Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. இந்திய நகரங்களும், அவற்றின் புகழும் :
வ.எண். நகரங்கள் புகழுக்கான காரணம்
1 அதானி, நிப்பன், மிரஜ், கோலாப்பூர் - உத்திரபிரதேசம் : தோல் "கோலாப்பூரி" செருப்புகளும், இதர பொருட்களும்.
2 அடையார், சென்னை : "தியாசோஃபிகல் சொஸைட்டி ஆஃப் இந்தியா" வின் தலைமையகம், புற்று நோய் மருத்துவமனை.
3 ஆக்ரா, உ.பி : தாஜ்மஹால், முத்து மசூதி, கோட்டை, அக்பர் கல்லறை, தோல் பொருட்கள்.
4 அஜ்மீர், உ.பி : மேயோ கல்லூரி, க்வாஜா மொய்னூதீன் சிஷ்டி கல்லறை மற்றும் தொழுகை, புஷ்கர் ஏரி.
5 அலியாபெட், குஜராத் : இந்தியாவின் முதல் கடல்சார் எண்ணெய் கிணறு.
6 அலஹாபாத் : கங்கை, சரஸ்வதி, யமுனை நதிகள் சங்கமம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளா.
7 ஆலந்தி - மகாராஷ்டிரா : ஆடி, கார்த்திகை மாதங்களில் நடத்தப்படும் சந்தை திருவிழா.
8 அல்மோரா - உ.பி கோடை வாசஸ்தலம், சால்வைகள்.
9 அம்போலி - மகாராஷ்டிரா : மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு கோடை வாசஸ்தலம்.
10 அமிர்தசரஸ் - பஞ்சாப் : சீக்கியர்களின் "பொற்கோயில்" மற்றும் 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை.
11 ஆர்வி - பூனே, மகாராஷ்டிரா : இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் தொலைதொடர்புத் தகவல் மையம்.
12 அவுரங்காபாத் - மகாராஷ்டிரா அவுரங்கசீப் மற்றும் அவருடைய மனைவியின் கல்லறை.
13 அயோத்யா - உ.பி : ராமர் பிறந்த தலம், இந்துக்களின் புனித தலம்.
14 ஆலப்புழை - கேரளா : உப்பங்கழிவு, படகுப்போட்டி, கயிறு தொழில், சுற்றுலா
15 ஆள்வார் - ராஜஸ்தான் : கோடை வாசஸ்தலம், சுற்றுலா மையம்.
16 ஆரணி - தமிழ் நாடு : பட்டுப்புடவைகள்.
17 பெங்களூரு - கர் நாடகம் : கணினித்துறை, தோட்டங்கள்.
18 பத்ரி நாத் - உத்தர்காண்ட் : இந்துக்களின் புனித தலம்.
19 பரௌனி - பீஹார் : எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயம்.
20 பேலூர் - மேற்கு வங்காளம் : விவேகானந்தர் நிறுவிய ராமகிருஷ்ண மடம்.
21 பேலூர் - கர்நாடகம் : சென்னகேசவ கோவில் மற்றும் ஹொய்சாலா வம்ச சிற்ப கோவில்கள், சுற்றுலா தலம்.
22 பக்ரா - பஞ்சாப் : சட்லஜ் நதியில் உள்ள அணை.
23 பிலாய் - மத்திய பிரதேசம் : இரும்பு உருக்காலை.
24 பீமா சங்கர் - மகாராஷ்டிரா : சிவனின் ஜோதிலிங்க கோவில்.
25 போபால் - மத்திய பிரதேசம் : 1984 - விஷ வாயு கசிவு நிகழ்ச்சியும், கோரமும்.
26 புவனேஷ்வர் - ஒடிசா : லிங்கராஜா கோவில், குகைக் கோவில்கள்.
27 பீஜாப்பூர் - கர்நாடகம் : "கோல் கும்பாஸ்" - சுற்றுலா தலம்.
28 புத்த கயா - உ.பி. புத்தர் மெய் ஞானம் பெற்ற இடம், புத்தர்கள் புனித சுற்றுலா தலம்.
29 சந்திகர் - யூனியன் பிரதேசம் (பஞ்சாபில் உள்ளது) : சீக்கிய பொற்கோவில், திட்டமிட்ட அழகான நகரம்.
30 செராபுஞ்சி - மேகாலயா : உலகின் இரண்டாவது அதிக மழை பெய்யும் இடம்.
31 சிதம்பரம் - தமிழ் நாடு : நடராஜர் கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம்.
32 கொச்சின் - கேரளா : துறைமுகம், கப்பற்படை தளம்.
33 கொச்சின் - கேரளா : உலகின் உயர்ந்த விமான தளம்.
34 சித்தோர்கர் - ராஜஸ்தான் கோட்டை மற்றும் அரண்மனைகளும். சுற்றுலா தலம்.
35 சென்னை - தமிழ் நாடு ஜார்ஜ் கோட்டை, மெரீனா கடற்கரை, மகாபலிபுரம், கபாலீஸ்வர ர் கோவில் என பல சுற்றுலா தலங்கள்.
36 தக்ஷ்ணேஸ்வர் - மேற்கு வங்காளம் : விவேகான ந்தர் ஆன்மீகத்தை மேற்கொண்ட இடம்.
37 தௌலத்தா பாத் - மஹாராஷ்டிரா : 1338ல் யாதவர்கள் கட்டிய கோட்டை.
39 தாரிவால் - பஞ்சாப் : கம்பளி ஆடைகள்.
40 தெஹூ - மஹாராஷ்டிரா : கவிஞர் துக்காராம் பிறந்த இடம்.
41 டெல்லி : தலை நகர் - மிகப்பெரிய சுற்றுலா தலம்.
42 திக்பாய் - அஸ்ஸாம் : எண்ணெய் கிணறு மற்றும் சுத்திகரிப்பு ஆலை.
43 தில்வாரா - ராஜஸ்தான் : கோடை வாசஸ்தலம் மவுண்ட் அபு அருகில் உள்ளது. இந்து மற்றும் ஜைன கோவில்கள்.
44 துவாரகா - குஜராத் : கிருஷ்ணர் பிறந்த தலம் - இந்துக்களின் புனித தலம்.
45 டெஹ்ராடூன் - உத்தராகாண்ட் : கோடை வாசஸ்தலம் - பாஸ்மதி அரிசி.
46 எல்லோரா மற்றும் அஜந்தா - அவுரங்காபாத் - மகாராஷ்டிரா: புத்த மத குகைக் கோயில்கள்.
47 எர்ணாகுளம் - கேரளா : துறைமுகம் - கொச்சினுடன் இணைத்த இரட்டை நகரம்.
48 ஃபத்தேஹ்பூர் சிக்ரி - உ.பி. அக்பரால் உருவாக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஆரம்ப தலை நகரம்.
49 ஃபிரோசாபாத் - உ.பி : கண்ணாடி தொழில்.
50 கங்கோத்ரி - உத்தராகண்ட் : கங்கையின் பிறப்பிடம்.
51 காஸிபூர் - உ.பி : அரசாங்க ஓபியம் தொழிற்சாலை.
52 கௌமுகி - உத்தராகண்ட் : பாகீரதி ஆற்றின் தோற்றம்.
53 கோல்கொண்டா - ஹைதராபாத் - தெலங்கானா : புகழ்பெற்ற கோட்டை.
54 குல்பர்கா - கர்நாடகம் : கோட்டை.
55 குருவாயூர் - கேரளா : கிருஷ்ணர் கோயில்.
56 ஹாளேபீடு - கர்நாடகம் : ஹொய்சாள வம்ச சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்கள்.
57 ஹல்திகாட் - உ.பி : மலை இடைவெளிப்பாதை - ராணா பிரதாப் சிங் முகலாயருடன் போர் நடத்திய இடம்.
58 ஹம்பி - கர்நாடகம் : விஜய நகர பேரரசின் தலைநகர் - உலகப் புராதன சின்னம் - சிற்பக் கலைகள் நிறைந்த சுற்றுலா தலம்.
59 ஹிராகுட் : ஒடிசா : மஹா நதியின் குறுக்கே 26 கி.மீ. நீள பாலம் - பல வகையான சுரங்கங்கள்.
60 ஹரித்துவார் - உத்தராகண்ட் : ஷிவாலிக் மலைப் பகுதியில் கங்கை சமவெளிக்கு நுழையும் இடத்தில் அமைந்துள்ளது. தக்ஷ மகா தேவ கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்துக்களின் புனித சுற்றுலா தலம்.
61 ஹைதராபாத் & செகந்திராபாத் - தெலங்கானா : மூசி நதிக்கரையில் அமைந்துள்ள இரட்டை நகரம். சார்மினார் மற்றும் இதர நிறுவனங்களும், அமைப்புகளும்.
62 இம்ஃபால் - மணிப்பூர் : சுற்றுலா தலம் - கைவினைப் பொருட்கள், கைத்தறி, மணிப்பூரி நடனம்.
63 ஜபல்பூர் - மத்திய பிரதேசம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ளது, பளிங்கு கற்களுக்கு புகழ்பெற்றது.
64 ஜாடுகுடா - ஜார்க்கண்ட் : கனிம சுரங்கங்கள் - யுரேனியம் இருப்பு கண்டுபிடிப்பு.
65 ஜாக்ரெம் - திரிபுரா : சுடு நீர் ஊற்றுகள்.
66 ஜலந்தர் - பஞ்சாப் : விளையாட்டு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை பொருட்கள்.
