Khub.info Learn TNPSC exam and online pratice

நதிகள் -- RIVERS

Q1. நதி என்பது என்ன?
இயற்கையாகவே ஒரு நீரோட்டம் ஏற்பட்டு உயரப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதிகளுக்கு பாய்வது.

Q2. நதிகள் ஏற்பட காரணமாக அமைவது எவை?
பொதுவாக, எங்கு மழை அதிகமாக பொழிகிறதோ அங்கிருந்தும், பனி உருகுவதாலும் ஏற்படும் நீரோட்டங்களே நதிகள்.
Q3. முகத்துவாரம் -- “Head waters” என்பது என்ன?
நதி துவங்கும் இடம்.
Q4. கிளையாறு -- Distributary என்பது என்ன?
ஒரு பெரிய நதியிலிருந்து பிரிந்து செல்லும் கிளை நதிகள்.
Q5. துணையாறு -- Tributary என்பது என்ன?
ஒரு சிறிய நதி பெரிய நதியுடன் இணைவது.
Q6. கழிமுகம் Estuary என்பது என்ன ?
ஒரு நதியின் முகப்பில் ஏற்படும் புனல் போன்ற அமைப்பு.
Q7. வெள்ளப்பெருக்கு சமவெளி -- Flood Plain என்பது என்ன?
ஒரு நதியால் ஏற்படும் வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படும் தாழ்வான சமவெளி.
Q8. வெள்ளம் என்பது என்ன?
அபரிமிதமான நீர்வரத்தினால் நதிகள் வெளியில் நீர் வழிந்தோடும் நீர் சுற்றுப்புற பகுதிகள் பகுதிகள் பாதிக்கப்படுவது.
Q9. ஆங்கிலத்தில் Rapids என்றழைக்கப்படுவது என்ன?
ஒரு ஆற்றின் நீர் போக்கில் இடையில் ஏற்படும் தடுப்புகள் (பாறைகள்) மீது மோதி வழிவது ஒரு சிறு நீர் வீழ்ச்சி போல் அமைவது.
Q10. ஆங்கிலத்தில் -- River Bar எனப்படுவது என்ன?
ஆற்றின் போக்கில் ஏற்பட்டிருக்கும் ஒரு மணற்மேடு. இதனால் நீரோட்டமும், பயண முயற்சியும் தடைபடக்கூடியதாக அமைவது.
Q11. வடி நிலம் -- River Basin என்பது என்ன?
ஒரு ஆற்றின் நீர் பரவி செல்லக்கூடிய அனைத்து இடங்களும்.
Q12. ஆங்கிலத்தில் Wadi என அழைக்கப்படுவது என்ன?
பாலைவன ஆறு. எப்போது வறண்ட நிலையிலிருந்து, மழையினால் நீரோட்டம் பெறுவது.
Q13. நீர்பிரி மேடு -- “Water – parting” or “Water shed” என்பது என்ன?
ஒரு ஆற்றின் போக்கின் குறுக்கே அமைந்துள்ள நல்ல உயரமான பகுதியால் ஆற்றின் போக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டு திசை மாறுவது.
Q14. ஆற்றின் நீர்ப்போக்கில் நீரின் கொள்ளளவை அறியும் முறை என்ன?
குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், பாயக்கூடிய நீரின் அளவு கன மீட்டரில் அளக்கப்படுகிறது. அதற்கான வழி -- 1m (cube) = 35.31 ft/s = CUSEC = Cubic feet per second.

உலக நதிகள் -- RIVERS ABROAD

Q15. உலகின் நீளமான நதி எது?
நைல் நதி -- 6853 கி.மீ (இருப்பினும் 2007ல் அமேசான் நதி தான் -- (6992 கி.மீ) நீளமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ).
Q16. நைல் நதி எங்கு உற்பத்தியாகிறது?
ஆப்பிரிக்காவின் இரண்டு இடங்களில், வெள்ளை நைல் (சுமார் 3700 கி.மீ) மற்றும் நீல நைல் (சுமார் 1450 கி.மீ) என எத்தியோப்பியாவில் உருவாகி, சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூம் நகரில் நீல நைல் நதியுடன் சங்கமித்து, பெரிய நதியாகிறது.
Q17. நைல் நதி எந்த நாடுகள் வழியாகப் பாய்கிறது?
எத்தியோப்பியா, தன்ஸானியா, கென்யா, உகாண்டா, சூடான், எகிப்து.
Q18. நைல் நதியின் துணை நதிகள் யாவை?
1. நீல நைல் -- BLUE NILE: எத்தியோப்பியாவின் தானா ஏரி யில் உருவாகி சூடான் வழியாக சுமார் 1450 கி.மீ க்கு பாய்ந்து, சூடான் தலை நகர் கார்ட்டூம் என்ற இடத்தில் வெள்ளை நைலுடன் இணைகிறது.
2. வெள்ளை நைல் -- WHITE NILE: மத்திய ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகளில் தொடங்கி, தன்ஸானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா, தெற்கு சூடான் வழியாக, சுமார் 3700 கி.மீ பாய்ந்து, சூடானின் தலைநகர் கார்ட்டூம் அருகில் நீல நைலுடன் இணைந்து பெரிய நைல் நதியாகிறது.
