Khub.info Learn TNPSC exam and online pratice

கத்திச் சண்டை - FENCING

Q1. கத்திச் சண்டை, நவீன காலத்தில், என்பது ஒரு விளையாட்டாக உள்ளது. அது என்ன?
இது இருவருக்கான கத்திச் சண்டை விளையாட்டு. எதிராளியைக் காயப்படுத்தாதவாறு நடத்தப்படும் விளையாட்டு. இதில் மூன்று விதமான - FOIL, EPEE, SABRE என்ற கத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளின் உதவியால் எதிராளியின் உடலில் பல இடங்களை தொடுவதன் மூலம் புள்ளிகள் கணக்கிடப்படும். இந்த கத்திகள் மின் தொடர்கள் மூலம், மின்னணு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். கத்தி எதிராளியின் உடலில் படும் இடத்திற்கேற்ப புள்ளிகள் இயந்திரத்தில் பதிவாகி விடும். அதன் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.
Q2. கத்திச் சண்டை ஒலிம்பிக்கில் எப்போது முதல் சேர்க்கப்பட்டது?
1896 முதல்.
Q3. கத்திச் சண்டையில் எத்தனை வகையான போட்டிகள் உள்ளன?
"1. நின்றுகொண்டே சண்டையிடுதல்
2. சக்கர நாற்காலியில் உட்கார்ந்து சண்டையிடுதல்."
Q4. கத்திச் சண்டை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
9 நிமிடங்களில் 15 புள்ளிகள். 9 நிமிடங்களுக்குள் எந்த வீரர் 15 புள்ளிகள் எடுத்தாலும், போட்டி நிறுத்தப்படும். அதே போல் யாரும் 15 புள்ளிகள் எடுக்காவிட்டாலும் நேரம் முடிந்தவுடன் ஆட்டம் நிறுத்தப்படும். புள்ளிகள் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். புள்ளிகள் சம நிலை ஏற்பட்டால், மீண்டும் ஒரு புள்ளிக்காக போட்டி நடத்தப்பட்டு, முதலில் புள்ளி எடுப்பவர் வெற்றி பெற்றதாக கருதப்படும்.
Q5. இந்த கத்திச் சண்டை விளையாட்டில் புகழ்பெற்ற நாடுகள் எவை?
ஃப்ரான்ஸ், இத்தாலி, ஹங்கேரி, ரஷ்யா, ரொமேனியா.
Q6. கத்திச் சண்டை விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பு எது?
சர்வதேச கத்திச் சண்டை கூட்டமைப்பு -INTERNATIONAL FENCING FEDERATION - 1913 - லாசென் (LAUSSANE) ஸ்விட்சர்லாந்து.