67 ஜெய்சல்மேர் - ராஜஸ்தான் : தார் பாலைவனத்தில் உள்ள கோட்டைகள் நிறைந்த மாவட்டம்.
68 ஜூனாகத் - குஜராத் : கிர் காடுகள் - ஆசிய சிங்கங்கள்.
69 ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் : இளஞ்சிவப்பு நகரம். மிகப் பெரிய சுற்றுலா தலம்.
70 காஞ்சிபுரம் - தமிழ் நாடு : பல்லவ தலை நகர் - இந்துக்களின் சுற்றுலா தலம் - சங்கர மடம் - கோவில்கள் - பட்டுப்புடவை.
71 கண்டாலா - மகாராஷ்டிரா : கோடை வாசத்தலம்.
72 கன் ஹோரி - மும்பை - மஹாராஷ்டிரா : புத்தமத குகைக் கோவில்கள்.
73 கசவ்லி - இமாச்சல பிரதேசம் : கோடை வாசத்தலம் - பாஸ்ட்டர் மருத்துவ ஆராய்ச்சி நிலையம்.
74 கொல்லூர் - கர் நாடகம் : மூகாம்பிகை கோவில்.
75 கான்பூர் - உ.பி : கங்கை கரை நகரம் - தோல் பொருட்கள் மற்றும் பின்னல் ஆயத்த ஆடைகள்.
76 கன்னியாகுமரி - தமிழ் நாடு : இந்தியாவின் தென் கோடி - 133 அடி உயர திருவள்ளுவர் சிலை - சுற்றுலா தலம்.
77 கபில வாஸ்து - பீஹார் : பண்டைய நகரம்.
78 காவேரி பூம்பட்டினம் - தமிழ் நாடு : கடற்கரை கிராமம் - சரித்திர கால துறைமுகம்.
79 காஸிரங்கா - அஸ்ஸாம் : ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம்.
80 கேதார் நாத் - உத்தராகாண்ட் : இந்துக்களின் புனித தலம்.
81 கடக் வாஸ்லா - பூனே - மஹாராஷ்டிரா : தேசிய ராணுவ பயிற்சி பள்ளி.
82 கோதெர்மா - பீஹார் : மைக்கா சுரங்கம்.
83 கோலாப்பூர் - மகாராஷ்டிரா : தோல் பொருட்கள் - அம்பாபாய் கோவில் - சத்ரபதி சிவாஜியின் தலை நகராக இருந்த நகரம்.
84 கொனாரக் - ஒடிசா : சூரிய பகவான் கோவில்.
85 கொய்னா - மகாராஷ்டிரா : நீர்மின் சக்தி நிலையம்.
86 குந்தன் பூர் - பீஹார் : 24வது ஜெயின் தீர்த்தங்கரர் பிறந்த தலம் - ஜெயின் மதத்தினரின் புனித தலம்.
87 குருக்ஷேத்ரா - அம்பாலா - பஞ்சாப் : மகாபாரதக் கால போர்க்களம்.
88 கொடைக்கானல் - தமிழ் நாடு : கோடை வாசத்தலம்
89 காக்கி நாடா - ஆந்திர பிரதேசம் : துறைமுகம்.
90 குச்சி புடி - ஆந்திரபிரதேசம் : குச்சி புடி நடனம் தோன்றிய கிராமம்.
91 லக்னௌ - உ.பி : தலை நகர் - சுற்றுலா தலம்.
92 லும்பினி - நேபாளம் : புத்தர் பிறந்த தலம்.
93 லுனேஸ் - குஜராத் : எண்ணெய் கிணறுகள்.
94 லோனாவாலா - மகாராஷ்டிரா : கோடை வாசத்தலம்.
95 மதுரை - தமிழ் நாடு : சங்கத்தமிழ் தோன்றிய இடம், மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகைப்பூ, சுங்குடி கைத்தறி புடவைகள்.
96 மீரட் - உ.பி. : சிப்பாய் கலகம் 1857ல் தோன்றிய இடம்.
97 மிர்ஸாபூர் : பீங்கான் பொருட்கள் - பித்தளைப் பொருட்கள் - மாம்பழம்.
98 மூரத் - மஹாராஷ்டிரா : கடற்கரை - கடலுக்குள் அமைந்துள்ள கோட்டை.
99 மைசூர் - கர் நாடகம் : சுற்றுலா தலம், பட்டு.
100 மும்பை - மஹாராஷ்டிரா இந்திய வர்த்தக தலை நகர், சுற்றுலா மையம்.
101 மவுண்ட் அபு - ராஜஸ்தான் : கோடை வாசத்தலம் - ஜைன மத கோவில்கள்.
102 நாக்பூர் - மஹாராஷ்டிரா : ஆரஞ்சு விளைச்சல்.
103 நாகர்கோவில் - தமிழ் நாடு : நாகராஜா கோவில்.
104 நாகார்ஜுனா சாகர் கொண்டா : தெலங்கானா மற்றும் ஆந்திரா மா நிலத்தில் ( நல்கொண்டா மற்றும் குண்டூர் மாவட்டங்கள்) பரவியிருக்கும் கிருஷ்ணா நதி உள்ள அணை.
105 நகர் காட்டியா - அஸ்ஸாம் : எண்ணெய்க் கிணறு.
106 நைனிடால் - உத்தராகாண்ட் : கோடை வாசத்தலம்.
107 நாளந்தா - பீஹார் : புராதன பல்கலைக்கழகம்.
108 நாசிக் - மஹாராஷ்டிரா : இந்திய அரசாங்க பாதுகாப்பு அச்சகம் - திராட்சை விளைச்சல்.
109 பாட்னா - பீஹார் : தலை நகர் - பாடலிபுத்திரம் என சரித்திர காலத்தில் அழைக்கப்பட்டது.
110 பாலி - மஹாராஷ்டிரா : அஷ்ட வினாயகர் கோவில்.
111 பந்தார்பூர் - மஹாராஷ்டிரா : விட்டோபா கோவில் - சரித்திரப்படி ஔரங்கசீபும் சத்ரபதி சிவாஜியும் ஒப்பந்தம் செய்து கொண்ட இடம்.
112 பானிபட் - அரியானா : 1526, 1556, 1571 களில் மூன்று போர் நடந்த இடம்.
113 பவன்புரி - பீஹார் : ஜைன மதத்தினருக்கு முக்கியமான புனித தலம்.
114 ப்ளாஸ்ஸி - மேற்கு வங்காளம் : 1757ல் இந்திய சரித்திரத்தில் நடந்த முக்கிய போர்.
115 பொன் பதிர் கூடம் - செங்கல்பட்டு - தமிழ் நாடு : ராமர் கோவில்.
116 புதுச்சேரி : யூனியன் பிரதேசம் அரவிந்தர் ஆசிரமம்.
117 போர்ட் ப்ளேயர் - அந்தமான் நிக்கோபார் : சரித்திரப் புகழ்பெற்ற சிறை - 2004ல் சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்டது.
118 போர்பந்தர் - குஜராத் : காந்தி மகான் பிறந்த இடம் - கிருஷ்ணரின் நண்பர் சுடாமாவுக்கு கோவில் உள்ளது.
119 பூரி - ஒடிசா : ஜகந்நாதர் கோவில்.
120 பூனே - மஹாராஷ்டிரா : : பேஷ்வாக்களின் ஆட்சி இடம் - தொழிற்துறையில் மிகவும் முன்னேற்றமடைந்த இடம்.
121 பட்டியாலா - பஞ்சாப் : தேசிய விளையாட்டுப்பயிற்சி கல்லூரி - சிறு தொழில்கள்.
122 பழநி - தமிழ் நாடு : பழநி ஆண்டவர் மலைக்கோவில்.
123 ரத்தின கிரி - மஹாராஷ்டிரா : லோகமான்ய திலகர் பிறந்த ஊர் - சிறு துறைமுகம் - மாம்பழம்.
124 ராஜ்கிர் - பீஹார் : மஹாவீர் தனது முதல் தர்ம சபையை இங்கு கூட்டினார்.
125 ரிஷிகேஷ் - உத்தரகாண்ட் : இந்துக்களின் புனித தலம்.
126 ராஜபாளையம் - தமிழ் நாடு : நெசவாலைகள் - சிப்பிப்பாறை, கோம்பை நாய் வகைகள்.
127 சாபர்மதி - குஜராத் : காந்திஜி ஆஸ்ரமம்.
128 சத்தாரா - மஹாராஷ்டிரா : சிவாஜியின் தலை நகரம்.
129 சாஞ்சி - மத்திய பிரதேசம் : 108 உயர அடி தூண்.
130 சார நாத் - மத்திய பிரதேசம் : புத்தர் தன்னுடைய முதல் ஆன்மீக சொற்பொழிவு நட்த்திய இடம் - அசோகர் தூண்.
131 ஸ்ரீரங்கப்பட்டினம் - கர் நாடகம் : திப்பு சுல்தானின் தலை நகர் மற்றும் மறைவு இடம். காவேரியில் அமைந்துள்ள ஒரு தீவு.
132 ஸ்ரீரங்கம் - தமிழ் நாடு : ரங்க நாதர் கோவில், காவிரியில் ஒரு தீவு.
133 சேவாகிராம் - மஹாராஷ்டிரா : காந்திஜி ஆஸ்ரமம்.
134 சாந்தி நிகேதன் - மேற்கு வங்காளம் : ரவீந்திர நாத் தாகூரின் பல்கலைக் கழகம்.
135 ஷிவ்நேரி - மஹாராஷ்டிரா : சிவாஜி பிறந்த ஊர் - கோட்டை.
