.
Q163. போர்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் எவை?
1. பராசக்தி -- இரண்டாம் உலகப்போர்
2. தாயே உனக்காக -- இந்தியா--பாகிஸ்தான் போர்
3. பார்த்தால் பசி தீரும் -- இரண்டாம் உலகப்போர்
4. இரத்தத்திலகம் -- இந்தியா-சீனா போர்
5. வீர பாண்டிய கட்டபொம்மன் -- இந்திய சுதந்திரப்போர்
6. சிவகங்கைச்சீமை -- இந்திய சுதந்திரப்போர்.
Q164. புகழ்பெற்ற நாவல்களும் -- திரைப்படங்களும்:
எண் நாவல் எழுத்தாளர் திரைப்படம்
1. லா மிசரெபிள்ஸ் விக்டர் ஹ்யூகோ ஏழைப்படும் பாடு
2. கள்வனின் காதலி கல்கி கள்வனின் காதலி
3. பொய்மான் கரடு கல்கி பொன்வயல்
4. பார்த்திபன் கனவு கல்கி பார்த்திபன் கனவு
5. தில்லானா மோகானாம்பாள் கொத்தமங்கலம் சுப்பு தில்லானா மோகனாம்பாள்
6. மோக முள் தி.ஜானகிராமன் மோக முள்
7. தேநீர் டி.செல்வராஜ் ஊமை ஜனங்கள்
8. எரியும் பனிக்காடு பி.ஹெச்.டேனியல் பரதேசி
9. தியாக பூமி கே.சுப்ரமண்யம் தியாக பூமி
10. பெற்ற மனம் அகிலன் குலமகள் ராதை
11. பிரிவோம் சந்திப்போம் சுஜாதா ஆனந்த தாண்டவம்
12. ஏழாம் உலகம் ஜெய மோகன் நான் கடவுள்
13. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஜெயகாந்தன் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
14. சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள்.
15. உன்னைப் போல் ஒருவன் ஜெயகாந்தன் உன்னைப் போல் ஒருவன்
16. யாருக்காக அழுதான் ஜெயகாந்தன் யாருக்காக அழுதான்
17. காவல் கோட்டம் சு. வெங்கடேஷ் அரவான்
18. தண்ணீர் தண்ணீர் கோமல் சுவாமிநாதன் தண்ணீர் தண்ணீர்
19. பாவை விளக்கு அகிலன் பாவை விளக்கு
20. கயல் விழி அகிலன் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்
21. ரங்கோன் ராதா அண்ணாதுரை ரங்கோன் ராதா
22. பார்வதி பி.ஏ. அண்ணாதுரை பார்வதி பி.ஏ.
23. தாய் மகளுக்கு கட்டிய தாலி அண்ணாதுரை தாய் மகளுக்கு கட்டிய தாலி
24. நல்லவன் வாழ்வான் அண்ணாதுரை நல்லவன் வாழ்வான்
25. வண்டிக்காரன் மகன் அண்ணாதுரை வண்டிக்காரன் மகன்
26. சிறை அனுராதா ரமணன் சிறை
27. கூட்டுப்புழுக்கள் அனுராதா ரமணன் கூட்டுப்புழுக்கள்
28. கோமதியின் காதலன் தேவன் கோமதியின் காதலன்
29. கலீர், கலீர் எல்லார்.வீ ஆட வந்த தெய்வம்
30. குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி கண் சிவந்தால் மண் சிவக்கும்
31. உச்சி வெயில் இந்திரா பார்த்தசாரதி மறுபக்கம்
32. ராஜாம்பாள் ஜே.ஆர்.ரங்கராஜூ ராஜாம்பாள்
33. சந்திரகாந்தா ஜே.ஆர்.ரங்கராஜூ சவுக்கடி சந்திரகாந்தா
34. மோகனசுந்தரம் ஜே.ஆர்.ரங்கராஜூ மோகனசுந்தரம்.
35. பணம் பெண் பாசம் ஜாவர் சீதாராமன் பணம் பெண் பாசம்
36. கருணையினால் அல்ல ஜெயகாந்தன் கருணை உள்ளம்
37. கைவிலங்கு ஜெயகந்தன் காவல் தெய்வம்
38. ராவ் பகதூர் சிங்காரம் கொத்தமங்கலம் சுப்பு விளையாட்டுப்பிள்ளை.
