Khub.info Learn TNPSC exam and online pratice

கவர்னர் ஜெனரல்கள் GOVERNOR GENERALS

Q1. இங்கிலாந்து அரசாங்கம் எந்த அரசியல் சட்டத்தின் மூலம், கிழக்கிந்திய நிறுவன மேற்பார்வைக்கு கவர்னர் ஜெனரல்களை நியமிக்கத் தொடங்கினர்?
1773 சட்டம் -- Act of 1773, ஐக்கிய ராஜ்யம்.

Q2. 1773 - ஐக்கிய ராஜ்ய (UK) சட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு நியமிக்கப்பட்ட முதல் கவர்னர் ஜெனரல் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் -- 1773 - 1785
Q3. வாரன் ஹேஸ்டிங்ஸ் முதல் கவர்னர் ஜெனரல் என்பதைத் தவிர்த்து அவரது வேறு மேன்மையான விவரம் என்ன?
அதிக காலம் பதவி வகித்த -- 12 வருடங்கள் -- கவர்னர் ஜெனரல். ராபர்ட் க்ளைவ் (கவர்னர்) ஐ தொடர்ந்து, கவர்னர் ஜெனரல் ஆக பதவியேற்று, கல்கத்தாவை தலைமையாகக் கொண்டு, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தை மேற்கொண்டார்.
Q4. இந்திய கிழக்கிந்திய நிறுவன கவர்னர் ஜெனரலாக பணியாற்றியவர்களின் பெயர்களை வரிசைப்படுத்துக: அவர்கள் காலத்து நிகழ்வுகளையும் கூறுக.
1. வாரன் ஹேஸ்டிங்ஸ் -- 1773-1775: இவர் காலத்து முக்கிய நிகழ்வுகள்:
1. ஒழுங்குபடுத்துதல் சட்டம், 1773. Regulating Act of 1773. பதவியேற்றதை உறுதிச் செய்யும் சட்டம்.
2. 1781 - சட்டம் Act of 1781 – கவர்னர் ஜெனரல் நிர்வாக எல்லையையும், கல்கத்தா உச்ச நீதி மன்ற நிர்வாக எல்லயையும் நிர்ணயிக்கும் சட்டம்.
3. பிட்ஸ் இந்தியா சட்டம் 1784 -- Pitts India Act – 1784 – இந்தியாவில் இயங்கும் கிழக்கிந்திய நிறுவனத்தை, இங்கிலாந்து அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம்.
4. ரோஹில்லா போர் -- 1774 -- Rohilla War 1774 – ரோஹில்கண்ட் பகுதியை அவுத் நவாப் கைப்பற்ற ஆங்கிலேயர் உதவி.
5. முதல் மராத்திய போர் - 1775-1782 மற்றும் சால்பாய் உடன்படிக்கை 1782.
6. இரண்டாம் மைசூர் போர் - 1780-1784 -- ஹைதர் அலியுடன்.
7. சைத் சிங் விவகாரம் – 1778 – சைத் சிங், பெனாரஸ் மன்னராக இருந்தவர். இவரால் ஆங்கிலேயர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் -- ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டு, தப்பிச் சென்று விட்டாலும், இந்த நிகழ்வை வாரன் ஹேஸ்டிங்ஸ் கையாண்ட விதமும், சில நிதி முரண்பாடுகள், இவருக்கு எதிராக ஒரு குற்றப் பேரரணையும் விசாரணையும் நடத்தும் அளவுக்குச் சென்றது. இது அவருக்கு மிகவும் சங்கடப்பட வைத்தது.
8. 1782ல் இவர் அவுத் ராஜ வம்ச பெண்மணிகளை அவமானப்படுத்தியது;
9. 1784 ல் கல்கத்தாவில் Asiatic Society of Bengal என்ற அமைப்பை சர் வில்லியம் ஜோன்ஸூடன் சேர்ந்து நிறுவியது.
2. கார்ன்வாலிஸ் ப்ரபு -- 1786-1793: இவர் காலத்து முக்கிய நிகழ்வுகள் :
1. மூன்றாம் மைசூர் போர் - 1790-1792 – திப்புசுல்தானுடன் உடன்படிக்கை 1792ல்.