136 சோலாப்பூர் - மஹாராஷ்டிரா : கோட்டை - நெசவாலைகள் - படுக்கை விரிப்புகள் - போர்வை தயாரிப்பு.
137 சசாராம் - பீஹார் : ஷெர்ஷா கல்லறை.
138 சிப்சாகர் - அஸ்ஸாம் : சுற்றுலா தலம்.
139 சிகந்த்ரா - உ.பி : அக்பரின் கல்லறை.
140 சிந்த்ரி - பீஹார் : உரத்தொழிற்சாலை.
141 சோம் நாத் - குஜராத் : சிவன் கோவில் - கஜினியின் 17 முறை படையெடுப்பு.
142 சரவண பேல குலா - கர் நாடகம் : கோமதீஸ்வரா சிலை - ஜைன மத சுற்றுலா தலம்.
143 ஸ்ரீபெரும்புதூர் - சென்னை - தமிழ் நாடு : ஸ்ரீ ராமானுஜர் பிறந்த இடம் - ராஜீவ் காந்தி மரணம் அடைந்த இடம்.
144 சூரத் - குஜராத் : ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தின் காலடி பதித்த இடம். முகலாயர்கள் அளித்த அனுமதியுடன் 1612ல் வணிகம் துவங்கிய இடம் - நெசவாலைகள், வைரம் பட்டை தீட்டும் தொழில் முக்கியமானவை.
145 சிவகாசி - தமிழ் நாடு : தீப்பெட்டி, காலண்டர், பட்டாசு தொழில்.
146 ஸ்ரீவில்லிபுத்தூர் - தமிழ் நாடு : ஆண்டாள் திருக்கோவில் - உயரமான கோபுரம் - தமிழ் நாடு அரசாங்க முத்திரை.
147 தவாங் - அருணாச்சல பிரதேசம் : மகாயான புத்த மத ஆலயம் மற்றும் புனித தலம்.
148 திருச்சிராப்பள்ளி - தமிழ் நாடு : உச்சிமலை பிள்ளையார் கோவில் - ஸ்ரீ ரங்கத்துடன் இணைந்த இரட்டை நகரம்.
149 தூத்துக்குடி - தமிழ் நாடு : துறைமுகம் - வ.உ.சி. கப்பல் நிறுவனம் துவங்கிய இடம்.
150 தஞ்சாவூர் - தமிழ் நாடு : பிருகதீஸ்வர ர் கோவில்.
151 திருவலம் - தமிழ் நாடு : புகழ்பெற்ற சிவன் கோவில்.
152 திருப்பதி - ஆந்திர பிரதேசம் : ஸ்ரீ வெங்கடேஷ்வரா கோவில் - உலகின் மிக பணக்கார கோவில் - இந்துக்களின் புனித தலம்.
153 திருச்செந்தூர் - தமிழ் நாடு : கடற்கரை முருகன் கோவில்.
154 திருத்தணி - தமிழ் நாடு : முருகனின் மலைக் கோவில் - அறுபடை வீடுகளில் ஒன்று.
155 தேக்கடி - தமிழ் நாடு : தேசிய வன விலங்கு பூங்கா.
156 திரிவேணி - அலகாபாத் - உ.பி : கங்கை, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம். 12 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் கும்ப மேளா.
157 திருச்சூர் - கேரளா : பூரம் திருவிழா.
158 திருவனந்தபுரம் - கேரளா : தலைநகர் - பத்மநாபசாமி கோவில்.
159 உதய்ப்பூர் - ராஜஸ்தான் ஏரிகளின் நகரம் - ஏரிகளும் அவற்றின் அழகும், மாளிகைகளும்.
160 உடுப்பி - கர் நாடகம் : ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்.
161 உத்திரமேரூர் - தமிழ் நாடு : சுந்தரவரத பெருமாள் கோவில். கல்வெட்டுக்கள்.
162 உதகமண்டலம் - தமிழ் நாடு : கோடை வாசத்தலம் - மிகப் புகழ்பெற்ற சுற்றுலா தலம்.
163 உதயகிரி, கந்தகிரி - ஒடிசா : ஜைன மத மலைக்குகை சிற்பங்கள் - புவனேஷ்வர் அருகில்.
164 உஜ்ஜைன் - மத்திய பிரதேசம் : மகாபலேஷ்வர் கோவில்.
165 வைஷாலி - பீஹார் : புத்தர் வெகு நாட்கள் தங்கியிருந்த இடம். மஹாவீர் 24வது தீர்த்தங்கரர் இதன் அருகிலுள்ள குந்தா கிராமம் எனுமிடத்தில் பிறந்தவர்.
166 வாரணாசி - உ.பி : பட்டுப்புடவைகள் - இந்துக்களின் புனித தலம்.
167 விசாகப்பட்டினம் - ஆந்திரப் பிரதேசம் : முன்பு "வால்டேர்" எனப்பட்டது. தொழிற்சாலைகள், துறைமுகம் - அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா தலம்.
168 வார்தா - மஹாராஷ்டிரா : பருத்தி விளைச்சல் - இங்குள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
169 வாரங்கல் - தெலங்கானா : காகத்திய வம்ச தலை நகர் - 1000 கால் கோவில்.
170 யமுனோத்ரி - உ.பி : யமுனா நதி தோற்றம் - சுடு நீர் ஊற்றுகள்.
171 ஏற்காடு - சேலம் - தமிழ் நாடு : சேர்வராயன் மலையில் ஒரு கோடை வாசத்தலம்.

Q2. பொதுக் கேள்விகள் - பதில்கள் :
Q3. மாநிலங்கள் சீரமைப்பு குழு எந்த வருடம் யாருடைய தலைமையில் ஏற்படுத்தப்பட்டது?
1953 - நீதிபதி ஃபசல் அலி - மேற்பார்வை செய்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
Q4. மொழிவாரியான மாநில சீரமைப்பு என்று முதல் அமலுக்கு வந்தது?
1.11.1956.
Q5. மொழிவாரியாக உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்.
Q6. மாநில சீரமைப்பின் போது எத்தனை குறு நில மன்னர் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டன?
565
Q7. மாநில சீரமைப்பின் மூலம் 1.11.1956 முதல் எத்தனை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன?
14 மா நிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள்.
Q8. 2015 நிலையில் எத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
29 மா நிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள்.
Q9. வெளி நாட்டவர் ஆதிக்க பகுதியாக இருந்து, இந்தியாவுடன் இணைந்த கடைசி பகுதி?
கோவா - 1961.
Q10. 29வது மாநிலமாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட மாநிலம் எது?
தெலங்கானா - 2.6.2014.
Q11. இந்திய மாநிலங்களில் சிறிய மாநிலம் எது?
கோவா - 3702 ச.கி.மீ.
Q12. இந்திய மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலம் எது?
ராஜஸ்தான் - 342240 ச.கி.மீ.
Q13. எந்த இரு மாநிலங்களுக்கு ஒரே நகரம் தலை நகராக விளங்குகிறது?
பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சந்திகார் தலை நகரம்.
Q14. நம் நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
676 (யூனியன் பிரதேசங்களும் சேர்த்து).
Q15. நம் நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?
197
Q16. மாநகராட்சி கொண்ட ஒரே யூனியன் பிரதேசம்?
சந்திகார் (1)
Q17. குறைவான மாவட்டங்கள் உள்ள மாநிலம்?
கோவா (2)
Q18. அதிகமான மாவட்டங்கள் உள்ள மாநிலம்?
உத்திரபிரதேசம் - 75
Q19. அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம்?
குஜராத் - 1600 கி.மீ.
Q20. எந்தெந்த மாநிலங்களின் சட்டசபைகள் இரு அவைகளைக் கொண்டவை?

1. ஜம்மு & காஷ்மீர் (87 + 36);
2. ஆந்திரப் பிரதேசம் (175 + 58) ;
3. கர்நாடகம் (224 + 75) ;
4. மகாராஷ்டிரா (288 + 78) ;
5. தெலங்கானா - (119 + 40);
6. பீஹார் (243+75);

Q21. எந்த மாநிலம் தன்னுடைய நான்கு மாவட்டங்களை நான்கு திசைகளின் பேரால் அழைக்கின்றது?
சிக்கிம் - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு சிக்கிம்.
Q22. எந்த குறு நில மன்னர் பகுதிகள் (PRINCELY STATES ) இந்தியாவுடன் இணைய மறுத்து, பிறகு ராணுவ அல்லது அரசியல் நடவடிக்கை மூலம் இணைக்கப்பட்டது?
ஜுனாகத், ஜம்மு காஷ்மீர், ஹைதராபாத்.
Q23. ஜுனாகத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதின் பின்னணி என்ன?
ஜுனாகத் ஒரு மன்னர் ஆட்சி பகுதி. இந்த பகுதி கடற்கரை தவிர்த்து, மீதமுள்ள பகுதி, முழுவதுமாக இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டது. இருப்பினும் 15.8.1947 அன்று பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தார் அன்றைய மன்னர். அன்றைய நிலையில் இங்கு இருந்த மக்கள் தொகையில் 96 சதவிகிதம் பேர் இந்துக்கள். மேலும் இந்த பகுதியில் தோழமையாக இருந்த வேறு இரண்டு குறு நில மன்னர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டது. இருப்பினும் இதை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக, மக்களிடையே விருப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பெரும்பான்மை விருப்பத்தின் பேரில், இந்தப் பகுதி பிப்ரவரி 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
Q24. ஜம்மு காஷ்மீர் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்தது?
