Khub.info Learn TNPSC exam and online pratice

நாகரீகம் -- CIVILISATION:

Q1. நாகரீகம் -- “Civilization” என்பது என்ன?
1. கலாச்சார மற்றும் அறிவு சார்ந்த மேம்பாடு Cultural and intellectual development
2. கலாச்சார் மற்றும் அறிவு சார்ந்த மேம்பாட்டின் ஒரு உயர் நிலையை அடையும் காலம். the period of people’s getting civilized, socially organized in a high order.
3. இந்த மேம்பாட்டினால், சமூகம், நாடு ஒரு காலக்கட்டத்துக்குள் அடையும் முன்னேற்றம். the positive change in the culture of society, country over a period of time.

Q2. நாகரீகம் என்பது எப்போது ஒரு நிலையான அமைப்புக்கு வந்தது?
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு.
Q3. "உலகின் பழமையும் புகழ்பெற்ற நாகரீகங்கள் எந்த பகுதிகளில் அமையத் தொடங்கின? "
"டிகிரிஸ் மற்றும் யூஃப்ரேட்ஸ் நதிக்கரை -- மெசபோடேமியா நாகரீகம். நைல் பள்ளத்தாக்கு, எகிப்து -- எகிப்து நாகரீகம் சிந்து பள்ளத்தாக்கு -- சிந்து நாகரீகம் ஹ்வாங் ஹோ பள்ளத்தாக்கு -- சீன நாகரீகம் "
Q4. வரலாறு ரீதியாக இந்தியா எந்த நாகரீகத்த பின்பற்றியதாக அமைந்துள்ளது?
"ஆர்யர்கள் நாகரீகம் -- இது வட இந்தியாவில் வளர்ச்சிபெற்றதாகவும், அவர்கள் பேசிய மொழி மற்றும் இறை நம்பிக்கைகள் இந்தியா கலாச்சாரத்துக்கு அடிகோலியது. "
Q5. இந்தியாவின் முதலில் குடியேறியவர்களாக கருதப்படுபவர்கள் யார்?
ஆர்யர்கள் - ஐரோப்பா, இரான் மற்றும் இந்தியர்கள்.
Q6. சிந்து சமவெளி (பள்ளத்தாக்கு) நாகரீகம் சுமார் எந்த காலத்தை சார்ந்தது?
கி.மு 3000 முதல் 1500 வரை – இது கி.மு. 700 வரை நீடித்து பின் வேதக்காலம் எனப்பட்டது.
Q7. சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கிய நகரங்கள்/இடங்கள் யாவை?
"மொஹஞ்சோதாரோ மற்றும் ஹரப்பா - தற்சமயம் சிந்த் மற்றும் பஞ்சாப் மாகாணம் பாகிஸ்தானில் உள்ளது. லோதல் (குஜராத்) ; காளிபங்கான் (ராஜஸ்தான்) ; பண்வாலி (ஹரியானா) ; ரோப்பர் (பஞ்சாப்) "
Q8. சிந்து சமவெளி நாகரீகத்தின் மறைவுக்கு காரணம் என்ன?
ஆர்யர்களின் குடியேற்றம், வெள்ளம், பூமி அதிர்ச்சி போன்றவை.
Q9. ஆர்யர்கள் என்பவர்கள் யார், அவர்களுடைய காலக்கட்டம் என்ன?
"மத்திய ஆசியாவின் காஸ்பியன் கடற்கரை பகுதிகளில் வாழ்ந்த நாடோடி மக்கள். அவர்கள் இந்திய பகுதிக்குள் குடியேறி வாழ்ந்த காலத்தை ""முன் வேத காலம்"" அல்லது ""வேத காலம்"" -- சுமார் 1500 - 1000 கி.மு. காலம் -- என குறிப்பிடப்படுகிறது. "
Q10. இந்திய துணைக்கண்டத்தில் ஆர்யர்கள் குடியேறியிருந்த பகுதி எது?
"முதலில் பஞ்சாப் பகுதியிலும், பிறகு கிழக்கிந்தியாவின் கங்கை சமவெளி, மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதிகள் வரை பரவியிருந்தனர். "
Q11. ஆர்யர்கள் கடைப்பிடித்த மதம் மற்றும் தொழுகை முறை எவ்வாறு இருந்தது?
"இவர்கள் இயற்கையை மிகவும் நேசித்தனர் -- சூரியன், நீர், நெருப்பு ஆகியவற்றை வணங்கினர். இதுவே நாளடைவில் இந்துமதம்/கலாச்சாரம் தொடங்க வழி வகுத்தது. "
