Khub.info Learn TNPSC exam and online pratice

இந்திய விருதுகள் --AWARDS INDIA

Q1.

பாரத ரத்னா -- BHARAT RATNA

Q2. நம்நாட்டில் வழங்கப்படும் உயரிய பொது விருது எது?
பாரத ரத்னா -- 1954 முதல்.

Q3. பாரத ரத்னா விருதின் அமைப்பு என்ன?
ஒரு அரச இலை போல் அமைப்பு -- சுமார் 2.5 அங்குல நீளம் (2 5/16), சுமார் 1.75 அங்குல (1 7/8) அகலம், சுமார் அரை அங்குல கனம் -- வெண்கலம். முகப்பு பக்கத்தில் சூரியனும், அதன் கீழ் ""பாரத் ரத்னா"" இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். பின் பக்கத்தில் தேசிய முத்திரை சின்னமும் மற்றும் இந்தியில் ""வாய்மையே வெல்லும்"" என்ற தொடர் பொறிக்கப்பட்டிருக்கும். தேசிய முத்திரை, சூரியன், சுற்று வளையம் ஆகியவை பிளாட்டினம் என்ற பொருளால் செய்யப்பட்டது.
Q4. பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர் யார்?
துவக்க ஆண்டான 1954ல் மூன்று பேருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. அவர்களில் முதலில் இந்த விருதைப் பெற்றவர் சர்.சி.வி.ராமன் அவர்கள். மற்ற இருவர் -- சி. ராஜகோபாலாச்சாரி மற்றும் எஸ். ராதகிருஷ்ணன்.
Q5. பாரத ரத்னா விருது அளிப்பது எப்போது, எந்த ஆட்சியில் இடைநீக்கம் செய்யப் பட்டது?

13.7.1977 முதல் 26.1.1980 வரை இடை நீக்கம் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சியில் இருந்த ஜனதா அரசாங்கத்தால் செய்யப்பட்டது.

Q6. யாருடைய காலத்தில் பாரத ரத்னா மீண்டும் அளிக்கப்பட துவங்கியது? முதலில் விருது பெற்றவர் யார்?

1980ல் திருமதி இந்திராகாந்தி அவர்களாம் இந்த விருது மீண்டும் வழங்கப்பட தொடங்கி, அன்னை தெரசா அவர்கள் முதலில் இந்த விருதைப் பெற்றார்.

Q7. மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர் யார்?
லால் பகதூர் சாஸ்திரி -- 1966.
Q8. பாரத ரத்னா விருதைப் பெற்ற இந்தியர் அல்லாதவர்கள் யாவர்?

1. கான் அப்துல் கஃபார் கான் -- 1987 -- பிளவுபடாத இந்திய எல்லைக்குள் இருந்து இந்திய சுதந்திரத்துக்கு போராடிய இவருக்கு அளிக்கப்பட்ட விருது இந்தியர் அல்லாத வகையாக கருதப்படுகிறது.
2. நெல்சன் மண்டேலா -- 1990 -- தென் ஆப்பிரிக்க இன வெறி ஆட்சிக்கு எதிராக போராடி, சிறை தண்டனை (27 வருடங்கள்) பெற்று பிறகு அந்நாட்டின் தலைவர் ஆக பணியாற்றியவர்.
3. அன்னை தெரசா -- 1980 -- இந்திய குடியுரிமைப் பெற்றவராக இந்த விருதைப் பெற்றிருந்தாலும், இவர், ஸ்கோப்ஜே, மாசிடோனியாவில் பிறந்தவர். 

Q9. பாரத ரத்னா விருதைப்பெற்ற முதல் பெண்மணி யார்?
திருமதி இந்திரா காந்தி -- 1971.
Q10. பாரத ரத்னா விருதைப்பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி -- 1998 -- தமிழ்நாடு -- கர்நாடக இசை மேதை.
Q11. ஒரே குடும்பத்தை சேர்ந்த -- தந்தை, மகள் மற்றும் பேரன் -- மூன்று பேர் பாரத ரத்னா விருதைப் பெற்றவர்கள் யாவர்?

"ஜவஹர்லால் நேரு 1955 இந்திரா காந்தி 1971 ராஜீவ் காந்தி 1991 "

Q12. பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் திரைப்பட நடிகராக இருந்து அரசியல்வாதி, முதலமைச்சர் யார்?

எம்.ஜி. ராமச்சந்திரன் -- முதல் மந்திரி -- தமிழ்நாடு -- 1988ல் விருது பெற்றார்.

Q13. பாரத ரத்னா விருது பெற்ற பெண்மணிகள் யாவர்?

1. திருமதி இந்திரா காந்தி -- 1971
2. அன்னை தெரசா -- 1980 (இவருடைய இயற்பெயர் - Agnes Bonxes Bojaxiu)
3. அருணா ஆசாஃப் அலி -- 1997
4. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி -- 1998
5. லதா மங்கேஷ்கர் -- 2001 

Q14. பாரத ரத்னா விருது எந்த நாளில் வழங்கப்படுகிறது?
ஜனவரி 26 -- குடியரசு தினம்.
Q15. 1992ல் ராஜிவ் காந்திக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டதை எதிர்த்தவர் யார்?

சத்யபால் ஆனந்த் -- கவிஞர் -- நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றதால் 1993, 1994 விருதுகள் தாமதப்படுத்தப்பட்டன. 

Q16. மிகவும் புகழ் பெற்ற இந்திய சுதந்திர போராட்ட தியாகி ஒருவருக்கு இந்த விருது 1972ல் வழங்குவதாக இருந்தது. ஆனால் சில சட்ட சிக்கல்கள்களால் வழங்கப்படவில்லை. அவர் யார்?

1972ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இந்த விருது வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவருடைய மறைவு உறுதி செய்யப்படாததால் சட்ட சிக்கல் ஏற்பட்டு, அவருக்கு இந்த விருது நிறுத்திவைக்கப்பட்டது.

Q17. மறைவுக்கு பின் பாரத ரத்னா விருது பெற்ற ஒரே பெண்மணி யார்?
அருணா ஆசாஃப் அலி.
Q18. பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பெண் இசைக்கலைஞர்கள் யாவர்?
லதா மங்கேஷ்கர் & எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
Q19. பாரத ரத்னா விருது பெற்ற அண்ணன்- பத்ம விபூஷன் பெற்ற தங்கை ஜோடி யாவர்?
ஜவஹர்லால் நேரு -- பாரத ரத்னா & விஜயலக்ஷ்மி பண்டிட் - பத்ம விபூஷன்.
Q20. பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விளையாட்டு (கிரிக்கெட்டிலும்) வீரர் யார்?
சச்சின் டெண்டுல்கர் -- கிரிக்கெட் வீரர் -- 2014.
Q21. பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பட்டியல்


Sl.No. YEAR     NAME
1. 1954 1.  சர்.சி.வி.ராமன், விஞ்ஞானி, நோபல் பரிசு பெற்றவர்.
2.   2.  சி.ராஜகோபாலச்சாரி, சுதந்திர போராட்ட வீரர், கவர்னர் ஜெனரல்.
3.   3.  எஸ்.ராதாகிருஷ்ணன், கல்வி மேதை, துணைக்குடியரசுத் தலைவர்.
4. 1955 1.  பகவான் தாஸ், சுதந்திர போராட்ட வீரர்
5.   2.  எம்.விஸ்வேஸ்வரய்யா, தொழில் வல்லுநர்
6.   3.  ஜவஹர்லால் நேரு, சுதந்திர போராட்ட வீரர், பிரதம மந்திரி.
7. 1957 கோவிந்த் வல்லப் பந்த், சுதந்திர போராட்ட வீரர்
8. 1958 தோண்ட் கேசவ் கார்வே, பொது சேவை.
9. 1961 1.  டாக்டர் பி.சி.ராய், மருத்துவர்.
10.   2.  புருஷோத்தம்தாஸ் டாண்டன், சுதந்திர போராட்ட வீரர்.
11. 1962 டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் குடியரசுத் தலைவர்.
12. 1963 1.  டாக்டர் ஜாகீர் ஹூசைன், மூன்றாவது குடியரசுத்தலைவர்.
13.   2.  டாக்டர் பாண்டுரங் வர்மன் கானே, கல்வியாளர்.
14. 1966 லால் பகதூர் சாஸ்திரி, இரண்டாவது பிரதம மந்திரி.
15. 1971 திருமதி இந்திரா காந்தி, பிரதம மந்திரி.
16. 1975 வி.வி.கிரி, குடியரசுத்தலைவர்.
17. 1976 கே.காமராஜ், முக்கிய மந்திரி, தமிழ்நாடு.
18. 1980 அன்னை தெரசா, பொது சேவை.
19. 1983 ஆச்சார்யா வினோபா பாவே, சுதந்திர போராட்ட வீரர்.
20. 1987 கான் அப்துல் கஃபார் கான், சுதந்திர போராட்ட வீரர்.
21. 1988 டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன், திரைப்பட நடிகர், முக்கிய மந்திரி, தமிழ்நாடு.
22. 1990 டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், இந்திய சட்ட மேதை, இந்திய அரசியல் சட்ட சிற்பி
23.   நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்க குடியரசுத் தலைவர்.
24. 1991 1.  ராஜீவ் காந்தி, பிரதம மந்திரி.
25.   2.  சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர போராட்ட வீரர், உள்துறை அமைச்சர்
26.   3. மொரார்ஜி தேசாய், பிரதம மந்திரி
27 . 1992 1.  மௌலானா அபுல் கலாம் ஆஸாத், சுதந்திர போராட்ட வீரர்.
28.   2.  ஜே.ஆர்.டி. டாடா, தொழிலதிபர்
29.   3.  சத்யஜித் ரே, திரைப்பட இயக்குனர்.
30. 1997 1.  ஏ.பி.ஜே. அப்துல் கலாம், விஞ்ஞானி, குடியரசுத்தலைவர்.
31.   2.  குல்ஜாரிலால் நந்தா, இருமுறை தற்காலிக பிரதமர்.
32.   3.  அருணா ஆஸாஃப் அலி, சுதந்திர போராட்ட வீரர்
33. 1998 1.  டாக்டர் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி - கர்நாடக சங்கீத மேதை.
34.   2.  சி. சுப்ரமணியன், முன்னாள் தமிழ்நாடு முதல்வர், மத்திய நிதி அமைச்சர்
35. 1999 1.  ஜெய ப்ரகாஷ் நாராயண், சமூக சீர்திருத்தவாதி
36.   2.  பண்டிட் ரவி சங்கர், வட இந்திய இசை (சித்தார்) வல்லுநர்.
37.   3.  டாக்டர் அமர்த்யா சென், பொருளாதார நிபுணர், நோபல் பரிசு பெற்றவர்.
38.   4.  கோபிநாத் போர்தொலாய், சுதந்திர போராட்ட வீரர்.
39. 2001 1.  லதா மங்கேஷ்கர், இந்தி திரைப்பட இசை பாடகி.
40 .   2.  உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் -- ஷெனாய் இசை வல்லுநர்.
41. 2009 பீம்சென் ஜோஷி, வட இந்திய இசை வல்லுநர்.
42. 2014 1.  சச்சின் டெண்டுல்கர் -- கிரிக்கெட் விளையாட்டு சாதனையாளர்.
43.   2.  சி.என்.ஆர். ராவ், விஞ்ஞானி
44. 2015 1.  மதன் மோஹன் மாளவியா -- கல்வியாளர், பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிறுவனர்.
45.   2.  அடல் பீஹாரி வாஜ்பேயி - மூத்த அரசியல் வாதி, பிரதம மந்திரி.                                 
46.    

பத்மா விருதுகள்:

Q22. பத்மா விருதுகள் என்பது என்ன, எப்போது நிறுவப்பட்டது?

இந்த விருதுகள் 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பத்ம விபூஷன்
- பத்மா விருதுகளில் முதன்மையானது, நாட்டின் இரண்டாவது உயரிய பொது விருது. வட்ட வடிவிலான செம்பு பதக்கம், நடுவில் ஒரு தாமரை பூவும், பத்ம விபூஷன் என இந்தியில் பொறிக்கப்பட்டு இளஞ்சிவப்பு நாடாவில் தொங்கவிடப்பட்டிருக்கும். 2018 வரை சுமார் 303 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷன் - பத்மா விருதுகளில் இரண்டாவது, நாட்டின் உயரிய பொது விருதுகளில் மூன்றாவது. பத்ம விபூஷன் பதக்கத்தை போலவே வடிவம் கொண்டு, பத்ம பூஷன் என்ற தொடர் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். 2016 வரை 1230 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ -- பத்மா விருதுகளில் மூன்றாவது, நாட்டின் நான்காவது பொது விருது. மற்ற பத்மா விருதுகளைப் போலவே பத்மஸ்ரீ இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். 2018 வரை சுமார் 2840 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  

Q23. பத்ம விபூஷன் விருதை முதன் முதலில் - 1954ல் -- பெற்றவர்கள் யார்?

1. சத்யேந்திர நாத் போஸ் -- மேற்கு வங்காளம் - அறிவியல், தொழில்நுட்பம்.
2. ஜாகீர் உசேன் - ஆந்திர பிரதேசம் - பொது விவகாரம்
3. பாலாசாஹேப் கங்காதார் கேர் -- மகாராஷ்டிரா - பொது விவகாரம்.
4. ஜிக்மே தோர்ஜி வாங்சுக் -- பூடான் -- பொது விவகாரம்.
5. நந்தலால் போஸ் -- மேற்கு வங்காளம் -- கலை.

Q24. " பத்மா விருதுகள் பெற்றவர்கள் பட்டியல் --  PADMA AWARDS AWARDEES: "

பத்ம விபூஷன் 
"2016: பத்ம விபூஷன்:
1. ரஜினி காந்த், கலை, தமிழ்நாடு.
2. கிரிஜா தேவி -- கலை -- மேற்கு வங்காளம்.Girija Devi, Classical Vocal, West Bengal
3. ரமோஜி ராவ் -- இலக்கியம் & கல்வி -- ஆந்திரபிரதேசம்
4. டாக்டர் வி. சாந்தா -- மருத்துவம் -- தமிழ்நாடு.
5. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் -- ஆன்மீகம் -- கர்நாடகம்.
6. ஜக்மோகன் -- பொது விவகாரம் -- டெல்லி
7. டாக்டர் வாசுதேவ் கல்குண்ட்டே ஆத்ரே -- அறிவியல் -- கர்நாடகம்.
8. அவினாஷ் திக்ஷித் -- இலக்கியம் & கல்வி -- அமெரிக்கா
9. திருபாய் அம்பானி (மறைவு) -- தொழில் -- மகாராஷ்டிரா. "

2017: பத்ம விபூஷன் 
1.  முரளி மனோஹர் ஜோஷி  -- பொது வாழ்க்கை
2.  சுந்தர் லால் பவார்  -- பொது வாழ்க்கை 
3.  ஷரத் பவார் -- பொது வாழ்க்கை 
4.  பி.ஏ. சங்மா -- பொது வாழ்க்கை (மறைவு)
5.  உடுப்பி ராமசந்திர ராவ் -- அறிவியல் தொழில்நுட்பம்
6.  கே.ஜே. யேசுதாஸ் -- கலை
7.  ஜக்கி வாசுதேவ் -- மற்றவை.  

2018: பத்ம விபூஷன்: 

 1.  இளைய ராஜா -- கலை     2.  குலாம் முஸ்தஃபா கான் -- கலை      3.  பி.பரமேஸ்வரன் -- இலக்கியம்

Q25. பத்ம பூஷன்

2016:
1. அனுபம் கேர் -- கலை -- மகாராஷ்டிரா
2. உதித் நாராயண் -- கலை -- மகாராஷ்டிரா
3. ராம் வி. சுதார் -- கலை -- உத்தரபிரதேசம்
4. ஹெய்ஸ்நாம் கநாய்லால் -- கலை -- மணிப்பூர்
5. விநோத் ராய் -- அரசாங்க சேவை -- டெல்லி
6. டக்டர் யர்லகட்டா எல். ப்ரசாத் - இலக்கியம் & கல்வி -- ஆந்திரபிரதேசம்.
7. முனைவர் என்.எஸ். ராமானுஜ தாத்தாசார்யா - கல்வி மகாராஷ்டிரா
8. டாக்டர் பர்ஜிந்தர் சிங் ஹம்தர்த் -- இலக்கியம் & கல்வி -- பஞ்சாப்
9. முனைவர் டி. நாகேஷ்வர் ரெட்டி -- மருத்துவம் -- தெலங்கானா
10. முனைவர் தேஜோமயாநந்தா -- ஆன்மீகம் -- மகாராஷ்டிரா
11. ஹஃபீஸ் காண்ட்ராக்டர் -- தொழில்நுட்பம் -- மகாராஷ்டிரா
12. ரவீந்திரா சி. பார்கவா -- பொது விவகாரம் -- உத்திரபிரதேசம்
13. டாக்டர் வெங்கட ராமா ராவ் அல்லா -- அறிவியல் - ஆந்திரபிரதேசம்
14. சாய்னா நெஹ்வால் - விளையாட்டு -- தெலங்கானா
15. சானியா மிர்ஸா -- விளையாட்டு -- தெலங்கானா
16. இந்து ஜெயின் -- வணிகம் -- புது டெல்லி
17. ஸ்வாமி தயானந்தா சரஸ்வதி (மறைவு) ஆன்மீகம் -- -- உத்தராகாண்ட்
18. ராபர்ட் ப்ஸாக்வில் -- பொது விவகாரம் -- அமெரிக்கா
19. பாலோஞ்சி ஷபூர்ஜி -- வணிகம் - அயர்லாந்து 

2017: 
1.   விஷ்வ மோஹன் பட்  -- கலை 
2.  தேவி ப்ரசாத் திவிவேதி -- இலக்கியம் மற்றும் கல்வி 
3.  ரத்ன சுந்தர் சூரி, குஜராத் 
4.  நிரஞ்சனாநந்தா, பீஹார் 
5.  சோ. எஸ். ராமசாமி, இலக்கியம் மற்றும் கல்வி 
6.  மஹாசக்ரி சிரிந்தோன், இலக்கியம் மற்றும் கல்வி 
7.  தெஹ்மெண்டோன் ஈரச் உதவாடியா -- மருத்துவம்.

2018:    1.   பங்கஜ் அத்வானி -- விளையாட்டு      2.  பிலிப்போஸ் மார் க்ரிஸ்டோம் -- இறைப்பணி     3.   மஹேந்திர சிங் தோனி -- விளையாட்டு        4.  அலெக்ஸாண்டர் கடாகின் -- பொது வாழ்க்கை    5.   ராமச்சந்திரன் நாகசாமி -- பொது வாழ்க்கை    6.   வேத் ப்ரகாஷ் நந்தா -- இலக்கியம்                  7.   லக்ஷ்மண் பாய் -- கலை     8.   அரவிந்த் பாரிக்  -- கலை     9.  சாரதா சின்ஹா -- கலை. 

Q26. பத்மஸ்ரீ:

2016 -- 83 விருதுகள்.
2017 -- 75 விருதுகள்.                                                                                                                                                2018 -- 72 விருதுகள்.

தேசிய வீரசாகச விருதுகள் -- NATIONAL BRAVERY AWARDS:

Q27. தேசிய வீர சாகச விருதுகள் என்பது என்ன?
" 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புரியும் வீர சாகசங்களை கௌரவிக்கும் வகையாக கொடுக்கப்படும் விருது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து 24 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. "
Q28. தேசிய வீர சாகச விருது எப்போது முதல், என்றைய தினம் வழங்கப்படுகிறது?
" 1957 முதல் , ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று (குழந்தைகள் தினம்) பெயர்கள் அறிவிக்கப்பட்டு , ஜனவரி 26 (குடியரசு தினம்) அன்று வழங்கப்படுகிறது. "
Q29. வீர சாகச விருதுகளின் பெயர்களைக் கூறுக.
1. "தேசிய வீர சாகச விருது" 1957 முதல் வழங்கப்படுகிறது.
2. " சஞ்ஜய் மற்றும் கீதா சோப்ரா" விருது. 1978 முதல் இந்த பெயரில் 2 குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
3. “பாரத் விருது” விருது. வீர சாகச விருதுகளில் உயர்வானது. 1987 முதல் வழங்கப்படுகிறத்.
4. “பாபு கைதானி” விருது -- 1988 முதல் வழங்கப்படுகிறது. "
Q30. தேசிய வீர சாகச விருதை முதலில் பெற்றவர் யார்?
ஹரீஷ் சந்திரா
Q31. "சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம்" என்பது என்ன?
1961ல் "ஜீவன் ரக்ஷா பதக்கம்" என்ற பெயரில் துவங்கி, பிறகு ""சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம்"" என்ற பெயருடன் வழங்கப்படும் விருது. உயிர் காக்கும் வீர சாகசத்திற்கு வழங்கப்படுகிறது. இது ஒரு வட்ட வடிவ தங்க பதக்கம். இதன் ஒரு புறத்தில் ""அபயமுத்ரா"" என்ற பயமின்மையின் அடையாளமும், மற்றும் ""மா பாய்"" மற்றும் ""சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா"" என்ற தொடர்கள் பொறிக்கப்பட்டு, மற்றொரு பக்கத்தில் தேசிய சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். "

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கௌரவ விருது PRAVASI BHARATIYA SAMMAN AWARD:

Q32. வெளிநாடு வாழ் இந்தியர்கள் கௌரவ விருது என்பது என்ன?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகார அமைச்சகத்தால் நிறுவப்பட்ட இந்த விருது வெளிநாடுகளில் வாழும் புகழ் பெற்ற இந்தியர்களை கௌரவிக்கும் வகையில் 2004ம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் ஜனவரி 9ம் தேதி வழங்கப்படுகிறது. (9 ஜனவரியின் முக்கியத்துவம் -- 1915ல் இந்த தேதியில் தான் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தார்) . இந்த விருது குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படுகிறது. 

Q33. வெளிநாடு வாழ் இந்தியர்கள் கௌரவ விருது வழங்கப்படும் நாளின் முக்கியத்துவம் என்ன?

9 ஜனவரியின் முக்கியத்துவம் -- 1915ல் இந்த தேதியில் தான் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தார். 

Q34. வெளிநாடு வாழ் இந்தியர்கள் கௌரவ விருது வழங்குவதற்கான அடிப்படை காரணங்கள் யாவை?


(a) இந்திய நாட்டைப் பற்றி வெளி நாட்டவருக்கு எடுத்துரைத்தல்
(b) இந்தியாவின் குறிக்கோள்களுக்கும் திட்டங்களுக்கும் ஆக்க பூர்வமான ஆதரவு
(c) இந்தியாவுக்கும் - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்துவது.
(d) வெளிநாடு வாழ், பொதுவாக இந்தியர்களுக்கு சேவை அளித்தல்.
(e) வாழ்கின்ற நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு நல்ல சேவைகள் செய்தல்
(f) இந்தியா மற்றும் வெளிநாட்டில் பொதுச்சேவையில் ஈடுபடுதல்.
(g) செய்கின்ற தொழில் முன்னேற்றத்தால் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பது. 