Q19. நைல் நதி யின் வடிகால் எங்குள்ளது?
மத்தியத்தரைக்கடல், எகிப்து.
Q20. நைல் நதியின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணை எது?
அஸ்வான் அணை, எகிப்து.
Q21. நைல் நதியால் உருவாக்கப்பட்டுள்ள மிக வளமான டெல்டா பகுதி எது?
நைல் டெல்டா. சுமார் 160 கி.மீ.
Q22. உலகின் மிகப்பெரிய நதி (இப்போது நீளமானதும்) எது?
அமேஸான்.
Q23. அமேஸான் நதி எங்கு உருவாகிறது?
1. பொதுவாக இந்த நதி பெரு நாட்டில் அபுரிமாக், நெவாடோ மிஸ்மி, ஆண்டிஸ் மலை, என்ற இடத்திலிருந்து உருவாகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
2. இருப்பினும், 2008ல் நடந்த ஒரு ஆய்வில், இது, பெரு நாட்டின் தென் பகுதியில் உள்ள அபாசேட்டா நதி, அரெகுப்பா பகுதியிலிருந்து உருவாகிறது என உறுதி செய்யப்பட்டு, இந்த நதியே உலகின் நீளமான நதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Q24. அமேஸான் நதியின் நீளம் என்ன?
6992 கி.மீ – உலகின் நீளமான நதி.
Q25. அமேஸான் நதியின் துணை நதிகள் யாவை?
மரனான், ஜபுரா, ரியோ, நீக்ரோ, புருஸ், மடேரா, தபஜோஸ், டொகாடின்.
Q26. அமேஸான் நதியின் வடிகால் எங்கே உள்ளது?
தென் அட்லாண்டிக் பெருங்கடல், ப்ரேசில்.
Q27. அமேஸான் நதி பயணிக்கக்கூடியதா?
சுமார் 3000 கி.மீக்கு.
Q28. அமேஸான் நதி வடி நிலம் எவ்வளவு பெரியது?
உலகின் மிகப்பெரிய வடிநிலம் சுமார் 70 லட்சம் ச.கி.மீ.
Q29. அமேஸான் நதியில் ஒரு வினாடியில் பாயக்கூடிய நீரின் அளவு என்ன?
சராசரியாக 119000 கன மீட்டர் வினாடிக்கு. உலகிலேயே அதிகமான நீர்ப்போக்கு.
Q30. மிஸ்ஸிஸிப்பி நதி எங்குள்ளது?
வட அமெரிக்கா.
Q31. மிஸ்ஸிஸிப்பி நதி எங்கு உருவாகிறது?
இடாஸ்கா ஏரி, மின்னசோட்டா, அமெரிக்கா.
Q32. மிஸ்ஸிஸிப்பி நதியின் நீளம் எவ்வளவு?
3734 கி.மீ.
Q33. மிஸ்ஸிஸிப்பி நதியின் துணை நதி எது?
மிஸ்ஸௌரி -- Missouri – 3767 கி.மீ – அமெரிக்காவின் மொண்டானா பகுதியில் உருவாகிறது.
Q34. மிஸ்ஸிஸிப்பி மற்றும் மிஸ்ஸௌரி நதிகள் எங்கு சங்கமிக்கின்றன?
செயிண்ட் லூயிஸ், மிஸ்ஸௌரி (அமெரிக்கா) அருகில்.
Q35. மிஸ்ஸிஸிப்பி நதியின் சிறப்புப் பெயர் என்ன? ஏன்?
கருஞ்சேறு ஆறு -- BLACK MUDDY – காரணம், இந்நதியில் அதிகமான வண்டல் கலந்திருப்பதால்.
Q36. ஆசியாவின் நீளமான நதி எது?
யாங்ட்ஸே கியாண்ட் -- சீனா -- 6211 கி.மீ. இதுவே உலகின் மூன்றாவது நீளமான நதி.
Q37. யாங்ட்ஸே நதி, எங்கு உருவாகி, எங்கு பயணித்து, எங்கு முடிவடைகிறது?
திபெத்தின் கிங்காய் Qinghai பகுதியில் உருவாகி, சீனா வழியாக, கிழக்கு சீனக்கடலில் ஷாங்காய் நகரில் கடலில் கலக்கிறது.
Q38. "சீனாவின் துயரம்" “China’s Sorrow” எனப்படும் நதி எது?
ஹ்வாங் ஹோ -- HWANG HO -- அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால்.
Q39. ஹ்வாங் ஹோ நதி எங்கு உருவாகிறது, நீளம் என்ன, எங்கு முடிவடைகிறது?
கிங்காய் மாகாணம், திபெத் – 5464 கி.மீ -- பொஹாய் கடல், பசிபிக் கடலில் கலக்கிறது.
Q40. ஹ்வாங் ஹோ நதியில் 1938 ல் நடந்த ஒரு நிகழ்வு உலக சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்றது. அது என்ன?
