Khub.info Learn TNPSC exam and online pratice

ஜம்மு காஷ்மீர்

Q1. ஜம்மு காஷ்மீர்
தொடக்கம் : 26.10.1947.
தலை நகர் : ஜம்மு (குளிர்), ஸ்ரீ நகர் (கோடை)
பரப்பளவு : 2,22,236 ச.கி.மீ.
மாநில எல்லை : இமாச்சல பிரதேசம்
மொழி : உருது, ஹிந்தி, ஆங்கிலம், டோக்ரி, லடாக்கி.
கல்வியறிவு : 66.7%
மாவட்டங்கள் : 22
ஜனத்தொகை : 1,25,48,926
மக்களவை உறுப்பினர்கள் : 6
மாநிலங்களவை உறுப்பினர்கள் : 4
சட்டசபை உறுப்பினர்கள் : 87 + 36
மாநில மரம் : சினார் (Chinar)
மாநில பறவை : கருங்கழுத்து கொக்கு (Black necked crane)
மாநில மிருகம் : ஹங்கூல் (மான்) (Hangul)
மாநில மலர் : தாமரை
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : செனாப், இண்டஸ், ஜீலம், ரவி, சிந்து.
மாநில ஆளுநர்: சத்யபால் மாலிக்
மாநில முதலமைச்சர்: 


 

Q2. வரலாற்று சுருக்கம் :

சுதந்திரத்திற்கு முன்பு சில நூறு ஆண்டுகளுக்கு சீக்கிய மன்னர்களால் ஆளப்பட்ட, இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதி. சுதந்திரத்தின் போது மன்னர் ஹரி சிங் ஆட்சியில் இருந்தார். அவர் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் சேராமல் இருந்தார். இந்தக் குழப்பத்தில் பாகிஸ்தான் காஷ்மீர் மீது, படையெடுத்து வடமேற்கு பகுதியை படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணைவதாக உறுதிப்பத்திரம் கையெழுத்திட்டதின் பேரில், இந்தியா தன் ராணுவத்தை அனுப்பி, பாகிஸ்தானின் மேலும் ஊடுருவலைத் தடுத்தது. இவ்வாறாக, பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி இன்றும் ஒரு பிரச்சனை பகுதியாகவும், அதன் வழியாக தீவிரவாத ஊடுருவலும் தொடர் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது. இவ்வாறாக, 26.10.1947 முதல் இந்திய மாகாணமாக இருந்து வருகிறது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்புடன் தீவிரவாத செயல்கள் தடுக்கப்பட்டு, இன்றும் ஒரு நிலையற்றத் தன்மையில் இருந்து வருகிறது.

Q3. ஜம்மு காஷ்மீர் மா நிலத்தின் தலை நகரங்கள் யாவை?
"ஜம்மு : குளிர் கால தலை நகரம். தாவி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அமர் நாத் பனிலிங்க கோவில், வைஷ்ணவ தேவி கோவில் மற்றும் சில சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதியில், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி அமைந்துள்ளது. இதன் மூலமே தீவிரவாதிகளின் ஊடுருவல் நடைபெறுகிறது.
ஸ்ரீ நகர் : கோடைகால தலை நகரம். ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம், டால் ஏரி, படகு வீடுகள், கைவேலைப்பொருட்கள், பழங்கள், தரை விரிப்புகள், கைத்தறி பொருட்கள், ஆகியவை புகழ் பெற்றவை."
Q4. ஜம்மு காஷ்மீர் மாவட்டங்கள் யாவை?
1. ஜம்மு : பாகிஸ்தான், ரஜௌரி, உதம்பூர், கத்துவா மாவட்டங்கள் இதன் எல்லை. இந்துக்கள் அதிகமாக வாழும் மாநிலம். சுற்றுலா தலம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் ஜனத்தொகை அதிகமுள்ள மாவட்டம்.

2. தோடா : அன்ந்த் நாக், கிஷ்ட்வார், கத்துவா, உதாம்பூர், ராம்பன் மாவட்டங்கள் மற்றும் இமாச்சல பிரதேசம் இதன் எல்லை.