சுதந்திரம் அடைந்தபின், ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த மன்னர் ஹரிசிங், எந்த பக்கமும் சேராமல், தனித்து நாடாக இயங்க விரும்பினார். இந்த நிலையில் மேற்கு காஷ்மீர் இஸ்லாமியர்களும், வடமேற்கிலிருந்து இஸ்லாமிய பழங்குடியினர் காஷ்மீருக்குள் நுழையத் தொடங்கினர். இதனால் தீவிரமான குழப்பம் ஏற்படவே, மன்னர் இந்திய உதவியை நாடினார். இந்தியாவுடன் சேரும் பட்சத்தில் உதவுவதாக உறுதியளிக்கவே, மன்னர் ஹரிசிங், 25.10.1947 அன்று இந்தியாவுடன் இணைவதாக பட்டயம் செய்து கொடுத்ததின் பேரில், இந்திய ராணுவம், ஊடுருவல்காரர்களை விரட்டி, நிலைமையை சீர் செய்து, இப்பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
Q25. ஹைதராபாத் எவ்வாறு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது?
ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்து வந்தார். அரசியல் அறிவுரைகள் எடுபடாத நிலையில், இந்திய ராணுவ நடவடிக்கை - - மூலம் 18 செப்டம்பர் அன்று கைப்பற்றப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
Q26. இந்திய தண்டனைச் சட்டம் (INDIAN PENAL CODE) செல்லுபடியாகாத மாநிலம் எது?
ஜம்மு காஷ்மீர். இங்கு மன்னர் ரன்பீர் எழுதி வைத்த சட்டம் "ரன்பீர் கோட் - " தான் அனுசரிக்கப்படுகிறது.
Q27. எந்த மாநிலம், சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் அஹோம் வம்சத்தினரால் ஆளப்பட்டது?
அஸ்ஸாம்.
Q28. எந்த மாநிலம், "கனிமங்களின் மாநிலம்" என அழைக்கப்படுகிறது?
சத்தீஸ்கர்.
Q29. எந்த மாநிலத்தில் முதன் முதலில் யானைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது?
ஜார்க்கண்ட்.
Q30. சுதந்திரத்திற்கு பின், மாநில அந்தஸ்து பெற்ற, யூனியன் பிரதேசங்கள் யாவை?
1. இமாச்சல பிரதேசம் - 25.1.1971.
2. திரிபுரா - 21.1.1972.
3. மணிப்பூர் - 21.1.1972.
4. நாகாலாந்து - 1.12.1963.
Q31. மத்திய பிரதேசத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம் எது?
சத்தீஸ்கர் - 1.11.2000.
Q32. ஜார்க்கண்ட் எந்த மாநிலத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது?
பீஹார் - 1.11.2000.
Q33. உத்தராகாண்ட் எந்த மாநிலத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது?
உத்திரபிரதேசம் - 1.11.2000.
Q34. எந்த ஒரு இந்திய மாநிலத்திற்கு இரண்டு தலை நகரங்கள் உள்ளது?
ஜம்மு காஷ்மீர் - ஸ்ரீ நகர் - கோடை; ஜம்மு - குளிர்.
Q35. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை உருவாக்கியவர் யார்?
குலாப் சிங்.
Q36. நம்க்யால் ராஜவம்சம் ஆண்ட மாநிலம் எது?
சிக்கிம்.
Q37. "ஏழு சகோதரிகள்" என்றழைக்கப்படும் மாநிலங்கள் யாவை?
அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா.
Q38. கல்வியறிவு அதிகமுள்ள மாநிலம் எது?
திரிபுரா - 94.65% கேரளா - 93.91% மிசோரம் - 91.58%
Q39. கல்வியறிவு குறைவாக உள்ள மாநிலம் எது?
பீஹார் - 63.68%
Q40. மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலம் எது?
உத்திர பிரதேசம்.
Q41. மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலம் எது?
சிக்கிம்.
Q42. உலகில் பார்க்க வேண்டிய 50 இடங்களில் இடம் பெற்றுள்ள இந்திய மாநிலம் எது?
கேரளா.
Q43. "வாசனை திரவிய தோட்டம்" என அழைக்கப்படுவது...
கேரளா.
Q44. ஜன நாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் (காங்கிரஸ் அல்லாத) கம்யூனிஸ்ட் அரசாங்கம் அமைந்த மாநிலம் எது?
கேரளா - 1957 - 59 - நம்பூதிரி பாட்.
Q45. சென்னை அடையாறில் உள்ள ஒரு முக்கியமான சமுதாய மையம் என்ன?
தியோசாஃபிகல் சொஸைட்டி ஆஃப் இந்தியா தலைமையகம்.
Q46. உத்திர பிரதேசத்தின் எந்த ஊர்கள் கோலாப்பூர் செருப்பு தயாரிப்புக்கு சிறப்பு பெற்றது?
அதானி, நிப்பன், மிரஜ்.
Q47. இந்துக்கள் புனிதமாக கருதும் புஷ்கர் ஏரி எங்குள்ளது?
அஜ்மீர், உ.பி.
Q48. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம் எங்குள்ளது?
திரிவேணி, அலகாபாத்.
Q49. குஜராத்திலுள்ள அலியாபெட் எதற்கு புகழ் பெற்றது?
எண்ணெய் கிணறு.
Q50. புராண காலத்து "கர்ணாவதி" என அழைக்கப்பட்ட இன்றைய நகரம் எது?
அகமதாபாத், குஜராத்.
Q51. "நம் நாட்டில் எங்கு முதல் ""இந்திய மேலாண்மை கல்வி மையம்"" (INDIAN INSTITUTE OF MANAGEMENT) தொடங்கப்பட்டது?"
கொல்கத்தா - நவம்பர் 1961 (அஹமதாபாத் டிசம்பர் 1961).
Q52. எந்த நகரம் / மாநிலத்தில் இந்தியாவின் முதல் ""இந்திய தொழிற் நுட்ப கல்வி மையம்"" (INDIAN INSTITUTE OF TECHNOLOGY) தொடங்கப்பட்டது?
கரக்பூர், மேற்கு வங்காளம் - 1951.
Q53. சால்வைகளுக்கு புகழ்பெற்ற உத்திரபிரதேச மாநில நகரம் எது?
அல்மோரா - கம்பளி சால்வைகள்.
Q54. சீக்கியர்களின் பொற்கோவில் எங்குள்ளது?
அமிர்தசரஸ், பஞ்சாப்.
Q55. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் தொலைத்தொடர்பு மையம் எங்குள்ளது?
ஆர்வி, பூனே, மஹாராஷ்டிரா.
Q56. ஜாலியன் வாலாபாக் படுகொலை எங்கு எப்போது நடந்தது?
அமிர்தசரஸ், பஞ்சாப் - 13.4.1919.
Q57. முகலாய மன்னர் அவுரங்கசீப் மற்றும் அவரது மனைவியின் கல்லறை எங்குள்ளது?
அவுரங்காபாத், மஹாராஷ்டிரா.
Q58. அயோத்யாவின் புராணக்கால பெயர் என்ன?
ஆவாத்.
Q59. அயோத்யா எந்த நதிக்கரையின் மீது அமைந்துள்ளது?
காக்வா.
Q60. உப்பங்கழிவுகளுக்கு புகழ்பெற்ற கேரள நகரம் எது?
ஆலப்புழை (ALLEPEY) கேரளா.
Q61. "சிலிகான் பள்ளத்தாக்கு" எனப்படும் நகரம் எது?
பெங்களூரு, கர்நாடகம்.
Q62. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் எங்குள்ளது?
பெங்களூரு, கர்நாடகம்.
Q63. சர்வதேச புகழ்பெற்ற இந்திய அறிவியல் கல்வி மையம் எங்குள்ளது?
பெங்களூரு.
Q64. பீஹாரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?
பரௌனி - பெகுசராய் மாவட்டம் - பீஹார்.
Q65. சர்தார் வல்லபாய் பட்டேல் எந்த இடத்தில் "வரி கொடா" இயக்கத்தை தொடங்கி வைத்தார்?
பர்தோலி, குஜராத்.
Q66. பேலூர், மேற்கு வங்காளத்தின் முக்கியத்துவம் என்ன?
ஸ்வாமி விவேகானந்தர் உருவாக்கிய ராமகிருஷ்ணர் மடம்.
Q67. 1984ல் விஷவாயு கசிவினால் பேரிழப்பு ஏற்பட்ட நகரம் எது?
போப்பால் - மத்திய பிரதேசம் - 2/3 டிசம்பர் 1984 - மெதில் ஐசோசயனேட் வாயு.
Q68. ஒடிசா புவனேஷ்வர் நகரை சுற்று ஓடும் நதி எது?
தயா.
Q69. "கோல்கும்பாஸ்" அமைந்துள்ள நகரம் எது?
பீஜாப்பூர், கர் நாடகா.
Q70. இந்தியாவின் எந்த இடத்தில் உலகின் அதிகமான மழை பெய்கிறது?
மாசின்ராம், மேகாலயா. இதைத் தொடர்ந்து செராபுஞ்சி.
Q71. கண்ணாடி வளையல்கள் தயாரிப்புக்கு புகழ்பெற்ற நகரம் எது?
ஃபிரோசாபாத், உ.பி.
Q72. சுவாமி விவேகான்ந்தர் ஆன்மீகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடம்?
தக் ஷிணேஷ்வர், மேற்கு வங்காளம்.
Q73. அரசாங்கத்தால் நடத்தப்படும் ஓபியம் தொழிற்சாலை எங்குள்ளது?
