Khub.info Learn TNPSC exam and online pratice

மேற்கு வங்காளம்

Q1. மேற்கு வங்காளம் WEST BENGAL
தொடக்கம் : 15.8.1947.
தலை நகர் : கொல்கத்தா.
பரப்பளவு : 88,752 ச.கி.மீ. (14 வது)
ஜனத்தொகை : 9,13,47,736 (4 வது இடம்)
மொழி : பெங்காலி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 77.08%
மாவட்டங்கள் : 20.
முக்கிய நகரங்கள் : கொல்கத்தா, கரக்பூர், டார்ஜிலிங், மூர்ஷிதாபாத், நடியா, மிதினாபூர், தினாஜ்பூர், புர்துவான், சித்தரஞ்சன், பர்ன்பூர், சிலிகுரி.
மாநில எல்லைகள் : வங்காள தேசம், நேபாளம், பூடான், ஒடிசா, ஜார்க்கண்ட், பீஹார், சிக்கிம், அஸ்ஸாம்.
மக்களவை தொகுதிகள் : 42.
மாநிலங்களவை தொகுதிகள் : 16.
சட்டமன்ற தொகுதிகள் : 295.
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : கங்கை, பாகீரதி, ஹூக்ளி, டீஸ்டா.
மாநில மலர் : பவழ மல்லி.
மாநில மரம் : ALSTONIA SCHOLARIS (DEVIL TREE)
மாநில பறவை : மீன் கொத்தி.
மாநில மிருகம் : பூனை.
மாநில ஆளுநர் : கேசரி நாத் திரிபாதி.
மாநில முதன் மந்திரி : மம்தா பானர்ஜி.


Q2. வரலாற்று சுருக்கம் :
இந்த பகுதி மௌரிய, குப்த, பாலா மற்றும் சேனா வம்சத்தினரால் ஆளப்பட்டு, இஸ்லாமிய நவாப் மன்னர்களால் ஆளப்பட்டு வந்த இந்த பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி வங்காள மாகாணமாக இயங்கி வந்தது. 1905ல் வங்காளம் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளமாக பிரிக்கப்பட்டது. சுதந்திரத்தின் போது கிழக்கு வங்காளம், கிழக்கு பாகிஸ்தானாக, பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. மேற்கு வங்காளம் இந்தியாவுடன் இணைந்து ஒரு மாகாணமாக செயல்பட்டு வருகிறது. மாநில சீரமைப்பு திட்டத்தின் மூலம், ஃப்ரெஞ்ச் பகுதியான சந்தர் நாகூர் இதனுடன் இணைக்கப்பட்டு மேற்கு வங்காள மாகாணமாக 1.1.1956 முதல் இயங்கி வருகிறது.
Q3. மேற்கு வங்காளத்தின் முதல் முதலமைச்சர் யார்?
ப்ரஃபுல்ல சந்திர கோஷ் - 1947 - 1948.
Q4. மேற்கு வங்காளத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. கூச் பீஹார் (SC) 2. அலிபூர் துவார் 3. ஜல்பைகுரி(SC) 4. டார்ஜிலிங் 5. ராணிகஞ்ச், 6. பாலூர்காட் 7. வடக்கு மால்டா 8. தெற்கு மால்டா 9. ஜாங்கிர்பூர் 10. பஹரம்பூர் 11. மூர்ஷிதாபாத் 12. கிருஷ்ணா நகர் 13. ரணாகாட்(SC) 14. பங்காவ்ன் (SC) 15. பாரக்பூர் 16. டம்டம் 17.பராசத் 18. பாசிஹட் 19. ஜெயா நகர் (SC) 20. மதுராபூர் (SC) 21. டைமண்ட் ஹார்பர் 22. ஜாதவ்பூர் 23. கிழக்கு கொல்கத்தா 24. வடக்கு கொல்கத்தா 25. ஹௌரா 26. உலுபேரியா 27. ஸ்ரீராம்பூர் 28. ஹூக்ளி 29. ஆரம்பாக் (SC) 30. தாம்லூக் 31. காந்த்தி 32. கட்டால் 33. ஜார்கிராம் (SC) 34. மெதினிபூர் 35. புருளியா 36. பங்க்குரா 37. பிஷ்ணுபூர் (SC) 38. கிழக்கு பர்தமான் (SC) 39. பர்தமான் துர்காபூர் 40. அசன்சோல் 41. போல்பூர் (SC) 42. பீர்பும். 
Q5. மேற்கு வங்காளத்தின் மா நகராட்சிகள் யாவை?
1. கொல்கத்தா, 2. ஹௌரா, 3. சந்தன் நகர், 4. அசன்சோல், 5. துர்காபூர், 6. சிலிகுரி.