Q35. வெளிநாடு வாழ் இந்தியர்கள் கௌரவ விருது பெற்றவர்கள் --- 2015, 2017 "
  1. மாலா மேத்தா -- ஆஸ்திரேலியாவில் வாழும் இவருக்கு, அந்த நாட்டில் இந்தி மொழி வளர இவர் செய்யும் தொண்டுக்காக. 
    2. டொனால்டு ரபீந்திரநாத் ராமோடர் -- கையானாவின் தலைவர் -- இங்கு வாழும் இந்தியர்களுக்காக இவர் ஆற்றி வரும் தொண்டுக்காக.
    3. டாக்டர் ராஜாராம் சஞ்ஜயா -- இந்தியாவில் பிறந்து மெக்ஸிகோவில் வாழும் இவர் 2014ன் உலக உணவு விருதைப் பெற்றவர். இவருடைய முயற்சியால் சுமார் 480 கோதுமை வகை மேம்படுத்தி, சுமார் 51 நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது.
    4. கன்வல் சிங் பக்ஷி -- நியூசிலாந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினர். இங்கு வாழும் இந்தியர்களுக்காக இவர் ஆற்றி வரும் தொண்டுக்காக. 
    5. ராஜ்மல் பராக் -- ஒமான் நாட்டில் வாழும் இந்தியர். அங்கு அவர் இந்தியர்களுக்காக ஆற்றிவரும் தொண்டுக்காக. 
    6. துரைக்கண்ணு கருணாகரன் --- சீஷெல்ஸ் நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி.
    7. எஸ்ஸாப் குலாம் பஹத் --- தென் ஆப்பிரிக்க நாட்டு அரசியல்வாதி. 1999 முதல் 2008 வரை அமைச்சராக பதவி வகித்தவர். 
    8. ஷா பரத்குமார் ஜயந்திலால் -- குஜராத்தை சேர்ந்த ஐக்கிய அரபு நாட்டு வணிகர். அங்குள்ள இந்தியர்களுக்காக இவர் ஆற்றி வரும் தொண்டுக்காக. 
    9. அஷ்ரஃப் பலர்குன்னும்மால் -- ஐக்கிய அரபு நாட்டில் வாழும் கேரள இந்தியர். அங்கு வாழும் இந்தியர்களுக்காக இவர் ஆற்றி வரும் தொண்டுக்காக. 
    10. மஹேந்திரா நாஞ்ஜி மேத்தா -- உகாண்டா நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி வணிகர். "
    11. முனைவர் நாது ராம் பூரி -- இங்கிலாந்தில் வாழும் இந்திய தொழிலதிபர். அங்கு வாழும் இந்தியர்களுக்கு இவர் ஆற்றி வரும் தொண்டுக்காக. 
    12. சத்யா நாடெல்லா -- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அதிகாரி.
    13. டாக்டர் நந்தினி டாண்டன் -- அமெரிக்காவில் வாழும் இந்தியர். உயிரியலில் இவர் ஆற்றி வரும் தொண்டுக்காக. 
    14. டாக்டர் கமலேஷ் லல்லா -- அமெரிக்காவில் வாழும் இந்தியர். இவர் விண்வெளி ஆராய்ச்சிக்கு அளித்துள்ள சேவைக்காக. 
    15. ராஜ் லூம்பா -- இங்கிலாந்தில் வாழும் இந்தியர் -- பாராளுமன்ற உறுப்பினர். தொழிலதிபர்.                                                                                 

    PRAVASI BHARATIYA SAMMAN AWARD 2017

    1.    டாக்டர் கோரூர் க்ருஷ்ணா ஹரிநாத் -- ஆஸ்திரேலியா -- பொதுச்சேவை     2.    ராஜசேகரன் பிள்ளை -- பஹ்ரைன் -- வணிகம்                   3.   ஆண்ட்வெர்ப் இந்தியர்கள் சங்கம் -- பெல்ஜியம் -- பொதுச்சேவை     4.   நாஸிர் அஹமத் முகமது ஸக்கரைய்யா -- ப்ரூணே -- பொதுச்சவை   5.   முகுந்த் பிக்குபாய் புரோஹித் -- கனடா -- வணிகம்  6.    நளின் குமார் சுமன்லால் கோத்தாரி -- டிபௌட்டி -- பொதுச்சேவை   7.    வினோத் சந்திர படேல் -- ஃபிஜி -- பொதுச் சேவை   8.    ரகுநாத் மேரி ஆண்டனின் மேனட் -- ஃப்ரான்ஸ் -- கலை, கலாச்சாரம்   9.    டாக்டர் லேல் ஆன்சன் இ.பெஸ்ட் -- இஸ்ரேல் -- மருத்துவம்    10.   டாக்டர் சந்தீப் குமார் தாகூர் -- ஜப்பான் -- கலை, கலாச்சாரம்    11.  ஆரிஃபுல் இஸ்லாம் -- லிப்யா -- பொதுச்சேவை    12.   டாக்டர் முனியாண்டி தம்பிராஜா -- மலேசியா -- கல்வி, பொதுச்சேவை   13.    ப்ரவீன் குமார் ஜகநாத் -- மொரிசீயஸ் -- பொதுச்சேவை   14.   ஆண்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா -- போர்ச்சுகல் -- பொதுச்சேவை  15.   டாக்டர் ராகவன் சீதாராமன் -- கத்தார் -- வணிக மேலாண்மை     16.  சிங்கப்பூர் இந்தியர்கள் சங்கம்--சிங்கப்பூர்==பொதுச்சேவை    18.   டாக்டர் கரணி பலராமன் சஞ்சீவி -- ஸ்வீடன் -- மருத்துவம்     19.   சுஷீல் குமார் சராஃப்--தாய்லாந்து-வணிகம்    20.   வின்ஸ்டன் சந்திரபான் தூக்கரான்--ட்ரினிடாட் & டொபேகோ -- பொதுச்சேவை    21.   வசுதேவ் ஷாம்தாஸ் ஷ்ராஃப்--ஐக்கிய அரபு நாடுகள்--பொதுச்சேவை    22.   இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம்-- அபுதாபி--பொதுச்சேவை   23.   ப்ரீத்தி படேல்--இங்கிலாந்து--பொதுச்சேவை    24.   நீனா கில்--இங்கிலாந்து--பொதுச்சேவை  25.   ஹரி பாபு பிண்டால்-அமெரிக்கா-சுற்றுச்சூழல் அறிவியல்  26.   டாக்டர் பாரத் ஹரிதாஸ்--அமெரிக்கா--பொதுச்சேவை   27.   நிஷா தேசாய் பிஸ்வால்-- அமெரிக்கா--மக்கள் தொடர்பு--  28.   டாக்டர் மகேஷ் மேத்தா--அமெரிக்கா--பொதுச்சேவை   29.   ரமேஷ் ஷா--அமெரிக்கா--பொதுச்சேவை            30.   டாக்டர் சம்பத்குமார் ஷித்ராமாபா ஷிவாங்கி--அமெரிக்கா--சமூக சேவை 

இந்திய அமைதி விருதுகள் -- PEACE AWARDS - INDIA

Q36. நம் நாட்டில் வழங்கப்படும் உயரிய அமைதி விருது எது?

காந்தி அமைதி விருது. அக்டோபர் 2, 1995 அன்று (காந்திஜியின் 125வது பிறந்த நாள்) தொடங்கப்பட்டது. -- ஒரு கோடி ரொக்கத்தொகை, ஒரு பட்டயம் மற்றும் ஒரு நற்சான்று. தனி ஒருவருக்கும், சேவை நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி தலைமையில் உள்ள ஒரு குழு இந்த விருதுக்குரியவரை தேர்வு செய்கிறது. 

Q37. காந்தி அமைதி விருது பெற்றவர்கள் பட்டியல் -- GANDHI PEACE PRIZE AWARDEES:
எண் வருடம் பெயர்
1. 1995 ஜூலியஸ் நெயெரே -- தன்ஸானியா நாட்டு முதல் குடியரசுத் தலைவர்.
2. 1996 ஏ.டி. அரியாரத்னே -- ஸ்ரீலங்கா சமூக சேவகர்.
3. 1997 கெரார்டு ஃபிஷர் - ஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்க அதிகாரி -- தொழு நோய் ஒழிப்புக்காக பாடுபட்டவர்.
4. 1998 ராமகிருஷ்ணா மிஷன் -- சேவை நிறுவனம்.
5. 1999 பாபா ஆம்தே -- சமூக சேவகர் -- இந்தியா
6. 2000 நெல்சன் மண்டேலா மற்றும் க்ராமீன் வங்கி, வங்காளதேசம்
7. 2001 ஜான் ஹ்யூம் -- அயர்லாந்து அரசியல் வாதி, அரசாங்க அதிகார்.
8. 2002 பாரதீய வித்யா பவன் Bharatiya Vidya Bhavan
9. 2003 வாக்லாவ் ஹேவல் -- செக் குடியரசு தலைவர்.
10. 2004 கொரெட்டா ஸ்காட் கிங் -- மார்ட்டின் லூதர் கிங் துணைவியார், அமெரிக்கா
11. 2005 டெஸ்மாண்ட் டுட்டு--தென் ஆப்பிரிக்க பாதிரியார்.
12. 2013 சண்டி ப்ரசாத் பட் -- சுற்று சூழல் ஆர்வலர், சமூக சேவகர், சிப்கோ இயக்கம்
13. 2014 இந்திய விண்வெளிக்கழகம்

நேரு சர்வதேச புரிதல் விருது -- NEHRU AWARD FOR INTERNATIONAL UNDERSTANDING

Q38. நேரு சர்வதேச புரிதல் விருது என்பது என்ன?

1965ல் நிறுவப்பட்டு, இந்திய கலாச்சார நல்லுறவு மையத்தால் மேலாண்மை செய்யப்படுகிறது. சர்வதேச அமைதி மற்றும் புரிதல், நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 25 லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.

Q39. நேரு சர்வதேச புரிதல் விருது பெற்றவர்கள்
எண் வருடம் பெயர்
1. 1965 உ தாண்ட் -- ஐ.நா.சபை பொது காரியதரிசி
2. 1966 டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் -- அமெரிக்கா (மறைவு)
3. 1967 கான் அப்துல் கஃபார் கான் -- எல்லை காந்தி.
4. 1968 யெஹூதி மெனுஹின் -- வயலின் இசை மேதை
5. 1969 அன்னை தெரசா -- சமூக சேவை
6. 1970 கென்னெத் டவிட் கவுண்டா - ஜாம்பியா குடியரசுத் தலைவர்
7. 1971 மார்ஷல் ஜோசிப் ப்ரஸ் டிட்டோ -- யூகோஸ்லேவியா தலைவர்
8. 1972 ஆன்றே மால்ராக்ஸ் -- ஃப்ரான்ஸ் அரசியல்வாதி.
9. 1973 ஜூலியஸ் நெயரே -- டான்ஸானியா தலைவர்
10. 1974 பால் ப்ரெபிச் -- அர்ஜெண்டினா பொருளாதார நிபுணர்
11. 1975 ஜோனாஸ் சால்க் - அமெரிக்கா -- போலியோ மருந்து கண்டுபிடித்தவர்
12. 1976 குயுசெப் டக்கி -- இத்தாலிய சரித்திர அறிஞர்
13. 1977 துள்சி மெஹர்ஜி ஷ்ரேஷ்தா -- நேபாளம் Tulsi Mehrji Shreshtha, Nepal
14. 1978 நிக்கிடாட்ஸ் ஃபிஜ்ஜி -- ஜப்பானிய புத்தமத துறவி
15. 1980 நெல்சன் மண்டேலா -- தென் ஆப்பிரிக்கா தலைவர்
16. 1981 பார்பர வார்டு -- இங்கிலாந்து பொருளாதார வல்லுநர்
17. 1982 குன்னார் மிர்தால் & ஆல்வா மிர்தால் -- ஸ்வீடன் பொருளாதார நிபுணர்கள்
18. 1983 டாக்டர் லியோபோல்ட் செடார் செங்கார் -- செனெகல் தலைவர்.
19. 1984 டாக்டர் ப்ரூனோ க்ரெய்ஸ்கி -- ஆஸ்திரிய அரசியல்வாதி
20. 1985 திருமதி இந்திரா காந்தி (மறைவு) -- இந்திய பிரதமர்
21. 1986 ஓலோஃப் பால்மே (மறைவு) ஸ்வீடன் பிரதம மந்திரி
22. 1987 பெரெஸ் டி செல்லுலர் -- ஐ.நா.சபை பொது செயலாளர்.
23. 1988 யாஸர் அராஃபத் -- பாலஸ்தீனிய தலைவர்.
24. 1989 ராபர்ட் முகாபே -- ஜாம்பியா அதலைவர்
25. 1990 ஹெல்மெட் கோஹ்ல் -- ஜெர்மனி தலைவர்
26. 1991 அருணா ஆசாஃப் அலி -- சமூக சேவகி
27. 1992 மாரிஸ் எஃப். ஸ்ட்ராங் -- சுற்று சூழல் ஆர்வலர் - கெனடா
28. 1993 ஆங் சான் சூ க்யி -- மியான்மார் அரசியல் தலைவி
29. 1994 டாக்டர் மஹாத்திர் பின் முகமது -- மலேசிய பிரதம மந்திரி
30. 1995 முகமது ஹோஸ்னி முபாரக் - எகிப்து குடியரசுத்தலைவர்
31. 2003 கோஹ் சோக் டாங் -- சிங்கப்பூர் பிரதம மந்திரி
32. 2004 சுல்தான் கபூஸ் பின் சய்த் அல் சய்த் -- ஓமான்
33. 2005 வங்காரி மத்தாய் - சுற்றுச்சூழல் ஆர்வலர் - கென்யா
34. 2006 லூயிஸ் நேசியோ லூலா டா சில்வா -- ப்ரேசில் தலைவர்
35. 2007 டாக்டர் ஒலாஃபூர் ரக்ஞார் க்ரிம்சன் - ஐஸ்லாந்து தலைவர்
36. 2009 ஏஞ்செலோ மெர்கெல் -- ஜெர்மனி தலைவர்

இந்திரா காந்தி விருது -- INDIRA GANDHI PRIZE

Q40. இந்திரா காந்தி விருது என்பது என்ன?

இந்த விருது ""இந்திரா காந்தி அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் முன்னேற்ற விருது"" -- Indira Gandhi Award for Peace, Disarmament and Development எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோக்கங்களுக்காக கொடுக்கப்படும் இந்த விருது . 1986 முதல் வழங்கப்படுகிறது.    இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை - யால் நடத்தப்படுகிறது. 25 லட்சம் ரொக்கமும், நற்சான்றிதழும் பரிசாக வழங்கப் படுகிறது. 

Q41. இந்திரா காந்தி விருதுகள் பெற்றவர்கள் பட்டியல்:
எண் வருடம் பெயர்
1. 1986 உலக பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு
2. 1987 மிக்கேல் கோர்பச்சேவி, ஐக்கிய ரஷ்ய நாடுகள்
3. 1988 க்ரோ ஹார்லெம் ப்ரண்ட்லேண்ட், நார்வே
4. 1989 யூனிசெஃப் UNICEF (ஐ.நா.வின் ஒரு அங்கம்)
5. 1990 சாம் நஜோமா - நமீபியாவின் முதல் தலைவர்
6. 1991 ராஜீவ் காந்தி (மறைவு), இந்திய பிரதமர்
7. 1992 சவுரோ அகிடோ -- ஜப்பான் பொருளாதார நிபுணர்
8. 1993 வக்ளாவ் ஹேவல் -- செக் குடியரசு தலைவர்
9. 1994 ட்ரெவர் ஹடிள்ஸ்டன் -- இங்கிலாந்து
10. 1995 ஒலுசெகன் ஒபசாஞ்சோ -- நைஜீரியா
11. 1996 "மெடிசன் சான்ஸ் ஃப்ராண்டியர்" அமைப்பு
12. 1997 ஜிம்மி கார்ட்டர், அமெரிக்க குடியரசுத் தலைவர்
13. 1998 முகமது யூனூஸ், வங்காள தேசம் - க்ராமீன் வங்கி நிறுவனர்.
14. 1999 எம்.எஸ்.ஸ்வாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
15. 2000 மேரி ராபின்சன் -- அயர்லாந்து தலைவர்
16. 2001 சடகோ ஒகாடா -- ஜப்பான் -- ஐ.நா.அதிகாரி
17. 2002 ஸ்ரீதர் ராம்பால் -- கையானா
18. 2003 கோஃபி அனான் -- கானா -- ஐ.நா. பொது செயலாளர்
19. 2004 மகா சக்ரி சிரிந்தோன் -- தாய்லாந்து
20. 2005 ஹமீத் கர்சாய் -- ஆப்கானிஸ்தான் தலைவர்
21. 2006 வங்காரி மத்தாய் - கென்யா -- சுற்று சூழல் ஆர்வலர்
22. 2007 பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் - அமெரிக்கா
23. 2008 முகமது அல் பரேதி -- எகிப்து
24. 2009 ஷேக் ஹசீனா -- வங்காள தேச பிரதமர்
25. 2010 லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா -- ப்ரேசில் தலைவர்
26. 2011 இலா பட் -- இந்தியா -- சமூக ஆர்வலர்
27. 2012 எல்லென் ஜான்சன் சர்லீஃப் -- லைபீரியா
28. 2013 ஏஞ்செலா மெர்கெல் -- ஜெர்மனி
29. 2014 இந்திய விண்வெளிக் கழகம்
30. 2015 ஐ.நா.அகதிகள் நல அமைப்பு.                                               
31. 2917 மன்மோகன் சிங், முன்னாள் பாரத பிரதமர்.
32.    
33.    
34.    
35.    
36.    

விளையாட்டு விருதுகள் -- இந்தியா -- SPORTING AWARDS INDIA

Q42. விளையாட்டுக்கான உயரிய இந்திய விருது எது?

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது -- 1991-92 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Q43. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பரிசு என்ன?
7.5 லட்ச ரூபாய் ரொக்கமும், ஒரு நற்சான்றிதழும் வழங்கப்படுகிறது.
Q44. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பரிசு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் யார்?
சச்சின் டெண்டுல்கர் & மஹேந்திர சிங் தோனி.
Q45. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள் பட்டியல்
எண் வருடம் பெயர்
1. 1991-1992   விஸ்வநாதன் ஆனந்த் - சதுரங்கம்
2. 1992-1993 கீத் சேத்தி -- பில்லியார்ட்ஸ
3. 1994-1995 Col ஹோமி டி. மோதிவாலா & Lt.Cdr. P.K. கர்க் -- படகுப்போட்டி
4. 1995-1996 கர்ணம் மல்லேஸ்வரி - பளு தூக்குதல்
5. 1996-1997 லியாண்டர் பேஸ் -- டென்னிஸ்
6. 1996-1997 குஞ்சாராணி -- பளு தூக்குதல்
7. 1997-1998 சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட்
8. 1998-1999 ஜோதிர்மாய் சிக்தார் - தடகளம்
9. 1999-2000 தன்ராஜ் பிள்ளை -- ஹாக்கி
10. 2000-2001 புல்லேலா கோபிசாந்த் - சிறகு பந்து
11. 2001-2002 அபினவ் பிந்த்ரா -- துப்பாக்கி சுடுதல்
12. 2002-2003 அஞ்சலி வேத் பதாக் -- துப்பாக்கி சுடுதல்
13.   கே.எம். பீனாமோல் -- தடகளம்
14. 2004-2005 ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் - துப்பாக்கி சுடுதல்
15. 2005-2006 பங்கஜ் அத்வானி -- பில்லியார்ட்ஸ்
16. 2006-2007 மானவ்ஜித் சிங் சாந்து -- துப்பாக்கி சுடுதல்
17. 2007-2008 மகேந்திர சிங் தோனி -- கிரிக்கெட்
18. 2008-2009 மேரி கோம் -- குத்துச்சண்டை
19.   விஜேந்தர் சிங் -- குத்துச்சண்டை
20.   சுஷில் குமார் -- மல்யுத்தம்
21. 2009-2010 சாய்னா நெஹ்வால் -- சிறகுப்பந்து
22. 2010-2011 ககன் நரங் -- துப்பாக்கி சுடுதல்
23. 2011-2012 விஜய் குமார் -- துப்பாக்கி சுடுதல் & யோகேஷ்வர் தத் - மல்யுத்தம்
24. 2012-2013 ரஞ்ஜன் சோதி -- துப்பாக்கிச் சுடுதல்
25. 2014-2015 சானியா மிர்ஸா -- டென்னிஸ்
26. 2015-2016 தீபா கர்மாகர் -- ஜிம்னாஸ்டிக்ஸ்
27.   ஜீத்து ராய் -- துப்பாக்கி சுடுதல்
28.   சாக்ஷி மல்லீக் -- மல்யுத்தம்
29.   பி.வி. சிந்து -- பாட்மிண்டன்
30. 2016-2017 தேவேந்திர ஜஜாரியா - உடல் ஊனமுற்ற ஒலிம்பிக் வீரர் 
31.    சர்தார் சிங் --  ஹாக்கி 
32. 2017-2018 சைக்கோம் மீராபாய் சானு -- பளு தூக்குதல்
33.   விராத் கோஹ்லி -- கிரிக்கெட்.

அர்ஜூனா விருது -- ARJUNA AWARD:

Q46. நம் நாட்டின் இரண்டாவது உயரிய விளையாட்டு விருது எது?

அர்ஜூனா விருது -- 1961ல் நிறுவப்பட்ட இந்த விருது 5 லட்ச ரொக்கம், செம்பு அர்ஜூனா சிலை மற்றும் நற்சான்றிதழ் கொண்டது. வருடந்தோறும் விளையாட்டின் பல துறைகளிலிருந்து தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

Q47. 1961ல் முதன் முதலாக அர்ஜூனா விருதைப் பெற்றவர்கள் யாவர்?
எண் பெயர்/விளையாட்டு
1. குர்பச்சன்சிங் ரந்தாவா - தடகளம் 
2. நந்து நடேகர் - சிறகுப்பந்து  
3. சர்ப்ஜித் சிங் -- கூடைப்பந்து 
4. எல்.பட்டி டிசௌசா -- குத்துச்சண்டை  
5. மேனுவேல் ஆரோன் -- சதுரங்கம்
6. சலீம் துரானி -- கிரிக்கெட்
7. P.K. பானர்ஜி -- கால்பந்து
8. ஷ்யாம் லால் -- ஜிம்னாஸ்டிக்ஸ்
9. ப்ரிதிபால் சிங் -- ஹாக்கி
10. ராமநாதன் கிருஷ்ணன் -- டென்னிஸ்
11. கர்னி சிங் -- துப்பாக்கி சுடுதல்
12. ஜாம் பஜ்ரங்கி ப்ரசாத் -- நீச்சல்
13. ஜே.சி. வோரா -- மேசைப் பந்து
14. A பழனிச்சாமி -- வாலிபால்
15. A.N. கோஷ் -- பளு தூக்குதல்
16. ஹவில்தார் உதய் சாந்த் -- மல்யுத்தம்
Q48. 2018ல் அர்ஜூனா விருது பெற்றவர்கள் யாவர்?
எண் பெயர்/விளையாட்டு
1. சிக்கி ரெட்டி -- பூ பந்து
2.

ஹிமா தாஸ் (ஓட்டம்),  நிராஜ் சோப்ரா(அம்பு எறிதல்)  -- தடகளம்

3. சத்தீஷ் குமார் -- குத்துச் சண்டை 
4. ஸ்மிரிதி மந்தனா -- பெண்கள் கிரிக்கெட் 
5. சுபாங்கர் ஷர்மா -- கோல்ஃப்  
6. சவீதா புனியா, மன்ப்ரீத் சிங் --- பெண்கள் ஹாக்கி
7. ப்ரணவ் சாய் ரெட்டி -- கபடி
8. ரோஹன் போப்பண்ணா -- டென்னிஸ்
9. ரவி ராத்தோர் -- போலோ 
10. ராஹி சர்னோபத்,   அங்கூர் மிட்டல்,  ஷ்ரேயாசி சிங்  -- துப்பாக்கி சுடுதல் 
11. சத்தியன் ஞானசேகரன்,   மோனிக பத்ரா  --  டேபிள் டென்னிஸ்  
12. சுமித் மாலிக் --  மல்யுத்தம் 
13. பூஜா கடியான் --  வுஷூ -- தற்காப்பு கலை
   
   
   
   
Q49. விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படும் விருது எது?

துரோணாச்சார்யா விருது: 1985ல் நிறுவப்பட்ட இந்த விருது 5 லட்ச ரொக்க பரிசும், செம்பு துரோணாச்சார்யர் சிலையும் ஒரு நற்சான்றிதழும் கொண்டது. 

Q50. துரோணாச்சார்யா விருதைப் பெற்ற முதல் நபர்கள் யாவர்?

