Khub.info Learn TNPSC exam and online pratice

ஆந்திரப் பிரதேசம்

Q1. ஆந்திரப் பிரதேசம்
தொடக்கம் : 1.10.1953/1.11.1956/2.6.2014.

தலை நகர் : ஹைதராபாத் (2024 வரை),  அமராவதி.
பரப்பளவு : 1,60,205 ச.கி.மீ. (8வது நிலை)
ஜனத்தொகை : 4,93,86,799
மொழி : தெலுங்கு, உருது, ஆங்கிலம்.
கல்வியறிவு : 68%
மாவட்டங்கள் : 13
மக்களவை உறுப்பினர்கள் : 25
மாநிலங்களவை உறுப்பினர்கள் : 11
சட்டசபை உறுப்பினர்கள் : 175 + 58
கடற்கரையின் நீளம் : 972 கி.மீ.
மாநில மரம் : வேம்பு
மாநில பறவை : பாற்குருவி (Indian Roller)
மாநில மிருகம் : கருப்பு இன மான் (Black Buck)
மாநில மலர் : நீர் லில்லி (Water Lilly)
மாநில சின்னம் : பூர்ண கும்பம்
மாநில கீதம் : "மா தெலுகு தல்லிக்கி"
மாநில விளையாட்டு : கபடி
மாநில ஆறுகள் : கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா.
மாநில எல்லைகள் : தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, கர்நாடகா, தமிழ் நாடு, வங்காள விரிகுடா.
மாநில ஆளுநர் : E.S.L. நரசிம்மன்.
மாநில முதன் மந்திரி : நர சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்).

Q2. சுதந்திரத்திற்கு பிறகு ஆந்திரப் பிரதேசம் எவ்வாறு அமைக்கப்பட்ட து?

சுதந்திரத்திற்கு பிறகு, ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அமைப்பு, மொழி வாரியான அமைப்பு போராட்ட வலுவின் அடிப்படையில், 1.11.1953 "ஆந்திரா" என்ற மாகாணம், கர்னூலை தலைமையாக்க் கொண்டு உருவானது. பிறகு, மாகாண சீரமைப்பு திட்ட்த்தின் மூலம், ஹைதராபாத் நிஜாம் பகுதிகளும், மெட் ராஸ் மாகாணத்தின் திருப்பதியும் சேர்க்கப்பட்டு, "ஆந்திர பிரதேசம்" என்ற மறு சீரமைக்கப்பட்ட மாகாணம், ஹைதராபாத் தலை நகராக, 1.11.1956 அன்று துவங்கப்பட்டு, தெலங்கான தனி மாகாண கோரிக்கையின் அடிப்படையில் 2.6.14 அன்று, தெலங்கான (மேற்கு பகுதி), ஆந்திரப் பிரதேசம் (கிழக்குப் பகுதி) என இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. 2024 வரை, ஹைதராபாத், இரு மாகாணங்களுக்கும் தலை நகராக இருக்கும்.