காஸிபூர் (GHAZIPUR) உ.பி.
Q74. விஜய நகர சாம்ராஜ்யத்தின் சித்திரக்கலை வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டு நகரம்...
ஹம்பி. இது ஒரு உலக புராதனச் சின்னம்.
Q75. கம்பளி உடைகளுக்கு புகழ்பெற்ற நகரம் எது?
தாரிவால், பஞ்சாப்.
Q76. துறவி துக்காராம் பிறந்த ஊர் எது?
தெஹூ - மஹாராஷ்டிரா.
Q77. டெல்லி எப்போதிலிருந்து இந்திய தலை நகரம் ஆனது?
1911
Q78. கங்கை எந்த இடத்தில் சமவெளிக்குள் நுழைகிறது?
ஹரித்துவார் - உ.பி.
Q79. "மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குகைக் கோவில்கள் எது?"
அஜந்தா எல்லோரா குகைக் கோவில்கள்.
Q80. இந்தியாவின் முதல் மற்றும் பழமையான எண்ணெய் கிணறு எங்குள்ளது?
திக்பாய், அஸ்ஸாம்.
Q81. ஃபத்தேஹ்பூர் சிக்ரி நகரை நிர்மாணித்தவர் யார்?
அக்பர்.
Q82. ஹைதராபாத், செகந்திராபாத் இரட்டை நகரங்கள் எந்த நதிக்கரையின் மீது அமைந்துள்ளது?
மூசி.
Q83. இந்தியாவில் யுரேனியம் தோண்டி எடுக்கப்படும் ஒரே சுரங்கம் எங்குள்ளது?
ஜாடுகுடா, ஒடிசா.
Q84. விளையாட்டு மற்றும் அறுவை சிகிச்சைப் பொருள் தயாரிப்புக்கு புகழ்பெற்ற நகரம் எது?
ஜலந்தர், பஞ்சாப்.
Q85. "இளஞ்சிவப்பு நகரம்" என அழைக்கப்படும் நகரம்?
ஜெய்ப்பூர் - 1727ல் மன்னர் சவாய் ஜெய்சிங் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட து.
Q86. ஜெய்கர் கோட்டை, ஜெய்ப்பூரில் உள்ள ஒரு வினோதமான ராணுவப் பொருள் எது?
"ஜெய்வன்" என பெயரிடப்பட்டுள்ள - சக்கரத்தின் மீது அமர்த்தப்பட்ட மிகப் பெரிய பீரங்கி.
Q87. நம் நாட்டில் புடவை (குறிப்பாக பட்டு) தயாரிப்புக்கு புகழ் பெற்ற நகரங்கள் யாவை?
1. ஆரணி, காஞ்சிபுரம் - தமிழ்நாடு ;
2. மைசூர் - கர்நாடகம்;
3. வாரணாசி - உத்திரபிரதேசம்.
Q88. இமாச்சல பிரதேசம், கசௌலி என்ற இடத்தில் உள்ள முக்கியமான மருத்துவ சிகிச்சை சம்பந்தப்பட்ட நிறுவனம் எது?
பேஸ்ட்ச்சர் இன்ஸ்ட்யூட் (PASTEUR INSTITUTE).
Q89. "சிகாகோ மத பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு, விவேகானந்தர் தமிழ் நாட்டின் எந்த இடத்தில் தியானம் செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது?"
கன்னியாகுமரி. இதை ஞாபகப்படுத்தும் வகையில் இங்கு கூலின் நீரில் உள்ள பாறை மீது ஒரு நினைவுச் சின்னம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Q90. கன்னியாகுமர் கூற்பாறை மீது அமைந்துள்ள 133 அடி உயர சிலை யாருடையது?
திருவள்ளுவர் சிலை.
Q91. பண்டைய காலத்து துறைமுகமாக விளங்கிய தமிழ் நாட்டு நகரம் எது?
காவேரிபூம்பட்டினம் - இப்போது பூம்புகார் - நாகப்பட்டினம் மாவட்டம்.
Q92. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்துக்கு புகழ்பெற்ற தேசியபூங்கா, இடம், மாநிலம் எது?
காஸிரங்கா, அஸ்ஸாம்.
Q93. "சிவாஜியின் தலை நகரமாயிருந்த நகரம், இன்று தோல் செருப்புகளுக்கு மிகவும் புகழ்பெற்ற நகரம் எது?"
கோலாப்பூர், மஹாராஷ்டிரா.
Q94. ஒடிசாவிலுள்ள கொனாராக் எதற்கு புகழ்பெற்றது?
சூரியன் கோவில் - SUN TEMPLE.
Q95. மகாபாரதப்போர் நடந்த இடம் தற்போது எங்கு உள்ளது?
குருஷேத்திரம், அம்பாலா, பஞ்சாப்.
Q96. பல்லவ காலத்து புகழ்பெற்ற கடற்கரை கோவில் எங்குள்ளது?
மகாபலிபுரம், சென்னை.
Q97. கைத்தறி சுங்கடி சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் / நகரம் எது?
மதுரை, தமிழ் நாடு.
Q98. 1857ல் சிப்பாய் கலகம் தோன்றிய ஊர் எது?
மீரட், உ.பி.
Q99. தஸ்ஸெரா திருவிழாவிற்கு புகழ்பெற்ற ஊர் எது?
மைசூர் - கர் நாடகம்;
Q100. இந்தியாவின் எந்த முக்கிய வங்கியின் தலை நகரம் மும்பையில் உள்ளது?
ரிசர்வ் வங்கி.
Q101. இந்தியாவின் வணிகத் தலை நகரம் எது?
மும்பை.
Q102. ஆரஞ்சு உற்பத்திக்கு புகழ்பெற்ற நகரம் / மாவட்டம் எது?
நாக்பூர், மஹாராஷ்டிரா.
Q103. பண்டைய காலத்து புகழ்பெற்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ல மாநிலம் எது?
நாளந்தா பல்கலைக் கழகம் - பீஹார். 1193ல் பக்தியார் கல்ஜியால் மிகவும் சேதமடைந்தது. இந்த சிதிலமடைந்த மையம் பாட்னாவுக்கருகில் அமைந்துள்ளது.
Q104. மஹாராஷ்டிராவின் நாசிக் எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
அரசாங்க பாதுகாப்பு அச்சகம் மற்றும் திராட்சை.
Q105. ஆரஞ்சு உற்பத்திக்கு புகழ்பெற்ற நகரம் / மாவட்டம் எது?
நாக்பூர், மஹாராஷ்டிரா.
Q106. பண்டைய காலத்து புகழ்பெற்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ல மாநிலம் எது?
நாளந்தா பல்கலைக் கழகம் - பீஹார். 1193ல் பக்தியார் கல்ஜியால் மிகவும் சேதமடைந்தது. இந்த சிதிலமடைந்த மையம் பாட்னாவுக்கருகில் அமைந்துள்ளது.
Q107. பீஹார் தலை நகர் பாட்னா, சரித்திர காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
பாடலிபுத்ரம்.
Q108. மேற்கு வங்காளத்தின் பலாஸி என்ற ஊர் எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
ப்ளாஸி போர் - 23.6.1757 - ராபர்ட் க்ளைவ் மற்றும் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலா.
Q109. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்ட வடிவ சிறைச்சாலை (CELLULAR JAIL) எங்குள்ளது?
போர்ட்ப்ளேயர், அந்தமான், நிக்கோபார்.
Q110. காந்திஜியின் பிறந்த ஊர் எது?
போர்பந்தர், குஜராத்.
Q111. ஜகந்நாதர் கோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒடிசா நகரம் எது?
பூரி, ஒடிசா.
Q112. தேசிய பாதுகாப்பு அகாடமி அமைந்துள்ள நகரம்...
கடக்வாஸ்லா, பூனே.
Q113. தேசிய விளையாட்டுப் பயிற்சி மையம் எங்குள்ளது?
பட்டியாலா, பஞ்சாப்.
Q114. ரஜ்னீஷ் என்பவரின் ஆஸ்ரமம் எங்கிருந்தது?
பூனே, மஹாராஷ்டிரா.
Q115. ஆயுதப்படையினர் மருத்துவ கல்லூரி (Armed Forces Medical College) எங்குள்ளது?
பூனே, மஹாராஷ்டிரா.
Q116. மகாவீர் தனது முதல் தர்மசபையை எங்கு கூட்டினார்?
ராஜ்கிர் (முன்னாள் ராஜகிருகம்) - பீஹார்.
Q117. லோகமான்ய திலகரின் பிறந்த ஊர் எது?
ரத்னகிரி, மஹாராஷ்டிரா.
Q118. காந்திஜியின் ஆஸ்ரமம் எங்குள்ளது?
சாபர்மதி ஆஸ்ரமம், அஹமதாபாத், குஜராத்.
Q119. மஹாராஷ்டிராவின் சதாரா எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
சிவாஜி மகாராஜாவின் தலை நகர் - சுற்றுலா தலம்.
Q120. மத்திய பிரதேசத்தின் சாஞ்சி எதற்கு புகழ் பெற்றது?
108 அடி உயர புத்தமத தூண்.
Q121. மத்திய பிரதேசத்தின் சார நாத் எதற்கு புகழ்பெற்றது?
புத்தர் தனது முதல் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். அசோகர் தூண் இங்குள்ளது.
Q122. திப்பு சுல்தான் மறைந்த இடம்...
ஸ்ரீ ரங்கப்பட்டினம் - கர் நாடகம் - 1799.
