Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. ஹைதராபாத் நிஸாம் மன்னர்கள் ஆட்சி எவ்வாறு தொடங்கியது?
நிஸாம் உல் முல்க் ஆஸாஃப் ஜாஹி NIZAM UL MULK ASAF JAHI -1724-1748: அவருடைய இயற்பெயர் கமார் அத் தின் சிங்குலிச் கான். முகலாயர் காலத்தில் டெக்கான் பகுதியின் ஆளுநர் (வைஸ்ராய்) ஆக 1713-1715 மற்றும் 1720-1722 காலத்தில் இருந்தார். அவருக்கு ""கான் இ துர்ஹான்"" “Khan-i-Durhan” மற்றும் ""நிஸாம் உல் முல்க்"" “Nizam ul-Mulk” என்ற சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. முகலாய அரசவை குழப்பங்கள், மற்றும் அவுரங்கசீப்பின் மரணம் என்ற நிலைய பயன்படுத்தி, 1724ல் இவர் ஹைதராபாத் சென்று தனது சுதந்திர ""ஹைதராபாத் மாகாணம் அரசு"" அமைத்துக்கொண்டார்.
Q2. ஹைதராபாதி நிஸாம் வம்ச ஆட்சி வேறு என்ன பெயரில் அழைக்கப்பட்டது?
"ஆஸாஃப் ஷாஹி Asaf Shahi " வம்சம் என, முகலாயர்கள் நிஸாம் க்கு 1725ல் "ஆஸாஃப் ஜா" என்ற பட்டம் வழங்கப்பட்டதால்.
Q3. டெக்கான் பகுதியை ஆண்ட நிஸாம் மன்னர்கள் யாவர்?
நிஸாம் உல் முல்க் ஆஸாஃப் ஜாஹி -- NIZAM UL MULK ASAF JAHI – 1724-1748 – 1724 இந்த வம்சத்தை நிறுவி, அமைதியான வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஆட்சியாக இருந்தது. 1748ல் மறைந்தார், அவுரங்காபாத் அருகே குல்தாபாத்தில் இவர் கல்லறை வைக்கப்பட்டது.
நாஸிர் ஜங் NAZIR JUNG -1748-1750 – நிஸாம் உல் முல்க் ஆஸாஃப் ஜாஹியின் உறவினர். நிஸாம் உல் முல்க் ஐ கொலை செய்து பதவிக்கு வந்தார். டிசம்பர் 1750ல் கடப்பா நவாப் பத்தான் ஹிம்மத் கான் ஆல் கொலை செய்யப்பட்டார்.
முஸாஃபர் ஜங் MUZAFFAR JUNG – 1750-1751 – ஃப்ரெஞ்ச் உதவியுடன் பதவிக்கு வந்தார். குறுகிய கால ஆட்சி. கர்னூல் நவாப் உடன் லக்கிரெட்டிப் பள்ளி என்ற இடத்தில் நடந்த போரில் கொலையுண்டார்.
நவாப் சையத் முகமத் கான் NAWAB SYED MOHAMMAD KHAN 1751-1762 – சலாபத் கான் என அழைக்கப்பட்டார். இவருடைய சகோதரர் ஆஸாஃப் ஜா 2 வால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, 1763ல் கொலை செய்யப்பட்டார்.
மீர் நிஸாம் அலி கான் பகதூர் - ஆஸாஃப் ஜா 2 MIR NIZAM ALI KHAN BAHADUR 1762 – 1803 தனது சகோதரரை கொலை செய்து விட்டு பதவிக்கு வந்து 41 ஆண்டுகள் பதவி வகித்தார். ""நிஸாம் அலி"" என அழைக்கப்பட்டார். இவருடைய காலத்து நிகழ்வுகள்:
(1) 1795ல் மராத்தியர்கள் இவரைத் தோற்கடித்து பெருத்த சேதம் விளைவித்து, தௌலத்தாபாத், அஹமதாபாத், ஷோலாப்பூர் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினர். 300 லட்சம் ரூபாய் இழப்புத் தொகையும் பெற்றனர்.
(2) 1976ல் திப்பு சுல்தானின் தொடர் அச்சுறுத்தல்களால், ஆங்கிலேயர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு, அதனால் தனது சுதந்திரத்தையும் உரிமையையும் சிறிது சிறிதாக இழக்கப் தொடங்கினார். ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக, கடைசியில், ஆங்கிலேயர்களின் கீழ் குறுநில மன்னர்கள் அந்தஸ்துடன் ஆட்சி நடத்தினார். (இந்த அந்தஸ்து சுதந்திரம் வரை நீடித்து பிறகும் சிறிது காலம் நீடித்தது. இதைப் பற்றி பிறகும் நீடித்து, இந்திய அரசாங்கம் ""operation polo"" என்ற ரகசிய ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றியது) 1803ல் இவர் மறைந்தார். இவருக்குப் பிறகு வந்த நிஸாம்கள், ஆங்கிலேயர்களின் கீழ் ஆட்சி புரிந்தனர்.
மீர் அக்பத் அலி கான் சிக்கந்தர் ஜா MIR AKBAD ALI KHAN SIKANDHAR JAH - 1803-1829;
மீர் ஃபர்கொண்டா அலி கான் நாசிர் உத் தௌலா MIR FARKHONDA ALI KHAN NASIR UD DOULA – 1829-1857;
மீர் அஃப்ஸத் அலி கான் அஃப்சல் உத் தௌலா MIR AFZAT ALI KHAN AFZAL UD DOULA – 1857-1869
மீர் மஹபூப் அலி கான் MIR MAHABOOB ALI KHAN – 1869-1911 – ""மகமது அலி பாஷா"" என அழைக்கப்பட்டார். 3 வயதில் பட்டம் ஏற்றதால், ஒரு பாதுகாப்பாளர்/ஆலோசகர் ஆட்சியை நடத்தினார். இவர் தன் வாழ்க்கையை ஆடம்பரத்தில் கழித்தார். இவரிடம் ""ஜேகப் வைரம்"" “Jacob Diamond” 184.5 கேரட் எடையுள்ள சுமார் 400 கோடி மதிப்புள்ள வைரம் இருந்தது. இது இப்பொது இந்திய அரசாங்கத்திடம் உள்ளது.
மீர் உஸ்மான் அலி கான் MIR OSMAN ALI KHAN – 1911-1948 ஹைதராபாத் நிஸாம் வம்சத்தின் கடைசி மன்னர். அவருடைய காலத்தில் இவரே உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். ஹைதராபாத் நகர வளர்ச்சி, உஸ்மானிய பல்கலைக்கழகம் ஆகியவை இவர் காலத்தில் ஏற்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவர் தனது ராஜ்யத்தை இந்தியாவுடன் இணைக்க மறுத்து வந்ததால், இந்திய அரசாங்கம் “Operation Polo” என்ற ராணுவ நடவடிக்கை மூலம் 16.9.1948 அன்று கைப்பற்றியது. 20.9.1948 அன்று இந்தியாவுடன் இணைந்தது - நிஸாம் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 24.2.1967 அன்று மீர் உஸ்மான் அலி கான் மறைந்தார். அவருடைய ஆசைக்கிணங்க, கோத்தி அரண்மனையின் முன்னால் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.