Q3. ஆந்திரப்பிரதேசம்/தெலங்கானா மாகாணத் தலை நகர் ஹைதராபாத் பற்றிய சில குறிப்புகள் :
1. 1591ல் முகமது கூலி குதுப் ஷா என்பவரால் நிறுவப்பட்ட நகரம்.
2. ஹைதராபாத், ரங்கா ரெட்டி மற்றும் மேடக் மாவட்டங்களுக்குள் பரவியிருக்கும் நகரம்.
3. 625 ச்.கி.மீ. பரப்பளவு கொண்ட நகரம்.
4. முசி நிதிக்கரையில் அமைந்துள்ளது.
5. கடைசியாக, நிஜாம் வம்ச மன்னர் மிர் உஸ்மான் அலி கான் அவர்களால் ஆளப்பட்ட து.
6. இது ஒரு இரட்டை நகரம் (Twin City) - இங்குள்ள உசைன் சாகர் ஏரியின் எதிர் கரையில் செகந்திராபாத் என்ற நகரம் அமைந்துள்ளது.
7. ஹைதராபாத்தின் முக்கிய நிலக்குறிகள் :
* சார்மினார் : ஹைதராபாத்தின் முக்கிய நிலக்குறி. 1591ல் முகமது கூலி குதுப் ஷா என்ற ஷாஹி மன்னரால் கட்டப்பட்டது. இது கட்டப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதன் நான்கு தூபிக்களும் 151'அடி உயரம்.
** ஹுசைன் சாகர் ஏரி : 1562ல், இப்ராஹிம் கூலி குதுப் ஷா அவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி. சுமார் 5.7 சதுர கி.மீ. பரப்பு. இந்த ஏரியின் நடுவில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கவுதம புத்தர் சிலை - 32 அடி உயரம். ஒரு கண்கவர் காட்சி. இந்த ஏரியைச் சுற்றி பூங்காக்களும் அமைந்துள்ளது.
8. ஹைதராபாத் தென் மத்திய ரயில்வேயின் ஒரு மண்டலமாக இயங்குகிறது. செகந்திராபாத் தென் மத்திய ரயில்வேயின் தலைமையகமாகவும், மண்டலமாகவும் இயங்குகிறது.
9. ஹைதராபாத் பிரியாணி மற்றும் முத்து, கண்ணாடி வளையல்களுக்கு புகழ் பெற்றது.
10. தொழிற்துறையில் அரசாங்க, பாதுகாப்புத்துறை, தனியார் துறை நிறுவனங்கள் நிறைய உள்ளன. கணினி துறையில் முன்னோடி நிறுவன ங்கள் உள்ளன. கல்வித்துறையிலும் பல முன்னோடி நிறுவன ங்களும் உள்ளன.
11. சினிமா துறையில் புகழ் பெற்ற நகரம் ராமோஜி ஃபிலிம் சிட்டி மிகப்புகழ் பெற்றது.
12. தெலுங்கு, ஆங்கிலம், உருது தினசரிகளும், மாத இதழ்களும், தொலைக்காட்சி நிறுவனங்களூம் இங்குள்ளன."
Q4. ஆந்திரப்பிரதேசத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன, அவை யாவை, அவற்றின் முக்கியத்துவம் யாவை?


1. அனந்தபூர் : மக்களவை தொகுதி 2 - சட்டசபை தொகுதிகள் - 14; ராயல சீமா எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் மிகப்பெரிய மாவட்டம், 1882ல் உருவாக்கப்பட்ட இந்த மாவட்டத்தின் முதல் ஆட்சியாளர் - சர் தாமஸ் மன்றோ - இதன் எல்லையாக கர்னூல், கடப்பா, சித்தூர் மாவட்டங்களும், கர்நாடக மாநிலமும் அமைந்துள்ளன. டோலோமைட் மற்றும் இரும்பு தாது அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தர்மாவரம் சில்க் புடவைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள் விவசாயம் ஆகிய தொழில்கள். புட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆஸ்ரமம் உலகப் புகழ் பெற்றது.

2. சித்தூர் : 1.4.1911 - மக்களவை தொகுதி 2 ; சட்டசபை தொகுதி 14 ; ராயல சீமா பகுதியில் உள்ளது. உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில் இந்த மாவட்ட த்தில் உள்ளது. ஸ்ரீ காளஹஸ்தியும் மிகவும் புகழ்பெற்ற கோயில். மாங்காய், பருப்பு வகைகள், கரும்பு மற்றும் கடலை ஆகியவை முக்கிய விளை பொருட்கள். அன்ந்தபூர், கடப்பா, நெல்லூர் ஆகிய தெலுங்கு மாவட்டங்களும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், தமிழ் நாடு மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. கர்நாடகா கோலார் மாவட்டமும் இதன் எல்லை.

3. கிழக்கு கோதாவரி : 1859 - மக்களவை தொகுதி - 3, சட்டசபை தொகுதிகள் 19; காக்கி நாடா தலை நகரம்; ஆந்திராவின் ""தானிய களஞ்சியம்"" (அரிசி) என அழைக்கப்படுகிறது. ராஜமுந்திரி மற்றும் காக்கி நாடா முக்கிய நகரங்கள் - விசாகப்பட்டினம், கம்ம ம் ஆந்திர மாவட்டங்களும், மல்காங்கிரி ஒரிசா மாவட்டமும் இதன் எல்லை. விவசாயமே முக்கிய தொழில்.