39. பெண் மனம் லக்ஷ்மி இருவர் உள்ளம்
40. காஞ்சனையின் கனவு லக்ஷ்மி காஞ்சனா
41. புவனா ஒரு கேள்விக்குறி மஹரிஷி புவனா ஒரு கேள்விக்குறி
42. பத்ரகாளி மஹரிஷி பத்ரகாளி
43. இலவு காத்த கிளி மணியன் சொல்லத்தான் நினைக்கிறேன்
44. மோகம் முப்பது வருஷம் மணியன் மோகம் முப்பது வருஷம்
47. இதய வீணை மணியன் இதய வீணை
48. லவ் பேர்ட்ஸ் மணியன் வயசுப்பொண்ணு
49. வெள்ளிக் கிழமை மு.கருணாநிதி அணையா விளக்கு
50. பொன்னார் சங்கர் மு.கருணாநிதி பொன்னார் சங்கர்
51. பெற்ற மனம் மு.வரதராஜன் பெற்ற மனம்
52. தலை கீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடன் சொல்ல மறந்த கதை
53. மலைக்கள்ளன் வெ.ராமலிங்கம் பிள்ளை மலைக்கள்ளன்.
54. தலைமுறைகள் நீல.பத்மநாபன் மகிழ்ச்சி
55. பூட்டாத பூட்டுகள் பொன்னீலன் பூட்டாத பூட்டுகள்
56. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது புஷ்பா தங்கதுரை ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
57. நந்தா என் நிலா புஷ்பா தங்கதுரை நந்தா என் நிலா
58. லீனா மீனா ரீனா புஷ்பா தங்கதுரை அந்த ஜூன் 18
59. சிற்றன்னை புதுமைப் பித்தன் உதிரிப்பூக்கள்
60. வாக்கும் வக்கும் புதுமைப்பித்தன் சரஸ்வதி சபதம்
61. இது சத்தியம் ரா.கி.ரங்கராஜன் இது சத்தியம்
62. திக்கற்ற பார்வதி ராஜாஜி திக்கற்ற பார்வதி
63. வணக்கத்துக்குரிய காதலியே ராஜேந்திர குமார் வணக்கத்துக்குரிய காதலியே
64. சதி லீலாவதி எஸ்.எஸ். வாசன் சதி லீலாவதி
65. வெயிலோடு போய் ச.தமிழ்ச்செல்வன் பூ
66. நண்டு சிவசங்கரி நண்டு
67. ஒரு மனிதனின் கதை சிவ சங்கரி தியாகு
68. 47 நாட்கள் சிவ சங்கரி 47 நாட்கள்
69. ஒரு சிங்கம் முயலாகிறது சிவ சங்கரி அவன், அவள், சது.
70. ஒரு முறை தான் பூக்கும் ஸ்டெல்லா ப்ரூஸ் ஆண்களை நம்பாதே
71. பிரியா சுஜாதா பிரியா
72. காயத்ரி சுஜாதா காயத்ரி
73. கரையெல்லாம் செண்பகப்பூ சுஜாதா கரையெல்லம் செண்பகப்பூ
74. காகிதச் சங்கிலிகள் சுஜாதா பொய் முகங்கள்
75. ஜன்னல் மலர் சுஜாதா யாருக்கு யார் காவல்
76. அனிதா இளம் மனைவி சுஜாதா இது எப்படி இருக்கு
77. இருள் வரும் நேரம் சுஜாதா வானம் வசப்படும்
78. கருங்குயில் குன்றத்துக் கொலை டி.எஸ்.துரைசாமி மரகதம்
79. ஒன்பது ரூபாய் நோட்டு தங்கர் பச்சான் ஒன்பது ரூபாய் நோட்டு
80. புனர் ஜன்மம் துமிலன் போன மச்சான் திரும்பி வந்தான்
81. முள்ளும் மலரும் உமாச்சந்திரன் முள்ளும் மலரும்
82. போலீஸ்காரன் மகள் பி.எஸ்.ராமைய்யா போலீஸ்காரன் மகள்.
83. The Guide R K Narayan Guide (Hindi)
84. The Citadel A J Cronin Tere Mere Sapne (Hindi)
85. Devdas Sarat Chandra Chatterjee Devdas (Hindi)
86. Five Point Someone Chetan Bhagat 3 Idiots (Hindi)
87. White Nights Fyodor Dostoevsky Sawariya (Hindi)
88. Othello Shakespeare Omkara (Hindi)
89. Parineeta Sarat Chandra Chatterjee Parineeta (Hindi)
90. One Night At The Call Centre Chetan Bhagat Hello (Hindi)
91. Susanna's Seven Husband Ruskin Bond 7 Khoon Maaf (Hindi)
92. 2 States Chetan Bhagat 2 States (Hindi)
93. Emma Jane Austen Aisha (Hindi)
94. The NamesakeJumpa Lahiri The Namesake (Hindi)
95. Macbeth Shakespeare Maqbool (Hindi)
96. The Blue Umbrella Ruskin Bond The Blue Umbrella (Hindi) .
97
98
99
100