2. 1793ல் வங்காளம் மற்றும் பீஹாரில் ஜமீந்தார் முறையை அறிமுகப்படுத்தி நிரந்தர வருவாய்க்கு வழிவகுத்தார். இது, வங்காள பெங்காலி ஜமீந்தார்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையில் நில வருவாய்க்கு ஒப்பந்தம்.
3. 1793ல் -- நீதித்துறை சீரமைப்பு -- பல நிலைகளில் நீதி மன்றங்கள் நிறுவதல்; நிதித்துறையும், நீதித்துறையும் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டது.
4. அரசாங்க பொது நிர்வாக அரசுப்பணி -- Civil Services அறிமுகம் மற்றும் நிர்வாக சீரமைப்பு.
3. சர் ஜான் ஷோர் -- 1793-1798: பெருத்த நிகழ்வுகள் இல்லாத ஆட்சிக்காலம். நிரந்தர நில வருவாய் முறை அமல்.
4. வெல்லெஸ்லி பிரபு -- 1798-1805: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1798ல் ஹைதராபாத் நிஸாமுடன் உடன்படிக்கை;
2. நான்காம் மைசூர் போர் – 1799 – திப்பு சுல்தான் மரணம் -- மைசூரின் பல பகுதிகள் கைப்பற்றுதல்;
3. மராத்தியர்களுடன் துணை உடன்படிக்கை – 1802.
4. இரண்டாம் மராத்திய போர் – 1803-1805.
5. தஞ்சாவூர் மற்றும் கர்நாடிக் பகுதிகள் கைப்பற்றப்பட்ட பிறகு மதராஸ் மாகாணம் உருவாக்குதல்.
5. சர் ஜார்ஜ் பார்லோ -- 1805-1807 -- நிகழ்வு ஏதுமில்லா ஆட்சி.
6. மிண்டோ பிரபு 1 – 1807-1813: இவர் காலத்து முக்கிய நிகழ்வுகள்:
1. 1806ல் வேலூர் புரட்சி பெருத்த நிகழ்வு. வேலூர் கோட்டையில், ஆங்கிலேயர்களின் செயல்கள் அங்கு பணி புரிந்த அனைத்து வீரர்களின் மத நம்பிக்கையை மிகவும் பாதிக்கும் வகையில் அமைந்ததால் பெரிய புரட்சி ஏற்பட்டது. இதில் ஆங்கிலேய அதிகாரிகள் சுமார் 200 ஆங்கிலேய வீரர்கள் கொலையுண்டனர். இந்த நிகழ்வே 1857 சிப்பாய் கலகத்தின் முன்னோடி நிகழ்ச்சியாக அமைந்தது.
2. மகாராஜா ரஞ்சித் சிங் உடன் பாதுகாப்பு உடன்படிக்கை -- 1809.
3. 1813 சாசன சட்டம் Charter Act of 1813 – உள்ளடக்கம்:
i) இங்கிலாந்து ராஜ வம்ச ஆட்சி, இந்திய கிழக்கிந்திய நிறுவன எல்லைகளின் மீது செயல்படுத்துதல்;
ii) சாசன சட்டம் மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.
iii) கிழக்கு இந்திய நிறுவனம் வணிகத்திலிருந்து நிக்கப்பட்டது. சீனாவுடன் தேயிலை வணிகம் மட்டும் அனுமதிக்கப்பட்டது.
iv) கிழக்கிந்திய நிறுவனம், வணிகம் மற்றும் அரசியல் நிர்வாக செலவுகளை தனித்தனியாக பராமரித்தல்;
v) கிறித்துவ மத போதக மையங்கள் இந்தியாவுக்குள் செயல்பட அனுமதி.
7. ஹேஸ்டிங்ஸ் பிரபு – 1813-1823: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. நேபாளத்தில் கோர்க்கா போர் - 1814-1816 - இந்த போரில் இவர் வெற்றி அடைந்ததால் கௌரவ உயர்வு;
2. மூன்றாம் மராத்தா போர் – 1817-1818 – பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது -- மராத்திய பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது -- 1818 பாம்பே மாகாணம் உருவாக்கம்.