1. O.M. நம்பியார் -- தடகளம் -- P.T. உஷா-வின் பயிற்சியாளர்.
2. ஓம் ப்ரகாஷ் பரத்வாஜ் -- குத்துச்சண்டை பயிற்சியாளர்
3. பாலச்சந்திர பாஸ்கர் பரத்வாஜ் -- மல்யுத்தப் பயிற்சியாளர் 

Q51. துரோணாச்சார்யா விருது பெற்றவர்கள் பட்டியல்:
எண் வருடம் பெயர்
1. 1985 O.M. நம்பியார் -- தடகளம்     ஓம் ப்ரகாஷ் பரத்வாஜ் -- குத்துச்சண்டை      பாலசந்திர பகவத் -- மல்யுத்தம் "
2. 1986 ரகுநாதன் வசந்த் கோகலே -- சதுரங்கம்.       தேஷ் ப்ரேம் ஆஸாத் -- கிரிக்கெட் "
3. 1987 குர்சரன் சிங் -- கிரிக்கெட்        குரு ஹனுமான் -- மல் யுத்தம் "
4. 1990 ராமாகாந்த் அஸ்ரேகர் - கிரிக்கெட்      சயீத் நயீமுதீன் -- கால்பந்து       ஏ. ரமணா ராவ் -- வாலிபால் "
5. 1994 இல்யாஸ் பாபர் -- தடகளம்
6. 1995 கரன் சிங் -- தடகளம்        ஷ்யாம் சுந்தர் -- வாலிபால் "
7. 1996 பால் சிங் சாந்து -- பளு தூக்குதல்
8. 1997 ஜொகிந்தர் சிங் சைனி -- தடகளம்
9. 1998 பகதூர் சிங் -- தடகளம்      ஹர்கோபிந்த் சிங் சாந்து -- தடகளம்       G.S. சாந்து -- குத்துச்சண்டை "
10. 1999 கென்னெத் ஓவன் போசென் -- தடகளம்        கேப்டன் ஹவா சிங் -- குத்துச்சண்டை         அஜய் குமார் சிரோஹி -- பளு தூக்குதல் "
11. 2000 S.M. ஆரீஃப் -- சிறகுப்பந்து        குர்தியால் சிங் பங்கு -- ஹாக்கி           ஃபாட்கே கோபால் புருஷோத்தம் -- கோ கோ         பூபிந்தர் தவான் -- பளு தூக்குதல்      ஹன்சா சர்மா -- பளு தூக்குதல் "
12. 2001 முனைவர் சன்னி தாமஸ் -- துப்பாக்கி சுடுதல்        மைக்கேல் ஜோசஃப் ஃபெரெரா -- பில்லியார்ட்ஸ்/ஸ்நூக்கர் "
13. 2002 ரேணு கோலி -- தடகளம்       ஜஸ்வந்த் சிங் -- தடகளம்       M.K. கௌஷிக் -- ஹாக்கி        E. ப்ரசாத் ராவ் -- கபடி       Cdr.H.D. மோதிவாலா -- படகுப் போட்டி "
14. 2003 ராபர்ட் பாபி ஜார்ஜ் -- தடகளம்      அநூப் குமார் -- குத்துச்சண்டை       ரஜிந்தர் சிங் -- ஹாக்கி       சுக்செய்ன் சிங் சீமா -- மல்யுத்தம் "
15. 2004 அரவிந்த் சவூர் -- பில்லியார்ட்ஸ்/ஸ்நூக்கர்       சுனிதா சர்மா -- கிரிக்கெட்         சைரஸ் போஞ்சா -- ஸ்குவாஷ்        குர்சரன் சிங் -- குத்துச்சண்ட "
16. 2005 Hon.Capt.M. வேணு -- குத்துச்சண்டை       பல்வான் சிங் -- கபடி        மகா சிங் ராவ் -- மல்யுத்தம்        இஸ்மாயில் பெய்க் -- படகு போட்டி "
17. 2006 R.D. சிங் -- தடகளம்      தாமோதரன் சந்திர லால் -- குத்துச்சண்டை         கொனேரு அசோக் -- சதுரங்கம் "
18. 2007 சஞ்ஜீவ் குமார் சிங் -- வில்வித்தை       ஜகதீஷ் சிங் -- குத்துச்சண்டை        G.E. ஸ்ரீதரன் -- வாலிபால்        ஜக்மீந்தர் சிங் -- மல்யுத்தம் "
19. 2009 J. உதய் குமார் -- கபடி        பல்தேவ் சிங் -- ஹாக்கி        ஜெய்தேவ் பிஷ்ட் -- குத்துச்சண்டை "
20. 2010 A.K. குட்டி -- தடகளம்      Capt. சந்த்ரூப் -- மல்யுத்தம்       அஜய் குமார் பன்சால் -- ஹாக்கி       லபோம்சா சிங் -- குத்துச்சண்டை "
"21. 2011 இனுகுர்த்தி வெங்கடேஸ்வர ராவ் -- குத்துச்சண்டை       தேவேந்தர் குமார் ராத்தோர் -- ஜிம்னாஸ்டிக்ஸ்      ராம்பால் -- தடகளம்       குந்தால் ராய் -- தடகளம்      ரஜிந்தர் சிங் -- ஹாக்கி "
"22. 2012 வீரேந்திர பூனியா -- தடகளம்     சுனில் தபாஸ் -- கபடி      யஷ்வீர் சிங் -- மல்யுத்தம்        ஹரேந்திர சிங் -- ஹாக்கி       சத்யபால் சிங் -- Para Sports J.S.      பாட்டியா -- தடகளம்                  பவானி முகர்ஜி -- மேசைப்பந்து        B.I. ஃபெர்னாண்டஸ் -- குத்துச்சண்டை "
"23. 2013 பூர்ணிமா மஹத்தோ -- வில்வித்தை         நரிந்தர் சிங் சைனி -- ஹாக்கி        K.P. தாமஸ் -- தடகளம்        ராஜ் சிங் -- மல்யுத்தம் "
"24. 2014 மகாவீர் ப்ரசாத் -- மல்யுத்தம்       ஜோஸ் ஜேகப் -- படகுப் போட்டி        N. லிங்கப்பா -- தடகளம்       G. மனோகரன் -- குத்துச்சண்டை       குர்சரன்சிங் கோகி -- ஜூடோ "
"25. 2015 அநூப் சிங் -- மல்யுத்தம்      நாவல் சிங் --- Para Athletics       ஹர்பன்ஸ் சிங் -- தடகளம்       ஸ்வதந்த்ர ராஜ் சிங் -- குத்துச்சண்டை       நிஹார் அமீன் -- நீச்சல் "
26.     2016 நாகபுரி ரமேஷ் -- தடகளம்;  சாகர் மல் தயால் -- குத்துச்சண்டை;  ராஜ்குமார் ஷர்மா -- கிரிக்கெட்;  பிஷ்வேஷ்வர் நந்தி -- ஜிம்னாஸ்டிக்ஸ்;  மகாபீர் ஃபோகத் -- மல்யுத்தம் (வாழ்நாள்);
எஸ். ப்ரதீப் குமார் -- நீச்சல் (வாழ்நாள்) 
27.   2017 ஆர். காந்தி --  தடகளம்;    ஹீரா நந்த் கட்டாரியா -- கபடி;    ஜி.எஸ்.எஸ்.வி.ப்ரசாத் -- சிறகுப்பந்து;    ப்ரிஜ் பூஷன் மோஹந்தி -- குத்துச்சண்டை;     பி.ஏ.ரஃபேல் -- ஹாக்கி;    சஞ்சய் சக்ரவர்த்தி -- துப்பாக்கி சுடுதல்;    ரோஷன் லால் -- மல்யுத்தம்.  
     
     
     
     
     
     
     
     
     
Q52. விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனைக்கு அளிக்கப்படும் விருது என்ன?

தயான் சாந்த் விருது: 2002 முதல் அளிக்கப்படும் விருது, 5 லட்சம் ரொக்கமும் ஒரு நற்சான்றிதழ், மற்றும், ஒரு பட்டயம் வழங்கப்படுகிறது.

Q53. தயான் சந்த் விருது பெற்றவர்கள் பட்டியல்
எண் வருடம் பெயர்/விளையாட்டு
1. 2002 அபர்ணா கோஷ் -- கூடைப்பந்து அசோக் திவான் - ஹாக்கி சாஹூராஜ் பிராஜ்தார் -- குத்துச்சண்டை
2. 2003 சார்லஸ் கார்னீலியஸ் -- ஹாக்கி தரம் சிங் மான் -- ஹாக்கி ஓம் ப்ரகாஷ் -- வாலிபால் ராம் குமார் -- கூடைப்பந்து ஸ்மீதா யாதவ் -- படகு போட்டி
3. 2004 ஹர்தயாள் சிங் -- ஹாக்கி லாப் சிங் -- தடகளம் மெஹெந்தேல் பரசுராம் - தடகளம்
4. 2005 மனோஜ் கோத்தாரி -- பில்லியார்ட்ஸ்/ஸ்நூக்கர் மாருதி மானே -- மல்யுத்தம் ரஜிந்தர் சிங் -- ஹாக்கி
5. 2006 ஹரஷ்சந்திரா பிராஜ்தார் -- மல்யுத்தம் நந்தி சிங் -- ஹாக்கி உதய் ப்ரபு -- தடகளம்
6. 2007 ராஜேந்திர சிங் -- மல்யுத்தம் சம்ஷேர் சிங் -- கபடி வரிந்தர் சிங் -- ஹாக்கி
7. 2008 க்யான் சிங் -- மல்யுத்தம் ஹக்கீம் சிங் -- தடகளம் முக்பெய்ன் சிங் -- ஹாக்கி
8. 2009 இஷார் சிங் தியோல் -- தடகளம் சத்பீர் சிங் தாஹ்யா -- மல்யுத்தம்
9. 2010 சதீஷ் பிள்ளை - தடகளம் அனிதா சானு -- பளு தூக்குதல் குல்தீப் சிங் -- மல்யுத்தம்
10. 2011 ஷபீர் அலி -- கால் பந்து சுஷில் கோலி -- நீச்சல் ராஜ் குமார் -- மல்யுத்தம்
11. 2012 ஜக்ராஜ் சிங் மான் -- தடகளம் கந்தீப் குமார் -- ஹாக்கி வினோத் குமார் - மல்யுத்தம் சுக்பீர்சிங் டோகாஸ் -- Para Sports
12. 2013 மேரி டி'சௌசா செக்குய்ரா -- தடகளம் சையத் அலி -- ஹாக்கி அனில் மான் -- மல்யுத்தம் கிரிராஜ் சிங் -- Para Sports
13. 2014 குர்மைல் சிங் -- ஹாக்கி கே.பி. தாக்கர் -- நீச்சல் ஸீஷான் அலி -- டென்னிஸ்
14. 2015 ரோமியோ ஜேம்ஸ் -- ஹாக்கி ஷிவ் ப்ரகாஷ் மிஷ்ரா -- டென்னிஸ் T.P.P. நாயர் -- வாலிபால்
15. 2016 சதி கீதா -- தடகளம்;  சில்வேனஸ் டங் டங் -- ஹாக்கி;  ராஜேந்திர பிரசாத் ஷெல்கே -- படகுப்போட்டி. 
     
     
     
     
     
     
     
Q54. விளையாட்டு விருதுகள் என்றைய தினம் வழங்கப்படுகிறது?

29th August  ஆகஸ்ட்– வருடந்தோறும். இந்த தேதி புகழ் பெற்ற தயான் சந்த் அவர்களின் பிறந்த நாள் மற்றும் இந்த நாள் ""தேசிய விளையாட்டு தினம்"" ஆக அனுசரிக்கப் படுகிறது. 

இந்திய வீர தீர விருதுகள் -- INDIAN GALLANTRY AND BRAVERY AWARDS:

Q55. நம் நாட்டின் உயரிய போர் கால ராணுவ விருது எது, எப்போது அறிமுகப்படுத்தப்- பட்டது?

பரம் வீர் சக்ரா - 15.8.1947 முதல் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு அரசாங்க அங்கீகாரம் 26.1.1950 முதல் கொடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் அவர்களால் வழங்கப்படும் விருது. 

Q56. பரம் வீர் சக்ரா விருதை வடிவமைத்தவர் யார்?

சாவித்திரி கானோலங்கர் -- இவர் ஹங்கேரி-ரஷ்ய பெற்றோருக்கு பிறந்து, எவா யுவான் லிண்டா மடாய்டா மேரோஸ் என அழைக்கப்பட்டு, இந்திய ராணுவ அதிகாரி விக்ரம் கானோலங்கர் அவர்களை மணந்தவர். 

Q57. பரம் வீர் சக்ரா வடிவமைப்பைப் பற்றி கூறுக.

வட்ட வடிவ செம்பு பதக்கம் -- 1.375 அங்குல அகலம் -- நடுவில் சற்று உயர்த்திய நிலையில் இந்திய அரசாங்க முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். இதை சுற்றி புராண கால ""வஜ்ராயுதம்"" பொறிக்கப்பட்டிருக்கும். இந்த விருதின் பின் புறத்தில் தாமரைப் பூக்களுக்கிடையில் ""பரம் வீர் சக்ரா"" என இந்தியிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் -- அதனுடன் சிவாஜி மகாவீரரின் ""பவானி"" வாளின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த பதக்கம், சுழலக்கூடிய ஒரு செம்பு பட்டையில் கத்திரி வண்ண நாடாவில் (32 மி.மீ நிளம்) தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த பதக்கம், புராண கால ரிஷி தாதிச்சி - [இவர் தனது துடை எலும்பை வஜ்ராயுதம் செய்ய கொடுத்ததாக புராணக்கதை] நினைவாக உருவாக்கப்பட்டது. இந்த விருதைப்பெறும் ராணுவ அதிகாரிகள் “PVC” என்ற அடைமொழியை தங்கள் பெயருக்கு முன் உபயோகிப்பர். 

Q58. பரம் வீர் சக்ரா விருது பெற்ற முதல் இந்திய ராணுவ வீரர் யார்?

மேஜர் சோம்நாத் சர்மா -- (மறைவுக்கு பின்) இந்தியா-பாகிஸ்தான் போரில் அவர் புரிந்த சேவைக்காக 3.11.1947 அன்று (அவர் மறைந்த நாள்) வழங்கப்பட்டது.  இந்த விருது 26 ஜனவரி 1950 அரசு அங்கீகாரம் பெற்று, 3.11.1947 முதல் வழங்கப்படுகிறது.   இதுவரை 21 ராணுவ அதிகாரிகள்/வீரர்கள் இந்த விருதை பெற்று உள்ளனர்.

Q59. "2016 நிலையில் பரம் வீர் சக்ரா விருது எத்தனை ராணுவ வீரர்கள்/அதிகாரிகள் பெற்றிருக்கின்றனர்? "
"இருபத்தி ஒன்று - இதில் 20 விருது இந்திய ராணுவமும், ஒரு விருதை இந்திய விமானப் படையும் பெற்றிருக்கின்றனர். "
Q60. பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்கள் பட்டியல்:
எண் வருடம் பெயர்/ரெஜிமெண்ட்
1. 1947 மேஜர் சோம்நாத் சர்மா -- குமாவோன்
2. 1948 லான்ஸ் நாயக் கரம் சிங் -- சீக்
3. 1948 செகண்ட் லெஃப்ட். ராமா ரகோபா ரானே - கார்ப்ஸ் ஆஃப் இண்ஜினியர்ஸ்
4. 1948 நாயக் ஜாது நாத் சிங் -- ராஜ்புத்  (மறைவுக்குப் பின்)
5. 1948 ஹவி.மேஜர் பிரு சிங் ஷேகாவத் -- ராஜபுத்னா ரைஃபிள்ஸ் (மறைவுக்குப் பின்)
6. 1961 கேப்.குர்பச்சன் சிங் சோலாரியா - கோர்க்கா ரைஃபிள்ஸ் (மறைவுக்குப் பின்)
7. 1962 மேஜர் தன் சிங் தாப்பா -- 8வது கோர்க்கா ரைஃபிள்ஸ் (மறைவுக்குப் பின்)
8. 1962 சுபேதார் ஜோகிந்தர் சிங் -- சீக்  (மறைவுக்குப் பின்)
9. 1962 மேஜர் ஷைத்தான் சிங் -- குமாவோன் (மறைவுக்குப் பின்)
10. 1965 ஹவி. அப்துல் ஹமித் -- தி க்ரெனாடியார்ஸ் (மறைவுக்குப் பின்)
11. 1965 லெஃப்.கர்னல் ஆர்தெஷிர் பர்ஸோஞ்சி தாராபூர் -- பூனா குதிரை (மறைவுக்குப் பின்)
12. 1971 லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா - ப்ரிகேட் ஆஃப் கார்ட்ஸ்
13. 1971 ஃப்ளையிங் ஆஃபிஸர் -- விமானப்படை (மறைவுக்குப் பின்)
14. 1971 II லெஃப். அருண் கேத்தர்பால் -- பூனா குதிரை மறைவுக்குப் பின்)
15. 1971 மேஜர் ஹோஷியார் சிங் -- தி க்ரெனாடியர்ஸ்
16. 1987 நாயப் சுபேதார் பாணா சிங் -- J&K லைட் இன்ஃபேண்ட்ரி
17. 1987 மேஜர் ராமசாம்ய் பரமேஸ்வரன் -- மஹர் (மறைவுக்குப் பின்)
18. 1999 கேப்.மனோஜ்குமார் பாண்டே -- கோர்க்கா ரைஃபிள்ஸ் (மறைவுக்குப் பின்)
19. 1999 யோகேந்திர சிங் -- தி க்ரெனாடியர்ஸ் (மறைவுக்குப் பின்)
20. 1999 ரைஃபிள்மேன் சஞ்ஜய் குமார் -- J&K ரைஃபிள்ஸ்
21. 1999 கேப். விக்ரம் பத்ரா -- J&K Rifles., (மறைவுக்குப் பின்)
     
Q61. பரம் வீர் சக்ரா வடிவமைத்தவர், மற்றும் முதலில் பெற்றவர் இவர்களுடன் இந்த விருது பெற்ற விக்ரம் பத்ரா ஆகியவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை என்ன?

       1. இந்த விருதை முதலில் பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா, இந்த விருதை வடிவமைத்தவர் சாவித்திரி கானாலோங்கர் - இவரின் மருமகன் விக்ரம் பத்ரா.                                                                                                                                                                                                                                                                  2. 1999 ல் இந்த விருதைப் பெற்ற விக்ரம் பத்ரா மற்றும் மேஜர் சோம்நாத் சர்மா -- இருவரும் ஹிமாச்சல பிரதேசத்தின் பாலன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 

Q62. பரம் வீர் சக்ரா விருதை மறைவுக்குப் பின் பெற்ற முதல் நபர் யார்?

மேஜர் நாத் சர்மா. [இங்கு வருத்தத்துடன் குறிப்பிட வேண்டிய விவரம் என்னவென்றால், இந்த விருதை பெற்ற அதிகம் பேர் மறைவுக்குப் பின் பெற்றவர்களே.] 

Q63. பரம் வீர் சக்ரா விருதை உயிருள்ள போதே பெற்ற முதல் வீரர் யார்?

லான்ஸ் நாயக் கரம் சிங் -- 1948 -- சீக் ரெஜிமெண்ட்

Q64. பரம் வீர் சக்ரா விருதை இது வரை பெற்றவர்களில், மறைவுக்கு பின் பெற்றவர்கள் எத்தனை பேர்?

பதினான்கு பேர் (இருபத்தி ஒன்றில்)

Q65. பரம் வீர் சக்ரா விருதைப்பெற்ற உயர்ந்த ராணுவ அதிகாரி யார்?
ஆர்தேஷிர் தாராபூர் -- லெஃப்டினண்ட் கர்னல் -- 1965.
Q66. ராணுவத்தின் எந்த பிரிவைச் சார்ந்த வீரர்கள்/அதிகாரிகள் இந்த விருதை அதிக முறை பெற்றிருக்கின்றனர்?

க்ரெனாடியர்ஸ் ( Grenadiers )  மற்றும் கோர்க்கா ரைஃபிள்ஸ்  ( Gorkha Rifles )-- ஒவ்வொன்றும் மூன்று முறை

Q67. பரம் வீர் சக்ரா விருது வழங்குவதில் நடந்த சில விநோதங்கள் யாவை?

1. 1962ல் மேஜர் தன் சிங் தாப்பா இந்த விருதை மறைவுக்கு பின் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அவர் சீனாவில் சிறைக் கைதியாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட பின் பணியில் மீண்டும் சேர்ந்தார்.
2. க்ரெனாடியர் யோகேந்திர சிங் யாதவ் என்பவர் 1999ல் இந்த விருதை மறைவுக்கு பின் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயம் அவர் பூனேவில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். இந்த குழப்பத்துக்குக் காரணம் அதே ராணுவ முகாமில் இருந்து அதே பெயர்/பதவி கொண்ட வேறொருவர் மறைவு ஏற்பட்டிருந்ததே. 

Q68. பரம் வீர் சக்ரா விருது தொங்கவிடப்பட்டுள்ள நாடாவின் வண்ணம் என்ன?
Purple -- வெளிர் நீலம் (கத்தரி பூ)
Q69. போர் கால இரண்டாவது உயரிய விருது எது?

மகா வீர் சக்ரா: Maha Vir hakra: வட்ட வடிவ வெள்ளி பதக்கம். ஒரு புறம் ஐம்முனை நட்சத்திரம், நடுவில் இந்திய அரசாங்க முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். மறு பக்கம் ""மகா வீர் சக்ரா"" இந்தியிலும் ஆங்கிலத்திலும், தாமரையுடன் பொறிக்கப் பட்டிருக்கும். வீரரின் இடது மார்பில் அணியப்பட வேண்டும். இந்த பதக்கம் பாதி வெள்ளை, பாதி இளஞ்சிவப்பு நிற நாடாவில் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த விருதைப் பெற்றவர்கள் MVC என்ற அடை மொழியினை அவர்களின் பெயருக்கு பின்னால் பயன்படுத்தலாம். இதுவரை (2017) 218 பேர் இந்த விருதினை பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Q70. மகா வீர் சக்ரா விருதினை பெறுவதில், இந்திய விமானப்படை செய்துள்ள சாதனை என்ன?

1971 இந்தியா பாகிஸ்தான் வங்காள தேச விடுதலைப் போரில் அரியப் பணி ஆற்றியமைக்காக 11 விருதுகளை இந்தியா விமானப்படைப் பெற்றது. 

Q71. போர்க்கால ராணுவ விருதுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது எது?

வீர் சக்ரா -- Vir Chakra: வட்ட வடிவ வெள்ளி பதக்கம் -- 1 - 3/8 அங்குல அகலம் -- ஒரு பக்கத்தில் ஐம்முனை நட்சத்திரமும் சக்ரா சின்னமும், மறு பக்கத்தில் தாமரை பூவும் வீர் சக்ரா இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த பதக்கம் கருநீல/இளஞ்சிவப்பு நாடாவில், தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த விருதினை இது வரை சுமார் 1361 பேர் பெற்றிருக்கின்றனர்.

Q72. அமைதிக்கால உயரிய ராணுவ விருது என்ன?

அசோக சக்ரா: Ashok Chakra: 1952 ல் அசோகா சக்ரா 1, 2, 3 என்ற பெயரில் நிறுவப்பட்டு 1967 முதல் அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா மற்றும் ஷௌர்ய சக்ரா என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அளவுகளில் மற்ற பதக்கங்களைப் போலவும், தங்க முலாம் பூசப்பட்டதாகவும் இருக்கும். ஒரு புறம் அசோக சக்ராவும், அதைச் சுற்றி தாமரை பூ வளையமும், மறுபக்கம் அசோக சக்ரா என ஆங்கிலம மற்றும் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். பதக்கம் கரும்பச்சை நிற நாடாவில் தொங்கப்பட்டிருக்கும். கீர்த்தி (இரண்டாம் நிலை அமைதி நேர வீர விருது) மற்றும் ஷௌர்ய சக்கர (மூன்றாம் நிலை அமைதி நேர வீர விருது)பதக்கங்களும் இதே போல் வடிவமைக்கப்பட்டு பதக்கப் பெயர் மட்டும் மாற்றம் பெற்றிருக்கும். 

Q73. அசோக சக்ர விருதை முதலில் பெற்றவரும் சமீபத்தில் பெற்றவரும் யாவர்?

1952 -- முதலில் பெற்றவர் -- நாயக் நர் பஹதூர் தாப்ப                                                                                 2018 -- சமீபத்தில் பெற்றவர் -- ஜோதி ப்ரகாஷ் நிராலா 

Q74. போர் கால மற்றும் அமைதி கால வீர விருதுகளை தர வரிசைப்படுத்துக

போர் காலம் -- பரம் வீர் சக்ரா(PVC),  மகா வீர் சக்ரா(MVC), வீர் சக்ரா(VrC)                                                அமைதி காலம் -- அசோக சக்ரம்(AC), கீர்த்தி சக்ரா(KC), ஷௌர்ய சக்ரா(SC) 

Q75. அசோக சக்ரா மற்றும் கீர்த்தி சக்ரா -- இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே இந்திய ராணுவ வீரர் யார்? "Col. N.J. நாயர் -- 16 MLI ராணுவ அணி -- இந்தியாவின் மிக அலங்கரிக்கப்பட்ட ராணுவ வீரர் இவர் என கருதப்படுகிறது."

Col. N.J. நாயர் -- 16 MLI ராணுவ அணி -- இந்தியாவின் மிக அலங்கரிக்கப்பட்ட ராணுவ வீரர் இவர் என கருதப்படுகிறது.

Q76. நம்நாட்டின் மூன்று ராணுவ பிரிவுகளிலும், அந்தந்த பிரிவுகளில் வழங்கப்படும் வீர விருதுகள் யாவை?

1960லிருந்து கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்படுகிறது.
சேனா பதக்கம் -- Sena Medal: இந்திய தரை வழி ராணுவ வீரர்களுக்கு வழங்கப் படுகிறது. வட்ட வடிவ வெள்ளி பதக்கம், ஒரு பக்கத்தில் துப்பாக்கி முனை மேல் நோக்கி, மறு பக்கத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் ""சேனா பதக்கம்"" என இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். பதக்கம் சுழலும் உலோகப்பட்டையில் நாடவில் தொங்க விடப்பட்டிருக்கும்.
நாவ் சேனா பதக்கம் -- Nao Sena Medal: கப்பற் படை வீரர்களுக்கு வழங்கப்படும் வட்ட வடிவ வெள்ளி பதக்கம் (35mm) ஒரு பக்கத்தில் கப்பல் கிரீடம், மறு பக்கத்தில் இரண்டு குறுக்கு நங்கூரங்கள், ""நாவ் சேனா பதக்கம்"" இந்தியில் பொறிக்கப்பட்டு, ஒரு நீல நிற நாடாவில் தொங்கவிடப்பட்டிருக்கும்.
வாயு சேனா பதக்கம் -- Vayu Sena Medal: விமானப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த பதக்கம், ஒரு பக்கத்தில் இமாலய கழுகு, ""வாயு சேனா பதக்கம்"" என இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும், மறுபக்கத்தில் தாமரை வடிவத்தில் ஒரு நட்சத்திரமும், நடுவில் தேசிய முத்திரையும் பொறிக்கப் பட்டிருக்கும். "

Q77. " காயப் பதக்கம் " -- “ Wound Medal" : என்பது என்ன?