1938ல் இரண்டாம் சீன ஜப்பான் போரின் போது, ஜப்பானிய படைகள் உட்புகாமல் இருப்பதற்காக இந்த நதியில் செயற்கையாகவே வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தப்பட்டது. இதனால் சுமார் 5 லட்சம் பேர் மரணம் அடைந்தனர்.
Q41. யெனிஸ்ஸி நதி -- Yeneissei எங்குள்ளது?
சைபீரியா (ஆசியா) – மவுண்ட் டன்னௌலா வில் தொடங்கி, 5300 கி.மீ பாய்ந்து, ஆர்க்டிக் கடலில் கலக்கிறது.
Q42. ஓப்-இர்தியிஷ் நதி எங்குள்ளது?
சைபீரியா -- ஆசியா – இது ஓப் மற்றும் இர்தியிஷ் இரு நதிகள். சைபீரியா மற்றும் சீனாவில் தொடங்கி, 5410 கி.மீக்கு பாய்ந்து, கரா கடலில் கலக்கிறது.
Q43. அமுர் நதி -- Amur எங்குள்ளது?
சீனாவில் தொடங்கி, ரஷ்யா மற்றும் மங்கோலியா வழியாக, 4444 கி.மீக்கு பாய்ந்து, பசிபிக் கடலில் கலக்கிறது.
Q44. காங்கோ நதி எங்குள்ளது?
மத்திய ஆப்பிரிக்கா. மத்திய ஆப்பிரிக்க மலைகளிலும், தங்கனிகா மற்றும் ம்வேரு ஏரிகளிலிருந்து உருவாகி, ரொயோமா நீர்வீழ்ச்சியிலிருந்து காங்கோ என பெயர் பெற்று, 4667 கி.மீ பயணித்து, ஜனநாயக குடியரசு காங்கோ, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மற்றும் காங்கோ குடியரசு வழியாக பாய்ந்து அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
Q45. காங்கோ நதியின் சிறப்பு அம்சம் என்ன?
இதன் முழு நீளமும் பயணிக்கக்கூடியது. navigable.
Q46. லேனா என்ற நதி எங்குள்ளது?
சைபீரியாவின் பைக்கால் மலையில் தோன்றி, சுமார் 4400 கி.மீ ரஷ்யாவில் பயணித்து, ஆர்க்டிக் கடலில் கலக்கிறது.
Q47. நிகர் -- Niger என்ற நதி எங்குள்ளது?
சியரா லியோன், நைஜீரியா - சுமார் 4800 -- கினி வளைகுடாவில் அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
Q48. டனுபே -- Danube நதி எங்குள்ளது ?
ஐரோப்பாவின் பெரிய நதிகளில் ஒன்று . ஜெர்மனியின் பேடன் நகருக்கருகில் கருப்பு வனத்தில் தொடங்கி, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாகியா, ஹங்கேரி, க்ரோஷியா, செர்பியா, ரொமானியா, பல்கேரியா, உக்ரெய்ன் மற்றும் மால்டோவா நாடுகள் வழியாக -- 2860 கி.மீ -- கருங்கடலில் கலக்கிறது.
Q49. டனுபே நதியின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள ஒரு பாலம், இரண்டு நாடுகளைப் பிரிக்கிறது. அது என்ன?
ஹங்கேரி -- ஸ்லோவாகியா
Q50. டனுபே நதி, நான்கு நாடுகளின் தலைநகரங்கள் வழியாக பாய்கிறது. அவை யாவை?
1. வியன்னா -- ஆஸ்திரியா
2. ப்ரதிஸ்லாவா -- ஸ்லோவாகியா
3. புடாபெஸ்ட் -- ஹங்கேரி
4. பெல்க்ரேட் -- செர்பியா
Q51. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரத்துக்கும் டனுபே நதிக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன?
புடா -- பெஸ்ட் என்ற இரட்டை நகரங்கள் இந்த நதியிலுள்ள பாலத்தின் மூலம் இணைக்கப்பட்டு தலைநகரமாக இயங்குகிறது.
Q52. மர்ரே -- டார்லிங் நதிகள் எங்குள்ளன?
ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவின் ஆல்ப்ஸ் மலையிலும், புது தென் வேல்ஸ் லும் தொடங்கி, இணைந்து, மொத்தமாக சுமார் 2844 கி.மீ பயணித்து, இந்திய பெருங்கடலில் கலக்கிறது.
Q53. வொல்கா -- Volga நதி எங்குள்ளது?
ரஷ்யா -- வால்டாய் பீடபூமியில் மாஸ்கோஸ் என்ற இடத்தில் உருவாகி, சுமார் 3700 கி.மீ பயணித்து கேஸ்பியன் கடலில் கலக்கிறது.
Q54. அமுர் தர்யா -- Amur Darya என்ற நதி எங்குள்ளது?
மத்திய ஆசியா -- மத்திய ஆசியாவின் பாமிர் மலையில் உருவாகி, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் வழியாக சுமார் 2400 கி.மீ பயணித்து, அரால் கடலில் கலக்கிறது.
Q55. கொலராடோ நதி -- Colorado எங்குள்ளது?
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ -- 2330 கி.மீ -- அமெரிக்காவின் ராக்கி மலையில் உருவாகி கலிஃபோர்னியா வளைகுடாவில் கலக்கிறது. இதன் வழியில் உள்ளது புகழ்பெற்ற கேன்யான் பெரும் பள்ளம் -- Grand Canyon .