4. குண்டூர் : 1788 (மெட் ராஸ் மாகாணம்); மக்களவை தொகுதிகள் 3; சட்டசபை தொகுதிகள் 17 ; கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது; பிரகாசம் மற்றும் நல்கொண்டா மாவட்டங்களும், சுமார் 100 கி.மி. கடற்கரையும் எல்லை; புதிதாக உருவாக்கப்பட உள்ள தலை நகரம் அமராவதி, இந்த மாவட்டத்தில் அடங்குகிறது. நக்ஸல் தீவிரவாதிகள் சற்று அதிகமாக உள்ள மாவட்டம், வங்காள விரிகுடா, பிரகாசம், மகபூப் நகர், நல்கொண்டா மாவட்டங்களும் கிருஷ்ணா நதியும் எல்லையாக உள்ளது. நெல், புகையிலை, பருத்தி, பருப்பு வகைகள் மற்றும் மிளகாய் ஆகியவை முக்கிய பயிர்கள்.

5. கடப்பா : 1808 - மக்களவை தொகுதி 2; சட்டசபை தொகுதி 10; அன ந்தபூர், கர்னூல், பிரகாசம், நெல்லூர், சித்தூர் ஆகிய மாவட்டங்கள் எல்லையாக உள்ளன. ஆரஞ்சு, எலுமிச்சை, வெற்றிலை மற்றும் இதர விவசாய நடவடிக்கைகள் - ""கடப்பா கல்"" மிகவும் புகழ் பெற்றது.

6. கிருஷ்ணா : 1794 - மக்களவை தொகுதி 2; சட்டசபை தொகுதிகள் 16; மசூலிப்பட்டினம் தலை நகரம் - தெலங்கானா மாகாணம், மேற்கு கோதாவரி, குண்டூர் மற்றும் வங்காள விரிகுடா எல்லையாக அமைந்துள்ளது. விவசாயம் முக்கிய தொழில் - எண்ணெய், அரிவாயு, சுண்ணாம்புக்கல், வைரம், இரும்புத்தாது, மைக்கா ஆகியவை முக்கிய தனிமங்கள்.

7. கர்னூல் : மக்களவைத்தொகுதி 2; சட்டசபை தொகுதி 14; ஆந்திராவின் முதல் தலை நகரம் 1953 - 1956 வரை; மகபூப் நகர், அன ந்தபூர், கடப்பா மற்றும் பிரகாசம் ஆந்திர மா நிலங்களும், ராய்ச்சூர் மற்றும் பெல்லாரி, கர் நாடகா மா நிலங்களும் எல்லையாக அமைந்துள்ளது. ஸ்ரீசைலம், நல்லமலா காடுகள், அஹோபிலம் மேலும் குகைகள், மஹா நதி, மந்த்ராலயம் ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்கள்.

8. பிரகாசம் : 2.2.1970 - குண்டூர், நெல்லூர், கர்னூல் மாவட்டங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட்து. மக்கள் தொகை மாவட்டங்கள் - 2; சட்டசபை தொகுதிகள்-12; ஒங்கோல்-தலை நகரம்; குண்டூர், மகபூப் நகர், கர்னூல், நெல்லூர் மற்றும் கடப்பா மாவட்டங்கள் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய எல்லையை உடையது. ஓங்கோல் பெரிய தலை நகரம் கிராடைட் கற்களுக்கு புகழ் பெற்ற மாவட்டம். சுமார் 100 கி.மீ. கடற்கரையைக் கொண்டது.

9. நெல்லூர் : 1801 - மக்களவை தொகுதி 1 - சட்டசபை தொகுதிகள் - 10; வங்காள விரிகுடா, கடப்பா, திருவள்ளூர் (தமிழ் நாடு) மாவட்டமும் எல்லையாக உள்ளது. ஆந்திரா உருவானதற்கு காரணமாக இருந்த பொட்டி ஸ்ரீராமுலு அவர்களின் பெயர் இந்த மாவட்டத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. விவசாயம் குறிப்பாக நெல், மீன் வளர்ப்பு முக்கிய தொழில், கைத்தறி மற்றும் சில தொழிற்சாலைகளும் உள்ளன. புலிகாட் ஏரி மிகவும் புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம்.