Q123. ரவீந்திர நாத் தாகூர் நிறுவிய பல்கலைக் கழகம் பெயர் என்ன?
சாந்தி நிகேதன்.
Q124. சத்ரபதி சிவாஜி பிறந்த இடத்தின் பெயர் ...
ஷிவ் நேரி, மஹாராஷ்டிரா.
Q125. மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் எதற்கு புகழ்பெற்றது?
படுக்கை விரிப்புகள்.
Q126. ஷெர் ஷா சூரியின் கல்லறை எங்குள்ளது?
சசாராம், பீஹார் - ஒரு பெரிய குளத்தின் நடுவில் அழகிய மொகலாய கலைவண்ணத்தில்.
Q127. குஜராத்திலுள்ள சோம் நாத் நகரின் முக்கியத்துவம் என்ன?
முகமது கஜினியின் 17 முறை படையெடுப்பு.
Q128. கர்நாடகாவின் சரவண பேல கூலா எதற்கு பெயர் பெற்றது?
17 மீ உயரமுள்ள, கோமதீஸ்வர ர், ஒற்றைக்கல்லால் ஆன சிற்பம், அமைந்துள்ள குன்றின் பெயர் சந்திரகிரி.
Q129. தமிழ் நாட்டின் ஸ்ரீரங்கம் எதற்கு புகழ்பெற்றது?
ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோவில். ஸ்ரீரங்கம், காவிரி நதியில் அமைந்துள்ள ஒரு தீவு.
Q130. குஜராத்தின் சூரத் நகரம் இந்திய சுதந்திரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அது என்ன?
"1612ல், இங்கு வணிகம் துவக்க ஆங்கிலேயர்கள், முகலாய மன்னர் ஷா ஜெஹானிடமிருந்து அனுமதி பெற்றனர். அதற்கு பிறகு நடந்தது சரித்திரம்."
Q131. இந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்படும் தமிழ் நாட்டு நகரம்/மாவட்டம் எது?
தஞ்சாவூர்.
Q132. "சுதந்திர போராட்டத்தின் போது, சுதேச இயக்க பங்காக, சிதம்பரனார் கப்பல் போக்குவரத்து நிறுவனம் தொடங்கிய இடம் எது?"
தூத்துக்குடி - 1906 ஸ்வரேஷி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி.
Q133. தமிழ் நாட்டின் தஞ்சாவூர் நகரம் எதற்கு புகழ்பெற்றது?
ப்ரகதீஸ்வரர் கோவில் - ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
Q134. ஆந்திர மா நில திருப்பதியின் முக்கியத்துவம்?
ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருக்கோவில். உலகின் மிக பணக்கார கோவில் - இந்துக்களின் புனித தலம்.
Q135. தமிழ் நாட்டின் திருச்செந்தூர் எதற்கு புகழ் பெற்றது?
"திருச்செந்திலாண்டவர் முருகன் கோவில் - கடற்கரையில் அமைந்துள்ள அழகான கோவில். தைப்பூசம் திருவிழா மிகவும் புகழ்பெற்றது."
Q136. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத் நகரில் நடக்கும் இந்துமத நிகழ்ச்சி என்ன?
கும்ப மேளா.
Q137. "ஏரிகளின் நகரம்" என அழைக்கப்படும் ராஜஸ்தான் நகரம் எது?
உதய்ப்பூர்.
Q138. கர்நாடகாவின் உடுப்பி எதற்கு புகழ்பெற்றது?
ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்.
Q139. "நிரந்தர நகரம்" எனப்படும் நகரம் எது?
வாரணாசி - உத்திரபிரதேசம்.
Q140. காந்திஜி சிறை செய்யப்பட்டிருந்த மஹாராஷ்டிரா நகரம் எது?
வார்தா.
Q141. காகத்திய வம்சத்தினரின் தலை நகராக விளங்கிய தெலங்கானா நகரம் எது?
வாரங்கல்.
Q142. தமிழ் நாட்டின் கோடை வாஸத்தலங்கள் யாவை?
உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி.
Q143. இந்தியாவின் எந்த நகரம் முன் காலத்தில் "சாகேத்" என்றழைக்கப்பட்டது?
ஃபைசாபாத், உ.பி.
Q144. குஜராத்தின் எந்த நகரம் ஜரிகை வேலைப்பாடு உள்ள துணிமணிகளுக்கு புகழ்பெற்றது?
சூரத்.
Q145. "பண்டைய காலத்தில், புஷ்ப பூவா, அலிமாபாத், பாடலிபுத்ரா, குசும்பூர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட தற்சமய இந்திய நகரம் எது?"
பாட்னா, பீஹார்.
Q146. "தமிழ் நாட்டின் தனுஷ்கோடி என்ற இடம் இந்தியாவின் தென் எல்லை. துரதிருஷ்டவசமாக இந்த ஊர் அழிந்தது. எவ்வாறு & எப்போது?"
"தனுஷ்கோடி : ராமேஸ்வரத்தின் அருகில் இருந்த ஊர். இந்திய பெருங்கடலும் வங்காள விரிகுடாவும் சந்திக்கும் இடத்தில் இருந்தது. 17.12.1964 அன்று அடித்த தீவிர புயலில் முழுவதுமாக கடலுக்கு இரையாகி விட்டது."
Q147. செராபுஞ்சி ஆங்கிலேயர்கள் காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
சோஹ்ரா (SOHRA).
Q148. இந்தியாவில் எங்கு படிம பூங்கா (FOSSIL PARK) மற்றும் டைனோசர் பூங்கா எங்குள்ளது?
பாலாசினோர் - கேடா மாவட்டம், குஜராத்.
Q149. "அமுல்" பால்பொருள் நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
ஆனந்த், குஜராத்.
Q150. குஜராத்தின் எந்த மாவட்டம் பளிங்கு கற்கள் மற்றும் தாமிரத்திற்கு புகழ்பெற்றது?
பனஸ்காந்தா.
Q151. கிருஷ்ணர் பிறந்த துவாரகா நகரம் எந்த மாவட்டம்/மா நிலத்தில் உள்ளது?
ஜாம் நகர் மாவட்டம், குஜராத்.
Q152. காட்டுக் கழுதைகளுக்கான ஒரே தேசிய பூங்கா எங்குள்ளது?
கச் வளைகுடா (Rannof Kutch) குஜராத்.
Q153. கைத்தறி "பட்டோலா" புடவைகளுக்கு புகழ் பெற்ற இடம் எது?
பத்தான் மாவட்டம், குஜராத்.
Q154. "பந்தினி" புடவைகளுக்கு புகழ்பெற்ற இடம் எது?
ராஜ்கோட், குஜராத்.
Q155. வடோடரா நகரத்தின் முன் பெயர் என்ன?
பரோடா - கேக்வாட் அரசர்களால் ஆண்ட குறுநில மன்னர் பகுதி - விஸ்வாமித்திரா நதிக்கரையில் உள்ளது.
Q156. 26.1.2001 அன்று பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில பகுதி எது?
பூஜ்.
Q157. சோம் நாத் கோவில் குஜராத் மா நிலத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?
ஜுனாகத் மாவட்டம்.
Q158. சூரஜ்குண்ட் கைவேலைப்பாடு திருவிழா எங்கு, எப்போது நடைபெறுகிறது?
ஃபரீதாபாத், அரியானா - பிப்ரவரி.
Q159. சரித்திர புகழ்பெற்ற "பானிபட்" எந்த மா நிலத்தில் உள்ளது?
அரியானா.
Q160. டல்ஹௌசி என்ற மலை வாசத்தலம் எங்குள்ளது?
சம்பா மாவட்டம், இமாச்சல பிரதேசம்.
Q161. இந்தியாவின் எந்த நகரத்திலிருந்து திபெத் வெளி அரசாங்கம் நடைபெறுகிறது?
தர்மசாலா - கங்ரா மாவட்டம் - இமாச்சல பிரதேசம்.
Q162. ஆங்கிலேயர்களின் கோடை கால தலை நகரமாக விளங்கியது?
சிம்லா - இமாச்சல பிரதேசம்.
Q163. சிம்லா நகரத்தின் வருடாந்திர புகழ்பெற்ற நிகழ்ச்சி...
கோடைத்திருவிழா - மே, ஜூன் மாதங்களில்.
Q164. சிம்லா நகரில் நடந்த முக்கியமான அரசியல் நிகழ்ச்சி என்ன?
"ஆகஸ்ட் 3/4 தேதிகளில் 1972ம் வருடம் இந்தியா - பாகிஸ்தானுக்கிடையில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் - இந்திராகாந்தி - ஸுல்ஃபிகர் அலி புட்டோ - இந்த ஒப்பந்தம் 1971 வங்காள தேச போருக்கு பிறகு ஏற்பட்டது."
Q165. "எஃகு நகரம்" (Steel City ) என அழைக்கப்படுவது...
பொக்காரோ, ஜார்க்கண்ட்.
Q166. ஆயிரம் தோட்ட நகரம் எனப்படுவது...
ஹசாரிபாக், ஜார்க்கண்ட் (ஹசார் - ஆயிரம்; பாக் - தோட்டம்).
Q167. ஜார்க்கண்ட் மாநில ராஞ்சி நகரத்தின் சமீப கால புகழுக்கு காரணம் என்ன?
மகேந்திர சிங் தோனி - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அவர்களின் சொந்த ஊர்.
Q168. சாளுக்ய வம்சத்தின் தலை நகராக விளங்கிய கர்நாடக நகரம் எது?
பகல் கோட் - கர்நாடகா (BAGALKHOT ).