1973ல் நிறுவப்பட்ட இந்த விருது, சீருடை அணி அனைத்திலும் பணி புரியும் வீரர்கள், பணியின் போது காயப்படும் போது வழங்கப்படும் விருது.

Q78. "போர்க் கால கௌரவ பதக்கம்" “War Time Distinguished Service” என்பது என்ன?

"சர்வோத்தம் யுத் சேவா, உத்தம் யுத் செவா, யுத் சேவா பதக்கங்கள் (Sarvottam Yudh Seva Medal, Uttam Yudh Seva Medal and Yudh Seva Medal). 1960ல் இருந்து வழங்கப்படும் இந்த விருதுகள் வட்ட வடிவ தங்க முலாம் பூசப்பட்டு, ஒரு பக்கத்தில் ஐம்முனை நட்சத்திரமும், மறு பக்கத்தில் தேசிய முத்திரை மற்றும் பதக்கத்தின் பெயர் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த பதக்கம் எல்லாமே மஞ்சள் நிற நாடாவில் (இடையில் சிகப்பு கோடுகளுடன்) தொங்கவிடப்பட்டிருக்கும். "

Q79. அமைதிக்கால ராணுவ நற்பணி பதக்கங்கள் யாவை?

பரம் விஷிஸ்ட் சேவா பதக்கம் -- Param Vishist Seva Medal (PVSM)
அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் -- Ati Vishist Seva Medal (AVSM)
விஷிஸ்ட் சேவா பதக்கம் -- Vishist Seva Medal (VSM)
35mm வட்ட வடிவ செம்பு பதக்கம், ஒரு பக்கத்தில் ஐம்முனை நட்சத்திரம், மறு பக்கத்தில் தேசிய முத்திரையும், பதக்கத்தின் பெயரும் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த பதக்கம் மஞ்சள் நிற நாடாவில் தொங்க விடப்பட்டு இருக்கும்."

சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது -- SHANTI SWAROOP BHATNAGAR PRIZE

Q80. நம் நாட்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது எது?

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு Shanti Swaroop Bhatnagar Prize.

Q81. சாந்தி ஸ்வரூப் பட்நகர் என்பவர் யார்?

இந்திய விஞ்ஞானி, இந்திய அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைப்பு -- Council of Scientific and Industrial Research CSIR - ன் முதல் இயக்குநர்.

Q82. சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது எந்தெந்த துறைகளுக்கு வழங்கப்படுகிறது?

உயிரியல், வேதியியல், சுற்று சூழல் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், மருத்துவம், இயற்பியல். 

  • Biological Sciences
  • Chemical Sciences
  • Earth, Atmosphere, Ocean and Planetary Sciences
  • Engineering Sciences
  • Mathematical Sciences
  • Medical Sciences
  • Physical Sciences.
Q83. சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது என்பது …..

ஒரு சான்றிதழ், ஒரு பட்டயம், 5 லட்சம் ரொக்கப் பரிசு. (2008 வரை 2 லட்சம்) இதைத் தவிர்த்து, விருது பெற்ற ஒவ்வொருவரும், மாதம் 15000 ரூபாய் உதவித் தொகையும் (65 வயது வரை) வழங்கப்படுகிறது. 2017 வரை 535 நபர்கள் (516 ஆண், 19 பெண்) இந்த விருதை பெற்றிருக்கின்றனர்.

Q84. சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருத்துக்கான் வயது வரம்பு நிபந்தனை என்ன?
45 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
Q85. சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதை முதன் முதலில் பெற்றவர் யார்?

சர் கரியமாணிக்கம் ஸ்ரீநிவாசன் கிருஷ்ணன் -- தமிழ்நாடு -- 1958 -- இயற்பியல் அறிவியலுக்கு -- 1946ல் ஆங்கிலேயர்களால் "" Sir"" கௌரவப்பட்டம் பெற்றவர் -- பத்ம பூஷன் 1954 -- நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனுடன் இணைந்து, அவருடைய ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். 

Q86. சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதை, இயல் ரீதியாக், முதலில் பெற்ற விஞ்ஞானிகள் யாவர் ?

1.இயற்பியல் -- 1958 -- K.S. கிருஷ்ணன்                                                                                                        2.கணிதம் -- 1959 -- குமரவேலு                                                                                                                          3.வேதியியல் -- 1960 -- டி. ஆர் கோவிந்தாச்சாரி
4.உயிரியியல் -- 1960 -- தொப்பூர் சீதாபதி
5.தொழிற்நுட்பம் -- 1960 -- H.N. சேத்னா
6.மருத்துவம் -- 1961 -- R.B. அரோரா
7.புவி, வளி, கடல் & வான் அறிவியல் -- 1972 -- K. நாஹா. "

Q87. 2015, 2016 மற்றும் 2017க்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதைப் பெற்றவர்கள் யார்?

2015:                                                                                                                                                                              இயற்பியல் -- மண்டார் மதுகர் தேஷ்முக், பேடங்கதாஸ் மோஹந்தி
மருத்துவம் -- விதித்தா அசோக் வைத்யா
கணிதம் -- ரித்தபத்ரா முன்ஷி, கே. சந்தீப்
தொழில் நுட்பம் -- யோகேஷ் மொரேஷ்வர் ஜோஷி
புவியியல் -- ஜோதிரஞ்சன் ஸ்ரீசந்தன் ரே
வேதியியல் -- D. ஸ்ரீநிவாச ரெட்டி, ப்ரத்யுத் கோஷ்
உயிரியியல் -- ராஜீவ் குமார் வர்ஷினி, பாலசுப்ரமணியன் கோபால் 

2016:   ரிஷிகேஷ் நாராயணன் -- மருத்துவம்  மற்றும் சுவேந்திர நாத் பட்டாச்சார்யா --  உயிரியல்

2017:   தீபக் நாயர் -- உயிரியல் மற்றும் சஞ்சீவ் தாஸ் -- மருத்துவம்.

Q88. சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதைத் தவிர்த்து இதர இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப விருதுகள் யாவை?

1. CSIR தொழிற்நுட்ப விருதுகள் Technology Awards
2. CSIR இளைய விஞ்ஞானிகள் விருது Young Scientists Award
3. CSIR கிராமப்புற மேம்பாட்டுக்கான தகவல் தொடர்பு ஆராய்ச்சி விருது
4. CSIR வைர விழா பள்ளி குழந்தைகளுக்கான அறிவியல் விருது 

Q89. CSIR தொழிற்நுட்ப விருதுகள் என்பது என்ன?

1990 முதல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வணிகப்படுத்தும் முயற்சிகளுக்கு வழங்கப்படுகிறது. 2 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு, ஒரு பட்டயம், ஒரு நற்சான்றிதழ்.

Q90. CSIR தகவல் தொடர்பு கிராமப்புற மேம்பாட்டு கண்டுபிடிப்பு விருது என்பது என்ன?
"2009 முதல் கொடுக்கப்படும் இந்த விருது -- 10 லட்சம் ரொக்கம், ஒரு நற்சான்றிதழ், மற்றும் ஒரு கேடயம் கொண்டது. "
Q91. CSIR வைர விழா கண்டுபிடிப்பு பள்ளி குழந்தைகள் விருது என்பது என்ன?
முதல் பரிசு – Rs.50000/- & இரண்டாம் பரிசு -- Rs.25000/-. 2002 முதல் வழங்கப்படுகிறது.
Q92. CSIR இளம் விஞ்ஞானி விருது என்பது என்ன?
"1987 முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதில், 50 ஆயிரம் ரொக்க பரிசு, ஆராய்ச்சி நிதி 5 லட்சம், மற்றும் 45 வயது வரை மாதம் 7500 ரூபாய் உதவித்தொகை. "

சங்கீத நாடக அகாதமி விருது -- SANGEET NATAK AKADEMI AWARD:

Q93. மேடை கலைஞர்களை -- Performing Arts கௌரவிக்கும், அரசாங்க உதவியுடன் இயங்கும் அமைப்பு எது?
"சங்கீத் நாடக் அகாதமி -- Sangeet Natak Akademi – 28 ஜனவரி 1953 ல் டாக்டர் ராஜேந்திர ப்ரசாத் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அமைப்பின் முதல் தலைவராக Dr. P.V. ராஜமன்னார் அவர்கள் பணியாற்றினார். இயல், இசை மற்றும் நாடக கலைகளை வளர்க்கும் மற்றும் கௌரவிக்கும் இந்திய அமைப்பு. "
Q94. மேடை கலைகளுக்கு சங்கீத நாடக் அகாதமி அளிக்கும் விருது என்ன?
"சங்கீத் நாடக் அகாதமி விருது -- Sangeet Natak Akademic Award – ஒரு சான்றிதழ் பட்டயம், கௌரவ கம்பளி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. "
Q95. சங்கீத் நாடக் அகாதமியின் துவக்கப்பரிசை -- 1952 -- பெற்றவர்கள் யார்?
"முஷ்தாக் ஹூசைன் கான் -- வாய்ப்பாட்டு
அலாவுதீன் கான் -- சரோத்
அரியக்குடி ராமானுஜம் ஐய்யங்கார் -- வாய்ப்பாட்டு
காரைக்குடி சாம்பசிவ அய்யர் -- வீணை"
Q96. சங்கீத நாடக அகாதமியால் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் விருதுகள் யாவை?
"உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவா ராஷ்டிரிய புரஸ்கார் (பரிசு) -- 2006 முதல் வழங்கப்படுகிறது. "
Q97. "விருதுகள் வழங்குவதற்காக, எந்தெந்த நடனங்கள், சங்கீத நாடக் அகாதமியால் பாரம்பரிய அந்தஸ்து -- “Classical Status” வழங்கப்பட்டுள்ளது?"
"1. பரத நாட்டியம் -- தமிழ்நாடு
2. ஒடிசி -- ஒடிஷா
3. கவுடியா ந்ரித்யா -- வங்காளம்
4. குச்சிப்புடி -- ஆந்திரபிரதேசம்
5. மோஹினி ஆட்டம் -- கேரளா
6. சத்திரியா -- அஸ்ஸாம்
7. கதகளி -- கேரளா
8. கதக் -- வட இந்தியா
9. மணிப்பூரி -- மணிப்பூர்
10. கூடியாட்டம் -- கேரளா
11. யக்ஷகானா -- கர்நாடகம் "
Q98. லலித் கலா அகாதமி விருது என்பது என்ன?
"லலித் கலா அகாதமி ஒரு தேசிய கலை மேம்பாட்டு மையம் -- 1955ல் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு, 1957 முதல் இயங்கி வருகிறது. நம் நாட்டின் பல வகை கலைகளை வளர்ச்சிக்காக இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலம் நாட்டின் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில், 25000 ரொக்கப்பரிசு, ஒரு பட்டயம் மற்றும் ஒரு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருதை முதன் முதலில் பெற்றவர் -- ஜாமினி ராய் -- சித்திர கலைஞர் -- மேற்கு வங்காளம். "

இலக்கிய விருதுகள்:

Q99. உலகின் உயரிய இலக்கிய விருது எது?
நோபல் இலக்கிய பரிசு
Q100. நோபல் இலக்கிய பரிசை பெற்ற முதல்/ஒரே இந்தியர் யார்?
ரவீந்திர நாத் தாகூர் -- 1913 -- அவருடைய "கீதாஞ்சலி" படைப்புக்காக.
Q101. நம்நாட்டின் பிரபலமான இலக்கிய விருதுகள் யாவை?
"1. ஞானபீட விருது -- Jnanpith Award -- டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை குழுமத்தின் சாஹூ ஜெயின் குடும்பத்தினரால் வழங்கப்படும் விருது. 11 லட்சம் ரொக்கப்பரிசும், ஒர் நற்சான்று மற்றும் செம்பிலான சரஸ்வதி சிலையும் வழங்கப்படுகிறது. 2. சரஸ்வதி சம்மான் -- Saraswati Samman Award -- நம்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் இலக்கிய விருது. K.K பிர்லா தொண்டு நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த விருது, 7.5 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டது. 3. சாகித்ய அகாதமி விருது -- Sahitya Akademi Award -- இந்திய சாகித்ய அகாதமி அமைப்பால் 1954 ல் நிறுவப்பட்டு, 1955 முதல் வழங்கப்படும் விருது. ஒரு லட்ச ரூபாய் சொக்கப் பரிசு மற்றும் ஒரு பட்டய சான்றிதழ், இந்தியாவின் 24 மொழிகளில் இலக்கிய படைப்புகளுக்கு வருடந்தோறும் வழங்கப்படுகிறது. "

ஞான பீட விருது -- JNANPITH AWARD:

Q102. நம்நாட்டின் உயரிய இலக்கிய விருது எது?
"ஞானபீட விருது -- Jnanpith Award -- – 1961/1965 -- டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை குழுமத்தின் சாஹூ ஜெயின் குடும்பத்தினரால் வழங்கப்படும் விருது. 11 லட்சம் ரொக்கப்பரிசும், ஒர் நற்சான்று மற்றும் செம்பிலான சரஸ்வதி சிலையும் வழங்கப்படுகிறது. "
Q103. ஞான பீட விருதைப் பெற்ற முதல் இந்தியர் யார்?
G. சங்கர குருப் -- கேரளா -- படைப்பு -- "Odakkuzhal" (புல்லாங்குழல்)
Q104. ஞான பிட விருதைப்பெற்ற இந்தியர்கள் யாவர்?
"1965ல் தொடங்கி, 2015 வரை 51 படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களீல் 2011 முதல் பெற்றவர்களின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
1. 2011 Pratibha Ray -- Yajnaseni -- Oriya
2. 2012 Ravuri Bharadhwaja Paakudurallu -- Telugu
3. 2013 Kedarnath Singh -- Akaal Mein Saras -- Hindi
4. 2014 Bhalchandra Nemade -- Hindu: Jagnyachi Samrudhha Adgal -- Marathi
5. 2015 Raghuveer Chaudhari -- For his contributions to Gujarati literature -- Gujarati"

சரஸ்வதி சம்மான் விருது -- SARASWATI SAMMAN AWARD:

Q105. சரஸ்வதி சம்மான் விருது என்பது என்ன, எதற்காக வழங்கப்படுகிறது?
"சரஸ்வதி சம்மான் -- Saraswati Samman Award -- நம்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் இலக்கிய விருது. K.K பிர்லா தொண்டு நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த விருது, 7.5 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டது."
Q106. சரஸ்வதி சம்மான் விருதைப் பெற்ற முதல் இந்தியர் யார்?
இஸ்மத் சக்தாய் -- 1990 -- உருது இலக்கியம்.
Q107. சரஸ்வதி சம்மான் விருதைப் இதுவரை எத்தனை பேர் பெற்றிருக்கின்றனர்?
"1990ல் தொடங்கி இதுவரை 25 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் 2011 முதல், இந்த விருதைப் பெற்றவர்களின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
1. 2011 A.A. மணவாளன் ""Irama Kathaiyum Iramayakalum""
2. 2012 விவேக் அம்பாஸ்தா -- ""Bang Boom"".
3. 2013 கோவிந்த் மிஷ்ரா - ""Dhool Paudho Par""
4. 2014 வீரப்ப மொய்லி -- ""Ramayana Mahanveshanam"" "

சாகித்ய அகாதமி விருது -- SAHITYA AKADEMI AWARD:

Q108. சாகித்ய அகாதமி விருது என்பது என்ன?
"சாகித்ய அகாதமி விருது -- Sahitya Akademi Award -- இந்திய சாகித்ய அகாதமி அமைப்பால் 1954 ல் நிறுவப்பட்டு, 1955 முதல் வழங்கப்படும் விருது. ஒரு லட்ச ரூபாய் சொக்கப் பரிசு மற்றும் ஒரு பட்டய சான்றிதழ், இந்தியாவின் 24 மொழிகளில் இலக்கிய படைப்புகளுக்கு வருடந்தோறும் வழங்கப்படுகிறது. "
Q109. சாகித்ய அகாதமி விருதை, மொழிவாரியாக, முதலில் பெற்றவர்கள் யார்?
"எண் வருடம் பெயர்/படைப்பு/மொழி
1. 1955 ஜாதீந்த்ராநாத் தொவெரா -- “Bana Phul” -- அஸ்ஸாமீஸ்
2. 1955 மகாதேவ் தேசாய் -- “Mahadev Bhaini Diary” -- குஜராத்தி
3. 1955 மக்கன்லால் சதுர்வேதி -- “Him Tarangini” -- இந்தி
4. 1955 குவெம்ப்பு -- “Sri Ramayana Darshanam”
5. 1955 நாராயண பணிக்கர் -- “Basha Sahitya Charitram” -- மலையாளம்
6. 1955 லக்ஷ்மண் சாஷ்த்ரி ஜோஷி -- “Vaidik Sankruticha Vikas” -- மராத்தி
7. 1955 R.P. சேது பிள்ளை -- “ Tamil Inbam “ -- தமிழ்
8. 1955 சுரவரம் ப்ரதாப் ரெட்டி -- “Andhrula Sanghike-Charitamu” -- தெலுங்கு
9. 1955 ஜாஃபர் ஹூஸேன் கான் - “Maal aur Mashiyat” -- உருது
10. 1956 ஜிபானாநந்தா தாஸ் -- “Shrestha Kavitha” -- பெங்காலி
11. 1956 பி.வி கானே -- “History of Dharma Shashtra” -- சமஸ்கிருதம்
12. 1960 R.K.நாராயண் -- “ The Guide” -- ஆங்கிலம்/கன்னடம்
13. 1970 நரேந்த்ரா கஜூரியா -- “Nila Ambar Kale Badal” -- தோக்ரி
14. 1973 பச்சா மீட்டி -- “Imphal Amasung Magi Nungshiki Phibam Ishing”— மணிப்பூரி
15. 1974 விஜயன் தேத்தா -- “Batan Ri Phulwari” — ராஜஸ்தானி
16. 1977 ரவீந்த்ர கெலேகர் — “Himalayant” — கொண்கனி
17. 1977 இந்த்ரா பஹராடு ராய் -- “Nepali Upanyas ka Aadharkaru” — நேப்பாளி "
Q110. 2015ல் சாகித்ய அகாதமி விருதுகளைப் பெற்றவர்கள் யாவர்?
"சாகித்ய அகாதமி SAHITYA AKADEMI AWARDEES FOR 2015:
எண் பெயர்/மொழி
1. குலா சைக்கியா -- அஸ்ஸாமீஸ்
2. B.K. ப்ரமா -- போடோ
3. தியான் சிங் -- தோக்ரி
4. சைரஸ் மிஸ்திரி -- ஆங்கிலம்
5. ரஸிக் ஷா - குஜராத்தி
6. ராம்தர்ஷ் மிஷ்ரா -- ஹிந்தி
7. K.V. திருமலேஷ் -- கன்னடா
8. பஷீர் பதர்வாஹி - காஷ்மீரி
9. உதய் பெம்ப்ரே -- கொண்கனி
10. மன் மோஹன் ஜா -- மைதிலி
11. K.R. மீரா -- மலையாளம்
12. க்ஷெத்ரி ராஜன் -- மணிப்பூரி
13. அருண் கோப்கர் -- மராத்தி
14. குப்தா ப்ரதான் -- நேப்பாளி
15. விபூதி பட்டநாயக் -- ஒடியா
16. ஜஸ்விந்தர் சிங் -- பஞ்சாபி
17. அஷ்வாடி -- ராஜஸ்தானி
18. R.S. அவஸ்தி -- சமஸ்கிருதம்
19. மாயா ராஹி - சிந்தி
20. ரபிலால் துடு -- சந்தாலி
21. A. மாதவன் - தமிழ்
22. வோல்கா -- தெலுங்கு
23. ஷமீம் டாரிக் -- உருது "
  2016 -- சாகித்ய அகாதமி விருது பெற்றவர்கள் 
1.  அஸ்ஸாமீஸ் -- ஜான் புஜாரி --  "Maghumalar Bhramana"
2. போடோ -- அஞ்சலி நர்ஸாரி -- "Aung Maboroi Dong Dasong" 
3. குஜராத்தி -- கமல் வோரா -- "Anekanek" 
4.  கன்னடம் -- பி.முகமது குன்ஹி -- "Swatantrayada Ota "
5. கொங்கனி -- எட்வின் ஜே.எஃப்.டிசௌசா -- "Kallem Bhangar"
6. நேபாளி -- கீதா உபாத்யாயா -- "Janmabhoomi Mero Swadesh"
7. ஒடியா -- ப்ரமீளா சத்பதி -- "Prapti" 
8.  பஞ்சாபி -- டாக்டர் ஸ்வரப்ஜித் சிங் -- "Maseya Di Raat"
9. தமிழ் -- வண்ணதாசன் -- "ஒரு சிறு இசை" 
10.  உருது -- நிஸாம் சித்திக்கி -- "Mabad-e-Jadidiat Se Naye Ahed Ki Takhliquiyat Tak" 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Q111. சாகித்யா அகாதமியால் வெளியிடப்படும் இதழ்கள் யாவை?
"இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளி வரும் “ Indian Literature”ஆங்கிலம் மற்றும் “Samkaleen Bharatiya Sahitya “ இந்தி. "
Q112. "பீமா இலக்கிய விருது" என்பது என்ன?
"திருச்சூர், கேரளாவில் இருந்து இயங்கும் ""சைதன்யா"" ஒரு கலைத்தொண்டு அமைப்பு வழங்கும் இரண்டு -- 50000 ரூபாய் இலக்கிய ரொக்கப்பரிசு, தங்க பதக்கம் மற்றும் ஒரு நற்சான்றிதழ். "

"திரைப்பட துறை விருதுகள் CINEMATIC AWARDS: "

Q113. தேசிய திரைப்பட விருதுகள் -- NATIONAL FILM AWARDS:
" 1954 முதல், இந்திய தகவல் மற்றுல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், திரைப்பட விழாக்கள் துறையால் வழங்கப்படும் விருதுகள். அரசாங்கத்தாஅல் அமைக்கப்பட்ட ஒரு குழுவால் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. விருதுகள், குடியரசுத்தலைவரால் டெல்லியில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலண்டர் வருடத்திலும் திரை உரிமம் பெற்ற திரைப்படங்கள் இந்த விருதுக்கு எடுத்துக்கொள்ளப்படும். விருதுகளுக்காக திரைப்படங்கள் சில வகைப்படுத்தப்பட்டு தேர்வுகள் செய்யப்படும். இதனுடன் திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனைக்கான தாதா சாஹேப் பால்கே விருதும் முடிவு செய்யப்படுகிறது. விருது பெறும் அனைவருக்கும் ஒரு பதக்கம், ரொக்கப்பரிசு, மற்றும் ஒரு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளில் முக்கியமானவை -- தாதா சாஹேப் ஃபால்கே விருது, தங்கத்தாமரை (+ ரூ. 2,50,000) மற்றும் வெள்ளித் தாமரை (+ ரூ.1,50,000) விருதுகள். இவைத் தவிர்த்து சினிமாத் துறையின் பல வகைத் துறைகளுக்கு தனித்தனி விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் எடுக்கப்படும் திரைப்படங்களில் சிறந்த படங்களுக்கு தலா ஒரு லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. "
Q114. தேசிய திரைப்பட விருதுகள் எப்போது தொடங்கப்பட்டது?
1954
Q115. தேசிய திரைப்பட விருதுகளில் முக்கியமானவை யாவை?
"1. தாதா சாஹேப் ஃபால்கே விருது -- தங்கத்தாமரை, கௌரவ கம்பளம், 10 லட்சம் ரொக்கப் பரிசு.
2. தங்கத் தாமரைப் பரிசு -- SWARNA KAMAL: தங்கப்பதக்கம், நற்சான்று, 2.5 லட்சம் ரொக்கப்பரிசு
3. வெள்ளி தாமரைப் பரிசு -- RAJAT KAMAL : வெள்ளிப் பதக்கம், நற்சான்று, 1.5 லட்சம் ரொக்கப்பரிசு. "
Q116. தேசிய திரைப்பட விருதைப் பெற்ற முதல் திரைப்படம் எது?
ஷ்யாம்ச்சி ஆய் -- Shyamchi Aai -- மராத்தி -- 1954.