Q6. மேற்கு வங்காளத்தின் மாநிலங்களவை தொகுதிகள் எத்தனை?
16
Q7. மேற்கு வங்காளத்தின் மாவட்டங்கள் யாவை?

1. அலிபூர் துவார் : பூடான், அஸ்ஸாம் மற்றும் கூஸ்பீஹார், ஜல்பை குரி மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம்.
2. பங்க்குரா : புருளியா, பர்தமான், ஹூக்ளி, மேற்கு மெதினிபூர் மாவட்டங்கள் இதன் எல்லை. கைவினைப் பொருட்கள், சுடுமண் பொருட்கள் மற்றும் பாலுச்சராய் புடவைகள் புகழ்பெற்றது.
3. பர்தமான் : ஜார்க்கண்ட் மா நிலம், பிர்பூம், மூர்ஷிதாபாத், நடியா, ஹூக்ளி, பங்குரா மாவட்டங்கள் இதன் எல்லை. தொழிற்சாலைகள் நிறைந்த ஊர். அசன்சோல் நிலக்கரி சுரங்கங்கள், துகாபூர் இரும்பு உருக்காலை, சித்தரஞ்சன் ரயில் எஞ்ஜின் தொழிற்சாலை மற்றும் சில தொழிற்சாலைகளும் உள்ளன. விஷ்ணுபூர் என்ற இடம் சுடுமண் பொருட்களுக்கு புகழ்பெற்றது. உயர்கல்வி நிலையங்கள் உள்ளன.
4. பீர்பும் : ஜார்க்கண்ட் மாநிலம், மூர்ஷிதாபாத், பர்தமான் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயமே முக்கிய தொழில். ரவீந்திர நாத் தாகூரின் விஷ்வ பாரதி பல்கலைக் கழகம் இங்குள்ளது. கைவினைப் பொருட்கள் தொழில் பரவியுள்ள மாவட்டம். சந்தால் பழங்குடியினர் அதிகம் உள்ளனர்.
5. கூச் பிஹார் : அஸ்ஸாம், வங்காள தேசம் மற்றும் ஜல்பை குரி, அலிபூர் துவார் மாவட்டங்கள் இதன் எல்லை. நாராயண் வம்சத்தால் ஆளப்பட்டு வந்த குறு நில மன்னர் பகுதி. 1950ல் இந்தியாவுடன் இணைந்தது. சில சுற்றுலா தலங்களும் உள்ளன.
6. டார்ஜிலிங் : நேபாளம், பூட்டான், வங்காள தேசம், சிக்கிம் மா நிலம், ஜல்பை குரி, வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. மிகவும் புகழ்பெற்ற கோடை வாசஸ்தலம். இங்கு விளையும் தேயிலை உலகப்புகழ் பெற்றது. இங்குள்ள சிறு தட மலை ரயில் உலகப் புராதனச் சின்னமாக கருதப்படுகிறது. காலிம்போங் எனும் இடம் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலம் மட்டுமின்றி, மலர்கள் சந்தை மற்றும் கண்காட்சி புகழ்பெற்றது. சிலிகுரி என்ற மலைப்பகுதியில் ராணுவ அலுவலகங்கள் நிறைய உள்ளன.
7. வடக்கு தினாஜ்பூர் : வங்காள தேசம், பீஹார், டார்ஜிலிங், மால்டா, தெற்கு தினாஜ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. ஆசியாவின் பெரிய பறவைகள் சரணாலயம் இங்குள்ளது.
8. தெற்கு தினாஜ்பூர் : வங்காள தேசம், வடக்கு தினாஜ்பூர், மால்டா மாவட்டங்கள் இதன் எல்லை.
9. கிழக்கு மிட்னாபூர் : வங்காள விரிகுடா, ஒடிசா மா நிலம், மேற்கு மிட்னாபூர், ஹௌரா மாவட்டங்கள் இதன் எல்லை. கடலோர மாவட்டம். ஹால்தியா துறைமுகமும், திகா கடலோர அழகான கடற்கரை சுற்றுலா தலம்.
10. ஹூக்ளி : கொல்கத்தா, ஹௌரா, மேற்கு மிட்னாபூர், பங்க்குரா, பர்தமான், நடியா மாவட்டங்கள் இதன் எல்லை. சணல் தயாரிப்பில் முன்னணி மாவட்டம். சந்தன் நாகூர், இம்மாவட்டத்தின் ஒரு பகுதி ஃப்ரான்சு நாட்டால் ஆளப்பட்டு வந்த பகுதி.