Q169. கர்நாடகத்தின் எந்த மாவட்டத்தில் கனிம சுரங்க நடவடிக்கைகள் அதிகம்?
பெல்லாரி.
Q170. கர்நாடகத்தின் எந்த நகரம் அடில் ஷாஹி வம்ச தலை நகராக விளங்கியது?
பீஜாப்பூர்.
Q171. கர்நாடகத்தின் எந்த மாவட்டத்தில் எஃகு தாது அதிகம் காணப்படுகிறது?
சிக்மகளூர் - இங்கு தான் குத்ரேமூக் இரும்பு சுரங்கம் அமைந்துள்ளது.
Q172. காவிரி ஆற்றின் முகத்துவாரம் கர்நாடகத்தின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
தலைக் காவிரி - கொடகு மாவட்டம்.
Q173. ஹம்பி - உலகப்புராதனச் சின்னம் கர்நாடகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?
கொப்பல் மாவட்டம்.
Q174. உடையார் வம்சத்தின் தலை நகராக விளங்கிய நகரம் எது?
மைசூர்.
Q175. கிருஷ்ணர்க்கான புகழ்பெற்ற கோவில் உள்ள கர்நாடக நகரம் எது?
உடுப்பி. (உடுப்பி பெயர் கொண்ட சைவ உணவகங்கள் அதிகமாக தென் இந்தியாவில் காணப்படும்).
Q176. "பெங்களூர் நகரம்", "பெங்களூரு" என எப்போது மாற்றப்பட்டது?
1.11.2006.
Q177. இந்தியாவின் எந்த நகரத்தில் முதலில் மின்சார விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டது?
பெங்களூரு - 1906.
Q178. இந்தியாவின் எந்த நகரம் "கிழக்கு வெனிஸ்" என அழைக்கப்படுகிறது?
ஆலப்புழை, கேரளா.
Q179. ஆலப்புழை, கேரளாவில் வருடந்தோறும் நட த்தப்படும் படகுப்போட்டியின் பெயர் என்ன?
வள்ளம் களி - நேரு கோப்பை படகுப்போட்டி.
Q180. இந்தியாவின் எந்த நகரத்தில் வாஸ்கோடகாமா முதலில் வந்து இறங்கினார்?
காலிகட் எனப்பட்ட கோழிக்கோடு - 1498.
Q181. "நாயர் சேவை சங்கம்" கேரளாவின் எந்த மாவட்ட த்தில் புகழ்பெற்றது?
பாலக்காடு.
Q182. சுவாமி ஐயப்பனின் பிறந்த இடம் கேரளாவில் எங்குள்ளது?
பந்தளம், பத்தனம் திட்டா மாவட்டம்.
Q183. கேரளாவின் எந்த நகரத்தில் பூரம் திருவிழா, குருவாயூரப்பன் கோவில் புகழ்பெற்றது?
திருச்சூர் மற்றும் குருவாயூர்.
Q184. நர்மதை நதி எங்கு உருவாகிறது?
அமர கண்டக், அனுப்பூர் மாவட்டம், மத்திய பிரதேசம்.
Q185. சிந்தியா வம்சத்தினரின் தலை நகராக விளங்கிய மத்திய பிரதேச நகரம் எது?
குவாலியர்.
Q186. உலகின் உயரமான விநாயகர் சிலை அமைந்துள்ள இந்திய நகரம் எது?
இந்தூர், மத்திய பிரதேசம்.
Q187. ஹோல்கர் வம்சத்தின் தலை நகராக விளங்கிய மத்திய பிரதேச நகரம் எது?
இந்தூர்.
Q188. கோண்ட் வம்சத்தினரின் தலை நகராக விளங்கிய மத்திய பிரதேச நகரம் எது?
மாண்ட்லா.
Q189. மத்திய பிரதேசத்தின் எந்த நகரில் நம் நாட்டின் முக்கிய லேசர் (Laser) தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது?
இந்தூர்.
Q190. மத்திய பிரதேசத்தின் எந்த நகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துவங்கப்பட்டது?
நீமக் (Neemuch).
Q191. மத்திய பிரதேசத்தின் எந்த நகரம் பண்டேலா ராஜபுத்ர மன்னர்களின் தலை நகரமாக விளங்கியது?
பன்னா (இந்த பகுதி வைரங்களுக்கும் புகழ்பெற்றது.
Q192. கஜுராஹோ குகைகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள ரயில் நிலையம்?
சத்னா, மத்திய பிரதேசம்.
Q193. பாம்பே மாகாணம் எப்போது பிரிக்கப்பட்டது? (மஹாராஷ்டிரா - குஜராத்)
1.5.1960
Q194. அவுரங்காபாதில் கிடைக்கும் புகழ்பெற்ற புடவை வகை என்ன?
பைத்தானி.
Q195. எல்லோரா குகைகள் அமைந்திருக்கும் மஹாராஷ்டிரா மா நிலம் எது?
அவுரங்காபாத், மஹாராஷ்டிரா.
Q196. செப்டம்பர் 1993ல் நில நடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிரா நகரம் எது?
லட்டூர் - 30.9.1993.
Q197. டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய "தீக் ஷ பூமி" எனும் இடம் இங்குள்ளது?
நாக்பூர், மஹாராஷ்டிரா.
Q198. ஆசியாவின் மிகப்பெரிய "மஞ்சள்" (விளைபொருள்) சந்தை எங்குள்ளது?
சாங்க்லி, மஹாராஷ்டிரா.
Q199. மராத்திய மன்னர்களின் தலைமையகம் எங்கிருந்தது?
சத்தாரா - மஹாராஷ்டிரா.
Q200. அல்ஃபோன்ஸோ வகை மாம்பழத்துக்கு புகழ்பெற்ற இடம் எது?
ரத்னகிரி, மஹாராஷ்டிரா.
Q201. படுக்கை விரிப்பு மற்றும் போர்வைகளுக்கு புகழ்பெற்ற மஹாராஷ்டிரா நகரம் எது?
சோலாப்பூர்.
Q202. "ஏரிகளின் நகரம்" என அழைக்கப்படும் மஹாராஷ்டிரிய நகரம் எது?
தானே.
Q203. "மஹாராஷ்டிராவில் அமைந்துள்ல இந்திய சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சிறைச்சாலை எங்குள்ளது?"
வார்தா.
Q204. "போர்ச்சுகீசியரிடமிருந்த பாம்பே பகுதி எவ்வாறு ஆங்கிலேயருக்கு வந்தது? (பிறகு இந்தியாவுக்கு)"
"இங்கிலாந்தின் மன்னர் பரம்பரையை சேர்ந்த இரண்டாம் சார்லஸ்க்கும், போர்ச்சுகீசிய மன்னர் நான்காம் ஜான் - மகள் காத்ரீனா ப்ரகன்ஸா வின் திருமண பரிசாக சார்லஸுக்கு வந்து பின்னர் கிழக்கிந்திய கம்பெனியால் 1665ல் பெறப்பட்டு ஆங்கிலேயர் வசம் வந்த து."
Q205. பாம்பே (மும்பை) முக்கியமாக எத்தனை தீவுகளைக் கொண்டது?
ஏழு (பாம்பே, பரேல், மஸகாவ்ன், மாஹிம், கொஸாபா, ஓர்லி மற்றும் முதுமை பெண்மணி தீவு).
Q206. வேறு எந்த இரண்டு தீவுகளும் இணைக்கப்பட்ட மும்பை பெரு நகரம் உருவாக்கப்பட்டது?
ட்ராம்பே மற்றும் சால்செட்டி.
Q207. இந்திய ரயில்வேயில் பாம்பேயின் முக்கியத்துவம் என்ன?
16.4.1853 அன்று தானே - போரிபந்தர் இடையே முதல் ரயில் தொடர் சேவை துவங்கப்பட்ட து.
Q208. "கிழக்கு ஸ்காட்லாந்து" என்ற புகழ் கொண்ட இந்திய நகரம் எது?
ஷில்லாங்.
Q209. கோஹிமா, நாகாலாந்தில் உள்ள ஒரு சரித்திர புகழ் வாய்ந்த கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் என்ன?
"எல்லோருக்கும் சொல்லுங்கள், உங்களுடைய நாளைக்காக, எங்களுடைய இன்றைய நாளை இழந்தோமென்று."
Q210. ஏவுகணை பரிசோதனை செய்யும் மையம் நம் நாட்டில் எங்குள்ளது?
சாந்திபூர், பாலசூர் மாவட்டம், ஒடிசா.
Q211. ஒடிசா மா நிலத்தின் சம்பல்பூர் மாவட்டம் எவ்வகை துணி ரகங்களுக்குப் புகழ் பெற்றது?
இக்காத் (IKAT) கைத்தறி துணிகள்.
Q212. ஒடிசாவின் புவனேஷ்வர் நகரில் உள்ள புகழ்பெற்ற கோவில் எது?
லிங்கராஜா கோவில்.
Q213. அமிர்தரசஸ் என்ற பெயர் வரக் காரணம்...
சம்ஸ்கிருத வார்த்தை "அமிர்தசரோவர்" - பொருள் : "அமிர்த ஏரி"
Q214. 1984 - ரகசிய நடவடிக்கை ப்ளுஸ்டார் - OPERATION BLUE STAR எங்கு எந்த நகரில் நடந்தது?
பொற்கோவில் - அமிர்தசரஸ், பஞ்சாப். சீக்கிய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை.
Q215. இந்தியாவின் முதல் பெண் மத்திய மந்திரி பஞ்சாப் மாநிலத்தின் எந்த நகரை சேர்ந்தவர்?