3. கிஷ்ட்வார் : கார்கில், இமாச்சல பிரதேசம், தோடா, அனந்த் நாக் மாவட்டங்கள் இதன் எல்லை.

4. ரஜௌரி : பாகிஸ்தான், பட்காம், உதாம்பூர், ஜம்மு இதன் எல்லை.

5. ரியாஸி : ஜம்மு, ரஜௌரி, குல்காம், ராம்பன், உதாம்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.

6. உதாம்பூர் : ரம்பன், குல்காம், புலவாமா, கிஷ்ட்வார், தோடா மாவட்டங்கள் இதன் எல்லை. வைஷ்ணவ தேவி கோவில் மற்றும் சில சுற்றுலா தலங்களும் உள்ளது. இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டலம் உள்ளது.

7. ராம்பன் : தோடா, உதாம்பூர், ரியாஸி, குல்காம், ஆனந்த் நாக் மாவட்டங்கள் இதன் எல்லை. மிக நீளமான 11.2 கி.மீ பீர் பஞ்சால் ரயில்வே சுரங்கப்பாதை இங்கு உள்ளது. மிகப்பெரிய பாலிகர் அணை இப்போது கட்டுமான நிலையில் உள்ளது.

8. கத்துவா : இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மா நிலம், பாகிஸ்தான், சம்பா, உதாம்பூர், தோடா மாவட்டங்கள் எல்லையாக உள்ளது.

9. சம்பா : பாகிஸ்தான், ஜம்மு, உதாம்பூர், கத்துவா மாவட்டங்கள் இதன் எல்லை.

10. பூஞ்ச் : பரமுல்லா, பட்காம், குல்காம், ரஜௌரி மாவட்டங்கள் இதன் எல்லை. பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள காஷ்மீர் பகுதியும் இதன் எல்லை.

11. ஸ்ரீ நகர் : புலவாமா, பட்காம், பரமுல்லா, கந்தர்பால், அனந்த் நாக் மாவட்டங்கள் இதன் எல்லை. மிகப்பெரிய சுற்றுலா தலம்.

12. அனந்த் நாக் : கிஷ்ட்வார், தோடா, ரம்பான், குல்காம், புலவாமா மாவட்டங்கள் இதன் எல்லை. பகல்காம் மலைவாசஸ்தலம் மிகவும் புகழ் பெற்றது. சுற்றுலா தலம். 13. குல்காம் : ரஜௌரி, பூஞ்ச், சூபியான், அனந்த்நாக், ராம்பான், ரியாஸி மாவட்டங்கள் இதன் எல்லை. மிகவும் அழகான மாவட்டம். தீவிரவாதிகள் அடிக்கடி குழப்பங்கள் உருவாக்கும் மாவட்டம்.

14. புலவாமா : அனந்த் நாக், குல்காம், சுபியான், பட்காம், ஸ்ரீ நகர் மாவட்டங்கள் இதன் எல்லை.

15. சூபியான் : குல்காம், பட்காம், புலவாமா மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம்.

16. பட்காம் : சூபியான், பூஞ்ச், பாரமுல்லா, ஸ்ரீ நகர், புலவாமா மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம். 17. கந்தர் பால் : ஸ்ரீ நகர், பரமுல்லா, பந்தி போரா, கார்கில் மாவட்டங்கள் இதன் எல்லை. கீர்பவானியில் உள்ள நாரங் கோவில் 8வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. மிகவும் புகழ்பெற்றது, சுற்றுலா தலம்.

18. பந்தி போரா : குப்வாரா, பரமுல்லா, கந்தர்பால், கார்கில் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள பகுதியும் இதன் எல்லை.

19. பரமுல்லா : ஸ்ரீ நகர், பட்காம், பூஞ்ச், குப்வாரா, பந்திபோரா மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள பகுதி இதன் எல்லை.

20. குப்வாரா : பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள பகுதி பந்திபோரா, பரமுல்லா மாவட்டங்கள் இதன் எல்லை.