3. பிந்தாரிகளுடன் போர் - 1817-1818.
4. 1820 ல் மதராஸ் மாகாணத்தில் ரயத்துவாரி முறை ஆளுநர் தாமஸ் மன்றோ வால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைப்படி விவசாயிகளுக்கு நில உரிமை வழங்குவதும், வருவாய்/வரிகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்தே வசூல் செய்வது.
8. ஆம் ஹெர்ஸ்ட் பிரபு – 1823-1828: முதல் பர்மியப் போர் -- 1824-1826
9. வில்லியம் பெண்டிக் பிரபு -- 1828-1835: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1829ல் சதி - உடன் கட்டையேறும் பழக்கத்தை ஒழித்தார்.
2. ""தக்கி"" Thuggee (1829-1835)- என்ற கொலை கொள்ளை நடவடிக்கைகளை ஒழித்தார்.
3. 1833 ல் இங்கிலாந்து சாசனச் சட்டம், கீழ்க்கண்ட உள்ளடக்கங்களுடன் இயற்றப்பட்டது.
i) கிழக்கிந்திய அனைத்து வணிக முன்னணி நடவடிக்கைகளையும் நிறுத்தி, நிறுவன பங்குகளை அரசாங்க மயமாக்கினார்.
ii) கிழக்கிந்திய நிறுவன அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
iv) நிர்வாக சீர்திருத்தங்களை மத்திய மயமாக்குதல் திட்டத்தை, குறிப்பாக பொது மற்றும் ராணுவ விவகாரங்களில், கவர்னர் ஜெனரல் குழுவையும் ஈடுபடுத்தி மேலும் தீவிரப்படுத்தினார்.
v) சட்டங்களை தொகுத்து நெறிமுறை படுத்துதல் நடவடிக்கையை வேகப்படுத்தினார்.
vi) கிழக்கிந்திய நிறுவன இந்திய பணியாளர்கள் எந்த காரணங்களாலும் வெளியேற்றப்படக்கூடாது.
4. 1835ல் ஆங்கிலம் நடைமுறை கல்வி மொழியாக்கினார்.
5. ராஜா ராம் மோகன் ராய், ஆர்ய சமாஜ் நிறுவனர், 1830ல் இங்கிலாந்து சென்று, 1833ல் அங்கேயே மறைந்தார்.
6. 1831ல் மைசூர் மன்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பகுதிகள் கையகப்படுத்தினார். இருப்பினும், உடையார் மன்னரை, மன்னராக பதவியில் நீடிக்கச் செய்தார்.
7. கச்சார் மற்றும் ஜைந்தியா பகுதிகளைக் 1832ல் கைப்பற்றினார்.
8. கூர்க் 1834ல் கைப்பற்றப்படுத்தப்பட்டது.
9. 1834ல் ஆக்ரா மாகாணம் உருவாக்கப்பட்டது.
10. மேல் முறையீடு நீதி மன்றங்கள் ஒழிக்கப்பட்டு, கமிஷனர் அமர்த்தப்பட்டார்.
10. ஆக்லாண்ட் பிரபு – 1835-1842: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. இவருக்கு முன்பு குறுகிய காலத்துக்கு சர் மெடாகால்ஃபே பதவியிலிருந்தார். இந்திய பத்திரிகை சுதந்திரத்தின் மீது இருந்த தடையை நீக்கினார்.
2. முதல் ஆப்கான் போர் - (1836-1842). ஆங்கிலேயர்கள் பெருத்த தோல்வி அடைந்தனர். அதனால் ஆக்லாண்ட் பிரபு இங்கிலாந்துக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
3. மகாராஜ ரஞ்சித் சிங் 1839ல் மறைந்தார்.
4. முதல் ஆப்கான் போரில் தோல்வி கண்டது, ""ஆக்லாண்டின் மடத்தனம்"" “Auckland’s folly” என வர்ணிக்கப்படுகிறது.