10. ஸ்ரீகாகுளம் : 1950 - விசாகப்பட்டினத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட மாவட்டம் - மக்களவை தொகுதி 1; சட்டசபை தொகுதி 10 ; விஜய நகரம் மாவட்டமும், வங்காள விரிகுடாவும் எல்லைகள். ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

11. விசாகப்பட்டினம் : மக்களவை தொகுதி 3; சட்டசபை தொகுதி 15. துறைமுகம், இரும்பாலை, கப்பல் கட்டும் தளம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, போன்ற தொழிற்சாலைகளும், விவசாயமும், ரயில்வே மண்டலமும் முக்கிய தொழிற் நடவடிக்கைகள். போரா குகைகள், அரக்கு பள்ளத்தாக்கு, சிம்மாச்சலம் நரசிம்ம சுவாமி கோயில் போன்ற பல சுற்றுலா மையங்களும் உள்ளன. விஜய நகரம், தென் கோதாவரி மாவட்டங்களும், வங்காள விரிகுடாவும் இதன் எல்லை.

12. விஜய நகரம் : 1803 - 3 மக்களவை தொகுதிகள் ; 15 சட்டசபை தொகுதிகள் - ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், மற்றும் வங்காள விரிகுடா இதன் எல்லை. விவசாயமே முக்கிய தொழில். சில தொழிற்சாலைகளும் உள்ளன.

13. மேற்கு கோதாவரி : 1921 - எலூரு தலை நகரம் - 2 மக்களவை தொகுதிகள் ; 15 சட்டசபை தொகுதிகள் ; கம்மம், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களும், வங்காள விரிகுடாவும் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில். கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

Q5. ஆந்திரப்பிரதேசத்திலுள்ள மாநகராட்சிகள் (Corporations) யாவை?

1. விசாகப்பட்டினம்
2. விஜய வாடா
3. குண்டூர்
4. நெல்லூர்
5. கர்னூல்
6. ராஜமுந்திரி
7. காக்கி நாடா
8. கடப்பா
9. திருப்பதி
10. அனந்தபூர்
11. எலூரு
12. ஓங்கோல்
13. சித்தூர்"
Q6. ஆந்திர பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் யார்?
பி.வி. நரசிம்மராவ் - 10வது பிரதம மந்திரி - 21.6.1991 முதல் 16.5.1966 வரை - கரீம் நகர் மாவட்ட த்தை சேர்ந்தவர்.
Q7. ஆந்திரப்பிரதேசத்திலிருந்து நம் நாட்டு குடியரசுத் தலைவர்களானவர்கள் யார்?

1. டாக்டர் எஸ். ராதா கிருஷ்ணன் -
முதல் துணைக்குடியரசுத்தலைவர், 2வது குடியரசுத்தலைவர் - 14.5.1962 - 13.5.1967 - திருத்தணியில் பிறந்தவர். இந்துமதம் மற்றும் தத்துவங்களில் புகழ்பெற்ற அறிஞர். ஆந்திரா, கொல்கத்தா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகங்களில் பேராசிரியராக பணி புரிந்தவர்.
2. வி.வி. கிரி - 4வது குடியரசுத்தலைவர் - 24.8.1969 - 24.8.1974 - பெர்ஹாம்பூர் (ஒடிசா) ல் பிறந்தவர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். அகில இந்திய ரயில்வே சம்மேளனம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க தலைவராக இருந்தவர்.
3. நீலம் சஞ்சீவ ரெட்டி : 6வது குடியரசு தலைவர் - 25.7.1977 - 25.7.1982 - இல்லூர் என்ற ஊரில் பிறந்தவர். இருமுறை ஆந்திர முதல்வராக இருந்தவர். மக்களவை சபாநாயகராக இருந்தவர். "
Q8. மக்களவை சபா நாயகராக இருந்து, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர மா நில அரசியல்வாதி யார்?
G.M.C. பாலயோகி - 24.3.1998 - 3.3.2002 வரை மக்களவை சபா நாயகராக இருந்து 3.3.2002 அன்று கைக்கலூர் என்ற இட்த்தில் விபத்தில் மரணமடைந்தார்.
Q9. உலகப்புகழ் மற்றும் பணக்கார இந்து கோயில் ஆந்திராவில் எங்கு அமைந்துள்ளது?
திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில். இது சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்ஜனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி மற்றும் வெங்கடாத்ரி என்ற ஏழு மலைகளைக் கொண்ட கோயில். வெங்கடாத்ரி மலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. உலகிலேயே பக்தர்கள் வருகை எண்ணிக்கையிலும், மக்கள் அளிக்கும் தான வரவிலும் மிகப்பெரிய கோயில்.
Q10. ஆந்திராவில் கடப்பா மாவட்டம் எதற்கு புகழ் பெற்றது?
தெலுங்கர்களால் அதிகமாக போற்றப்படும், பக்தி பாடல் புகழ் அன்னமாச்சார்யா பிறந்த மாவட்டம். BARYTE என்றழைக்கப்படும் கடப்பா கல் சுரங்கங்கள் நிறைந்த மாவட்டம்.
Q11. குண்டூர் மாவட்டம் எதற்கு புகழ் பெற்றது?
புகையிலை, பருத்தி மற்றும் மிளகாய்.
Q12. ஹைதராபாத் நகரில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் யாவை?

