Khub.info Learn TNPSC exam and online pratice

சுதந்திர போராட்ட துவக்கம் -- BEGINNING OF FREEDOM MOVEMENT

Q1. சுதந்திர போராட்டத்தின் துவக்கம் என்று கருதப்படும் நிகழ்வு எது?
சிப்பாய் கலகம், 1857.

Q2. 1857 சிப்பாய் கலகத்தின் முன்னோடி எனக் கருதப்படும் நிகழ்வுகள் யாவை?

1. 1764ல் வங்காளத்தில் நடந்த சிப்பாய்களின் கிளர்ச்சி/கலகம். இதில் ஆங்கிலேய சிப்பாய்கள் ஊதிய உயர்வுக்காகவும், இதர நிதி சலுகைகளுக்காக போராட்டம் நடத்தினர்.
2. 1806 -- வேலூர் கலகம் -- ஆங்கிலேயர்கள், இந்து முஸ்லீம் இன சிப்பாய்களின் மீது, மதம் சார்ந்த சில தடைகளை விதித்தனர். இந்துக்கள் நெற்றியில் எந்த குறியும் போடக்கூடாது, முஸ்லீம்கள் தாடி வளர்க்கக்கூடாது என பலவிதமான தடைகளை திணித்ததின் விளைவே இந்த கலகத்தின் காரணம். இந்த கலகத்தில் சுமார் 200 ஆங்கிலேயர்கள் கொலை செய்யப்பட்டனர்.
3. 1824 -- வங்காளத்தில் பாரக்பூர், பிறகு 1844, 1849, 1850, 1852 காலத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் ராணுவ சிப்பாய்கள் நடத்திய சிறு அளவிலான கலகங்கள்.

