Khub.info Learn TNPSC exam and online pratice

பொருளாதார ஒருங்கிணைப்பு நாடுகள் ECONOMIC GROUPING OF COUNTRIES

Q1. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக, நாடுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
1. தெற்கு ஆசியா, 2. தென் கிழக்கு ஆசியா, 3. மேற்கு ஆசியா, 4. கிழக்கு ஆசியா, 5. மத்திய அமெரிக்கா, 6. கரீபியன் தீவுகள், 7. லத்தீன் அமெரிக்கா, 8. ஐரோப்பிய யூனியன்.
Q2. தெற்கு ஆசிய நாடுகள் யாவை?
இந்தியா, ஸ்ரீலங்கா, வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவுகள்.
Q3. தெற்கு ஆசிய நாடுகள் தங்கள் பொருளாதார மேம்பாட்டுக்காக அமைத்துக்கொண்டிருக்கும் அமைப்பு என்ன?
SAARC - South Asian Association for Regional Cooperation - தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு - இதன் நிரந்தர தலை நகரம் காத்மண்டு, நேபாளம்.
தொடக்கம் : 8.12.1985 - உறுப்பினர் நாடுகள் : ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா.
Q4. சார்க் அமைப்பில் பார்வையாளர்கள் அந்தஸ்தில் இயங்கும் நாடுகள் யாவை?
1. ஆஸ்திரேலியா, 2. சீனா, 3. ஐரோப்பிய கூட்டமைப்பு, 4. ஈரான், 5. ஜப்பான், 6. மொரீசியஸ், 7. மியான்மார், 8. தென் கொரியா, 9. அமெரிக்கா.
Q5. தென் கிழக்கு ஆசிய நாடுகள் யாவை?
"மியான்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, ப்ரூனே, கம்போடியா, சிங்கப்பூர், மலேசியா. இந்த நாடுகள் இந்தியாவின் கிழக்குப்பகுதியிலும் சீனாவின் தெற்குப் பகுதியிலும் அமைந்துள்ளன. இவை தீவுகளாகவும், தீவுக் கூட்டங்கள் மற்றும் தீபகற்பங்களாகவும் உள்ளன."
Q6. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு எது?
ASEAN - Association of South East Asian Nationas - தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு - தொடக்கம் : 8.8.1967 - தலை நகரம் ஜாகர்தா, இந்தோனேசியா - உறுப்பினர் நாடுகள் : 1. ப்ரூனே, 2.கம்போடியா, 3. இந்தோனேசியா, 4. லாவோஸ், 5. மலேசியா, 6.மியான்மார், 7. பிலிப்பைன்ஸ், 8. சிங்கப்பூர், 9. தாய்லாந்து, 10. வியட் நாம்.
Q7. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் பார்வையாளர் நாடுகள் யாவை?
திமோர் லெஸ்டே (கிழக்கு) மற்றும் பப்புவா நியூ கினி.
Q8. ASEAN - ஏசியான் அமைப்புக்கு முன்பாக தொடங்கப்பட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு எது?
SEATO - South East Asia Treaty Organisation - தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஒப்பந்த கூட்டமைப்பு. இந்த அமைப்பு 8.9.'54 முதல் 30.6.'77 வரை பாங்காங், தாய்லாந்தை தலை நகராக கொண்டு இயங்கியது. இந்த அமைப்பு தெங்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட்து. இதன் உறுப்பினர்களாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஃப்ரான்ஸ், ஐக்கிய ராஜ்யம், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருந்தன. இந்த அமைப்பின் மூலம் தெற்கு வியட்நாம் மற்றும் லாவோஸ் மன்னராட்சி நாடுகள் பாதுகாக்கப்பட்டன.
Q9. மேற்கு ஆசிய நாடுகள் யாவை?
இரான், இராக், குவைத், ஐக்கிய அரபு நாடுகள், ஜோர்டான், லெபனான், சிரியா, யெமென், இஸ்ரேல், துருக்கி, சைப்ரஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான். இந்த நாடுகள் இந்திய துணை கண்டத்தின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளன. (இவற்றில் ஆஃப்கானிஸ்தான் சார்க் அமைப்பில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது).
Q10. மேற்கு ஆசிய நாடுகளின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பு எது?
ARAB LEAGUE - அரபுலீக் (சங்கம்) - தொடக்கம் 22.3.1945; தலை நகர் - கெய்ரோ; உறுப்பினர்கள் - 22 நாடுகள் - பொதுவாக இஸ்லாம் மதத்தை தழுவிய நாடுகள்.
Q11. அரபுலீக் (சங்கம்) அமைப்பில் அங்கத்தினர்களாக உள்ள நாடுகள் யாவை?
1. அல்ஜீரியா, 2. பஹ்ரைன், 3. கொமோரோஸ், 4. லிஜிபௌட்டி, 5. எகிப்து, 6. இராக், 7. ஜோர்டான், 8. குவைத், 9. லெபனான், 10. லிப்யா, 11. மவுரிட்டானியா, 12. மொராக்கோ, 13. ஓமன், 14. பாலஸ்தீனம், 15. கத்தார், 16. சவுதி அரேபியா, 17. சோமாலியா, 18. சூடான், 19. சிரியா, 20. துனிசியா, 21. ஐக்கிய அரபு நாடுகள், 22. யெமென்.