1. Top Level Informatin Technology Industries - தலை சிறந்த கணினி நிறுவன ங்கள்.
2. Film Industry and Ramoji Film City - தெலுங்கு சினிமா துறை, ராமோஜி ஃபிலிம் நகரம்.
3. Indian Institute of Information Technology - இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி.
4. Indian School of Business - இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ்.
5. Defence Research and development Organization - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம்.
6. Defence Electronic Research Laboratory - பாதுகாப்பு மின்னணு ஆராய்ச்சி ஆய்வகம்.
7. Police Training Academy (for IPS) - போலீஸ் பயிற்சி அகாடமி.
8. Bharat Heavy Electricals Ltd - பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்.
9. Bharat Dynamics Limited - பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்.
10. National Remote Sensing Agency (ISRD) - நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்ஸி.
11. Centre for DNA Finger Prints and Diagnostics - செண்டர் ஃபார் டி.என்.ஏ. ஃபிங்கர் பிரிண்டிங் அண்டு டயாக்னாஸ்டிக்ஸ்.
12. South Central Railway Division and Headquarters - தென் மத்திய ரயில்வே மண்டலம் & தலைமையகம்.
இவை தவிர நிறைய அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன."
Q13. ஹைதராபாத் எந்த உணவிற்கு புகழ் பெற்றது?
பிரியாணி.
Q14. ஹைதராபாத் எந்த ஆபரணப் பொருளுக்கு புகழ் பெற்றது?
முத்து மற்றும் கண்ணாடி வளையல்கள்.
Q15. ஹைதராபாத் சர்வ தேச விமான நிலையத்தின் பெயர் என்ன?
ராஜீவ் காந்தி சர்வ தேச விமான நிலையம். ஷம்சாபாத் என்ற இட த்தில் உள்ளது. இந்த விமான நிலையத்தை விரைவில் அடைவதற்காக மெஹ்தி பட்டினம் என்ற இட்த்திலிருந்து விமான நிலையம் வரை, சுமார் 11.6 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட அதிவேக சாலை (Elevated Expressway - மறைந்த பிரதமர் P.V. நரசிம்மராவ் பெயரில்) அமைக்கப்பட்டுள்ளது.
Q16. உலோகத்தில் சித்திர வேலைப்பாடு கொண்ட அழகுப் பொருட்கள் (Filigree) தயாரிப்பில் புகழ் பெற்ற ஆந்திர நகரம் எது?
கரீம் நகர் (இப்போது தெலங்கானாவில் உள்ளது).
Q17. ஆந்திராவின் ப்ரகாசம் மாவட்டத்தின் ஒரு இடம் அறிவியல் துறையில் ஒரு முக்கிய பங்கு பெற்றுள்ளது. அது என்ன?
விண்ணில் ஏவுகணை (Rocket) செலுத்தும் தளம் - சதீஷ் தவான் விண்வெளி மையம் - ஸ்ரீஹரிகோட்டா எனும் இட்த்தில் அமைந்துள்ளது.
Q18. பிரகாசம் மாவட்டம் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதலில் ஓங்கோல் மாவட்டம் என அழைக்கப்பட்ட து. பிறகு, சுதந்திர போராட்ட வீர ர் மற்றும் ஆந்திராவின் முதல் முதலமைச்சர் தங்கதுரு ப்ரகாசம் பந்துலு அவர்களின் பெயரால் பிரகாசம் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
Q19. "ஆந்திரா கேசரி (சிங்கம்)" என அழைக்கப்படுபவர் யார்?
தங்கதுரு பிரகாசம் பந்துலு.
Q20. "வால்டேர் - WALTAIR" என அழைக்கப்பட்ட ஆந்திர நகரம் எது?
விசாகப்பட்டினம்.
Q21. விசாகப்பட்டினம் நகரத்தின் முக்கிய அம்சங்கள் யாவை?