Q56. எஃப்ரேட்ஸ் -- Euphrates என்ற நதி எங்குள்ளது?
டைக்ரிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. துருக்கியில் தொடங்கி, 2800 கி.மீ பயணித்து, துருக்கி, சிரியா, ஜோர்டான், சௌதி அரேபியா, குவைத், இராக் வழியாக பாரசீக வளைகுடாவில் கலக்கிறது.
Q57. மெகாங் -- Mekong நதி எங்குள்ளது?
தென் கிழக்கு ஆசியாவின் நீளமான நதிகளில் ஒன்று. திபெத்தில் தொடங்கி, திபெத், சீனா, மியான்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம் வழியாக சுமார் 4909 கி.மீ பயணித்து தென் சீனக் கடலில் கலக்கிறது.
Q58. ஜோர்டான் -- Jordan நதி எங்குள்ளது?
பாலஸ்தீனிய மேற்குக் கரை -- ஜோர்டான் நாட்டு எல்லைக்கிடையில் உள்ள இந்த நதி சுமார் 251 கி.மீ நீளமுடையது. இந்த நதியில் யேசு மகான் ஞானஸ்நானம் பெற்றார் என்பதால் கிறித்துவர்களுக்கு புனித நதியாகிறது.
Q59. ரைன் -- Rhine நதி எங்குள்ளது?
ஐரோப்பா -- வின் முக்கிய நதி. ஸ்விட்ஸர்லாந்தில் தொடங்கி, 1320 கி.மீ பயணித்து, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், நெதர்லாந்து வழியாக வடக்கடலில் கலக்கிறது.
Q60. ஸ்ம்பேஸி -- Zambesi நதி எங்குள்ளது?
ஆப்பிரிக்கா -- ஸாம்பியா நாட்டில் தொடங்கி, 2574 கி.மீ பயணித்து, ஸாம்பியா, காங்கோ, அங்கோலா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொஸாம்பிக் வழியாக இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது.
Q61. உலகிலுள்ள வேறு சில முக்கிய நதிகள் பற்றிய தகவல்:
எண்நதி பெயர் நாடு தொடங்குமிடம் நீளம்.கி.மீ
1. யூகோன் அமெரிக்கா/கேனடா -- 3700
2. சான் ஃப்ரான்சிஸ்கோ ப்ரேசில் -- 3160
3. பரானா தென் அமெரிக்கா -- 2570
4. ஓரினாகோ வெனிசுலா -- 2410
5. ட்ரிபியர் ரஷ்யா வல்டாய் மலை 2 290
6. கொலம்பியா கேனடா கொலம்பிய ஏரி 2000
7. மெக்கென்ஸி கேனடா ஸ்லேவ் ஏரி 1738
8. ஸ்நேக் அமெரிக்கா --- 1670
9. மேக்டலின் கொலம்பியா -- 1540
10. ஹெல்மண்ட் ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் 1150
11. எல்பி ஜெர்மனி ---- 1091
12. டேகஸ் ஸ்பெய்ன்/போர்சுகல் ---- 1038
13. ம்யூஸ் ஃப்ரான்ஸ் --- 925
14. சீன் ஃப்ரான்ஸ் --- 776
15. தேம்ஸ் லண்டன் -- 364
Q62. உலகின் மிகச்சிறிய நதி எது?
""ரோ"" என்ற நதி. இது மொண்டானா, அமெரிக்காவில் உள்ளது. இது வெறும் 61 மீ நீளம் மட்டுமே இருந்தாலும் நதி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
Q63. நீர்ப் போக்கின் அடிப்படையில், உலகிலேயே மிகப்பெரிய நதி எது?
அமேஸான்.
Q64. அமெரிக்காவின் கேன்யான் பெரும் பள்ளம் உருவாகக் காரணமாக இருந்த நதி எது?
கொலராடோ, அமெரிக்கா.
Q65. மேற்காசியாவின் நீளமான, ஆப்கானிஸ்தானின் முக்கிய நதி எது?
அமு தார்யா.
Q66. ஐரோப்பாவின் நீளமான நதிகள் யாவை?
வோல்கா (3692 கி.மீ) மற்றும் டனுபே (2860 கி.மீ) .
Q67. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஒரு நதி ஆங்கிலத்தில் “Scottish River of Spirit” or “Water Devil” என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்படுகிறது. அது எது?
கெல்பீ
Q68. அமெரிக்காவின் கொலராடோ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற அணையின் பெயர் என்ன?
ஹூவர் அணை -- HOOVER DAM – உலகின் பெரிய அணைகளுள் இதுவும் ஒன்று. நெவாடா மற்றும் அரிஸோனா மாவட்டங்களுக்கிடையில் உள்ளது.
Q69. கருப்பு நிறத்துக்கும் டனுபே நதிக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஜெர்மனியின் கருப்பு வனம் Black forest ல் உற்பத்தியாகி, கருங்கடலில் Black Sea கலக்கிறது.
Q70. நீல நைல் நதி எங்கு உருவாகிறது?