Q3. ராணுவ சிப்பாய்களால் கலகம் நடத்த தூண்டிய பொதுவான காரணங்கள் யாவை?
1. ஆங்கிலேய மற்றும் இந்திய சிப்பாய்களுக்கும் இடையில் இருந்த ஊதிய முறைகேடு மற்றும் பதவி உயர்வு.
2. சிப்பாய்கள் தவறாக மரியாதைக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டனர்.
3. வெளிநாடுகளில் பணி புரிந்ததற்கான சிறப்பு ஊதியங்கள் வழங்காதது.
4. உயர் சாதி இனத்தவர், கேனிங் பிரபுவின் உத்தரவுகளை மீறியது.
5. கிறித்துவ மத போதகர்களுக்கு அதிகமான சலுகைகள் அளித்தது. இவ்வகையில் ஏற்பட்ட அனைத்து கலகங்களும் ஆங்கிலயர்களின் படை பலத்தால் ஒடுக்கப்பட்டது.
Q4. 1857 சிப்பாய் கலகத்துக்கு முன் நடந்த எந்த நிகழ்ச்சி, இந்த கலகம் நடக்க முக்கிய காரணாமாக அமைந்தது?
1. ஜனவரி 1857ல், ஆங்கிலேயர்கள் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய துப்பாக்கிகளை அறிமுகப் படுத்தினர். இதில் போடப்படும் தோட்டாக்கள், பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவியதாக இருந்ததால், இது இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மத நம்பிக்கைக்கும் எதிராக அமைந்தது. இந்த தோட்டாக்களை, துப்பாக்கியில் போடுவதற்கு முன்பு அதில் உள்ள ஒரு அடைப்பானை பல்லால் கடித்து எடுத்துவிட்டு போடவேண்டும். இதை ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்திய போது, 19வது உள்நாட்டு படை அணி, பெர்ஹாம்பூர் சிப்பாய்கள் எதிர்த்து, 26.2.1857 அன்று கலகம் செய்தனர்.
2. இதத் தொடர்ந்து 29th March 1857 - அன்று, பெர்ஹாம்பூர் கலகத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாரக்பூர் 34வது உள்ளூர் படை அணி, மங்கல் பாண்டே தலைமையில் நடந்தது. மங்கல் பாண்டே ஆங்கிலேய அதிகாரி லெஃப். பாஹ் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, இரண்டு இதர அதிகாரி- களையும் கொன்றார். பிறகு மங்கல் பாண்டே தற்கொலைக்கு முயற்சி செய்து, பிடிபட்டு, மரண தண்டனை மூலம் கொல்லப்பட்டார்.
3. மீரட் குதிரைப்படையின் 85 வீரர்கள் உத்தரவுகளை ஏற்க மறுத்தனர். சிப்பாய் கலகம் ஒடுக்கப்பட்டவுடன் இவரகள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டனர்.
4. லக்னௌ 7வது ஆவாத் படையில், சிப்பாய்கள் க்ரீஸ் தடவிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்து 2.5.1857 அன்று கலகம் செய்தனர்.
Q5. 1857 சிப்பாய் கலகம் எங்கெல்லாம் பரவியது?
1. 10.5.1857 – மீரட் 3வது குதிரைப்படை வீரர்கள் நேரடியாக போரட்டத்தில் இறங்கி, முன்பாக சிறைப்படுத்தப்பட்ட 85 வீரர்களை விடுவித்தனர்.
2. மீரட்டில், 11வது மற்றும் 20வது குதிரைப்படை வீரர்களும் இந்த கலகத்தில் ஈடுபட்டு, சில ஆங்கிலேய அதிகாரிகளை, கர்னல் ஃபின்னிஸ் சேர்த்து, கொலைசெய்து விட்டு, டெல்லி நோக்கி பயணம் செய்தனர். அங்கு ஆங்கிலேய படை இல்லாததால், டெல்லியை கைப்பற்றி, 11.5.1857 அன்று பகதூர் ஷா ஜாஃபரை மீண்டும் இந்தியாவின் மாமன்னர் ஆக அறிவித்தனர். ஏகப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளையும் மற்றவர்களையும் கொன்று குவித்தனர். அங்கு இருந்த ஆங்கிலேய ராணுவ அதிகாரி, லெஃப். வில்லோபி, சமாளிக்க முடியாமல், அங்கு இருந்த ராணுவ தோட்டா கிடங்கை கொளுத்திவிட்டு தப்பிச் சென்றார். டெல்லியில் இந்த கலகத்தை முன் நின்று நடத்தியவர் பரேலியில் ஆங்கிலேய படையில் ஒரு கீழ்மட்ட பதவியில் -- சுபேதார் -- இருந்தவர்.
Q6. 1857 சிப்பாய் கலகத்தில், டெல்லியை தவிர்த்து, வேறு எந்தெந்த இடங்களில் கலகம் நடந்தது?
கான்பூர் -- இங்கு சிப்பாய் கலகத்தை, நானா சாஹேப், ராவ் சாஹிப், தாந்தியா தோப் மற்றும் அஸிமுல்லா கான் ஆகியோர் சேர்ந்து நடத்தினர். 26.6.1857 வரை ஆங்கிலேயர்கள், சர் ஹ்யூ வீலர் தலைமையில், சமாளித்து வந்தனர். பிறகு அவர்கள் சரணடைந்தனர். அலாகாபாத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவதாக கொண்டு செல்லப்பட்டு, வழியில் 15.7.1857 அன்று கொலை செய்யப் பட்டனர். ஆங்கிலேயர் மேஜர் ஜெனரல் ஹேவ்லாக் தலைமையில் பலத்த எதிர்ப்புகளைத் தாண்டி, கான்பூரைக் கைப்பற்றினார். இவரைத் தொடர்ந்த ப்ரிகேடியர் ஜெனரல் நீல், ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில், பல இந்தியர்களை கொன்று தீர்த்தார். "கான்பூர் மீண்டும் தாந்தியா தோப் மற்றும் அவருடைய குவாலியர் போராளிகளால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. ஆங்கிலேயர்கள், சர் காலின் கேம்ப்பெல் தலைமையில் மீண்டும் டிசம்பர் 1857ல் கான்பூர் ஐ கைப்பற்றினர். இந்த ஆங்கிலேய அதிகார் ஆகஸ்ட் 1857ல் இந்திய ராணுவ முக்கிய தளபதியாக பதவியேற்றவர்.