1. இயற்கை துறைமுகம்
2. கப்பல் கட்டும் தளம்.
3. அரக்கு பள்ளத்தாக்கு.
4. கிழக்கு கப்பற்படை தளம் - Eastern Naval Command.
5. போரா குகைகள்.
6. பாரத் ஹெவி ப்ளேட் அண்டு வெசல்ஸ் லிமிடெட்."
Q22. விஜய நகரம் மாவட்டம் எதற்கு புகழ் பெற்றது?

1. விஜய நகர மன்னர் ராஜ்யம்.
2. வீணை உற்பத்திக்கு புகழ் பெற்றது.
3. கர் நாடக சங்கீதத்திற்கு புகழ் பெற்றது.
4. ஆயிரம் வருட பழமையான ""ராமாமிர்தம்"" கோயில் புகழ் பெற்றது.
5. விஜய நகரம் மற்றும் பொப்பிலி (Bobbili) கோட்டைகள்."
Q23. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள முக்கிய துறைமுகங்கள் யாவை?
விசாகப்பட்டினம், காக்கி நாடா, மசூலிப்பட்டினம்.
Q24. ஆந்திரப்பிரதேசத்தின் முக்கிய ஆறுகள் யாவை?
கிருஷ்ணா, கோதாவரி, மூசி, துங்கபத்ரா.
Q25. ஆந்திரப்பிரதேசத்தின் மலைவாழ் மக்கள் (Tribals) யாவர்?
பகடா பில், செஞ்சு, செஞ்ச்வார், கடபாஸ், கோண்ட், கௌடு, ஜடபுஸ், கம்மாரா, காட்டு நாயக்கன், கோலம், கோண்டா, கொண்டா ரெட்டி, கோட்டியா, கோயா, குலியா, யெனாடிஸ், மன்னா தோரா, முகர தோரா, நாயக்ஸ், போர்ஜா, ரோனா, சவராஸ், சுகாலிஸ், லம்பாடிஸ், யெருகுலா.
Q26. ஆந்திரப்பிரதேசத்தின் முக்கிய இயற்கை தனிமங்கள் யாவை?
செப்பு, மைக்கா, மங்கனீஸ், தங்கம், கல்நார், எண்ணெய், நிலக்கரி, இரும்பு, பேரைட்.
Q27. ஆந்திரப்பிரதேசத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் யாவை?
1. இந்திய தேசிய காங்கிரஸ் - 1885 - ஏ.ஓ. ஹ்யும் - கை சின்னம் - தற்போதைய தலைவர் சோனியா காந்தி.
2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1925 - கான்பூரில் தொடங்கப்பட்ட து.
3. தெலுங்கு தேசம் கட்சி - 1982 - சந்திர பாபு நாயுடு - சைக்கிள் சின்னம்.
4. Y.S.R. காங்கிரஸ் கட்சி - 2009 - ஜகன் மோகன் ரெட்டி - மின் விசிறி."
Q28. ஆந்திர பிரதேசத்தின் புகழ் பெற்ற நடனக்கலை எது? இத்துறையில் புகழ் பெற்றவர்கள் யார்?