21. கார்கில் : லடாக், இமாச்சல பிரதேசம், கிஷ்ட்வார், கந்தர்பால், பந்திபோரா இதன் எல்லை. பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள பகுதியும் இதன் எல்லை. 1999ல் பாகிஸ்தான் இந்த பகுதியை கைப்பற்ற முயன்று தோல்வி கண்ட து.

22. லடாக் : சீனா, இமாச்சல பிரதேசம், கார்கில் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள பகுதி இதன் எல்லை."
Q5. காஷ்மீரில், பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு ஆட்சி நட த்தப்பட்டு வரும் பிரச்சனைப்பகுதியில் என்னென்ன பகுதிகள் உள்ளன?
மிர்பூர், முஸஃபராபாத், பூஞ்ச், பல்டிஸ்தான், கில்ஜிட். இந்த பகுதிகளில் 19 மாவட்டங்கள் உள்ளன.
Q6. ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களவை தொகுதிகள் யாவை?
அன ந்த் நாக், பரமுல்லா, ஜம்மு, லடாக், ஸ்ரீ நகர், உதாம்பூர்.
Q7. ஜம்மு காஷ்மீரில் உள்ள மாநகராட்சிகள் யாவை?
ஸ்ரீ நகர், ஜம்மு.
Q8. ஜம்மு காஷ்மீரில் மத ரீதியாக முக்கியமான பகுதிகள் யாவை?
ஜம்மு - இந்துக்கள், காஷ்மீர் - இஸ்லாமியர்கள், லடாக் - புத்த மதத்தினர்.
Q9. ஜம்மு காஷ்மீர் மா நிலத்தின் அரசியல் நிர்வாக அமைப்பு எவ்வாறு உள்ளது?
ஜம்மு காஷ்மீர் மாநிலம், சுதந்திரத்திற்கு பிறகு இன்று வரை, அதன் சொந்த அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. மன்னர் ரன்பீர் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "ரன்பீர் சட்டம்" - 1932, இன்றும் பிரயோகத்தில் உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) இந்த மாநிலத்தில் கடைபிடிக்கப்படவில்லை. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு மற்றும் நிதி துறை தவிர்த்து, மற்ற அனைத்து துறைகளும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி சட்டத்தின் கீழ் இயங்குகிறது. இவ்வாறு செயல்படுவதற்காக, இந்திய அரசியல் சட்டத்தின் விதி எண். 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 1947 முதல் 1965 வரை (30.10.1965) ஜம்மு காஷ்மீர் மாநிலம் தலைமை ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி தலைமையில் இயங்கி வந்தது. 30.10.1965க்கு பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தலைமை பொறுப்பு ஆளுர் மற்றும் முக்கிய மந்திரிக்கு கொடுக்கப்பட்டது.
Q10. ஜம்மு காஷ்மீர் மா நிலத்தின் முதல் முக்கிய மந்திரி யார் (30.3.1965க்கு பிறகு)
குலாம் முகமது சாதிக் - 30.3.1965 - 12.12.1971.
Q11. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் யாவை?
1. இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஊடுருவலும், கொடூர செயல்களும்.
2. கிராமப்புறா கல்வியின்மை.
3. பூகோள அமைப்பும், தட்ப வெப்ப நிலையும்."
Q12. காஷ்மீர் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்?
ஷேக் அப்துல்லா.
Q13. காஷ்மீர் ஆண்களின் கிராமிய நடனத்தின் பெயர் என்ன?
தும்மல். (Dhummal)
Q14. இந்திய தண்டனைச் சட்ட த்திற்கு பதிலாக ஜம்மு காஷ்மீர் மா நிலத்தில் எந்த தண்டனைச் சட்டம் பிரயோகத்தில் உள்ளது?
ரன்பீர் சட்டம் - 1932ல் அமல்படுத்தப்பட்டது. காஷ்மீர் மன்னர் ரன்பீர் சிங் அவர்களால் இயற்றப்பட்ட சட்டம்.