லக்னௌ -- 2.7.1857 அன்று சிப்பாய் கலக போராளிகளால் கைப்பற்றப்பட்டு, சர் ஹென்றி லாரன்ஸ் மரணம் அடைந்தார். ஆங்கிலேய துணைப்படை செப்டம்பர் 1857ல் வந்தது. டிசம்பர் 1857ல் தாந்தியா தோப் ஐ கைப்பற்றினார். ஆனால், ஆங்கிலேய படை, கேம்ப்பெல் தலைமையில் மார்ச் 1858ல் லக்னௌ ஐ மீட்டது.
ஜான்சி மற்றும் குவாலியர் – ஜான்சியை சர் ஹ்யூ ரோஸ் 4.4.1858 அன்று மீட்டார். இதை தொடர்ந்து ராணி லக்ஷ்மிபாய் தப்பி சென்றார். குவாலியர் பகுதியை, ராணி ஜான்சி மற்றும் தாந்தியா தோப் தலைமையிலான போராளிகள், ஆண்டு வந்த சிந்தியா மன்னரை துரத்திவிட்டு கைப்பற்றினர். சர் ஹ்யூ ரோஸ் ஜூன் 1858ல் குவாலியரை மீட்டார். இதற்கிடையில், 17.6.1858 அன்று ராணி ஜான்சி இறந்தார்.
பரேலி -- போராளிகளால் கைப்பற்றப்பட்ட இந்த பகுதியை கேம்ப்பெல் 5.5.1858 அன்று மீட்டனர்.
அர்ரா -- பீஹார் -- இங்கு கலகத்தை குன்வார் சிங் தலைமையில் நடந்தது. வில்லியம் டெய்லர் மற்றும் வின்செண்ட் அயர் அடங்கிய படை, ஆகஸ்ட் 1857ல் மீட்டனர். குன்வார் சிங், ஆவாத் பகுதிக்கு தப்பிச் சென்று, ஏப்ரல் 1858ல் திரும்ப வந்து ஆங்கிலேயருக்கு எதிராக தனது கடைசி நடத்தினார்.
பெனாரஸ் மற்றும் அலகாபாத் -- இங்கு நடந்த கலகத்தை ஆங்கிலேயர்கல் நீல் தலைமையில் ஒடுக்கினர்.
மத்திய இந்தியா -- 1858ன் முதல் பகுதியில், இங்கு கிளம்பிய கலவரத்தை சர் ஹ்யூ ரோஸ் கட்டுப்படுத்தினர்.
Q7. வட இந்தியாவில் பல இடங்களில் சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட பல தலைவர்களின் பிற்கால நிலை என்ன?
1. தாந்தியா தோப் -- குவாலியரை இழந்தவுடன், இவர் மத்திய இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து அதிரடி தாக்குதல்களில் (கொரில்லா போர்) ஈடுபட்டார். ஆனால் அவருடை தோழர் மான் சிங் என்பவரின் துரோகச் செயலால், ஆங்கிலேயர்களால் தாந்தியா கைப்பற்றப்பட்டு, 18.4.1859 அன்று கொலை செய்யப்பட்டார்.
2. நானா சாஹேப், ஆவாத் பகுதி பேகம், மற்றும் கான் பகதூர் -- இவர்கள் டிசம்பர் 1858ல் நேபாளத்துக்கு தப்பிச் சென்று அங்கு இறந்தனர்.
3. ஜெனரல் பக்த் கான் -- டெல்லியில் கலகத்தை முன் நின்று நடத்திய இவர், டெல்லி வீழ்ந்தவுடன் ஆவாத் பகுதிக்கு தப்பிச்சென்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி 13.5.1859 அன்று மறைந்தார்.
4. மௌல்வி அஹமதுல்லா -- ஜூன் 1858 அன்று, பூர்வைன் ராஜா அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்தார்.
Q8. 1857 சிப்பாய் கலகம் தோல்வியடையக் காரணம் என்ன?
1. படிப்பறிவு பெற்ற இந்தியர்கள் பங்குபெறவில்லை.
2. பல மாகாணங்கள் -- வங்காளம், பாம்பே, மதராஸ், மேற்கு பஞ்சாப், ராஜபுத்தனா, தென் இந்தியா, கிழக்குப் பகுதி, வட கிழக்கு பகுதி, தென்மேற்கு இந்திய பகுதிகள் பங்கு பெறவில்லை.
3. திட்டமிடப்படாத, தனித்தனி பகுதிகள், சரியான ஒத்துழைப்பு, அனுபவம், அந்தந்த பகுதிகளின் ஆட்சிகளின் உதவியின்மை, மேலாக சரியான தலைவர் இல்லாதது -- ஆகியவை இந்த கலகத்தின் தோல்விக்கு முக்கிய காரணம்.
4. அந்தந்த பகுதி மன்னர்களே/ஜமீந்தார்களே போராளிகளுக்கு எதிராக செயல்படுதல், மனிதாபிமானம் இல்லாத செயல்களால், போராளிகள் அதையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை.
5. ஆங்கிலேயர்களுக்கு தலைமை, பொருள் வசதி, அனுபவம், நுணுக்கம், தளவாடங்கள் மேலாக அதிகமான உதவிப்படைகள் ஆகியவை அதிகப்படியாகவே இருந்தது.
Q9. 1857 சிப்பாய் கலகத்தின் முடிவால் ஏற்பட்ட விளைவுகள் யாவை?
1. இந்தியா அரசாங்கச் சட்டம் 1858 விக்டோரியா மகாராணியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால், இந்தியா மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
2. கேனிங் ப்ரபு இந்தியாவின் முதல் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.
3. வாரிசு இல்லாச் சட்டம் ஒழிக்கப்பட்டு, சிறு மன்னரகள் வாரிசு இல்லாத நிலையில் வேறு எவரையேனும் தத்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
4. எல்லா மதத்தினருக்கும் சம உரிமையும் சுதந்திரமும் வழங்கப்பட்டது.
5. இந்த உத்தரவு ""இந்திய சுதந்திரத்தின் மகாசாசனம்"" “Magna Carta of Indian Liberty”என அழைக்கப்பட்டது.
6. பகதூர் ஷா ஜாஃபர் 3, கடைசி முகலாய மன்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கேயே இறந்தார். அவருடைய மூன்று மைந்தர்களும் கொலைசெய்யப் பட்டனர்.