"குச்சிபுடி" : கிருஷ்ணா மாவட்டத்தில் இதே பெயர் கொண்ட கிராமத்தில் உருவானது இக்கலை. இதில் பெயர் பெற்ற கலைஞர்கள் :
1. டாக்டர் வேம்பட்டி சின்ன சத்யம்.
2. வேதாந்தம் லக்ஷ்மி நாராயணா.
3. சிந்தாலா கிருஷ்ணமூர்த்தி
4. பத்மஸ்ரீ வேதாந்தம் சத்ய நாராயண சர்மா
5. ராஜா மற்றும் ராதா ரெட்டி
6. நிலிம்மா தேவி
7. அனுராதா நெஹ்ரு
8. சரளகுமாரி கண்ட்டா
9. மஞ்சு பார்கவி
10. ஹேமா மாலினி
Q29. ஆந்திர மக்களின் (தெலுங்கு) புது வருடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உகாதி. மார்ச் 15 தேதி வாக்கில் வரும். ஆந்திர மக்களின் இதர முக்கிய பண்டிகைகள் - சங்கராந்தி (ஜனவரி), மஹா சிவராத்திரி-பிப்ரவரி; மற்றும் கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் இந்து மத பண்டிகைகள்.
Q30. ஆந்திர பிரதேசத்தின் சில முக்கிய பிரச்சனைகள் யாவை?
1. நக்சல் தீவிரவாதிகள்
2. கிழக்குக் கடற்கரை ஓர மாவட்டங்களில் அடிக்கடி பருவகால புயல்கள்.
Q31. ஆந்திர பிரதேசத்தின் முக்கிய வேளாண் ஏற்றுமதி பொருட்கள் யாவை?
மாம்பழம் மற்றும் புகையிலை.
Q32. ஆந்திர பிரதேசத்தின் (இந்தியாவின்) மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?
கொல்லேறு ஏரி - எலூரு என்ற நகரத்தின் அருகில் உள்ளது.
Q33. ஆந்திர பிரதேசத்தின் முக்கிய வனப்பகுதி எது?
தண்டகாரண்யா. சுமார் 300 ச.கி.மீ. இது தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாகாணங்களிலும் பரவியுள்ளது. இங்கு வாழும் மலைவாழ் மக்களின் புகழ்பெற்ற நாட்டுப்புற நடனம் - திம்சா.
Q34. ஆந்திர பிரதேசத்தில், செப்டம்பர் 1908ல் ஒரு இயற்கை சீற்றம் - மிகவும் கோரமான சம்பவம். அது என்ன?
ஹைதராபாத் நகரில், செப்டம்பர் 28, 1908 அன்று, ஒரே நாளில் சுமார் 15 அங்குலம் கனமழை பெய்து, சுமார் 15000 பேர் இறந்தது மட்டுமின்றி, சுமார் 80000 மக்கள் வீடுகளையும் இழந்தனர். இந்த கோர சம்பவத்தின் நடுவில், ஒரு புளிய மரம் 150 உயிர்களைக் காப்பாற்றியது ஒரு ஆச்சரியமான நிகழ்வு. இதற்கு கனமழையும், முசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் தான் காரணம்.
Q35. ஆந்திர பிரதேசத்தின் முதல் முதலமைச்சர் யார்?
தங்கதுரு பிரகாசம் - 1953 முதல் 1954 வரை.
Q36. ஆந்திர பிரதேசத்தின் மக்களவைத் தொகுதிகள் யாவை?

1. அமலாபுரம்
2. அனகாபள்ளி
3. அனந்தபூர்
4. அரக்கு (ST)
5. பாபட்லா (SC)
6. சித்தூர் (SC)
7. கடப்பா
8. எலூரு
9. குண்டூர்
10. ஹிந்துபூர்
11. காக்கி நாடா
12. கர்னூல்
13. மசூலிப்பட்டினம்
14. நந்த்யால்
15. நரசாபுரம்
16. நரசராவ்பேட்
17. நெல்லூர்
18. ஓங்கோல்
19. ராஜமுந்திரி
20. ராஸம்பேட்
21. ஸ்ரீகாகுளம்
22. திருப்பதி (SC)
23. விஜயவாடா
24. விசாகபட்டினம்
25. விஜய நகரம். ( ST - 1 ; SC - 3 ; பொது - 21.)