Q12. கரீபியன் நாடுகள் எனப்படுபவை யாவை?
பார்படோஸ், க்யூபா, டொமினிகா, டொமினிக்கன் குடியரசு, க்ரெனடா, ஹைத்தி, ஜமைக்கா, செயிண்ட் லூசியா, ட்ரினிடாட் மற்றும் டொபேகோ, ஆங்குல்லா, ஆண்டிகுவா, குவாடேலூப், மாண்டிசாரட், பஹமாஸ், பெர்முடா, ப்யூர்ட்டோரிக்கோ, விர்ஜின் தீவுகள், கையானா, சுரி நாம். இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண கடற்பகுதியிலிருந்து, வெனிசுலா நாட்டு கடற்பகுதி கரீபியன் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகள், தீவுக் கூட்டங்கள்.
Q13. கரீபியன் நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு எது?
CARICOM - Carribean Community - கரீபியன் சமூகம் - தொடக்கம் 4.7.1973; தலை நகர் - ஜார்ஜ் டவுன், கயானா;   உறுப்பினர் நாடுகள் - 15 -
1.ஆண்டிகுவா மற்றும் பர்புடா 2. பஹாமாஸ் 3. பார்பேடோஸ் 4. பெலிஸ் 5. டொமினிகா 6. க்ரெனடா 7. கையானா 8. ஹைத்தி 9. ஜமைக்கா 10. மாண்டிசராட் 11. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் 12. செயிண்ட் லூசியா 13. செயிண்ட் வின்செண்ட் மற்றும் க்ரெனாடின்ஸ் 14. சுரி நாம் 15. ட்ரினிடாட் மற்றும் டொபேகோ.
Q14. கிழக்கு ஆசிய நாடுகள் யாவை?
சீனா, தைவான், ஜப்பான், வடக்கு மற்றும் தென் கொரியா. இந்த நாடுகளுக்குள் எந்த மேம்பாட்டு அமைப்பும் கிடையாது.
Q15. மத்திய அமெரிக்க நாடுகள் யாவை?
பெலிஸ், கோஸ்டாரிகா, ஏல்சல்வேடார், பனாமா, கவுத்தமாலா, நிக்காரகுவா மற்றும் ஹோண்டூராஸ்.
Q16. மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டுறவு அமைப்பு யாது?
CAIS / SICA - Central American Integration System - மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பு - தொடக்கம் 1.2.1993. இந்த அமைப்பு இதற்கு முன்பாக - CACM - Central American Common Market - மத்திய அமெரிக்க பொது சந்தை என்ற பெயரில் 13.12.1960 முதல் இயங்கி வந்தது. இதன் காரிய அலுவலகம் ஏல்சால்வேடோர் நாட்டில் உள்ளது. இதில் எட்டு உறுப்பினர்களும், 8 பார்வையாளர்கள் நாடுகளும் உள்ளன.
Q17. மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகள் யாவை?
பெலிஸ், கோஸ்டாரிகா, ஏல்சல்வேடார், பனாமா, கவுத்தமாலா, நிக்காரகுவா, ஹோண்டூராஸ் மற்றும் டொமினிகன் குடியரசு.
Q18. லத்தீன் அமெரிக்க நாடுகள் எனப்படுபவை யாவை?
அர்ஜெண்டினா, பொலிவியா, ப்ரேசில், சிலி, கொலம்பியா, இக்குவேடார், பெரு, உருகுவே, வெனிசுலா.
Q19. லத்தீன் அமெரிக்க நாடுக ளின் கூட்டுறவு அமைப்பு எது?
USAN - Union of South American Nations - தென் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமை சங்கம் - தொடக்கம் - 23.5.2008/11.3.2011; தலை நகர் - க்விட்டோ, இக்குவேடார்; உறுப்பினர் நாடுகள் - 12 -
1. அர்ஜெண்டினா, 2. பொலிவியா, 3. ப்ரேசில், 4. சிலி, 5. கொலம்பியா, 6. இக்குவேடார், 7. கையானா, 8. பாராகுவே, 9. பெரு, 10. சுரி நாம், 11. உருகுவே, 12. வெனிசுலா. பார்வையாளர் நாடுகளாக மெக்சிகோ மற்றும் பனாமா இயங்கி வருகின்றன.
Q20. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் உலக நாடுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் உலகம்.
Q21. "முதல் உலக நாடுகள்" (First World) என்பது...
பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேற்றமடைந்த நாடுகள்.
உதாரணமாக கம்யூனிசம் அல்லாத வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் - அமெரிக்கா, இங்கிலாந்து.
Q22. "இரண்டாம் உலக நாடுகள்"  SECOND WORLD என்பது...
இத்தொடர் பொதுவாக கம்யூனிச நாடுகளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. சமீப காலங்களில் கம்யூனிச நாடுகள் பிளவுபட்டதையடுத்து, இத்தொடர் அதிக புழக்கத்தில் இல்லை.
Q23. "மூன்றாம் உலக நாடுகள்" THIRD WORLD  என்பது...
உலக அரசியலில் அதிகமாக பிரயோகப்படுத்தப்படும் தொடர். உலகின் பாதி நாடுகள் இவ்வகையை சாரும். பொருளாதாரம் மற்றும் தொழிற் நுட்பத்தில் பின் தங்கிய நாடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வகை நாடுகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.