11. ஹௌரா : கொல்கத்தா, 24 பர்கானா, கிழக்கு மெதினாபூர், மேற்கு மெதினாபூர், ஹூக்ளி மாவட்டங்கள் இதன் எல்லை. கொல்கத்தா நகருடன் இணைந்த ஒரு இரட்டை நகரம் ஹௌரா. ஹூக்ளி நதிக்கரையின் ஒரு புறம் ஹௌராவும் மறுபுறம் கொல்கத்தாவுமான இரட்டை நகரங்கள். இவ்விரு நகரங்களையும் இணைப்பது ஹௌரா பாலம், வித்யா சாகர் பாலம் மற்றும் விவேகான்ந்தா பாலம் (இவற்றைப் பற்றி பாலங்கள் பகுதியில் காண்க). ஹௌரா ரயில்வே ஸ்டேஷன் இந்தியாவின் புகழ்பெற்ற ரயில்வே நிலையங்களில் ஒன்று. இதை வடிவமைத்தவர் ஹேல்சி ரிகார்டோ என்ற ஆங்கிலேய நிபுணர். (இதைப் பற்றி ரயில்வே பற்றிய பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது).
12. ஜல்பைகுரி : வங்காள தேசம், பூட்டான் நாடுகளும், கூச் பிஹார், அலிபூர்துவார் மற்றும் டார்ஜிலிங் மாவட்டங்கள் இதன் எல்லை. மலைப்பிரதேச காடுகள் நிறைந்த பகுதி. தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் நிறைந்த பகுதி. தேயிலைத் தோட்டங்கள் அதிகம்.
13. கொல்கத்தா : தலை நகர் மாவட்டம். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், ஹௌரா, ஹூக்ளி மற்றும் நடியா மாவட்டங்கள் இதன் எல்லை. ஹௌராவுடன் இணைந்த இரட்டை நகரம் - மேற்கு வங்காளத்தின் நிர்வாக மற்றும் வணிக தலை நகரம். இந்த மாவட்ட த்தின் எல்லை கொல்கத்தா நகர எல்லைக்குள் அடங்கியது.
14. மால்டா : வங்காள தேசம், ஜார்க்கண்ட், பீஹார் மா நிலங்கள், தெற்கு, வடக்கு தினாஜ்பூர், மூர்ஷிதாபாத் மாவட்டங்கல் இதன் எல்லை.
15. மூர்ஷிதா பாத் : வங்காள தேசம், ஜார்க்கண்ட் மா நிலம், பிர்பூம், பர்தமான், நடியா மாவட்டங்கள் இதன் எல்லை. சில்க் தொழில் மிகவும் தீவிரமாக நட த்தப்படுகிறது.
16. நடியா : வங்காள தேசம், மூர்ஷிதாபாத், பர்தமான், ஹூக்ளி, வடக்கு 24 பர்கானா மாவட்டங்கள் இதன் எல்லை. சைதன்ய மகாப்ரபு பிறந்த மாவட்டம்.
17. வடக்கு 24 பர்கானா : வங்காள விரிகுடா, தெற்கு 24 பர்கானா, ஹௌரா, ஹூக்ளி, நடியா மாவட்டங்கள் இதன் எல்லை.
18. புருளியா : ஜார்க்கண்ட் மா நிலம், பர்தமான், பங்க்குரா, மேற்கு மிதினாபூர் மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம். 19. தெற்கு 24 பர்கானாஸ் : வங்காள விரிகுடா, ஹௌரா, கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்கள் இதன் எல்லை.
20. மேற்கு மிதினாபூர் : ஒடிசா, ஜார்க்கண்ட் மா நிலங்கள் மற்றும் புருளியா, பங்க்குரா, ஜூக்ளி, ஹௌரா, கிழக்கு மிதினாப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்த மாவட்டத்தின் ""கரக்பூர்"" ஒரு முக்கியமான நகரம்/ரயில்வே சந்திப்பு, தொழிற்சாலைகள்.
1. ரயில்வேயின் ஒரு மண்டலம் (DIVISON), முக்கியமான சந்திப்பு (JUNCTION) மற்றும் தொழிற்சாலைகள் (ரயில்வே) நிறைந்த ஊர்.
2. உலகிலேயே இரண்டாவது நீளமான ரயில்வே நடைமேடை கொண்ட ரயில்வே சந்திப்பு.
3.இந்தியாவின் முதல் IIT - INDIAN INSTITUTE OF TECHNOLOGY இங்குதான் தொடங்கப்பட்டது.
4. கரக்பூருடன் சேர்ந்த ""ஹிஜ்லி"" இதன் இரட்டை நகரம். மேலும், ஹிஜ்லி ஒரு குறு நில மன்னர் பகுதியாக இருந்தது. (HIJLI KINGDOM). 