தாதா சாஹேப் ஃபால்கே விருது -- DADASAHEB PHALKE AWARD:

Q117. திரைப்படத்துறையில் வழங்கப்படும் உயரிய இந்திய விருது என்ன?
"தாதாசஹேப் ஃபால்கே விருது -- Dadasaheb Phalke Award: 1969ல் நிறுவப்பட்ட இந்த விருது -- தாதா சஹேப்பின் இயற் பெயர் துண்டிராஜ் கோவிந்த் ஃபால்கே. இவருடைய நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருது துவங்கப்பட்டது. திரைப்பட துறையின் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் இந்த விருது. ஒரு தங்க தாமரைப் பதக்கம், ஒரு கௌரவ கம்பளம், மற்றும் 10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் துறையால் இந்த விருது வழங்கப்படுகிறது. "
Q118. தாதா சாஹேப் ஃபால்கே விருதப் பெற்ற முதல் இந்திய நடிகர் யார்?
தேவிகா ராணி ரோரிச்.
Q119. "தாதா சாஹேப் ஃபால்கே விருது முதன் முறையாக எந்த நடிகருக்கு அவருடைய மறைவுக்குப்பிறகு வழங்கப்பட்டது? "
ப்ரித்விராஜ்கபூர் -- 1971
Q120. தாதா சாஹேப் ஃபால்கே விருது இது வரை எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
"1969ல் தொடங்கி இதுவரை 46 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், 2010 முதல் பெற்றவர்கள் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
1. 2010 கே. பாலச்சந்தர் -- தமிழ் திரைப்பட இயக்குநர்
2. 2011 சௌமித்ரா சட்டர்ஜி -- பெங்காலி நடிகர்
3. 2012 ப்ரான் -- இந்தி திரைப்பட நடிகர் .
4. 2013 குல்ஸார் -- இந்தி திரைப்பட எழுத்தாளர்/கவிஞர்
5. 2014 சஹி கபூர் -- இந்தி திரைப்பட நடிகர்
6. 2015 மனோஜ் குமார் -- இந்தி திரைப்பட நடிகர் "
Q121. 2015 க்கான தேசிய திரைப்பட விருதுகளில் முக்கியமானவகளை கூறுக
"தாதா சாஹேப் ஃபால்கே விருது -- மனோஜ்குமார் -- இந்தி நடிகர்.
சிறந்த திரைப்படம் -- பாஹூபலி (தெலுங்கு) -- தங்கத்தாமரை விருது
சிறந்த தேசிய ஒற்றுமை திரைப்படம் -- நாநக் ஷா ஃபகீர் -- பஞ்சாபி - வெள்ளித்தாமரை விருது
சிறந்த இயக்குநர் -- சஞ்ஜய் லீலா பன்சாலி -- ""பாஜிராவ் மஸ்தானி""
சிறந்த நடிகர் -- அமிதாப் பச்சான் -- ""பிக்கு""
சிறந்த நடிகை -- கங்கனா ரௌத் -- ""தனு வெட்ஸ் மணு ரிட்டர்ன்""
சிறந்த ஆண் பின்னணி பாடகர் -- மகேஷ் காலே -- மராத்தி
சிறந்த பின்னணி பாடகி -- மொனாலி தாகூர் -- இந்தி
சிறந்த குழந்தை நட்சத்திரம் -- கவுத்தம் மேனன் -- ""பென்"" "

"சர்வதேச விருதுகள் -- INTERNATIONAL AWARDS: NOBEL PRIZE (www.nobelprize.org)"

Q122. "நோபல் பரிசை தனது சொந்த நிதியால் நிறுவியவர் யார்? அவருடைய சொந்த கண்டுபிடிப்பு என்ன? "
"ஆல்ஃப்ரெட் பெர்ன்ஹார்ட் நோபெல் -- ஸ்வீடன் -- டைனமைட் எனப்படும் வெடிமருந்து கலவையைக் கண்டுபிடித்தவர். அதில் அவர் சம்பாதித்த நிதியைக்கொண்டு இந்த விருதை நிறுவினார். "
Q123. நோபல் பரிசு எப்போது முதல் வழங்கப்படுகிறது?
1901
Q124. நோபல் பரிசுகள் எந்த தேதியில், எங்கு வழங்கப்படுகிறது?
"டிசம்பர் 10 -- வருடந்தோறும். -- இந்த தேதி ஆல்ஃப்ரெட் நோபல் அவர்களின் மறைவு தினம். ஸ்வீடன் நாட்டின் ஸ்டாகோம் நகரில் வழங்கப்படுகிறது. "
Q125. நோபல் பரிசு எந்தெந்த துறைகளுக்கு வழங்கப்படுகிறது?
"தொடக்கத்தில் கீழ்க்கண்ட் ஐந்து துறைகளுக்கு வழங்கப்பட்டது.
1. இயற்பியல் 2. வேதியியல் 3. அமைதி 4. இலக்கியம் 5. மருத்துவம். பிறகு 1968ல் (6) பொருளாதாரம் -- 6 வது துறையாக சேர்க்கப்பட்டது. "
Q126. பொருளாதார நோபல் பரிசுகளை மேலாண்மை செய்யும் அமைப்பு எது?
ஸ்வீடன் நாட்டு தேசிய வங்கி -- The Sveriges Riksbank, Sweden.
Q127. "நோபல் அறிவியல் பரிசுகளை -- அறிவியல், வேதியியல் மற்றும் பொருளாதாரம் -- எந்த அமைப்பு செய்து வழங்குகிறது? "
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் -- Royal Swedish Academy of Sciences.
Q128. நோபல் பரிசுகளை முடிவெடுக்கும் அமைப்பு எது?
நார்வே நோபல் குழு -- நார்வே பாராளுமன்றத்தால் நிறுவப்படுகிறது.
Q129. மருத்துவ நோபல் பரிசை முடிவெடுக்கும் அமைப்பு எது?
கேரோலின்ஸ்கா மருத்துவ கல்வி பல்கலைக்கழகம், ஸ்டாக்ஹோம் அமைக்கும் ஒரு குழு. A committed appointed by the Karolinska Insitute (a medical university) Stockholm.
Q130. நோபல் பரிசு என்பது என்ன?
"ஒரு தங்கப் பதக்கம், ஒரு கல்வி பட்டயம், ஸ்வீடன் நாட்டு குடியுரிமை மற்றும் 1.45 மில்லியன் அமெரிக்க டாலர் == 15 மில்லியன் யூரோ == 10 மில்லியன் ஸ்வீடன் க்ரோனா == சுமார் 9.79 கோடி இந்திய ரூபாய். "
Q131. நோபல் பரிசை முதன் முதலாக பெற்றவர்கள் யார்?
"1.இயற்பியல் -- Physics: வில்லியம் கான்ராட் ராண்ட்ஜன் -- ஜெர்மனி -- எக்ஸ்-ரே கண்டுபிடித்தவர் -- 1901.
2.வேதியியல் -- Chemistry: ஜேகபஸ் ஹென்றிகஸ் வான்'ட் ஹோஃப் -- நெதர்லாந்து -- 1901
3.இலக்கியம் -- Literature: சுல்லி ப்ரூதோமெ -- ஃப்ரான்ஸ் -- 1901
4.அமைதி -- Peace: இரண்டு விருதுகள் --
1. ஹென்றி டுவாண்ட் -- ஸ்விட்சர்லாந்து -- செஞ்சிலுவை நிறுவனர் -- 1901
2. ஃப்ரெடெரிக் பஸ்ஸி -- ஃப்ரான்ஸ் -- நாடுகளிடையே சமாதான அமைப்பை நிறுவியவர் -- 1901
5.மருத்துவம் --Physiology/Medicine: எமில் அடோல்ஃப் வோன் பெஹ்ரிங்க் -- ஜெர்மனி - 1901
6.பொருளாதாரம் -- Economics -- இரண்டு விருதுகள் --
1. ரக்னார் ஃப்ரிஸ்ச் -- நார்வே
2. ஜான் டின்பெர்ஜென் -- நெதர்லாந்து."
Q132. நோபல் பரிசுகளை பெற்ற இந்தியர்கள் யாவர்?
"1. ரவீந்திர நாத் தாகூர் -- 1913 -- இலக்கியம் -- படைப்பு ""கீதாஞ்சலி""
2. சர் சந்திரசேகர் வெங்கடராமன் (சி.வி.ராமன்) -- 1930 -- இயற்பியல் விருது -- படைப்பு ""ராமன் விளைவு"" ”.
3. ஹர் கோவிந்த் கொரானா -- 1968 -- இந்திய வம்சாவளி அமெரிக்கர் -- மருத்துவர்.
4. சுப்ரமணியம் சந்திரசேகர் -- 1983 -- சர் சி.வி. ராமனின் உறவினர் -- இயற்பியல்
5. அமர்த்யா சென் -- இந்தியா வம்சாவளி இங்கிலாந்து நாட்டவர் -- 1999 - பொருளாதாரம்
6. V.S. நாய்பால் Naipaul – (வித்யாதர் சூரஜ்ப்ரசாத் நாய்பால்) -- 2001 -- இலக்கியம். ட்ரினிடாட் நாட்டில் வாழ்கின்றவர்.
7. வெங்கடராமன் ராமகிருஷ்ணன் -- 2009 -- வேதியியல்
8. கைலாஷ் சத்யார்த்தி -- 2014 -- அமைதி பரிசு -- (இவருடன் மலாலா யூசுஃப்சாய் என்ற பாகிஸ்தன் பள்ளிப் பெண்ணும் இந்த விருதைப் பெற்றார்.
( இவர்களைத் தவிர்த்து இந்தியாவில் பிறந்த இங்கிலாந்து நாட்டவர் ரொனால்டு ரோஸ் - 1902ல் மருத்துவத்துக்கும், அன்னை தெரசா, மேசிடோனியாவில் பிறந்து இந்தியாவில் நற்தொண்டு ஆற்றிய இவரும் -- 1999 அமைதிப்பரிசு - இந்த பட்டியலில் சேருவர்) "
Q133. LIST OF NOBEL AWARDEES 2015:
" 1. PHYSICS: Takaaki Kajita; Japan Arthur B. McDonald; Canada
2. CHEMISTRY: Tomas Lindahl; Sweden/British Paul L. Modrich; America Aziz Sancar; Turkey/America
3. PHYSIOLOGY/MEDICINE: William C. Campbell; Ireland/America Satoshi Ōmura; Japan Tu Youyou; China
4. LITERATURE: Svetlana Alexievich; Ukraine, Russia
5. PEACE: Tunisian National Dialogue Quartet; Tunisia
6. ECONOMICS: Angus Deaton; British/American."

2016க்கான நோபல் பரிசு வென்றவர்கள்:  

இயற்பியல்  --  1.  David J. Thouless,  UK;    2.  Duncan Haldane -- UK;   3. John M. Kosterlitz -- Scotland. 
வேதியியல் --   1. Jean Pierre Savage -- France;    2. Fraser Staddart -- UK;    3. Ben Feringa -- Netherlands. 
மருத்துவம் --    1. Yoshinori Ohsumi -- Japan
இலக்கியம் --    1. Bob Dylan -- USA
அமைதி        --     1. Juan Manuel Santos  -- Vice President,  Colombia 
பொருளாதாரம் -- 1.  Oliver Hart,  UK;      2. Bengt R. Holmstrom -- Finland.  



Q134. நோபல் பரிசை இருமுறை வென்றவர்கள் யாவர்?
" 1. மேரி க்யூரி -- போலந்து/ஃப்ரெஞ்ச் விஞ்ஞானி -- இயற்பியல் 1903லும், 1911 ல் வேதியியலிலும் பெற்றார்.
2. லினஸ் பாலிங் -- அமெரிக்கா -- வேதியியல் 1954 லிலும், அமைதிப் பரிசு 1962 லும் பெற்றார்
3. ஜான் பர்தீன் -- அமெரிக்கா -- இயற்பியல் 1956 மற்றும் 1972லும் பெற்றார்.
4. ஃப்ரெடரிக் சேங்கர் -- இங்கிலாந்து -- வேதியியல் 1958 மற்றும் 1980ல் பெற்றார். "
Q135. அமைதிக்கான நோபல் பரிசை மூன்று முறை பெற்ற தொண்டு நிறுவனம் எது?
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் -- 1917, 1944, 1963
Q136. எந்த குடும்பம் நோபல் பரிசை நாங்கு முறை வென்றுள்ளது?
"க்யூரி குடும்பம்.
1. பியரி க்யூரி -- 1903 -- இயற்பியல்
2. மேரி க்யூரி -- 1903 -- இயற்பியல் & (3) 1911 -- வேதியியல்
4. ஐரீன் ஜோலியட் க்யூரி -- (மேரி க்யூரியின் மகள்) 1935 -- வேதியியல்"
Q137. தந்தை-மகன் நோபல் பரிசு பெற்றவர்கள் யாவர்?
"சர் வில்லியம் ஹென்றி ப்ராக் (தந்தை) மற்றும் வில்லியம் லாரன்ஸ் ப்ராக் (மகன்) -- ஆஸ்திரேலியா -- 1915 -- இயற்பியல் -- "
Q138. "ஆஸ்திரேலியாவின் லாரன்ஸ் ப்ராக் நோபல் பரிசு வென்றதில் படைத்துள்ள சாதனை என்ன? "
"அவர் இந்த பரிசை பெறும் பொழுது அவருடைய வயது 25. இதன் மூலம் அறிவியல் துறைகளில் நோபல் பரிசு வென்றதில் மிக வயது குறைந்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். "
Q139. உலகின் எந்த நாடு அதிகமான நோபல் பரிசுகளை வென்றுள்ளது?
அமெரிக்கா -- 3567; இங்கிலாந்து -- 118; மற்றும் ஜெர்மனி 102 (2015 நிலைப்படி)
Q140. 2015 நிலையில் எத்தனை பெண்மணிகள் நோபல் பரிசுகள் பெற்றுள்ளனர்?
49
Q141. "1948ல் நோபல் அமைதிப்பரிசு வழங்கப்படவில்லை. நோபல் பரிசுக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை இந்தியாவைக் குறிக்கும்படியாக இருந்தததாகக் கருதப்படுகிறது. அது என்ன? அந்த இந்தியர் யார்?"
"""உயிருடன் தகுதியான நபர் கிடைக்கவில்லை"" என்பதே அந்த அறிக்கை. இந்த அறிக்கை மகாத்மா காந்தியை குறிப்பதாக இருந்தது. காரணம் அவர் அந்த கால கட்டத்தில் உயிருடன் இல்லை என்பதே. இல்லையெனில் அவர் இந்த விருதைப் பெற்றிருப்பாட். "
Q142. ஒரே படைப்புக்காக நோபல் இலக்கிய பரிசும் ஆஸ்கார் விருதும் பெற்ற நபர் யார்?
"ஜார்ஜ் பெர்னார்டு ஷா -- 1925 -- பிக்மேலியன் “Pygmallion” என்ற நாவல் (நோபல் பரிசு) பிறகு திரைக்கதையாக வசனம் எழுதப்பட்டதற்கு (ஆஸ்கார்) பெற்றது. "
Q143. நோபல் அமைதிப்பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்க/அமெரிக்கர் யார்?
"ரால்ஃப் பஞ்ச் -- அமெரிக்க அரசியல் நிபுணர் -- பாலஸ்தீனிய அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்கு காரணமானவர். 1950ல் நோபல் அமைதிப்பரிசை பெற்றார். "
Q144. நோபல் பரிசை வென்ற முதல் பெண்மணி யார்?
மேரி க்யூரி -- 1903 -- இயற்பியல்.
Q145. நோபல் இலக்கிய பரிசை வென்ற வயதில் மொ9ஒத்த நபர் யார்?
டோரிஸ் லெஸ்ஸிங் -- இங்கிலாந்து -- 2007ல் தனது 88 வயதில் இந்த பரிசை பெற்றார்.
Q146. இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற முதல் நபர் யார்?
செல்மா லெகெராஃப் -- ஸ்வீடன் -- 1909
Q147. இளம் வயதில் நோபல் பரிசை வென்ற ஆண்/பெண் அறிஞர்கள் யாவர்?
"ஆண்
1. வில்லியம் லாரன்ஸ் ப்ராக் -- ஆஸ்திரேலியா -- 25 வயது -- 1915
பெண்
1. மலாலா யூசுஃப்சாய் -- பாகிஸ்தான் -- 17 வயது -- அமைதிப்பரிசு -- 2014. "
Q148. "கண்ணி வெடிகள் landmines பயன்படுத்துவதை எதிர்த்து போராடியதற்காக நோபல் அமைதிப்பரிசை பெற்றவர் யார்? "
ஜோடி வில்லியம்ஸ் - அமெரிக்கா -- 1997.
Q149. இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற இரண்டு பெண்மணிகள் யாவர்?
1. மேரி க்யூரி -- 1903 மற்றும் 2. மரியா கோப்பெர்ட் -- அமெரிக்கா -- 1963..
Q150. மிக இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் யார்?
"ஆண்: மார்ட்டின் லூதர் கிங் -- அமெரிக்கா -- 1964 -- 35 வயது.
பெண்: மலாலா யூசுஃப்சாய் -- பாகிஸ்தான் -- 2014. "
Q151. நோபல் தங்கப் பதக்கம் எவ்வகை சித்திரம் பொறிக்கப்பட்டிருக்கும்?
மூன்று ஆடையில்லா ஆண்கள் தோள் மீது கை கோர்த்தவறு பொறிக்கப்பட்டிருக்கும்.
Q152. மறைவுக்கு பிறகு நோபல் பரிசு வழங்கப்பட்டவர்கள் யாவர்?
" 1. டேக் ஹாமர்ஜோல்ட் -- முன்னாள் ஐ.நா.சபை பொதுக் காரியதரிசி -- 1961ல் இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விருதைப் பெறுவதற்கு முன்பே ஒரு விமான விபத்தில் இவர் மறைந்தார்.
2. எரிக் ஆக்ஸெல் கார்ல்ஃபெல்ட் -- ஸ்வீடன் நாட்டு கவிஞர் -- 1931 ல் இலக்கிய நோபல் பரிசு இவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் இதை பெறுவதற்கு முன்பே மறைந்தார். "
Q153. நோபல் அமைதிப் பரிசில் பொறிக்கப்பட்டிருக்கும் வாக்கியங்கள் யாவை?
""" மனித அமைதிக்காகவும், சகோதரத்துக்காகவும்"" == “Proface et fraternitate gentium” == “for the peace and brotherhood of men”"
Q154. நோபல் இலக்கிய பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்க (ஆண்) இனத்தவர் யார்?
வோலி சோயிங்கா -- நைஜீரியா -- 1986. ( முழுப்பெயர் --Akinwande Oluwole Soyinka)
Q155. நோபல் பரிசை வென்ற முதல் பாகிஸ்தானியர் யார்?
"அப்துஸ் சலாம் -- 1979ல் இயற்பியல் நோபல் பரிசை இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளுடன் (ஷெல்டன் லீ க்ளாஷோ மற்றும் ஸ்டீவன் வீன்பெர்க்) பகிர்ந்து கொண்டார். "
Q156. நோபல் இலக்கிய பரிசை வென்ற முதல் கருப்பு இன (அமெரிக்க) பெண்மணி யார்?
டோனி மாரிசன் -- அமெரிக்கா -- 1993
Q157. "உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் எய்ன்ஸ்டீனின் பல கண்டுபிடிப்புகளில், எந்த படைப்புக்கு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது? "
புகைப்பட மின்சார விதி -- Photo Electric Law.
Q158. நோபல் இலக்கிய பரிசைப் பெற்ற ஹீப்ரூ எழுத்தாளர் யார்?
ஷாமுவேல் யோசெஃப் ஆக்னான் -- உக்ரெய்ன் -- 1966
Q159. நோபல் அமைதிப்பரிசுக்காக மகாத்மா காந்திஜி எத்தனை முறை நியமிக்கப்பட்டார்?
ஐந்து முறை -- 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948.
Q160. "2009ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பிறந்த இடம் எது? "
சிதம்பரம், தமிழ்நாடு.
Q161. ஒரு துறைக்கான நோபல் பரிசுக்கு எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்படலாம்?
அதிகபட்சமாக மூன்று பேர்.
Q162. நோபல் பரிசை பெற தடுக்கப்பட்ட முதல் நபர் யார்?
"ரிச்சார்டு குஹ்ன் - ஆஸ்திரிய/ஜெர்மானிய விஞ்ஞானி -- 1938ல் இவர் வேதியியல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போர் முடியும் வரை இந்த பரிசை இவர் பெற முடியாமல் தடுக்கப்பட்டார். இவரைப் போலவே 1939ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப்பெற ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ஃப் பட்டெனண்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 1947ல் தான் இந்த விருதைப் பெற்றார். இருவரையும் தடுத்தவிர் அடால்ஃப் ஹிட்லர். "
Q163. "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி பொருளாதாரம் மற்றும் மருத்துவ நோபல் பரிசுகள் பெற்றனர். அவர்கள் யார்? "
"ஜேன் டிம்பெர்ஜென் -- 1969 -- பொருளாதாரம் மற்றும் நிக்கோலஸ் டிம்பெர்ஜென் -- 1973 -- மருத்துவம். இவர்கள் நெதர்லாண்ட் நாட்டை சேர்ந்தவர்கள்."
Q164. நவம்பர் 27, 1895, நோபல் சரித்திரத்தின் ஒரு முக்கிய நாள். அது என்ன?
"இந்த நாளில் தான், ஆல்ஃப்ரெட் நோபல் தன்னுடைய சொத்தின் பெரும் பகுதியை தன்னுடைய பெயரில் வழங்கப்படும் பரிசுக்காக (பொருளாதாரம் நீங்கலாக) சட்ட பூர்வமான உயில் சாசனம் கையெழுத்திட்டார். "
Q165. நோபல் பரிசை "பெற்றவர்கள்" , "வென்றவர்கள் அல்ல" என ஏன் கூறப்படுகிறது?
நோபல் அறக்கட்டளையின் படி, நோபல் பரிசு வழங்கப்படுவது ஒரு போட்டியோ அல்லது குலுக்கல் பரிசுச் சீட்டோ அல்ல என்ற ஒரு திட்டவட்டமான கோட்பாட்டின் அடிப்படையில்.
Q166. நோபல் அமைதிப்பரிசை பெற்ற தொண்டு நிறுவனங்கள் யாவை?
எண் வருடம் தொண்டு நிறுவனப்பெயர்
1. 1904 சர்வதேச சட்ட அமைப்பு -- Institute of International Law
2. 1910 நிரந்தர சர்வதேச அமைதி அமைப்பு -- Permanent International Peace Bureau
3. 1917 சர்வதேச செஞ்சிலுவை சங்கம் -- International Committee for the Red Cross
4. 1938 நான்ஸென் சர்வதேச அகதிகள் அமைப்பு --Nansen International Office for Refugees
5. 1944 சர்வதேச செஞ்சிலுவை சங்கம் -- International Committee of the Red Cross
6. 1947 நண்பர்கள் சேவை அமைப்பு -- Friends Service Council, UK American Friends Service Committee
7. 1954 ஐ.நா. அகதிகள் அமைப்பு -- UN High Commission for Refugees.
8. 1963 சர்வதேச செஞ்சிலுவை சங்கம் -- International Committee of the Red Cross
9. 1965 ஐ.நா.வின் யூனிசெஃப் -- UNICEF -- UN’s International Children’s Educational Fund.
10. 1969 சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு -- International Labour Organization .
11. 1977 சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு -- Amnesty International .
12. 1981 ஐ.நா. அகதிகள் அமைப்பு -- UN’s High Commissioner for Refugees.
13. 1985 அணு ஆயுதப் போரைத் தவிர்க்கும் அமைப்பு -- International Physicians for the Prevention of Nuclear War.
14. 1988 ஐ.நா. அமைதிப் படை -- UN Peace Keeping Force.
15. 1995 பக்வாஷ் அறிவியல் மகாநாடு -- Pugwash Conferences on Science and World Affairs.
16. 1997 சர்வதேச கண்ணிவெடி தடுப்பு இயக்கம் -- International Campaign to Ban Landmines .
17. 1999 ""மருத்துவத்துக்கு எல்லை இல்லை"" அமைப்பு -- Medicins Sans Frontiers .2001 United Nations.
18. 2005 சர்வதேச அணுசக்தி அமைப்பு -- International Atomic Energy Agency.
19. 2006 க்ராமீன் வங்கி , வங்காள தேசம் -- Grameen Bank, Bangladesh.
20. 2007 சர்வதேச சுற்றுசூழலுக்கான சர்வதேச அமைப்பு -- Intergovernmental Panel on Climate Change - Al Gore.
21. 2012 ஐரோப்பிய யூனியன் -- European Union
22. 2013 வேதிப்பொருள் ஆயுதங்கள் தடுப்பு அமைப்பு -- Organisation for the Prohibition of Chemical Weapons.
23. 2015 துனிசியா தேசிய பேச்சுவார்த்தை அமைப்பு -- Tunisian National Dialogue Quartet.
Q167. நோபல் பரிசின் பல பரிசுகளை வடிவமைத்தவர்கள் யார்?
"1. இயற்பியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் -- Erik Lindberg -- ஸ்வீடன்
2. அமைதி -- Gustav Vigeland -- நார்வே
3. பொருளாதாரம் -- Gunvor Svensson Lundkvist -- ஸ்வீடன் "
Q168. ஒரு துறைக்கு அளிக்கப்படும் நோபல் பரிசின் மதிப்பு என்ன?
"10 மில்லியன் ஸ்வீடன் க்ரோனா == 15 மில்லியன் யூரோ == 1.45 மில்லியன் அமெரிக்க டாலர் == 9.8 கோடி (ஒரு மில்லியன் == 10 லட்சம்) "
Q169. நோபல் பரிசுகள் எங்கு வழங்கப்படுகிறது?
"அமைதிப் பரிசு -- ஆஸ்லோ நகர அரங்கம், ஆஸ்லோ, நார்வே மற்றவை -- ஸ்டாக்ஹோம் இசை அரங்கம் -- ஸ்டாக்ஹோம், நார்வே. "
Q170. நோபல் அமைதிப்பரிசைப் பெற்ற முதல் அமெரிக்க அதிபர் யார்?
"தியோடார் ரூஸ்வெல்ட் -- 1906. இவருக்கு பிறகு இந்த விருதைப் பெற்ற அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா -- 2009ல். "
Q171. "1973ல் இருவருக்கு அமைதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஒருவர் அமெரிக்க வெளியுறவு காரியதரிசி ஹென்றி கிஸிங்கர். மற்றொருவர் இந்த பரிசை நிராகரித்தார். அவர் யார்?"
லீ டக் தோ -- வடக்கு வியட்நாமின் அரசியல் வாதி மற்றும் அரசாங்க அதிகாரி.
Q172. "தந்தைக்கு நோபல் இலக்கிய பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் மகன் பெற்றுக் கொண்டார். பின்னணி என்ன?"
"போரிஸ் பாஸ்டர்நாக் என்ற எழுத்தாளருக்கு 1958ல் இந்த விருது அறிவிக்கப்பட்டது. அவ்வமயம் நிலவி வந்த அரசாங்கத்தால் தொல்லைகள் வரும் என்ற பயத்தால் அவர் இந்த விருதை வாங்குவதை தவிர்த்து வந்தார். 1960ல் மரணமும் அடைந்தார். 1989ல் அவருடைய மகன் இந்த விருதை பெற்றுக் கொண்டார்."
Q173. "அறிவியலுக்கு நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்லாமியர் மற்றும் பாகிஸ்தானின் முதல் நோபல் பரிசு பெற்றவரும் யார்? "
அப்துஸ் சலாம் -- இயற்பியல் -- 1979 -- பாகிஸ்தான்
Q174. நோபல் அமைதிப்பரிசை பெற்ற முதல் பெண்மணி யார்?
பெர்த்தா வோன் சட்னர் -- 1905 -- ஆஸ்திரியா.

