Khub.info Learn TNPSC exam and online pratice

தேவகிரி யாதவர்கள் -- YADAVAS OF DEVAGIRI - கி.பி. 850 -1334.

Q1. யாதவ வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
பில்லம்மா 5 -- BHILLAMMA V – கி.பி. 1173 – 1192 -- இவருக்கு முன்பு இந்த வம்சத்தில் சிறு அளவிலான சில அரசர்கள், ராஷ்டிரகுட/சாளுக்ய மன்னர்களின் சிநேக மன்னர்களாக சிறு பகுதிகளை ஆண்டு இருந்துள்ளனர். இந்த இரண்டு வம்சங்களும் முடிவை நெருங்கும் நிலையில், பில்லம்மா 5 இந்த வம்ச ஆட்சியை நிறுவி, சுமார் 100 ஆண்டுகள், மகாராஷ்டிரா, வட கர்நாடகா, மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளை ஆண்டு வந்தனர். தலை நகரம் தேவகிரி (இன்றைய தௌலாதாபாத், மகாராஷ்டிரா) "

Q2. பில்லம்மா 5 ஐ தொடர்ந்த யாதவ மன்னர்கள் யாவர்? 
ஜெய்துகி -- JAITUGI – 1192-1200 – வாரங்கல் பகுதியை ஆண்ட காகத்திய மன்னர், மேற்கில் மாளவா, லத்தா, குர்ஜாரா பகுதிகளை வென்று, தனது ஆட்சியை வலுப்படுத்தினார். இவருடைய அரசவையில், புகழ் பெற்ற வாயியல் நிபுணர் பாஸ்கராச்சார்யா மைந்தன் லக்ஷ்மிதாரா இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கானா 2 -- SINGHANA II – 1200-1247 – யாதவ வம்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசராக விளங்கினார். ஹொய்சாளா, மாளவ பரமாராஸ், குஜராத் சாளுக்யர்களை தோற்கடித்து, மத்திய இந்திய பகுதியான டெக்கானில் மிகவும் வலுவான ஒரு ஆட்சியை எட்டியது. இசை மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு மிகவும் துணை புரிந்தார். சாரங்கதேவா என்பவரால் எழுதப் பட்ட சங்கீத ரத்னாகரா என்ற சமஸ்கிருத இசையைப் பற்றிய நூல் எழுதப்பட்டுள்ளது. அனந்த தேவா மற்றும் சங்கதேவா என்ற வானியல் நிபுணர்கள் இந்த அரசவையில் இருந்தனர். இவர்களுள் சங்கதேவா, தனது பாட்டனார் பாஸ்கராச்சார்யா நினைவாக காந்தேஷ் பகுதியில் பதானா என்ர இடத்தில் ஒரு வானியல் கல்விக்கூடம் நிறுவினார்.
கன்னாரா -- KANNARA – 1247-1261 – தனது ஆட்சியையும் பகுதிகளையும், தனது அரசவை உதவியுடன் தக்கவைத்துக்கொள்வதில் மிகவும் ஈடுபட்டார்.
மகாதேவா -- MAHADEVA – 1261 – 1271 – காகத்திய மன்னர்களுடன் போரில் வெற்றிப் பெற்றார். ஹொய்சாளப் பகுதியை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தோல்வி கண்டார். இவருடைய அரசவையில் ஹேமாத்ரி என்ற புகழ்பெற்ற கவிஞர் இருந்தார்.
ராமச்சந்திரா -- RAMACHANDRA – 1271 – 1312 – ஹொய்சாளருக்கு எதிராக இவருடைய தொடர் முயற்சி, இந்த வம்ச ஆட்சியை பலமிழக்கச் செய்தது. 1296, அலாவுதீன் கில்ஜி இவரை அடிமைப்படுத்தி, தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
சங்கரதேவா -- SANKARADEVA – அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காஃபூர் இவரை போரில் கொன்று, யாதவ வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.