தானா ஏரி, எத்தியோப்பியா.
Q71. பயோ பயோ என்ற நதி எந்த நாட்டில் உள்ளது?
சிலி.
Q72. வாங்க்ச்சு Wangchu நதி எங்குள்ளது?
மியான்மார்.
Q73. ஸம்பேஸி நதி, விக்டோரியா நீர்வீழ்ச்சி மற்றும் மாளவி ஏரியைக் கண்டு பிடித்தவர் யார்?
டேவிட் லிவிங்ஸ்டோன், ஸ்காட்லாந்து -- இவர் ஒரு கிறித்துவ மத போதகர்.
Q74. க்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய நதி எது?
அச்சிலெஸ் -- Achelous -- 220 கி.மீ.
Q75. லிம்போபோ -- Limpopo நதி எங்குள்ளது?
Mozambique.
Q76. உலகில் அதிகமான நாடுகள் வழியாக பாயும் நதி எது?
டனுபே நதி -- ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாகியா, ஹங்கேரி, க்ரோஷியா, செர்பியா, ரொமானியா, பல்கேரியா, உக்ரெய்ன் மற்றும் மால்டோவா-- 10 நாடுகள் வழியாக -- 2872 கி.மீ

இந்திய நதிகள் -- INDIAN RIVERS

Q77. இந்தியாவின் பெரும் நதிகள் யாவை?
ப்ரம்மபுத்ரா, கங்கை, சிந்து, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமோதர், நர்மதா, தப்தி, மகாநதி, துங்கபத்ரா.
Q78. இந்திய நதிகள் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
1. இமாலய நதிகள் -- HIMALAYAN – கங்கை, ப்ரம்மபுத்ரா, சிந்து.
2. தக்காண நதிகள் -- DECCAN – கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, மகாநதி, தாமோதர், துங்கபத்ரா.
Q79. இந்தியாவின் நீளமான நதி எது?
ப்ரம்மபுத்ரா.
Q80. ப்ரம்மபுத்ரா நதி எங்கு தோன்றுகிறது?
கைலாச மலை, திபெத்.
Q81. ப்ரம்மபுத்ரா நதியின் நீளம் என்ன, அது பாயும் இடங்கள் யாவை?
2900 கி.மீ -- திபெத், இந்தியா, வங்காள தேசம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
Q82. ப்ரம்மபுத்ரா நதி திபெத்திலும், வங்காள தேசத்திலும் எவ்வாறு அழைக்கப் படுகிறது?
யார்லங்/திஹாங் -- திபெத்; ஜமுனா -- வங்காளதேசம்.
Q83. ப்ரம்மபுத்ரா என்று எங்கிருந்து அழைக்கப்படுகிறது?
திபெத்தின் திஹாங் மற்றும் லோஹித் நதிகள் சங்கமிக்குமிடத்திலிருந்து.
Q84. ப்ரம்மபுத்ரா எந்த இடத்தில் பிரிந்து, பிறகு 100 கி.மீக்கு பிறகு இணைகிறது?
திப்ருகர் மற்றும் லக்கிம்பூர் அஸ்ஸாம் நகரங்களுக்கு இடையில் பிரிந்து பிறகு 100 கி.மீ தாண்டி இணைகிறது.
Q85. ப்ரம்மபுத்ரா நதியால் உருவாக்கப்பட்டுள்ள தீவின் பெயர் என்ன?
மஜூலி -- உலகின் மிகப்பெரிய நதிசார்ந்த தீவு.
Q86. ப்ரம்மபுத்ரா நதி பாயும் மாநிலங்கள் யாவை?
அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம்.
Q87. ப்ரம்மபுத்ரா நதி எந்த அண்டை நாட்டுக்குள் பாய்கிறது?
வங்காள தேசம் -- இங்கு அது கங்கை நதியுடன் இணைந்து ஜமுனா என பெயர் பெறுகிறது.
Q88. ப்ரம்மபுத்ரா நதி எங்கு கடலில் கலக்கிறது?
வங்காள தேசத்தில், சாந்த்பூர் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
Q89. தாமோதர் நதி எங்கு உருவாகிறது?
சந்த்வா கிராமம், ஜார்க்கண்ட்.
Q90. தாமோதர் நதி எந்த நதியின் துணை நதியாகிறது?
ஹூக்ளி நதி.
Q91. தாமோதர் நதி பாயும் மாநிலங்கள் யாவை?
ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் -- 592 கி.மீ.
Q92. தாமோதர் நதியின் அடைப்பெயர் என்ன?
"வங்காளத்தின் துயரம்" “Sorrow of Bengal” -- அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால்.
Q93. தாமோதர் நதியில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் பொதுத்துறை நிறுவனம் எது?
தாமோதர் வேலி கார்ப்பொரேஷன் -- Damodar Valley Corporation –நீர் மின் நிலையம்.
Q94. தாமோதர் நதி எந்த இடத்தில் ஹூக்ளி நதியுடன் இணைகிறது?
தென் கொல்கத்தா நகருக்கருகில்.
Q95. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
கங்கை.
Q96. கங்கை நதி எங்கு உற்பத்தியாகிறது?