ராமன் மகாசஸே விருது -- RAMON MAGSAYSAY AWARDS - (www.rmaf.org.ph)

Q175. ராமன் மகாசஸே விருது என்பது என்ன?
"1957ல் ராக்ஃபெல்லர் சகோதரர்கள் தொண்டு நிறுவனத்தால் (நியூயார்க்) நிறுவப்பட்டது இந்த விருது. இந்த விருது அரசாங்கப்பணி, பொது சேவை, சமூக தலைமை, பத்திரிகைத் துறை, இலக்கியம், எழுச்சி பெறும் தலைவர், அமைதி என பல துறைகளுக்கு வழங்கப்படுகிறது."
Q176. யாருடைய நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது?
பிலிப்பைன்ஸ் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ராமன் மகாசஸே.
Q177. ராமன் மகாசஸே விருதைப் பெற்ற முதல் இந்தியர் யார்?
வினோபா பாவே -- 1958.
Q178. 1958 தொடக்க வருடத்தில் ராமன் மகாசஸே விருது பெற்றவர்கள் யார்?
1. வினோபா பாவே -- இந்தியா -- சமூக சேவை
2. சியாங் மாங் லின் -- தைவான் -- அரசாங்க சேவை
3. டிக் ராபர்ட் -- இங்கிலாந்து -- எழுத்தாளர்
4. லூயிஸ் மோஸ்தார் -- இந்தோனேசியா -- எழுத்தாளர்
5. ரத்னம் மேரி -- ஸ்ரீலங்கா -- சமூக சேவை
6. சகோதரத்துவ இயக்கம் -- Operation Brotherhood – பிலிப்பைன்ஸ் தொண்டு நிறுவனம்
Q179. ராமன் மகாசஸே விருதுகள் பெற்ற இந்தியர்கள் யாவர்?
"1958ல் வினோபா பாவேயை தொடர்ந்து நிறைய இந்தியர்கள் இந்த பரிசைப் பெற்றிருக்கின்றனர். ஆகவே, 2000 முதல் விருது பெற்றவர்கள் பட்டியல் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
எண் வருடம் பெயர்
1. 2000 அருணா ராய் -- சமூக சேவகி
2.   ஜோக்கிம் அற்புதம் -- சமூக சேவகர்
3. 2001 ராஜேந்திர சிங் -- நீர் சேமிப்பு ஆர்வலர்
4. 2002 சந்தீப் பாண்டே -- சமூக் சீர்திருத்தவாதி
5. 2003 ஜேம்ஸ் மிக்கேல் லிங்டோ -- தேர்தல் ஆணையர்
6.   சாந்தா சின்ஹா -- குழந்தை தொழில் எதிர்ப்பு ஆர்வலர்
7. 2004 ராம்தாஸ் லக்ஷ்மிநாராயண் -- சமூக சேவகர்
8. 2005 டாக்டர் வி. சாந்தா -- மருத்துவர்
9. 2006 அரவிந்த் கேஜ்ரிவால் -- சமூக ஆர்வலர்
10. 2007 P. சாய்நாத் -- பத்திரிகையாளர்
11. 2008 ப்ரகாஷ் & மந்தாகினி ஆம்தே -- சமூக ஆர்வலர்
12. 2011 நிலீமா மிஷ்ரா & ஹரிஷ் ஹண்டே -- வளரும் தலைவர்கள்
13. 2012 குழந்தை ஃப்ரான்சிஸ் - சமூக சேவகர்
14. 2015 சஞ்ஜீவ் சதுர்வேதி & அன்ஷூ குப்தா -- வளரும் தலைவர்கள்
15.  2016 பெஸ்வாடா வில்சன் -- பொதுச் சேவை 
டி.எம்.கிருஷ்ணா -- இசைக்கலைஞர் -- வளரும் தலைவர்கள்
     
     
     
     
     
     
     
     
     
     

வாழ்வாதார உரிமை பரிசு -- RIGHT TO LIVELIHOOD PRIZE

Q180. வாழ்வாதார உரிமைப் பரிசு -- Right to Livelihood Prize என்பது என்ன?
உலகில் நிலவி வரும் முக்கியமான பிரச்சனைகளுக்கு ஆக்க பூர்வமான மற்றும் சாத்திய கூறான வழிமுறைகளை கண்டறிந்து உலகுக்கு அறிமுகப்படுத்துபருக்கு வழங்கப்படும் பரிசு. இந்த பரிசு நான்கு பேருக்கு 2 லட்சம் யூரோ வழங்கப்படுகிறது. இந்த பரிசை 1980ல் ஜேகப் வோன் வெக்ஸ்கல் என்ற ஜெர்மானிய (இங்கிலாந்தில் வாழும்) எழுத்தாளர், அரசியல் வாதி மற்றும் வள்ளல் அவர்களால் துவங்கப்பட்டது. இந்த பரிசு பொதுவாக, நோபல் பரிசு வழங்குவதின் முன் தினம் வழங்கப்படுகிறது. இந்த விருதை ""நோபல் பரிசின் மாற்று"" எனவும் அழைப்பர்.
Q181. "வாழ்வாதார் உரிமைப் பரிசை" முதன் முதலிம் பெற்றவர்கள் யாவர்?
எகிப்தின் ஹாசன் ஃபாத்தி என்பவரும், “Plenty International” என்ற சமூக சேவை தொண்டு நிறுவனமும் (டென்னெஸ்ஸி, அமெரிக்கா) இந்த விருதைப் பெற்றனர்.
Q182. " வாழ்வாதார உரிமைப் பரிசு" Right to Livelihood Prize பெற்ற இந்தியர்கள் யாவர்?
எண் வருடம் பெயர்/நிறுவனம்
1. 1984 சுய வேலை மகளிர் அமைப்பு -- இலா பட் நடத்துவது.
2. 1985 ""Lokayan"" ரஜனி கோத்தாரி அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனம்.
3. 1986 லடாக் சுற்றுசூழல் மேம்பாட்டு அமைப்பு
4. 1987 ""சிப்கோ"" இயக்கம் -- 1973ல் தொடங்கப்பட்ட வன பாதுகாப்பு தொண்டு நிறுவனம்
5. 1991 நர்மதா பாதுகாப்பு இயக்கம்
6. 1993 வந்தனா சிவா -- டெல்லி -- சுற்றுச்சூழல் ஆர்வலர்
7. 1994 டாக்டர் H. சுதர்ஷன் - பழங்குடியினர் நல ஆர்வலர்
8. 1996 கேரளா சாஷ்த்ரா சாஹித்ய பரிஷத்
9. 2004 ஸ்வாமி அக்னிவேஷ் & அஸ்கர் அலி எஞ்சினியர் -- சமூக சேவகர்கள்
10. 2006 ருத் மனோரமா -- தமிழ்நாடு -- பிற்படுத்தப்பட்டோர் நல ஆர்வலர்
11. 2008 கிருஷ்ணம்மாள் & சங்கரலிங்கம் ஜகந்நாதன் -- தமிழ் நாடு -- சமூக ஆர்வலர்கள்

உலகின் பல அமைதி விருதுகள் -- OTHER INTERNATIONAL PEACE AWARDS

Q183. உலகின் பல்வேறு அமைதி விருதுகளை பற்றி விவரிக்க:
1. ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன் அமைதிப்பரிசு -- ALBERT EINSTEIN PEACE PRIZE : இதே பெயர் கொண்ட தொண்டு அமைப்பால் சிகாகோ, அமெரிக்காவிலிருந்து வழங்கப்படும் விருது. 50000 அமெரிக்க டாலர்கள் கொண்டது.
2. ஆட்டம்ஸ் அமைதி விருது -- ATOMS FOR PEACE AWARD: 1955 முதல் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த விருது 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டது.
3. ப்ரூனோ க்ரெய்ஸ்கி விருது -- BRUNO KREISKY AWARD : 1976லிருந்து வழங்கப்படும் இந்த விருது, ஆஸ்திரியாவின் முன்னாள் அதிபர் ப்ரோனோ க்ரெய்ஸ்கி அவர்களின் நினைவாக நிறுவப்பட்டது. மனித உரிமைகளுக்காக சேவை புரிபவர்களுக்கு வழங்கப்படும் விருது.
4. கிறித்துவ இன சர்வதேச அமைதி விருது - COMMUNITY OF CHRIST INTERNATIONAL PEACE AWARD: அமைதிக்காகவௌ, அமைதி நிலவவும் உழைப்பவர்களுக்கு வழங்கப்படும் விருது - 20000 அமெரிக்க டாலர். D .
5. ஃப்ரான்ஸ் வெர்ஃபெல் மனித உரிமை விருது - FRANZ WERFEL HUMAN RIGHTS AWARD: ஆஸ்திரிய எழுத்தாளர் ஃப்ரான்ஸ் வெர்ஃபெல் நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது 10000 அமெரிக்க டாலர்களைக் கொண்டது. 2003 முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் வழங்கப்படுகிறது.
6. காந்தி அமைதி விருது (இங்கிலாந்து) GANDHI PEACE AWARD: ஜெரோம் டேவிஸ் என்பவரால் நிறுவப்பட்ட இந்த விருது 1960 முதல், ஒரு நற்சான்றிதழ், ஒரு செம்பு பட்டயம் - அதில் காந்திஜியின் பொன்மொழி ""அன்பு என்றும் துன்பப்படும் ஆனால் எப்போது பழி வாங்காது"" -- “Love ever suffers, never revenges itself” பொறிக்கப்பட்டிருக்கும்.
7. ஃபெலிக்ஸ் ஹூஃபெட் பாய்க்னி அமைதி விருது - FELIX HOUPHET BOIGNY PEACE PRIZE: ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பால் - இதே பெயர் கொண்ட Cote d’Ivoire நாட்டு முன்னாள் அதிபர் நினைவாக 1990 ல் நிறுவப்பட்ட விருது. வருடந்தோறும் வழங்கப்படும் இந்த விருது 1,22,000 யூரோ மதிப்பு கொண்டது. இந்த விருதை முதலில் பெற்றவர்கள் -- தென் ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா மற்றும் F.W. டி க்ளார்க் ஆகியோர்.
8. சர்வதேச குழந்தைகள் அமைதி விருது -- INTERNATIONAL CHILDREN PEACE PRIZE: நெதர்லாந்து நாட்டின் குழந்தைகள் உரிமை அமைப்பால் 2005ல் நிறுவப்பட்ட இந்த விருது, இந்த ஒரு குழந்தையின் நடவடிக்கை உலக குழந்தைகள் மேம்பாட்டை நோக்கி உள்ளதோ அந்த குழந்தைக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களைக் கொண்டது. இந்த தொகையுடன் “Nkosi” என்ற ஒரு சிற்பமும் வழங்கப்படுகிறது. “Nkosi” -- தென் ஆப்பிரிக்காவின் சிறுவன் Nkosi Johnson ஐ குறிக்கிறது. இந்த சிறுவன் குழந்தைகளிடையே நிலவும் எய்ட்ஸ் நோயைப்பற்றி உலக சிந்தனையைத் தூண்டியவன். இந்த விருதுக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவன் இந்த சிறுவனே. ஆனால் விருதைப் பெறுவதற்கு முன்பே இறந்து விட்டதால் இந்த சிலை அச்சிறுவனின் நினைவாக வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற இந்திய சிறுவன் - ஓம் ப்ரகாஷ் குர்ஜார் -- ராஜஸ்தான் -- 2006 . இந்திய வம்சாவளி அமெரிக்க சிறுமி நேஹா குப்தா இந்த விருதை 2014ல் பெற்றுள்ளார்.
9. லெனின் அமைதிப்பரிசு -- LENIN PEACE PRIZE: தொடக்கத்தில் இது ஸ்டாலின் அமைதி விருது என அழைக்கப்பட்டது. 1991 முதல் இந்த விருது வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. இந்த விருதை கடைசியாகப் பெற்றவர் நெல்சன் மண்டேலா. 1990 ல் இது இவருக்கு அறிவிக்கப்பட்டு, சிறைவாசம் காரணமாக 202 ல் இந்த விருதைப்பெற்றார். இந்த விருதைப் பெற்ற இந்தியர்கள்:
1. சைஃபுதீன் கிஸ்லூ -- சுதந்திர போராட்ட வீரர் 1952
2. சர் சாஹிப் சிங் சோக்கி 1953
3. சர் சி. வி. ராமன் -- 1957
4. ராமேஹ்வரி நேரு -- சமூக சேவகி - 1961
5. அருணா ஆசாஃப் அலி -- சுதந்திர போராட்ட வீரர் -- 1964
6. ரொமேஷ் சந்திரா - 1967
7. குமர பத்மா சங்கர மேனன் -- இந்திய உயர் அரசாங்க அதிகாரி -- 1977
8. திருமதி இந்திரா காந்தி - 1983
10. அமைதியை நாடுபவர் விருது -- MAN OF PEACE AWARD: நோபல் அமைதிப்பரிசை பெற்றவர்கள் சார்பாக நோபல் அமைதி விருது பெற்ற முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்கேல் கோர்பச்சேவ் அவர்களால் நிறுவப்பட்டது.
11. நிவானோ அமைதி விருது -- NIWANO PEACE PRIZE: நிக்யோ நிவானோ என்ற ஜப்பானியரால் 1983ல் நிறுவப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தால் வழங்கப்படும் விருது. புத்த, கிறித்துவ மற்றும் இஸ்லாமிய உறுப்பினர்களைக்கொண்ட ஒரு முழு இந்த விருதை தேர்வு செய்கிறது. 20 மில்லியன் ஜப்பானிய யென், ஒரு நற்சான்றிதழ், மற்றும் ஒரு தங்கப்பதக்கம் கொண்ட விருது. இந்த விருதைப் பெற்ற இந்தியர்கள்:
1. டாக்டர் எம். ஆரம் -- கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் -- கோயம்புத்தூர் -- 1995.
2. எலா பட் -- சமூக ஆர்வலர் மற்றும் பெண்கள் நல சேவகர் -- SEWA – Self Employed Women’s Association of India என்ற அமைப்பின் நிறுவனர்.
12. PAX CHRISTI USA POPE PAUL VI TEACHER OF PEACE AWARD: இதே பெயர் கொண்ட ஒரு கிறித்துவ அமைதி நிறுவனம் இந்த விருதை 1978 முதல் வருடந்தோறும் வழங்கி வருகிறது.
13. ஜெர்மன் புத்தக விற்பனையாளர்கள் விருது: இதே சங்கத்தால் 1950 முதல் வழங்கப்படும் இந்த விருது 25000 யூரே மதிப்புடையது. இந்த விருதைப்பெற்ற ஒரே இந்தியர் - டாக்டர் எஸ். ராதகிருஷ்ணன் -- 1961.
14. சியோல் அமைதி பரிசு -- SEOUL PEACE PRIZE: 1990ல் 24வது ஒலிம்பிக் விளையாட்டை சிறந்த முறையில் நடத்தி முடித்ததின் நினைவாக தென் கொரிய நாட்டால் நிறுவப்பட்ட விருது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது ஒரு நற்சான்றிதழ், பட்டயம் மற்றும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பூதியமும் (Honorarium) வழங்கப்படுகிறது.
15. சிட்னி அமைதி விருது -- SYDNEY PEACE PRIZE: சிட்னி, ஆஸ்திரேலியா பல்கலைகழகத்தால் 1998 முதல் வழங்கப்படும் விருது. இந்த விருதைப் பெற்ற இந்தியர்கள் : 1. அருந்ததி ராய் - 2004 மற்றும் வந்தனா சிவா - 2010.
16. தாமஸ் மெர்டன் விருது -- THOMAS MERTON AWARD: அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் இதே பெயரில் இயங்கிவரும் தொண்டு நிறுவனத்தால் 1972 முதல் வழங்கப்படும் விருது.
17.THOROLF RAFTO MEMORIAL PRIZE: இதே பெயர் கொண்ட தொண்டு நிறுவனத்தால் மனித உரிமைக்காக தொண்டு செய்யும் அமைப்பு/ஒருவருக்கு 1987 முதல் வழங்கப்படும் விருது. இந்த விருதை National Campaign on Dalit Human Rights என்ற இந்திய அமைப்பு 2007ல் பெற்றுள்ளது.
18. யுனெஸ்கோ அமைதி கல்வி விருது - UNESCO PRIZE FOR PEACE EDUCATION: ஐ.நா சபையின் UNESCO அமைப்பால் 1981 முதல் வழங்கப்படும் விருது -- 60000 அமெரிக்க டாலர் -- இந்த விருதைப் பெற்ற இந்தியர்கள்:
1. அன்னை தெரெசா -- 1992 & 2. ஜெனரல் இந்தர்ஜித் சிங் ரிக்யே -- 1985.
19. வாட்டெலர் அமைதி விருது: WATELER PEACE PRIZE: நெதர்லாந்து நாட்டின் J.G.D.Wateler என்றவர் விட்டு சென்ற சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் கிடைக்கும் தொகையைக்கொண்டு 1931 முதல் வழங்கப்படும் விருது. இதை Carnegie Foundation என்ற அமைப்பு மேலாண்மை செய்கிறது. இந்த விருதை 1986ல் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் டாக்டர் வி. குரியன் பெற்றுள்ளார்.
20. யுனெஸ்கோ மதன்ஜீத் சிங் விருது -- UNESCO MADANJEET SINGH PRIZE: 1996 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.நா சபையின் UNESCO அமைப்பால் வழங்கப்படுகிறது. எழுத்தாளர், சித்திரக்கலை வல்லுநர், UNESCO வின் நல்லுறவு தூதர் திரு. மதன்ஜீத் சிங் அவர்கள் அளித்த பெரிய நன்கொடை மூலமாக வழங்கப்படுகிறது. இந்த விருதை நாராயண் தேசாய் (காந்திஜியின் காரியதிரிசி மகாதேவ் தேசாய் அவர்களின் மகன்) 1998ல் பெற்றுள்ளார்.
21. காந்தி ஃபவுண்டேஷன் அமைதி விருது-- இதே பெயர் கொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தால், 1983 முதல், ரிச்சர்ட் ஆட்டென்பரோ உருவாக்கிய ""காந்தி"" படத்திலிருந்து கிடைத்த வருமானத்திலிருந்து வழங்கப்படும் விருது."

"சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகள் INTERNATIONAL SCIENCE AND TECHNOLOGY AWARDS"