11. எல்லென்பரோ பிரபு -- 1842-1844: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1842 -- முதல் ஆப்கான் போர் முடிவு.
2. 1843 -- சிந்த் பகுதி கைப்பற்றப்பட்டது.
3. 1843 -- குவாலியர் மன்னருடன் போர்.
12. LORD HARDINGE – 1844-1848: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. முதல் சீக்கிய போர் – 1845-1846 மற்றும் 1846 லாகூர் உடன்படிக்கை. காஷ்மீர் ஆங்கிலேயர் வசம் வந்து, பிறகு குலாப் சிங் க்கு விற்கப்பட்டது.
2. பெண் சிசு வதை தடுக்கப்பட்டது.
3. மத்திய இந்தியாவின் கோண்ட் பழங்குடியினரின் ""நரபலி"" (மனித பலி) பழக்கத்தை ஒழித்தார்.
4. லாகூரில் ஒரு ஆங்கிலேய குடியிருப்பு அதிகாரி அமர்த்தப்பட்டார்.
5. அப்போதைய மன்னர் துலீப் சிங் ""கோஹினூர்"" வைரத்தை ஆங்கிலேயருக்கு கொடுத்தார்.
13. LORD DALHOUSIE - 1848-1856: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. இரண்டாம் சீக்கிய போர் - 1848-1849 – பஞ்சாப் கைப்பற்றப்பட்டது.
2. இரண்டாம் பர்மிய போர் -- 1852 – பர்மாவின் கீழ் பகுதி கைப்பற்றப்பட்டது.
3. 1853 -- சாசனச் சட்டம் -- Charter Act of 1853 – இதன் படி, ஆங்கிலேய இந்தியா, இங்கிலாந்து பாராளுமன்றம் முடிவெடுக்கும் வரை நிர்வாகத்தை கிழக்கிந்திய நிறுவனம் நடத்தும்.
4. “Doctrine of Lapse” என்ற சட்டப்படி, அதாவது, ஒரு ராஜ்யத்தில் ஆளும் வாரிசு இல்லாத நிலையில், அப்பகுதியை கையகப்படுத்தும் சட்டம் -- அமல் படுத்தப்பட்டு, சத்தாரா (1848), சம்பல்பூர், ஜான்சி (1849), மற்றும் நாக்பூர் (1854) ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தினர்.
5. 1856ல் அவுத் பகுதி கையகப்படுத்தப்பட்டது.
6. 1854 -- உலக கல்வி திட்டம் - மூலம் இந்திய மக்களின் கல்வி அறிவையும் வளர்க்க திட்டமிட்டனர். கல்வி அபிவிருத்து குழுவின் தலைவராக அப்போது வுட் Wood என்பவர் இருந்ததால் இதற்கு அவர் பெயரிடப்பட்டது.
7. 1853 இந்த வருடம் இந்தியாவின் கட்டுமான வசதி மேம்பாடு வருடம் -- (1) 16.4.1853, இந்தியாவின் முதல் ரயில் வண்டி பாம்பே -- தானேவுக்குவிடையிலும், (2) கல்கத்தா - ஆக்ராவுக்கிடையில் தந்தி வசதி, (3) அஞ்சல் வசதி ஏற்படுத்தப்பட்டது.
8. விதவை மறு திருமணம் சட்டம் 1856 இயற்றப்பட்டது.
9. பொதுப்பணித்துறை எல்லா மாகாணங்களிலும் உருவாக்கப்பட்டது. 10. ஒடிசா, பீஹார் பகுதி ""சந்தால்"" பழங்குடியினர் 1855-1856 களில் புரட்சியை தொடங்கினர். (இதைப் பற்றிய விவரம் பிறகு)
14. கேனிங் பிரபு – 1856-1857: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. இவரே கம்பெனி நிர்வாகத்தின் கடைசி கவர்னர் ஜெனரல்.
2. மதராஸ், பாம்பே, கல்கத்தா பல்கலைக்கழகங்கள் 1857ல் உருவாகின.
3. சிப்பாய் கலகம், 1857 தொடக்கம்.