கங்கோத்ரி பனிப்பாறை -- இமாலயம், உத்தராகாண்ட்.
Q97. கங்கை நதி உருவாக உதவும் தலை நதிகள் யாவை?
பாகீரதி, மந்தாகினி, அலக்நந்தா, தௌலி கங்கா, பிந்தார்.
Q98. கங்கை சமவெளிக்கு எங்கு வந்து சேருகிறது?
ஹரித்வார் -- ஷிவாலிக் மலைப்பகுதியில்.
Q99. கங்கை நதியின் நீளம் எவ்வளவு, எந்த மாநிலங்களில் பாய்கிறது?
2510 கி.மீ -- உத்தராகாண்ட், உத்தரபிரதேசம், பீஹார் மற்றும் மேற்கு வங்காளம்.
Q100. கங்கை நதியின் துணை நதிகள் யாவை?
ப்ரம்மபுத்ரா, கோமதி, கோசி, கண்டக், காக்ரா, யமுனா மற்றும் சோன்.
Q101. கங்கை நதியின் கரையில் அமைந்திருக்கும் நகரங்கள் யாவை?
ஹரித்வார், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பாட்னா, மிர்ஸாபூர், பகல்பூர்.
Q102. கங்கை எந்த நதிகளுடன் எங்கு சங்கமிக்கிறது?
யமுனா மற்றும் சரஸ்வதி நதிகளுடன் அலகாபாத் என்ற இடத்தில் சங்கமிக்கிறது. இதை சங்கமம் என்றழைக்கின்றனர். இது இந்துக்களின் புனித தலமாக கருதப்படுகிறது.
Q103. கங்கை எந்த இடத்தில் பிரிந்து ஒரு பிரிவு நதியாகி, மீண்டும் ஒரு பெரிய நதியாக உருவெடுக்கிறது?
ஒடிசாவில் பகௌர் என்ற இடத்தில் பிரிந்து, பாகீரதி என பெயர் பெற்று, பிறகு ஹூக்ளி என்ற நதியாகிறது.
Q104. கங்கை நதி எந்த நாட்டில் புகுந்து, என்ன பெயர் பெறுகிறது?
வங்காளதேசம் -- அங்கு பத்மா என பெயர் பெற்று, ஜமுனா (ப்ரம்மபுத்ரா) வுடன் இணைகிறது.
Q105. கங்கை நதிக்கரையில் நடத்தப்படும் முக்கிய இந்திய திருவிழா எது?
கும்ப மேளா -- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது. இதைத் தவிர்த்து ""சாட் பூஜா "" என்ற விழாவும் பீஹாரில் மிகவும் புகழ் பெற்றது.
Q106. எந்த புராணக்காலத்து இளவரசர் கங்கை நதியுடன் தொடர்பு கொண்டவர்?
இளவரசர் பாகீரதர் கங்கையை பூமிக்கு தனது தவ சக்தியால் கொண்டு வந்ததாக இந்திய புராணங்கள் கூறுகின்றன.
Q107. கோதாவரி எங்கு உருவாகிறது?
மகாராஷ்டிராவின், நாசிக் மாவட்டத்தில் த்ரையம்பகேஷ்வர் மலைப்பகுதியில் உருவாகிறது.
Q108. கோதாவரி நதி பாயும் திசை என்ன?
மேற்கிலிருந்து கிழக்காக.
Q109. கோதாவரி நதியின் நீளம் என்ன, எந்த மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது?
1465 கி.மீ – மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரபிரதேசம் வழியாக பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
Q110. கோதாவரியின் துணைநதிகள் யாவை?
இந்திராவதி, மஞ்சிரா, பிந்துசாரா மற்றும் சபரி நதிகள்.
Q111. கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள் யாவை?
நாசிக், நாண்டேட் -- மகாராஷ்டிரா; & பத்ராச்சலம், ராஜமுந்திரி -- ஆந்திரப்பிரதேசம்.
Q112. ஹூக்ளி நதி தானாகவே உருவாகிறதா அல்லது .....?
இல்லை. இது கங்கை நதியின் ஒரு பிரிவு நதி. ஒடிசாவின் பகௌர் என்ற இடத்தில் கங்கையிலிருந்து பிரிந்து, பாகீரதி என பெயர் கொண்டு பயணித்து, தென் கொல்கத்தாவில் நுழையும் இடத்திலிருந்து ஹூக்ளி எனப் பெயர் கொண்டு பாய்கிறது.
Q113. பாகீரதி/ஹூக்ளி நதி பாயும் தூரம் எவ்வளவு, எங்கு கடலில் கலக்கிறது?
260 கி.மீ -- மேற்கு வங்காளத்தின் நுபூர் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
Q114. ஹூக்ளி நகரில் அமைந்துள்ள இரட்டை நகரம் எது?
ஹௌரா மற்றும் கொல்கத்தா.
Q115. ஹூக்ளி நகரில் அமைந்துள்ள இரட்டை நகரம் எது?
ஹௌரா மற்றும் கொல்கத்தா.
Q116. ஹூக்ளி நதியின் பிரிவு நதிகள் யாவை?
தாமோதர் மற்றும் ரூப்நாராயண்.