Q8. மேற்கு வங்காளத்தின் மற்ற சுற்றுலா தலங்கள் யாவை?
டார்ஜிலிங், சுந்தரவனம், சிலிகுரி, காலிம்போங்.
Q9. மேற்கு வங்காளத்தின் பாரம்பரிய சங்கீத த்தின் பெயர் என்ன?
ரவீந்திர சங்கீதம்.
Q10. மேற்கு வங்காளத்தின் முக்கிய பண்டிகைகள் யாவை?
துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை, காளி பூஜை, வைகாசி முதல் தேதி (பொய்லா பொய்ஷாக்).
Q11. மேற்கு வங்காளத்தின் முக்கிய தொழில்கள் யாவை?
"கப்பல் கட்டுமானம், ஆயத்த ஆடை, கைத்தறி துணிகள், சுடுமண் பொருட்கள், தோல்பொருட்கள், இரும்பாலை, ரயில்பெட்டி, சரக்கு பெட்டி, மருந்து பொருட்கள் என அனைத்தும்."
Q12. மேற்கு வங்காளத்தின் சில முக்கிய பிரபலங்கள் :-
1.   ரவீந்திர நாத் தாகூர் : எழுத்தாளர், சிந்தனையாளர், கவிஞர், நாவலாசிரியர், இசையமைப்பாளர் - நோபல் பரிசு பெற்றவர் - நம் நாட்டிற்கும், வங்காள தேசத்திற்கும் தேசிய கீதம் அளித்தவர். சுதந்திர போராளி. காந்திஜியின் நெருங்கிய நண்பர்.
2.   சரத் சந்திர சட்டர்ஜி, பங்கிம் சந்திர சட்டர்ஜி : புகழ் பெற்ற எழுத்தாளர்கள் - கதாசிரியர்கள் - கவிஞர்கள் - பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பாடல் தேசிய பாடலாக உள்ளது.
3.   அபர்ணா சென், சுஷ்மிதா சென், மிதுன் சக்கரவர்த்தி, உத்தம் குமார், விக்டர் பானர்ஜி, கிஷோர்குமார், அசோக்குமார், பிபாஷா போஸ், மூன்மூன் சென், ராணி முகர்ஜி, ஷர்மிளா தாகூர் - மேலும் பல புகழ் பெற்ற சினிமா கலைஞர்கள்.
4.   அனில் பிஸ்வாஸ், கவுதம் கோஷ், ரிஷிகேஷ் முகர்ஜி, சத்யஜித் ரே - புகழ்பெற்ற இயக்குனர்கள்.
5.   ஹேமந்த் குமார், மன்னா டே, சலீல் சவுத்ரி, அபிஜித் ஷான், ஷ்ரேயா கோஷல், அல்கா யாக்னிக் - புகழ்பெற்ற பாடகர்கள்.
6.   உதய்சங்கர் - நடனக்கலைஞர்.
7.   பி.சி. சென், ஜோதிபாசு, ம்ம்தா பானர்ஜி, கனிகான் சவுத்ரி, புத்த தேவ் பட்டாச்சார்யா - அரசியல்வாதிகள்.
8.   நேதாஜி, குதிராம் போஸ், அரவிந்த கோஷ், பிபின் சந்திர பால், சரோஜினி நாயுடு, பி.சி. ராய் - சுதந்திர போராட்ட தியாகிகள்.
9.   மேக் நாத் சாஹா - விஞ்ஞானி.
10. சைதன்ய மகாப்ரபு, ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி, விவேகான்ந்தர், பக்தி வேதாந்த ப்ரபு தேவா - ஆன்மீகவாதிகள்.
11. ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் - சமூக சிந்தனையாளர்கள்.
12. மிகிர் சென் - ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர்.
13. ஆர்த்தி சாஹா - ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண்.
14. அர்ஜுன் அட்வால் - கோல்ஃப் விளையாட்டு வீரர்.
15. திப்யேந்து பருவா, சூர்ய சேகர் கங்குலி - சதுரங்க வீர ர்கள்.
16. பங்கஜ் ராய், அருண்லால், திலீப்தோஷி, சபாகரீம், சவுரவ் கங்குலி - புகழ்பெற்ற கிரிக்கெட் வீர்ர்கள்.
17. சுனி கோஸ்வாமி, P.K. பானர்ஜி, சுப்ரதா பட்டசர்ஜி, கிருஷ்ணா தே - புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள்.
18. அமர்த்யா சென் - பொருளாதார நிபுணர் - நோபல் பரிசு பெற்றவர்.
19. ப்ரணாப் முகர்ஜி - அரசியல்வாதி, மத்திய அமைச்சர், குடியரசு தலைவர்.