Q12. ஆர்யர்களின் மதம் சார்ந்த புத்தகங்களாக இருந்தவை எவை?
வேதங்கள் -- 1. ரிக் 2. சாம 3. யஜூர் 4. அதர்வண. (இவைப்பற்றி மதங்கள் பகுதியில்)
Q13. ஆர்யர்கள் நாகரீகத்தைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி இடங்கள் எவை?
ஹஸ்தினாபூர் ; ஆஹிசத்ரா ; கௌசாம்பி -- உத்திரபிரதேசம்.
Q14. ஆர்யர்கள் பேச்சுப்புழக்கத்தில் இருந்த மொழி எது?
சமஸ்கிருதம்.
Q15. வேத காலம் எதுவரை நீடித்தது? அதன் விளைவு என்ன?
கி.மு. 700 வரை நீடித்தது. இதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் -- 1. சிறு குடியேற்றங்கள் ராஜ்யங்களாக மாறி, மன்னராட்சிகள் ஏற்பட்டு, மன்னர் அதிக பெற்றவராகிறார்.
2. நான்கு முக்கிய ஜாதிகள் அவர்களின் தொழில் அடிப்படையில் உருவாயின. அவையே பின்வரும் காலங்களில் நிலைத்துவிட்டன:
அ) பிராமணர்கள்: மத குருக்கள், ஆசார்யர்கள், வேத வித்தகர்கள்.
ஆ) சத்திரியர்கள்: போர் வீரர்கள்
இ) வைஷ்யர்கள் -- வணிகர்கள்
ஈ) சூத்திரர்கள் -- தொழிலாளர்கள்
3. நிரந்தரமான போர் படைகள் உருவாக்கப்பட்டன.
4. வணிகம் தொழில் ரீதியாக வளர்ந்தது.
5. சத்திரியர்கள் பரம்பரையாக மன்னர்களாகி, மன்னரவை, ஆலோசகர்கள், அறிவுரையாளர்கள்
என்ற அமைப்பு நிரந்தரமாக உருவாகியது. இதுவே பரம்பரை ஆட்சி (dynasty rule) உருவெடுத்தது.
6. இந்து மதமும், இந்து மத பழக்கங்கள், சாஸ்திரங்கள், வேதங்கள் முக்கியத்துவம் பெற்றன.
7. அயோத்யா, மதுரா, இந்திரப்ரஸ்தா போன்ற பெரிய நகரங்கள் உருவாயின.
8. மன்னர்கள் -- பேரரசர், ராஜா, போஜா என்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
Q16. மன்னரவையில் இருந்த ஆலோசகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
புரோகிதர்கள் -- மதகுருக்கள், முக்கிய ஆலோசகர்கள்
சேனாதிபதி -- போர்ப்படைகளின் முக்கிய தளபதிகள்
தேரோட்டிகள் -- மன்னர்களுக்கும் மற்ற பெரியோர்களுக்கும் தேர் ஓட்டுபவர்கள்
சங்க்ரஹிதா -- SANGRAHITA – நிதி மேலாண்மை அதிகாரிகள்
படுகாஸ் -- BHADUGAS – வரி வசூலிப்பவர்கள்
Q17. "வேதங்களைத் தவிர்த்து, வேறு எவ்வகையான புத்தகங்கள் ஆர்யர்கள் காலத்தில் வெளிவந்தன? "
ப்ராமஹனாஸ் -- BRAHMANAS : ஆர்யர்களின் சமூக, அரசியல் வாழ்க்கை முறைகள், மத ரீதியான பலிகளின் முக்கியத்துவம், வேதங்களின் கோட்பாடுகள், மத குருக்களின் அலுவல் முறைகள் போன்றவை விவரிக்கப்பட்டிருந்தன.
உபநிடதங்கள் -- UPANISHADS: இந்திய மெய்ப்பொருளியியலின் மூலம். சுமார் 300 உபநிடதங்கள் உள்ளன. அவற்றும் சுமார் 10, உலகளவில் பெருமளவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவை ஆர்யர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் தத்துவங்களை எடுத்துக்கூறுகின்றன.
புராணங்கள் -- PURANAS: 18 புத்தகங்கள் உள்ளன. அவற்றுள் பகவத் புராணம் மற்றும் விஷ்ணு புராணம் முக்கியமானவை. இவைகளில் ஆர்யர்களில் மத மற்றும் வரலாறு விவரங்கள், வழிமுறைகள், அணுகுமுறைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.