Q117. ஹூக்ளி நதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுகம் எது?
ஹால்தியா.
Q118. ஹூக்ளியின் நதியில் கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற பாலங்கள் யாவை?
1. ஹௌரா பாலம் 2. வித்யா சாகர் மற்றும் 3. விவேகானந்தா. (இதைப்பற்றி பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் பகுதியில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது).
Q119. சிந்து நதி எங்கு உருவாகிறது?
திபெத்திய பீடபூமியில் மானசரோவர் ஏரியிலிருந்து உருவாகிறது.
Q120. சிந்து நதியின் நீளம் எவ்வளவு, பாயும் பகுதிகள் யாவை, எங்கு வடிகிறது?
3200 கி.மீ -- லடாக், ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் வழியாக பாய்ந்து, கராச்சிக்கு அருகில், அரபிக்கடலில் பாய்கிறது.
Q121. சிந்து நதி, மற்ற சில நதிகளுடன் சேர்ந்து, ""சப்த சிந்து"" “Sapta Sindhu” என்ற ஏழு நதிகள் என்ற பெயர் பெறுகிறது. அவை யாவை?
செனாப், ரவி, சட்லஜ், ஜூலம், பியாஸ், சரஸ்வதி. இவை ஒன்று சேர்ந்து, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் டெல்டா பகுதியை உருவாக்கியுள்ளது.
Q122. சிந்து நதிக்கு எத்தனை துணை நதிகள் உள்ளன?
இருபது.
Q123. காவேரி நதி எங்கு உருவாகிறது?
தலை காவேரி, மேற்கு தொடர்ச்சி மலை, கர்நாடகா.
Q124. காவேரி நதியின் நீளம் என்ன, பாயும் இடங்கள் யாவை, எங்கு கடலில் கலக்கிறது?
765 கி.மீ – கர்நாடகா, தமிழ்நாடு வழியாகப் பாய்ந்து, பூம்புகார் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
Q125. காவேரி நதியின் துணை நதிகள் யாவை?
அமராவதி, அர்காவதி, ஹொன்னுஹோலே, ஹேமாவதி, லக்ஷ்மண தீர்த்தா, பவானி மற்றும் நொய்யல்.
Q126. காவேரி நதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற இரண்டு நீர்வீழ்ச்சிகள் யாவை?
1. சிவசமுத்ரம் நீர்வீழ்ச்சி, மைசூரு அருகில், கர்நாடகா.
2. ஹோகேனக்கல் நீர்வீழ்ச்சி, தர்மபுரி, தமிழ்நாடு.
Q127. காவேரி நதியில் அமைந்துள்ள முக்கியமான அணை எது?
மேட்டூர் அணை -- இதனால் உருவாகியுள்ள நீர்த்தேக்கத்தின் பெயர் ஸ்டான்லி நீர்த்தேக்கம். சேலம் மாவட்டம், தமிழ்நாடு.
Q128. காவேரி நதியில் அமைந்துள்ள தீவு நகரங்கள் யாவை?
1. சிவ சமுத்ரா 2. ஸ்ரீரங்கப்பட்டினம் 3. ஸ்ரீரங்கம்.
Q129. நர்மதா நதி எங்கு உருவாகிறது?
அமரகண்டக் மலைகள், மத்தியபிரதேசம்.
Q130. நர்மதா நதியின் நீளம் எவ்வளவு, பாயும் பகுதிகள் யாவை, எங்கு வடிகிறது?
1289 கி.மீ – மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத். குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் அரபிக்கடலில் கலக்கிறது.
Q131. நர்மதா நதி அமைப்பின் சிறப்பு அம்சம் என்ன?
1. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாயும் ஒரே நதி.
2. இந்தியாவை வடக்கு தெற்காக பிரிக்கிறது.
Q132. நர்மதா நதியின் குறுக்கே வர உள்ள ஒரு கட்டுமான திட்டம் சமீப காலங்களில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அது என்ன?
சர்தார் சரோவர் நீர் மின் திட்டம். இந்த திட்டத்தை நர்மதா பச்சாவ் ஆந்தோலன் என்ற அமைப்பு கடுமையாக எதிர்த்தது. உச்ச நீதி மன்றம் இந்த திட்டத்தை அங்கீகரித்து உள்ளது. இந்தத் திட்டம், 2025ல் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனுடன், நர்மதாவின் போக்கில், மேலும் சில சிறிய அணைகளும் உருவாக உள்ளது.
Q133. கிருஷ்ணா நதியின் வேறு பெயர் என்ன?
கிருஷ்ணவேணி.
Q134. கிருஷ்ணா நதி எங்கு உருவாகிறது?
மகாராஷ்டிராவின் மகாபலேஷ்வர் என்ற இடத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகிறது.
Q135. கிருஷ்ணா நதியின் நீளம் என்ன, பாயும் இடங்கள் யாவை, எங்கு வடிகிறது?
1300 கி.மீ – மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரபிரதேசம். ஆந்திரபிரதேசத்தின் ஹம்சாலா தீவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
Q136. கிருஷ்ணா நதியின் துணை நதிகள் யாவை?