Q184. "இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவ துறைக்கு வழங்கப்படும் உலகின் உயரிய விருது எது? "
நோபல் பரிசு -- (இதைப்பற்றி நோபல் பரிசு பகுதியில் பார்க்கவும்)
Q185. கணிதத்துறைக்கு வழங்கப்படும் உயரிய விருது எது?
ஃபீல்ட்ஸ் பதக்கம் -- Fields Medal – சர்வதேச கணித சங்கம் -- International Mathematical Union (Berlin – www.mathunion.org) . வழங்கும் இந்த விருது 15000 கனடா டாலர் மதிப்பு கொண்டது. கனடாவின் புகழ் பெற்ற கணித மேதை ஜூன் சார்லஸ் ஃபீல்ட்ஸ் நினைவாக வழங்கப்படுகிறது. 40 வயதுக்கு குறைவானவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை இந்திய வம்சாவளி, கனடா நாட்டு அமெரிக்கா வாழும் மஞ்சுல் பார்கவா 2014ல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Q186. ஃபீல்ட்ஸ் பதக்கம் மிகக் குறைந்த வயதில் பெற்றவர் யார்?
ஜீன் பியரி செர்ரி -- ஃப்ரான்ஸ் -- 27 வய்து. Jean Pierre Serre .
Q187. உலகின் பல்வேறு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப விருதுகள் யாவை?
1. ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன் உலக அறிவியல் விருது -- ALBERT EINSTEIN WORLD AWARD OF SCIENCE: உலக கலாச்சார மையத்தால் வருடந்தோறும் அளிக்கப்படும் இந்த விருது -- 10000 அமெரிக்க டாலர் -- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அளிக்கப்படுகிறது. டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் 1986ல் இந்த விருதைப் பெற்றார்.
2. அலெக்ஸாண்டர் அகாசிஸ் பதக்கம் -- ALEXANDER AGASSIZ MEDAL: அமெரிக்க தேசிய அறிவியல் அகாதமி வழங்கும் விருது. இந்த விருது கடல்சார் அறிவியலில் ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சி பங்களிப்புக்கு 1913 முதல் வழங்கப்படுகிறது.
3. கோப்ளி பதக்கம் - COPLEY MEDAL: சர் ஜெஃப்ரி கோப்ளி என்பவரின் உதவியால் 1731 முதல் ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டன் வழங்கும் விருது. இந்த விருது இயற்பியல் மற்றும் உயிரியியல் துறைகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு வெள்ளிப் பதக்கமும் 5000 இங்கிலாந்து பவுண்டு ரொக்கப்பரிசும் கொண்டது. இந்த விருதை 1984ல் சுப்ரமணியம் சந்திரசேகர் பெற்றிருக்கிறார்.
4. டான் டேவிட் விருது - DAN DAVID PRIZE: ரொமானியாவின் வணிகர் மற்றும் வள்ளல் டான் டேவிட் என்பவரின் கொடை உதவியுடன் நடத்தப்படும் விருது. 2002ல் தொடங்கப்பட்ட இந்த விருது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியால் உலகளவில் 20 மாணவர்களுக்கு கல்வி நிதி உதவியும் , டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பயிலும் 20 மாணவர்களுக்கு கல்வி நிதி உதவிஉம் வழங்கப்படுகிறது.
5. ஹோ ஆம் விருது -- HO AM PRIZE: சாம்சங் தொழிற்குழுமத்தால் கொரியாவில் வருடந்தோறும், அறிவியல் துறைக்கும், சமூக சேவைக்கும் வழங்கப்படும் விருது. (ஹோ ஆம் என்பது சாம்சங் நிறுவனர் ப்யூங் சுல் லீ அவர்களின் சிறப்பு பெயர்). இந்த விருது ஒரு நற்சான்றிதழ்,தங்கப்பதக்கம் மற்றும் 300 மில்லியன் கொரிய வொன் (3,00,000 USD) ரொக்கமும் கொண்டது.
6. நிக்கோலஸ் ஃப்ராங்காய்ஸ் ஆப்பெர்ட் விருது 1942 முதல் உணவுத்துறை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படும் விருது. ஒரு செம்பு பதக்கமும், 5000 அமெரிக்க டாலர் ரொக்கமும் கொண்ட விருது. இந்த பெயர் கொண்டவர் உணவுப் பொருட்களை சரியான முறையில் மூடு கலன் முறையில் பாதுகாக்கும் துறையின் முன்னோடி.
7. நிரென்பெர்க் விருது -- NIERENBERG PRIZE: 2001 முதல் ஸ்க்ரிப்ஸ் கடற்சார்ர் கல்வி கழகத்தால் ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் விருது. 25000 USD கொண்டது.
8. ஷா விருது -- SHAW PRIZE: ஹாங்காங் நகரின் பத்திரிகைத்துறை அதிபர் மற்றும் வள்ளல் சர் ரன் ரன் ஷா என்பவரால் வழங்கப்படும் விருது. அறிவியல் துறை ஆராய்ச்சிகளுக்கு, 10 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படுகிறது. 9. டூரிங் விருது -- TURING AWARD: கணினித் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது (நோபல் பரிசுக்கு இணை). நியூயார்க், அமெரிக்காவிலிருந்து இயங்கும் Association for Computing Machinery அமைப்பால், ஆல்ன் டூரிங் என்ற இங்கிலாந்து விஞ்ஞானியின் பெயரால் வழங்கப்படும் விருது. -- 250000 USD. இந்த விருதைப் பெற்ற இந்தியர்கள்: ராஜ் ரெட்டி -- ஆந்திரப்பிரதேசம் -- 1994.
10. உல்ஃப் விருது -- WOLF PRIZE: 1978 முதல் வருடந்தோறும் Wolf Foundation, Israel (நிறுவனர் Dr.Ricardo Wolf, ஜெர்மன் நாட்டு படைப்பாளி) என்ற அமைப்பால் பல்வேறு அறிவியல்/இதர துறைகளுக்கு வழங்கப்படும் விருது. இந்த விருது ஒரு லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது. இந்த விருதைப்பெற்ற இந்தியர்கள்:
1. குருதேவ் குஷ் (விவசாயம் -- 2000) மற்றும் சூபின் மேத்தா (இசை -- 1995) 11. உலக உணவு விருது -- WORLD FOOD PRIZE: இந்த விருது நார்மன் போர்லாக் (நோபல் அமைதி பரிசு பெற்ற உலகப் புகழ் பெற்ற வேளாண் விஞ்ஞானி) விருது எனவும் அழைக்கப்படுகிறது. உலகில் உணவு/வேளாண் துறையில் சாதனைகள்/கண்டுபிடிப்புகள் மூலம் மனித குல மேம்பாட்டுக்கு பணி செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருது. இந்த விருது 2,50,000 USD மதிப்புடையது. உலக உணவு தினமான 16 அக்டோபர் வாக்கில் வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற இந்தியர்கள்:
1. டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் -- 1987
2. டாக்டர் வர்கீஸ் குரியன் -- 1989
3. டாக்டர் சுரிந்தர் வாசல் -- 2000
4. மொடடுகு விஜய் குப்தா -- 2005
5. டாக்டர் சஞ்ஜய ராஜாராம் -- 2014.
12. கேத்தரின் உல்ஃப் ப்ரூஸ் தங்கப்பதக்கம் -- CATHERINE WOLFE BRUCE GOLD MEDAL: ப்ரூஸ் பதக்கம் என அழைக்கப்படுகிறது -- வருடந்தோறும் Astronomical Society of the Pacific என்ற அமைப்பால், வானியலில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு 1898 முதல் அளிக்கப்படும் விருது. நம் நாட்டின் சுப்ரமணியம் சந்திரசேகர் 1952ல் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
13. டேனி ஹெய்னெமேன் விருது -- DANNIE HEINEMAN PRIZE FOR ASTROPHYSICS -- American Institute of Astrophysics அமைப்பால் 1990 முதல், இதே பெயர் கொண்ட பெல்ஜிய அமெரிக்க வணிகர் அவர்களின் நன்கொடையால் வழங்கப்படும் விருது.
14. GOLD MEDAL - ROYAL ASTRONOMICAL SOCIETY: 1824 முதல் இந்த அமைப்பால் வருடந்தோறும் வழங்கப்படும் விருது. இந்தியாவின் சுப்ரமணியம் சந்திரசேகர் அவர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
15. GEORGE VAN BIESBROECK PRIZE: 1979 முதல் American Astronomical Society அமைப்பால் வழங்கப்படும் விருது.
16. ஜேம்ஸ் க்ரெய்க் வாட்சன் பதக்கம் -- JAMES CRAIG WATSON MEDAL: US National Academy of Sciences அமைப்பால் வானியலுக்கு அளிக்கப்படும் விருது.
17. ரைட்ஸ் சகோதரர்கள் பதக்கம் -- Wrights Brothers Medal: 1927 லிருந்து வான்வெளி துறைக்கு வழங்கப்படும் விருது.
18. E.B. வில்சன் பதக்கம் -- WILSON MEDAL: American Society of Cell Biology யால் 1981 முதல் வருடந்தோறும் cell Biology துறைக்கு வழங்கப்படும் விருது.
19. GLENN T SEABORG MEDAL: 1987 முதல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தால் வேதியியல் துறைக்கு வழங்கப்படும் விருது.
20. கோலோஸ் பதக்கம் -- போலந்து நாட்டின் வார்ஸா பல்கலை கழகத்தால் 1998 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேதியியல் துறைக்கு வழங்கப்படும் விருது.
21. ப்றீஸ்ட்லி பதக்கம் -- PRIESTLY MEDAL: ஆக்ஸிஜனை கண்டுபிடித்த ஜோசப் ப்ரீஸ்ட்லி பெயரில் அமெரிக்க வேதியியல் சங்கத்தால் 1922 முதல் வழங்கப்படும் விருது.
23. சார்லஸ் ஸ்டார்க் ட்ரேப்பர் விருது -- CHARLES STARK DRAPER PRIZE: அமெரிக்க தேசிய தொழிற்நுட்ப சங்கத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் விருது -- 5 லட்சம் USD மதிப்பு கொண்டது.
24. கோடி விருது -- CODIE AWARD: அமெரிக்க கணினிமென்பொருள் தயாரிப்பு சங்கத்தால் மென்பொருள் தயாரிப்பு துறைக்கு வழங்கப்படும் விருது.
25. EFF PIONEER AWARD: Freedom & Privacy conference in USA என்ற அமைப்பால் கணினியின் பயன்பாட்டை அனைவருக்கும் எடுத்துச்செல்லும் முயற்சியில் பணி புரிபவருக்கு 1992 முதல் வழங்கப்படும் விருது. இந்த விருதை ஹரி கிருஷ்ண ப்ரசாத் வெமுரு என்ற இந்தியர் 2010ல் பெற்றுள்ளார்.
26. என்ரிகோ ஃபெர்மி விருது -- 1956 முதல் அமெரிக்க அரசாங்கத்தால் எரிசக்தி துறைக்கு வழங்கப்படும் விருது. இந்த விருது 375000 USD கொண்டது. இந்த பெயர் கொண்டவர் 1938ல் இயற்பியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி.
27. கிப்ஸ் சகோதரர்கள் பதக்கம் GIBBS BROTHERS MEDAL: அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தால் கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமான துறைக்கு வழங்கப்படும் விருது. அமெரிக்காவின் வில்லியம் மற்றும் ஃப்ரெடரிக் கிப்ஸ் சகோதரர்கள் அளித்த நன்கொடையின் மூலம் 1965 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. இவர்களுள் வில்லியம் ஒரு சட்ட வல்லுநராக இருந்த போதிலும் கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் துறையில் தன் சொந்த முயற்சியால் வல்லுநராக திகழ்ந்து இரண்டாம் உலகப் போரின் போது கப்பல் கட்டுவதற்கு மிகவும் உதவினார்.
28. கோடெல் விருது -- GODEL PRIZE: ஆஸ்திரிய அமெரிக்க கணித மேதை க்ர்ட் கோடெல் என்பவரின் நினைவாக கணினி கல்வி படைப்புகளுக்கு வழங்கப்படும் விருது. இந்த விருதை European Association for theoretical Computer science and the Association for Computing Machinery என்ற அமைப்பு வழங்குகிறது. 1993 முதல் 5000 USD மதிப்புடையது. இந்த விருதைப்பெற்ற இந்தியர்கள்:
2001 -- சஞ்ஜீவ் அரோரா, ராஜீவ் மோட்வானி, மற்றும் மது சூதன்.
2006 -- மனீந்த்ரா அகர்வால், நீரஜ் காயல், நிதின் சக்ஸெனா.
2010 -- சஞ்ஜீவ் அரோரா.
29. ஜப்பான் விருது -- JAPAN PRIZE: ஜப்பான் தொண்டு நிறுவனம் Japan Prize Foundation அமைப்பால் 1985 முதல் வழங்கப்படும் விருது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் விருது. இந்த விருது 50 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 6 லட்சம் USD) மதிப்புடையது. 1987ல் இந்த விருதை குருதேவ் குஷ் என்ற இந்தியர் அமெரிக்கர் ஒருவருடன் பகிர்ந்துள்ளார்.
30. நுத் விருது -- KNUTH PRIZE: Association for Computing Machinery என்ற அமைப்பால் கணினி துறைக்கு வழங்கப்படும் விருது. 5000 USD மதிப்பு கொண்ட இந்த விருதை ரவி கண்ணன் என்ற இந்தியர் 2011ல் பெற்றுள்ளார்.
31.மில்லெனியம் டெக்னாலஜி விருது -- MILLENIUM TECHNOLOGY PRIZE: தொழிற்நுட்பத்திற்கு அளிக்கப்படும் உயரிய விருது. ஃபின்லாந்து நாடு, இதே பெயர் கொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தால் தொழிற்நுட்பத்தில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு இந்த விருத அளிக்கிறது. 2004 முதல் அளிக்கப்படும் இந்த விருது ஒரு மில்லியன் யூரோ மதிப்புடையது.
32. மார்க்கோனி விருது MARCONI PRIZE: தொலைத் தொடர்பு துறையில் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளுக்கு 1975 முதல் வழங்கப்படும் விருது. இந்த விருது ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களைக் கொண்டது. இந்த விருதை இந்தியாவின் டாக்டர் யாஷ் பால் 1980ல் பெற்றுள்ளார்.
33. எனர்ஜி க்ளோப் விருது ENERGY GLOBE AWARD: 1999 முதல், எரிசக்தி சேமிப்பு, மாற்று எரிசக்திகளை உருவாக்குவது ஆகிய முயற்சிகளுக்கு வழங்கப்படும் விருது.
34. தொராரின்சன் பதக்கம் -- THORARINSON MEDAL: International Association of Volcanology and Chemistry of Earth’s interior இன்ற அமைப்பால் வழங்கப்படும் இந்த விருது எரிமலைகளைப் பற்றிய அறிவியல் துறைக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ஐஸ்லாந்து நாட்டின் புகழ் பெற்ற எரிமலைகள் பற்றிய அறிவியல் விஞ்ஞானி Sigurdur Thorarinson பெயரால் வழங்கப்படுகிறது.
35. ஏபெல் விருது -- ABEL PRIZE: 2003 முதல் நார்வே நாட்டு அறிவியல் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டு நார்வே மன்னரால் வழங்கப்படும் இந்த விருது, அந்த நாட்டு கணித மேதை நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கொண்ட இந்த விருதை ஸ்ரீநிவாச வரதன் என்ற அமெரிக்கா வாழும் இந்தியர் 2007ல் பெற்றுள்ளார்.
36. ஆடம்ஸ் விருது ADAMS PRIZE: 1850 முதல் வழங்கப்படும் இந்த விருது இங்கிலாந்து நாட்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக கணிதத்துறையால் மேலாண்மை செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த விருது 19ம் நூற்றாண்டின் கணித மேதை ஜான் கௌச் ஆடம்ஸ் என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது. இந்த விருது சுமார் 13500 இங்கிலாந்து பவுண்டு மதிப்புடையது. இந்தியாவின் சுப்ரமணியம் சந்திரசேகர் 1948ல் பெற்றுள்ளார்.
37. கார்ல் ஃப்ரைடுரீச் காஸ் விருது -- CARL FRIEDREICH GAUSS PRIZE: International Mathematical Union and German Mathematical Society என்ற அமைப்பால் வழங்கப்படும் இந்த விருது கணிதத்துறைக்கு 2006 முதல் வழங்கப்படுகிறது. நாங்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது 10000 யூரோ மதிப்பு கொண்டது.
38. க்ளே ஆராய்ச்சி விருது CLAY RESEARCH AWARD: 1999 முதல் வருடந்தோறும் இங்கிலாந்து நாட்டின் க்ளே கணித கல்வி நிறுவனத்தால், கணிதத்தில் சிறந்த ஆராய்ச்சிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை இந்திய வம்சாவளி அமெரிக்கர் மஞ்ஜூல் பார்கவா 2005ல் பெற்றுள்ளார்.
39. ஃப்ராங்க் நெல்சன் கோல் விருது FRANK NELSON COLE PRIZE: ""கோல் விருது எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விருது இரண்டு பகுதிகளை -- Algebra & Number Theory -- கொண்டது. 1928 முதல் அமெரிக்க கணித கல்வி சங்கம் வழங்கும் இந்த விருதை இந்தியாவின் மஞ்ஜூல் பார்கவா 2008லும், சந்திரசேகர் காரே 2011லும் பெற்றுள்ளனர்.
40. ஃப்ரெடெரிக் எஸ்ஸெர் நெம்மெர்ஸ் விருது FREDERIC ESSER NEMMERS PRIZE: நெம்மெர்ஸ் விருது என அழைக்கப்படுகிறது. கணிதத்துறைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது 1,50,000 USD மதிப்பு கொண்டது. இதனுடன் அமெரிக்காவின் இல்லிநாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 10 வாரங்கள் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.
41. ஃபல்கர்சன் விருது FULKERSON PRIZE: அமெரிக்க கணித சங்கத்தால் “Discrete Mathematics” என்ற கணிதத்துறைக்கு வழங்கப்படுகிறது. 1500 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட மூன்று விருதுகள். இந்த விருதைப்பெற்ற இந்தியர்கள்:
1. நரேந்திரகர்மாகர் - 1988; 2. ரவீந்திரன் கண்ணன் -- 1991; 3. எம்.ஆர். ராவ் - 2000; 4. ஏ. கபூர் - 2003; 5. மணீந்திர அகர்வால், நீரஜ் கன்யால் மற்றும் நிதின் சக்ஸெனா - 2006.
42. LOEVE PRIZE: A biennial award for outstanding contributions to “Mathematical Probability” who are under 45 years old. Awarded since 1993, it carries a prize money of 30000 USD.
43. NEVANLINNA PRIZE: Established in 1981 in memory of Finnish mathematician Rolf Nevalinna, it is awarded once in four years for major contributions to Mathematical aspects of Information Science. The award carries a medallion awarded by the International Congress of Mathematicians. Madhusudhanan – Professor of Mathematics at the Massachusettes Institute of Technology, USA is only Indian receipient of this award in 2002.
44. NORBERT WEINER PRIZE: Awarded once in three years, for outstanding contribution to “applied mathematics”. Awarded since 1970, it carries a prize money of 5000 USD. The award is given by the Massachusettes Institute of Technology.
45. ஆஸ்வால்டு வெப்லென் விருது - OSWALD WEBLEN PRIZE: அமெரிக்க கணித கழகத்தால் 1964 முதல் வழங்கப்படும் இந்த விருது 5000 USD மதிப்பு கொண்டது. 46. சாஸ்த்ரா ராமானுஜன் விருது. இந்த விருது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. 32 வயதுக்கு கீழுள்ள கணித வல்லுநர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு 10000 USD. இந்த விருதை மஞ்ஜூல் பார்கவா (2005) கண்ணன் சுந்தரராஜன் (2005) மற்றும் அக்ஷய் வெங்கடேஸ் (2006) ஆகியோர் பெற்றுள்ளனர்.
47. சேலம் விருது SALEM PRIZE: ரஃபல் சேலம் என்ற 19வது நூற்றாண்டு கிரேக்க கணித மேதையின் மனைவியின் நன்கொடையால் வழங்கப்படும் இந்த விருது “Salem Numbers” & “Fourier Series” கணித துறைகளில் சிறந்த பணியை ஆற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை கண்ணன் சுந்தரராஜன் (2003), அக்ஷய் வெங்கடேஷ் (2007) மற்றும் நளினி அனந்தராமன் (2010) லும் பெற்றுள்ளனர்.
48. ஆல்பர்ட் லஸ்கர் விருது ALBERT LASKER AWARD: அமெரிக்காவின் பத்திரிகை தொழிலதிபர் ஆல்பர்ட் லஸ்கர் அவர்களின் நிதி நன்கொடையால் வழங்கப்படும் இந்த விருது மருத்துவ துறைக்கு வழங்கப்படுகிறது. நோபல் விருதுக்கு இணையான விருதாக கருதப்படுகிறது. இந்திய வம்சாவளி இங்கிலாந்து வாழும் ரவீந்தர் மைனி இந்த விருதை 2003ல் பெற்றுள்ளார்.
49. DANONE INTERNATIONAL PRIZE: 1997 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருது மனித குல ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கு பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் விருது. 1,20,000 USD மதிப்பு கொண்ட இந்த நிறுவனம் Danone Institute International என்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
50. ராபர்ட் எல். நோபிள் விருது -- ROBERT L. NOBLE PRIZE: கனடா நாட்டு தேசிய புற்றுநோய் கழகத்தால், புற்றுநோய் ஆராய்ச்சிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது கனடா நாட்டு புற்று நோய் மருத்துவர் Dr.Robert L.Noble என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது. 2000 டாலர் விருதும், 20000 கனடா டாலர் ஆராய்ச்சி நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
51. டேனி ஹெய்னேமேன் விருது DANNIE HEINEMAN PRIZE FOR MATHEMATICAL PHYSICS: 1959 முதல் அமெரிக்காவின் இயற்பியல் சங்கத்தால் வழங்கப்படும் இந்த விருது. இந்த விருது 10000 USD மதிப்பு கொண்டது. இந்தியாவின் சுப்ரமணியம் சந்திரசேகர் இந்த விருதை 1974ல் பெற்றுள்ளார்.
52. டிராக் விருது -- DIRAC PRIZE: இயற்பியலுக்காக வழங்கப்படும் இந்த விருது 5000 USD மதிப்பு கொண்டது.
53. ஹென்றி ட்ரேபர் பதக்கம் HENRY DRAPER MEDAL: 1886 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது, Astrophysics என்ற இயற்பியல் துறைக்கு வழங்கப்படுகிறது. 19ம் நூற்றாண்டின் மருத்துவர் மற்றும் வானியல் நிபுணர் ஹென்றி ட்ரேபர் என்பவரின் மனைவி அளித்த நன்கொடையால் வழங்கப்படும் விருது. இந்த விருது 15000 USD ரொக்கமும் ஒரு பதக்கமும் கொண்டது. 1971ல் இந்தியாவின் சுப்ரமணியம் சந்திரசேகர் பெற்றுள்ளார்.
54. ஹ்யூஸ் பதக்கம் -- HUGHES MEDAL: ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டன் அமைப்பால், மைக்ரோஃபோன் கண்டுபிடித்த டேவிட் எட்வர்ட் ஹ்யூஸ் என்பவர் நினைவாக வழங்கப்படுகிறது. இந்த விருது 1000 USD மற்றும் ஒரு பதக்கமும் கொண்டது. இயற்பியலின் electricity and magnetism துறைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
55. ப்ரிட்ஸ்கர் விருது PRITZKER PRIZE: Hyatt Foundation – தங்கும் விடுதி குழுமம் மற்றும் ஜே. ஏ. ப்ரிட்ஸ்கர் என்ற அமெரிக்க தொழிலதிபரின் ஆதரவுடன் வழங்கப்படும் இந்த விருது, கட்டட வடிவமைப்பு கலை நிபுணர்களுக்கு 1979 முதல் வழங்கப்படும் விருது. இந்த துறையின் உயரிய விருது மற்றும் நோபல் பரிசுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஒரு லட்சம் அமெரிக்க டாலர், நற்சான்றிதழ் மற்றும் ஒரு செம்பு பதக்கம் கொண்டது.
56. வேலஸ் மேக்ட்வெல் விருது -- WALLACE McDOWELL AWARD: Insitute of Electric and Electronics Engineers, நியூயார்க் நகர அமைப்பால் 1966 முதல் computing technology துறைக்கு வழங்கப்படும் உயரிய விருது. நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற இந்தியர்கள் -- 1. ப்ரதீப் கோஸ்லா 2001 ; 2. சர்தாஜ் கே. சாஹ்னி 2003; 3. க்ரிஷன் கே சப்னானி 2008 ; 4.அனில் கே. ஜெயின் 2009 .
57. THEODORE VON KARMAN AWARD: Awarded for excellence in applied Mathematics and use in Mechanical areas. First award was given in 1972 and later from 1979 it is awarded once in 5 years.
58. STOCKHOLM WATER PRIZE: An annual award sponsored by Stockholm Water Foundation, the award is to encourage research and development of the world’s water environment carrying a prize money of 150000 USD announced on 22nd March every year on the UN World Day for Water and awarded by the HM King Carl XVI Gustaf of Sweden. Following are the Indian receipients of this award so far: 1. 2009 -Dr. Bindeshwar Pathak, Founder of Sulabh International. 2. 2006 – Prof. Asit K. Biswas, 3. 1993 – Dr.Madhav Atmaram Chitale – 1993. For 2011, the award has been awarded to Stephen Carpenter of USA - American limnologist.
59. ERNEST ILLY TRIESTE SCIENCE PRIZE: A science award sponsored by TWAS - (Third world Academy of Sciences) – Trieste, Italy – founded by Abdus Salam (Pakistani Nobel Laureate for Physics in 1979) in 1983 to promote Scientific capacity. The award is given in 8 different fields of science - Agricultural Sciences, Biology, Chemistry, Earth Sciences, Engineering Sciences, Mathematics, Medical Science and Physics. – 15000 USD for each Category and a citation. For the year 2011, Prof. C.N.R. Rao of Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Bengaluru has been awarded this prize for his contribution in material sciences. Incidentally, he is also a member of the Scientific Advisory Council to the Prime Minister.

"சர்வதேச இலக்கிய, பத்திரிகை, கலை விருதுகள் INTERNATIONAL LITERARY, JOURNALISTIC, ARTS AWARDS: "

Q188. இலக்கியத்தில் உலகின் உயரிய விருது எது?
நோபல் இலக்கிய பரிசு.
Q189. இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற முதல்/ஒரே இந்தியர் யார்?
ரவீந்திரநாத் தாகூர் -- 1913 -- "கீதாஞ்சலி" என்ற அவருடைய படைப்புக்காக.

சர்வதேச இலக்கிய மற்றும் பத்திரிகை தொழில் விருதுகள்

Q190. சர்வதேச இலக்கிய மற்றும் பத்திரிகை தொழில் விருதுகள்
"1. புலிட்ஸர் விருது -- PULITZER PRIZE: ஜோசஃப் புலிட்ஸர் என்ற ஹங்கேரி/அமெரிக்க பதிப்பாளர் மற்றும் அமெரிக்க பத்திரிகை அதிபர் வில்லியம் ராண்டால்ஃப் ஹேர்ஸ்ட் இணைந்து உருவாக்கிய விருது. பத்திரிகை தொழிலில் மிக முக்கியமான விருது என கருதப்படுகிறது. 1917ல் தொடங்கிய இந்த விருது 10000 USD மதிப்பு கொண்டது. கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த விருதை மேலாண்மை செய்கிறது. இந்த விருது பத்திரிகை தொழிலின் பல அங்கங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற இந்தியர்கள்:
1. கோவிந்த் பீஹாரி லால் -- 1937 -- பத்திரிகைகளுக்கு அறிவியல் பற்றி எழுதியவர்.
2. ஜூம்பா லாஹிரி -- 2000 -- அவருடைய ""Interpreter of Maladies"" என்ற நாவலுக்காக.
3. கீதா ஆனந்த் -- 2003 -- பத்திரிகை தொழில்.
4. சித்தார்த் முகர்ஜி -- 2011 -- ""The Emperor of all Melodies --புற்று நோய் பற்றிய புத்தகம்.
5. விஜய் சேஷாத்ரி -- 2014 -- ""3 Sections"" கவிதைத் தொகுப்பு. இந்த விருதை இங்கிலாந்தின் ராபர்ட் ஃப்ராஸ்ட் நான்கு முறை 1924, 1931, 1937 and 1943 பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. மான் புக்கர் விருது -- MAN BOOKER PRIZE: புக்கர் விருது என அழைக்கப்படுகிறது. வருடந்தோறும் ஆங்கிலத்தில் முழு நீள நாவல் படைப்புகளுக்கு, காமன்வெல்த் நாடுகள், அயர்லாந்து குடியரசு மற்றும் ஜிம்பாப்வே நாடுகளிலிருந்து, இந்த விருது வழங்கப்படுகிறது. மான் குழுமம் என்ற இங்கிலாந்து நிறுவன ஆதரவுடன் 1969 முதல் வழங்கப்படும் இந்த விருது 50000 இங்கிலாந்து பவுண்டு மதிப்பு கொண்டது. இந்த விருதைப் பெற்ற இந்தியர்கள்:
1. 1981 – சல்மான் ரஷ்டி -- இந்திய/இங்கிலாந்து —Mid Night Children,
2. 1997 – அருந்ததி ராய் —The God of Small Things,
3. 2006 – கிரண் தேசாய் —The Inheritance of Loss.
4. 2008 -- அரவிந்த் அடிகா -- The White Tiger.
3. பீபாடி விருது PEABODY AWARD: ஜார்ஜ் ஃபோஸ்டர் பீபாடி விருது என அழைக்கப் படுகிறது. 1941 முதல் வருடந்தோறும் சுமார் 25 முதல் 30 பேருக்கு ரேடியோ, தொலைக்காட்சி, மற்றும் கணினி இணையதளங்களில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு 1941 முதல் வழங்கப்படுகிறது. ஜியார்ஜியா பல்கலைக்கழக பத்திரிகை கல்வி துறையால் மேலாண்மை செய்யப்படுகிறது. அமெரிக்க தொழிலதிபர் மற்றும் வள்ளல் ஜார்ஜ் ஃபோஸ்டர் பீபாடி நினைவாக வழங்கப்படுகிறது.
4. யுனெஸ்கோ கில்லெர்மோ கேனோ உலக பத்திரிகை சுதந்திர விருது -- UNESCO GUILLERMO CANO WORLD PRESS FREEDOM PRIZE: 1997ல் நிறுவப்பட்ட இந்த விருது, பத்திரிகை சுதந்திரத்திற்காக, குறிப்பாக கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றும் அமைப்பு/தனி நபருக்கு வழங்கப்படுகிறது. 25000 USD ரொக்கப்பரிசு கொண்ட இந்த விருது, உல பத்திரிகை சுதந்திர தினமான 3 மே அன்று வழங்கப்படுகிறது. இந்த விருது கொலம்பியா பத்திரிகை El Espectador ஆசிரியர் கில்லெர்மோ கேனோ இசாஸா போதைப்பொருள் வணிகர்களுக்கு எதிராக போராடி கொலைசெய்யப்பட்டவரின் நினைவாக வழங்கப்படுகிறது.
5. தங்க பேனா சுதந்திர விருது -- GOLDEN PEN FREEDOM AWARD: உலகளவில் புகழ் பெற்ற பத்திரிகை உலக விருது. World Association of Newspapers என்ற அமைப்பால் வருடந்தோறும் பத்திரிகை சுதந்திரத்திற்காக பணியாற்றும் அமைப்பு/தனிநபருக்கு 1961 முதல் வழங்கப்படும் இந்த விருது.
6. ஆஸ்ட்ரிட் லிட்க்ரென் நினைவு விருது -- ASTRID LIDGREN MEMORIAL AWARD : குழந்தை மற்றும் இளைஞர்களுக்கான் எழுத்து படைப்புகளுக்கு ஸ்வீடன் அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது. 5 மில்லியன் ஸ்வீடன் க்ரோனா மதிப்பு கொண்ட இந்த விருது ஸ்வீடன் நாடு எழுத்தாளர் ஆஸ்ட்ரிட் லிட்க்ரென் நினைவாக வழங்கப்படுகிறது.
7. ஹான்ஸ் க்றிஸ்டியன் ஆண்டர்சன் விருது -- HANS CHRISTIAN ANDERSON AWARD: இந்த விருதை ஒரு சிறிய நோபல் பரிசு என்றும் அழைப்பார்கள். Also called “Little Nobel Prize”. International Board on Books என்ற அமைப்பால் வழங்கப்படும் இந்த விருது குழந்தைகள் புத்தகங்கள் எழுதும் இளைஞர்களுக்கு 1956 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு தங்கப்பதக்கம் -- டென்மார்க் நாட்டு அரசியால் நேரடியாக வழங்கப்படுகிறது.
8. CPJ சர்வதேச பத்திரிகை சுதந்திர விருது -- CPJ INTERNATIONAL PRESS FREEDOM AWARD: கடினமான/மோசமான நிலைமைகளிலும் பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடும் நபர்/அமைப்புகளுக்கு 1991 முதல் வழங்கப்படும் விருது.
9. ஆரஞ்சு விருது ORANGE PRIZE, UK: இலக்கிய விருதுகளில் புகழ் பெற்ற விருது. ஆரஞ்சு தொலைபேசி நிறுவனத்தின் ஆதரவுடன் 1996 முதல் வழங்கப்படும் இந்த விருது ஆங்கில புத்தகங்களுக்கு பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த விருது 30000 பவுண்டு மதிப்பு கொண்டது. எழுத்தாளர்கள் & பத்திரிகையாளர்கள் அடங்கிய ஒரு குழு இந்த விருதை தேர்வு செய்கிறது.
10. காஸ்டா புத்தக விருது -- COSTA BOOK AWARDS: 1971 முதல் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு எழுத்தாளர்களுக்கு Costa Coffee என்ற நிறுவனத்தின் ஆதரவுடன் வழங்கப்படும் விருது. நாவல், முதல் நாவல், கவிதை, குழந்தை புத்தகம், சுயசரிதை என ஐந்து பிரிவுகளுக்கு தலா 5000 பவுண்டு வழங்கப்படுகிறது. இந்த ஐந்து பிரிவுகளில் வென்ற புத்தகங்களில் ஒன்றுக்கு காஸ்டா புத்தக விருதாக 25000 பவுண்டு வழங்கப்படுகிறது. கிஷ்வர் தேசாய் என்ற இந்தியர் இந்த விருதை 2010ல் பெற்றுள்ளார்.
11. ஆர்ச்சிபால்ட் விருது - ARCHIBALD PRIZE: உருவப்படங்களுக்கு “Portrait” வழங்கப்படும் ஒரு புகழ் பெற்ற விருது. இது ஆஸ்திரேலிய கலைக்கூடத்தால் மேலாண்மை செய்யப்பட்டு, ஆஸ்திரேலியர்களுக்கு மட்டும் (அல்லது கடந்த 12 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் வசித்த) 1921 முதல் வழங்கப்படுகிறது. இந்த விருது 75000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு கொண்டது.
12. கார்னெகி விருது CARNEGIE PRIZE: அமெரிக்காவில் பெனிஸ்லேவியாவில் உள்ள கார்னெகி கலைக்கூடத்தால் சித்திர கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு புகழ் பெற்ற விருது.
13. COMPASSO d' ORO: தொழிற்சாலை சார்ந்த வடிவமைப்புகளுக்கு, Association of Industrial Design, இத்தாலி என்ற அமைப்பால் இந்த துறைக்கு வழங்கப்படும் உலகின் உயரிய சர்வதேச விருது.
14. க்ளியோ விருது -- CLIO AWARD: Prometheus Global Media, நியூயார்க் நிறுவனத்தால் 1960 முதல், விளம்பர வடிவமைப்பு மற்றும் தகவல் தொடர்புக்கு வழங்கப்படும் உயரிய விருது.
15. டெம்பிள்டன் விருது -- TEMPLETON PRIZE: 1972 முதல், இங்கிலாந்து நாட்டின் தொழிலதிபர் சர் ஜான் டெம்பிள்டன் நினைவாக, ஆன்மிக துறைக்கு வருடந்தோறும், 10 லட்சம் பவுண்டு மதிப்பு கொண்ட ஒரு புகழ்பெற்ற விருது. இளவரசர் ஃபிலிப் அவர்களால் நேரடியாக, பக்கிங்ஹாம் அரண்மனையில் நடத்தப்படும் ஒரு விழாவில், இந்த விருதை அனைத்து மதம் சார்ந்த ஆன்மீகவாதிகள், முன்னாள் விருது பெற்றவர்கள் கொண்ட ஒரு குழு தேர்வு செய்கிறது. இந்த விருதை கீழ்க்கண்ட இந்தியர்கள் பெற்றுள்ளனர்:
1. அன்னை தெரசா -- 1973; 2. டாக்டர் ராதகிருஷ்ணன் 1975; 3. பாபா ஆம்தே 1990;
4. பாண்டுரங் சாஸ்திரி அதவாலே 1997.
16. ஷக்கராவ் விருது -- SHAKHARAV PRIZE: 1988ல் ஐரோப்பிய பாராளுமன்றத்தால் மனித உரிமைக்காகவும், தனிமனித சுதந்திர எண்ணங்களை போற்றும் வகையில் உழைக்கும் நபர்/அமைப்புக்கு வழங்கப்படும் விருது. இந்த விருது சுமார் 50000 யூரோ மதிப்பு கொண்டு, மனித உரிமை நாளான 10 டிசம்பர் வாக்கில் வழங்கப்படுகிறது.
17. குர்மாண்ட் விருது -- GOURMAND AWARD: Edouard Contreau என்ற ஃப்ரெஞ்ச் தொழிலதிபர் அவர்களால் 1995ல், சமையல் கலைக்காக எழுதப்படும் புத்தகங்களுக்கு வருடந்தோறும் அளிக்கப்படும் விருது.
18. ஆண்டோனியட் பெர்ரி விருது -- ANTONIETTE PERRY AWARD: ""டோனி விருது"" என அழைக்கப்படுகிறது. 1947 முதல் The American Theatre Wing and Broadway League, நியூயார்க் என்ற அமைப்பால் மேடை நாடகங்களுக்கு அளிக்கப்படும் விருது.
19. எம்மி விருது EMMY AWARD: தொலக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக 1949 முதல் Academy of Television Arts & Sciences and National Academy of Television Arts and Sciences என்ற அமைப்பால் வழங்கப்படும் விருது. இந்த விருதை ஆஸ்கார் விருதுகளுக்கு இணையானதாக கருதப்படுகிறது. 39 செ.மீ உயரம், 7.5 அங்குல அடித்தள அகலம், 2.5 கிலோ எடை கொண்டு தாமிரம், நிக்கல், வெள்ளி மற்றும் தங்கத்தினால் செய்யப்பட்ட ஒர் பெண் வடிவ சிலை வழங்கப்படுகிறது.
20. வெண்கல ஓநாய் -- BRONZE WOLF: உலக சாரணர் இயக்க அமைப்பு, ஜெனீவா, ஸ்விட்சர்லாந்து, 1935 முதல் சாரண/சாரணியர் இயக்கத்திற்கு வழங்கும் உயரிய விருது. 2016 நிலையில் சுமார் 350 பேர் தங்களது சாரண இயக்கத்திற்கு செய்த சிறந்த பணிக்காக பெற்றுள்ளனர். கீழ்க்கண்ட இந்தியர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர்.
1. லக்ஷ்மி மஸூம்தார் -- 1929 -- இந்திய சாரண இயக்கத்தின் தலைவராக இருந்தவர். 2. லலித் மோகன் ஜெயின் -- 1985 -- இந்திய சாரண இயக்கத்தின் தலைவராக இருந்தவர்.
21. சார்க் விருது -- SAARC AWARDS: தெற்கு ஆசிய கூட்டமைப்பு SAARC, இலக்கியம் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்புக்காக 3 பிரிவுகளில் 2001 முதல் வழங்கப்படும் விருது. இந்த விருதை கீழ்க்கண்ட இந்தியர்கள் இதுவரை பெற்றுள்ளனர்:
1. லக்ஷ்மண் கேய்க்வாட் -- 2006
2. கணேஷ் நாராயன் தாஸ் தேவி -- 2006
3. மகாஷ்வேதா தேவி -- 2006
4. உதய் ப்ரகாஷ் -- 2009
5. ஜயந்தா மகாபத்ரா -- 2009
6. மார்க் டுல்லி -- 2010
7. கே. அபய் -- 2013
8. தரன்னும் ரியாஸ் -- 2014
9. சீதாகாந்த் மகாபாத்ரா -- 2015. "
Q191. "புகழ் பெற்ற சர்வதேச விளையாட்டு விருதுகள் FAMOUS INTERNATIONAL SPORTS AWARDS: "
"உலகில் பல்வேறு விளையாட்டுகளுக்கு, பல நாடுகள், அமைப்புகள் விருதுகள் வழங்கி வருகின்றன. அவற்றுள் உலகளவில் பேசப்படும்/முக்கியம் வாய்ந்த விருதுகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. "
Q192. லாரியஸ் விளையாட்டு விருது -- LAUREUS WORLD SPORTS AWARDS:
"தரை வாகன உற்பத்தியாளர்கள் Daimler and Richemont, Mercedez Benz, IWC, Schaffhausen மற்றும் வோடாஃபோன் தொலைபேசி நிறுவனம் இணைந்து 1999 முதல். உலகின் பல விளையாட்டுகளின் பல துறைகளுக்கு வழங்கப்படும் விருது. லாரியஸ்-- Laureus (லத்தீன் மொழியில் புகழ் எனப்பொருள்) என்ற ஒரு சிலை – 30 Cm உயரம் – 2.5 கிலோ எடை -- 670 g வெள்ளியில் செய்யப்பட்டு, 650 கிராம் தங்கத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்த விருது விளையாட்டு பத்திரிகை எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு இந்த விருதுக்கு தகுதி உள்ளவர்களை தேர்வு செய்கிறது. இந்த விருது கீழ்க்கண்ட பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது. "
எண் விருது பிரிவு 2016க்கான விருது பெற்றவர்/விளையாட்டு
"1. வருடத்தின் சிறந்த வீரர் நோவாக் ட்சிகோவிச், செர்பியா, டென்னிஸ் Sportsman of the Year "
"2. வருடத்தின் சிறந்த வீராங்கனை  செரினா வில்லியம்ஸ், அமெரிக்கா, டென்னிஸ் Sports woman of the Year."
"3. வருடத்தின் சிறந்த அணி நியூசிலாந்து ரக்பி அணி Team of the Year "
"4. திருப்புமுனை ஏற்படுத்திய வீரர் ஜோர்டான் ஸ்பீத், அமெரிக்கா, கோல்ஃப் Breakthrough of the Year "
"5. மீண்டு வந்த வீரர் டேன் கார்டர், நியூசிலாந்து, ரக்பி. Comeback of the Year "
"6. சிறந்த உடல் ஊனமுற்ற வீரர் டேனியல் டையஸ், ப்ரேசில், நீச்சல் Sportsperson with Disability "
"7. மனதைக் கவர்ந்த வீரர் ஜேன் ஃப்ராடெனோ, ஜெர்மனி, ட்ரையத்லான் Action Sportsperson of the Year "
"8. வாழ்நாள் சாதனை வீரர் நிக்கி லாடா, கார் பந்தயம், ஆஸ்திரியா Lifetime Achievement "
"9. நேர்மையான விளையாட்டு விருது ஜோஹன் க்ரையூஃப், நெதர்லாந்து, கால்பந்து. Spirit of Sports "
    2017க்கான விருது பெற்றவர்/விளையாட்டு
1. வருடத்தின் சிறந்த வீரர்  உசைன் போல்ட் -- தடகளம் -- ஜமைக்கா.
2.  வருடத்தின் சிறந்த வீராங்கனை  சைமன் பைல்ஸ் -- ஜிம்னாஸ்டிக்ஸ் -- அமெரிக்கா 
3. வருடத்தின் சிறந்த அணி  சிக்காகோ புல்ஸ் -- பேஸ் பால் -- அமெரிக்கா
4. திருப்பு முனை ஏற்படுத்திய வீரர்  நிக்கோ ரோஸ்பெர்க் -- F1 ரேஸ் -- ஜெர்மனி 
5.  மீண்டு வந்த வீரர்  மைக்கேல் ஃபெல்ப்ஸ் -- நீச்சல் -- அமெரிக்கா 
6.  சிறந்த உடல் ஊனமுற்ற வீரர்  டேனியல் டையஸ் -- நீச்சல் -- ப்ரேஸில் 
7. வாழ்நாள் சாதனை வீரர்  நிக்கி லாடா -- F1 ரேஸ் -- ஆஸ்திரியா 
8. நேர்மையான விளையாட்டு விருது  லெய்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி, இங்கிலாந்து. 
     
     
     
     
     
     

Q193. சர்வதேச கிரிக்கெட் சங்க விருது -- INTERNATIONAL CRICKET COUNCIL AWARD: "
2004 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. முன்னாள் வீரர் ஒருவரை தலைவராக கொண்டு, மேலும் நான்கு முன்னாள் வீரர்களை அங்கத்தினர்களாக கொண்ட ஒரு ஒரு குழு இந்த விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்கிறது. இவர்களைத் தவிர்த்து, சங்க உறுப்பினர் நாடுகள், முன்னாள் டெஸ்ட் போட்டி விளையாடும் கிரிக்கெட் அணி தலைவர்கள், நடுவர்கள், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் எழுத்தாளர்கள் ஆகியோரின் வாக்குகளும் (சுமார் 56) பெறப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகிறது. தேர்வுக்கான காலக்கட்டம் ஆகஸ்ட் 1 முதல் தொடர்வருட ஜூலை 31 வரை. இந்த தேர்வுக்குழுவின் தலைவர்களாக இந்தியாவின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் அனில் கும்ப்ளே (தற்சமய 2016) தலைவர்களாக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது கீழ்க்கண்ட பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது.
ICC AWARDS 2015:
1.   Cricketer of the Year: Steven Smith (Australia)
2.   Test player of the year: Steven Smith (Australia)
3.   ODI player of the year: AB de Villiers (South Africa)
4.   ICC Emerging player of the year: Josh Hazlewood (Australia)
5.   Best T20 performance of the year: Faf du Plessis (South Africa)
6.   Spirit of Cricket award: Brendon McCullum (New Zealand)
7.   ICC Associate player of the year: Khurram Khan (UAE)
8.   Umpire of the year: Richard Kettleborough (England)
9.   Women's ODI Cricketer of the Year: Meg Lanning (Australia)
10.T20I Women's Cricketer of the Year: Stefanie Taylor (West Indies)
எண் விருது பிரிவு 2015 க்கான விருது பெற்றவர்கள்
1. ஐசிசி வருடத்தின் சிறந்த வீரர் ஸ்டீவன் ஸ்மித் ஆஸ்திரேலியா. ICC Player of the Year "
2. சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனை மெக் லேனிங், ஆஸ்திரேலியா Women’s ODI Cricketer of the Year "
3. வருடத்தின் சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் ஸ்டீவன் ஸ்மித், ஆஸ்திரேலியா Test Player of the Year "
4. ஒரு நாள் போட்டி சிறந்த வீரர் ஏ.பி.டி விலியர்ஸ், தென் ஆப்பிரிக்கா One Day Player of the Year "
5. T20 வருடத்தின் சிறந்த வீரர் ஃபாஃப் டூ ப்ளாசிஸ், தென் ஆப்பிரிக்கா T20 Player of the Year"
6. வருடத்தின் சிறந்த அணித் தலைவர் ………………………... Captain of the Year"
7. வளர்ந்து வரும் சிறந்த வீரர் ஜோஷ் ஹேஸல்வுட், ஆஸ்திரேலியா Emerging Player of the Year"
8. சிறந்த டெஸ்ட் அணி ……………………. Test Team of the Year"
9. சிறந்த ஒருநாள் போட்டி அணி …………………... One Day Team of the Year"
10. விளையாட்டில் நேர்மை விருது ப்ரெண்டன் மெக்கெல்லம், நியூசிலாந்து Spirit of Cricket Award"
11. சிறந்த நடுவர் ரிச்சர்டு கெட்டில்பரோ, இங்கிலாந்து Umpire of the Year"
12. அங்கத்தினர் நாட்டு சிறந்த வீரர் குர்ரம் கான், ஐக்கிய அரபு நாடுகள் ICC Associate Player of the Year. "
13. LG மக்கள் தேர்வு வீரர் ……………………….. LG People’s Choice Player"
எண்                   விருது பிரிவு                      2016க்கான விருது பெற்றவர்கள் 
1. ஐ.சி.சி. வருடத்தின் சிறந்த வீரர்   ஆர். அஸ்வின், இந்தியா 
2. வருடத்தின் சிறந்த டெஸ்ட் வீரர்    ஆர். அஸ்வின், இந்தியா 
3. வருடத்தின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்  குவிண்டன் டி காக், தென் ஆப்பிரிக்கா 
4. வருடத்தின் சிறந்த 20ஓவர் போட்டி வீரர்  கார்லோஸ் ப்ரெத்வொயிட், மேற்கு இந்திய தீவுகள் 
5. வருடத்தின் சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை  சுசி பேட்ஸ், நியூசிலாந்து 
6. வருடத்தின் சிறந்த 20 ஓவர் போட்டி வீராங்கனை  சுசி பேட்ஸ், நியூசிலாந்து 
7. வளர்ந்து வரும் சிறந்த வீரர்  முஸ்தாஃபிஸூர் ரஹ்மான், வங்காள தேசம் 
8. அங்கத்தினர் நாட்டு சிறந்த வீரர்  மொகம்மது ஷஸாத்,  ஆப்கானிஸ்தான் 
9.  விளையாட்டில் தோழமை விருது (ஸ்பிரிட்)  மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் 
10. சிறந்த நடுவர்  மரெய்ஸ் எராஸ்மஸ்,  தென் ஆப்பிரிக்கா 
     
     
     
     
     
     

Q194. GOLDEN BOOT AWARD:
It is an award instituted by FIFA and awarded to the top scorer of the World Cup, since 1982, known as GOLDEN SHOE. In 2010, it was named as GOLDEN BOOT. The second and third top scorers get Silver Boot and Bronze Boot awards respectively. Paolo Rossi of Italy was the first awardee of this award in 1982 Spain World Cup. The last to win this award was James Rodriguez of Colombia in the 2014 Brazil World Cup.
Q195. தங்கப் பந்து விருது -- GOLEN BALL AWARD:
உலக கால்பந்து சம்மேளத்தினால் 1982 முதல், உலக கால்பந்து போட்டியின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விருது. இரண்டாவது, மூன்றாவது சிறந்த வீரர்களுக்கு வெள்ளி மற்றும் செம்பு பந்துகள் வழங்கப்படுகின்றன. தங்க காலணி விருது: GOLDEN BOOT AWARD : உலகக் கோப்பையில் அதிக கோல்கள் போடும் வீரருக்கு அளிக்கப்படுகிறது. தங்க கையுறை - GOLDEN GLOVE. உலகக் கோப்பை போட்டியின் சிறந்த கோல் தடுப்பாளருக்கு வழங்கப்படும் விருது.
Q196. சர்வதேச திரைப்பட விருது -- INTERNATIONAL CINEMATIC AWARD: OSCAR AWARD:
உலகின் மிக உயரிய புகைப்பெற்ற திரைப்பட விருது. Academy of Motion Pictures Arts and Science (AMPA) என்ற அமைப்பால் 1929 முதல் வழங்கப்படும் விருது. திரைப்படத்துறையின் பல அங்கங்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ""ஆஸ்கார்"" என்ற பெயர் கொண்ட ஒரு சிலை விருதாக வழங்கப்படுகிறது. இந்த சிலையை Cedric Gildons என்பவரால் வடிவமைக்கப்பட்டு, George Stanley என்பவரால் சிலை வடிவம் கொடுக்கப்பட்டது. 34 செ.மீ உயரம், 3.85 கிலோ எடை கொண்ட இந்த சிலை, ஒரு போர் வீரர் வாளுடன் நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்ற முதல் சிறந்த படங்கள் -- 1928ல் ""Wings"" (கருப்பு வெள்ளை) மற்றும் 1939ல் “Gone with the Wind” (வண்ணம்). இந்த விருது வருடந்தோறும் Dorothy Chandler Pavilion, Los Angeles County Music Centre என்ற இடத்தில் வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற இந்திய திரைப்பட வல்லுநர்கள்:
1. சத்யஜித் ரே -- பெங்காலி திரைப்பட இயக்குநர் -- வாழ்நாள் சாதனைக்காக.
2. பானு அத்தைய்யா -- காந்தி படத்தின் ஆடை அலங்கார பணிக்காக.
3. ஏ.ஆர். ரகுமான் -- இசை இயக்குநர் -- Slum Dog Millionaire – 2009.
4. ரெசூல் பூக்குட்டி -- ஒலி அமைப்புக்காக -- Slum Dog Millionaire – 2009.
5. குல்ஸார் -- பாடலாசிரியர் -- Slum Dog Millionaire – 2009.