துங்கா மற்றும் பத்ரா. இவை இரண்டும் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி, ஷிமோகா மாவட்டத்தில் கூடிலி என்ற இடத்தில் ஒன்றிணைந்து, துங்கபத்ரா என்றாகி, கிருஷ்ணா நதியுடன் இணைகிறது. இதைத் தவிர்த்து பீமா நதியும் ஒன்று.
Q137. கிருஷ்ணா நதியின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள அணைகள் யாவை?
ஸ்ரீசைலம் மற்றும் நாகர்ஜூனா.
Q138. கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ் பெற்ற சிவாலயங்கள் எவை?
சங்கமேஷ்வர், ஹரிபூர் மற்றும் ராம் லிங்கம், சங்லி -- மகாராஷ்டிரா.
Q139. சாபர்மதி நதி எங்கு உருவாகிறது?
ராஜஸ்தானின், உதய்ப்பூர் மாவட்ட ஆரவல்லி மலையில் உருவாகிறது. 371 கி.மீ க்கு குஜராத்தில் பாய்ந்து கேம்பே வளைகுடாவில் அரபிக்கடலில் கலக்கிறது.
Q140. சாபர்மதி நதிக்கும் இந்திய வரலாற்றுக்குமுள்ள தொடர்பு என்ன?
காந்திஜியின் ஆசிரமம் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது.
Q141. பீமா நதி எங்கு உருவாகிறது? எங்கு பாய்கிறது?
மேற்கு தொடர்ச்சி மலையின் பீமா சங்கர் மலையில் உருவாகி, 725 கி.மீ மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா வில் பாய்ந்து, கிருஷ்ணா நதியுடன் இணைகிறது.
Q142. பீமா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ் பெற்ற இந்து கோவில்கள் யாவை?
1. பீமா சங்கர் -- ஜோதி லிங்க சிவாலயம் -- மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. மகாராஷ்டிரா.
2. வித்தோபா கோவில், பண்டரிபுரம், பூனே -- ஷோலாப்பூர் நெடுஞ்சாலை, மகாராஷ்டிரா.
Q143. தபதி நதி எங்கு உருவாகிறது?
மத்திய பிரதேசத்தின் சத்புரா மலைகளில் உருவாகி, 724 கி.மீ மகாராஷ்டிரா, விதர்பா மற்றும் குஜராத் வழியாக காம்பே வளைகுடா, அரபிக்கடலில் கலக்கிறது.
Q144. ஷாராவதி நதி எங்கு உருவாகிறது, அதன் முக்கியத்துவம் என்ன?
கர்நாடகாவின் தீர்த்தஹல்லி தாலுக்காவின் அம்புதீர்த்தா என்ற இடத்தில் உருவாகிறது. இந்த நதியின் மீது தான் புகழ் பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி, ஹாசன் அருகே அமைந்துள்ளது. கர்நாடகாவில் 122 கி.மீ பயணித்து, ஹோனாவர் என்ற இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது.
Q145. இந்தியாவின் வேறு நதிகள் யாவை?
1. சாலக்குடி -- கேரளா
2. கபினி -- கேரளா, கர்நாடகா.
3. சிட்டாறு -- தமிழ்நாடு.
4. சாலியறு -- கேரளா
5. மலப்ரபா -- கர்நாடகா
6. மணிமுத்தாறு -- தமிழ்நாடு.
7. நேத்ராவதி -- கர்நாடகா.
8. பரம்பிகுளம் -- தமிழ்நாடு
9. பெண்ணாறு -- தமிழ்நாடு.
10. தாமிரபரணி -- தமிழ்நாடு
11. மூசி, ஹைதராபாத், தெலங்கானா
Q146. தமிழ்நாடு - பரம்பிக்குளம் ஆற்றில் உள்ள அணையின் சிறப்பு அம்சம் என்ன?
நீர் கொள்ளளவில் இந்தியாவிலேயே அதிகம் கொண்டது. உலக அளவில் முதல் பத்துக்குள் உள்ளது.
Q147. மணிமுத்தாறு ஆற்றின் சிறப்பு அம்சம் என்ன?
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் இந்த நதி, 9 கீ.மீக்கு மட்டும் இப்பெயரைக் கொண்டுள்ளது. பிறகு தாமிரபரணி ஆற்றுடன் கள்ளிடைக்குறிச்சியில் இணைந்து விடுகிறது.
Q148. தபதி நதிக்கு யாருடைய பெயர் இடப்பட்டுள்ளது?
சூரிய பகவானின் மகள் தபதி பெயரிடப்பட்டுள்ளது.
Q149. எந்த நதியின் பெயர் இந்திய புராணங்களில் அதிகமாக இடம் பெற்றுள்ளது?
சிந்து.
Q150. இந்தியாவின் கிழக்கு நோக்கி பாயும் நதிகள், மேற்கு நோக்கி பாயும் நதிகளைக் குறிப்பிடுக.
கிழக்கு நோக்கி பாய்வன: மகா நதி, கோதாவரி, கிருஷ்ணா, கங்கை, ப்ரம்மபுத்ரா, காவேரி. மேற்கு நோக்கி பாய்வன: நர்மதா, தபதி.