கபூர்தாலா - ராஜ்குமாரி அம்ரித் கௌர் என்பவர்.
Q216. பஞ்சாப் மாநில தலை நகர் சந்திகரை வடிவமைத்தவர் யார்?
அமெரிக்க நிபுணர் ஆல்பெர்ட் மேயர் மற்றும் ஃப்ரெஞ்ச் நிபுணர் லெ கார்புஸியர் - 1950 களில்.
Q217. சந்திகர் என்ற பெயர் பெறக் காரணம்?
பஞ்சாப் மாநிலத்தின் பஞ்ச்குலா என்ற இடத்தில் உள்ள ச்சாந்தி (CHANDI) பெண் தெய்வம்.
Q218. சந்திகர் நகரின் அரசியல் முக்கியத்துவம் என்ன?
யூனியன் பிரதேசம். இரண்டு மா நிலங்களுக்கு தலை நகராக விளங்கும் ஒரே நகரம் (பஞ்சாப் மற்றும் அரியானா).
Q219. முழுவதுமாக பாலைவனத்தில் அடங்கியுள்ள மாவட்டங்கள் யாவை?
பிக்கானீர் மற்றும் ஜெய்சல்மேர் - ராஜஸ்தான்.
Q220. "நூறு தீவுகள் நகரம்" என அழைக்கப்படுவது?
ப்ன்ஸ்வாரா - ராஜஸ்தான் - இங்கு ஓடும் நதி "மாஹி" நதியில் இவ்வாறு தீவுகள் அமைந்துள்ளன.
Q221. "ஒரு கோயிலில் எப்போதும் நூற்றுக்கணக்கான எலிகள் திரிந்துக் கொண்டிருக்கும். அது எங்குள்ளது?"
"தேஷ் நோக் கோவில் - பிக்கானீர். சுற்றித்திரியும் எலிகளில் ஒரு வெள்ளை நிற எலியைக் காண்பது நன்மை தரும் என்ற நம்பிக்கை உள்ளது."
Q222. மேவார் ராஜ்ஜியத்தின் தலை நகராக விளங்கிய ராஜஸ்தான் நகரம் எது?
சித்தோர்கர் / உதய்ப்பூர்.
Q223. ஜெய்ப்பூர் நகரத்தை நிறுவியவர் யார்?
மகாராஜா சவாய் ஜெய் சிங்.
Q224. அணு சோதனை நடத்தப்படும் இடம் எது?
போக்ரான், ஜெய்சல்மேர் மாவட்டம், ராஜஸ்தான்.
Q225. நமது நாட்டு ராணுவத்துக்கு அதிகமான ஆட்களை அனுப்பி வைக்கும் மாவட்டம் எது?
ஜுன் ஜுனு மாவட்டம், ராஜஸ்தான்.
Q226. ஜோத்பூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற விளைபொருள்?
மத்தானியா வகை மிளகாய்.
Q227. ராஜஸ்தான் மா நிலத்தின் எந்த மா நிலத்தின் பெயரில் (அங்கே உருவாக்கப்படும்) புகழ்பெற்ற அச்சுவகை புடவைகள் தயாரிக்கப்படுகின்றன?
கோட்டா.
Q228. மவுண்ட் அபு ஒரு புகழ்பெற்ற கோடை வாசத்தலம். இது எங்குள்ளது?
சிரோதி மாவட்டம், ராஜஸ்தான். இங்கு புகழ்பெற்ற தில்வாரா ஜைன கோவில்கள் அமைந்துள்ளது.
Q229. ராஜஸ்தானின் எந்த நகரம் "ஏரிகளின் நகரம்" என அழைக்கப்படுகிறது?
உதய்ப்பூர்.
Q230. தென்னிந்திய மான்செஸ்டர் என அழைக்கப்படும் தமிழக நகரம் எது?
கோயம்புத்தூர்.
Q231. கணித மேதை ரமானுஜம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
ஈரோடு (பெரியார்) மாவட்டம்.
Q232. தமிழ் நாட்டின் எந்த நகரம் பல்லவர்களின் தலை நகராக விளங்கியது?
காஞ்சிபுரம் (பட்டு புடவைகளுக்கும் புகழ் பெற்றது).
Q233. நம் நாட்டின் தென் கோடி நகரம் எது?
கன்னியாகுமரி.
Q234. உலகின் மிகச் சுவை வாய்ந்த மாம்பழம் தமிழ் நாட்டின் எந்த பகுதியில் விளைகிறது?
கிருஷ்ணகிரி, தமிழ் நாடு.
Q235. நம் நாட்டின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலின் சொந்த ஊர் எது?
ஓசூர். கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ் நாடு.
Q236. 2004 சுனாமியின் போது மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டு மாவட்டங்கள் யாவை?
கடலூர் மற்றும் நாகப்பட்டினம்.
Q237. மல்லிகைப்பூ மற்றும் சுங்கடி வகை புடவைகளுக்கு புகழ்பெற்ற தமிழ் நாடு நகரம் எது?
மதுரை.
Q238. தமிழ் நாட்டின் புதுக்கோட்டை பகுதியை ஆண்ட மன்னர் வம்சம் எது?
தொண்டை மான்.
Q239. தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நம் நாட்டுக்கு அளித்த தலை சிறந்த மனிதர் யார்?
A.P.J. அப்துல் கலாம்.
Q240. நீலகிரி நகர் மற்றும் பகுதியை முன்னேற்றம் செய்தவர் யார்?
ஜான் சுல்லிவன் - ஆங்கிலேயர் காலத்தில் கோயம்புத்தூர் ஆட்சியாளராக பணிபுரிந்தவர்.
Q241. "தமிழ் நாட்டிலுள்ல காரைக்குடியில் ஒரு பிரத்தியேகமான கல்வி மையம் உள்ளது. அது என்ன?"
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் (Central Electro Chemical Research Institute)
Q242. இந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்படும் தமிழ் நாட்டு நகரம்/மாவட்டம் எது?
தஞ்சாவூர்.
Q243. தமிழ் நாட்டின் எந்த இட த்தில் வருடந்தோறும் மிகப்பெரிய கர் நாடக இசைத்திருவிழா நடக்கிறது?
திருவையாறு - தஞ்சாவூர் மாவட்டம். இசைமேதை தியாகரஜரின் ஞாபகார்த்தமாக நடைபெறுகிறது.
Q244. ஐரோப்பா, ஆசிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற பில்லியார்ட்ஸ் (மேசைப்பந்து) விளையாட்டு நம் நாட்டின் எந்த இட த்தில் துவங்கியது?
ஊட்டி, நீலகிரி மாவட்டம்.
Q245. குட்டி ஜப்பான் எனப்படும் தமிழ் நாடு நகரம்...
சிவகாசி. பட்டாசு காகித அச்சு தொழில் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு புகழ்பெற்றது.
Q246. ரமண மகரிஷி ஆஸ்ரம ம் அமைந்துள்ள தமிழ் நாட்டு நகரம் எது?
திருவண்ணாமலை - அருணாச்சலேஸ்வர ர் கோவில் மற்றும் கார்த்திகை தீபத்துக்கும் புகழ் பெற்றது.
Q247. திரிபுரி ராஜ வம்சம் ஆண்ட பகுதி எது?
திரிபுரா.
Q248. திரிபுரா தலை நகர அகர்தாலாவை நிர்மாணித்தவர் யார்?
கிருஷ்ண கிஷோர் மாணிக்யா - 1838.
Q249. வங்காள தேசத்துக்கு மிக அருகிலுள்ள இந்திய நகரம் எது?
அக ர்தாலா - 2 கி.மீ. இடைவெளியில் உள்ளது.
Q250. திரிபுராவின் உன்னா கோட்டி என்ற இடம் எதற்கு புகழ் பெற்றது?
இங்கு சுமார் பத்து லட்சம் இந்து மத கடவுள்களின் சிற்பங்கள் அமைந்துள்ளன.
Q251. "உத்தரகாண்ட் மாநில அல்மோரா நகரம் மிக அழகானது. அதன் அழகைப்பற்றி நம் நாட்டின் இரண்டு பெருந்தலைவர்கள் வர்ணித்துள்ளனர். அவர்களும் , அவர்கள் கூற்றும் என்ன?"
"காந்திஜி: நம் நாட்டு மக்கள் ரம்யமான சூழலைத் தேடி உடல் நலத்துக்காக ஐரோப்பா ஏன் செல்கிறார்கள்?
விவேகானந்தர்: தியானம் மற்றும் அமைதிக்கான சிறந்த இடம். கூடிய விரைவில் மக்கள் அறிவார்கள் என நினைக்கிறேன்."
Q252. "இந்துக்களின் புகழ்பெற்ற யாத்திரை தலமான பத்ரிநாத் மற்றும் கேதார் நாத் எங்கு அமைந்துள்ளது?"
சமோலி மாவட்டம், உத்தராகாண்ட்.
Q253. கடவுள் விஷ்ணு ஆமை அவதாரம் எடுத்த இடமாக கருதப்படும் இடம் எது?
சம்பாவத், உத்தராகண்ட்.
Q254. டெஹ்ராடூன், உத்தராகண்ட்--ல் உள்ள பிரத்தியேகமான கல்வி நிலையம் என்ன?
இந்திய பெட்ரோலிய கல்விக் கழகம் - Indian Institute of Petroleum.
Q255. டெஹ்ராடூன், உத்தராகண்ட் எந்த விளை பொருளுக்கு மிகவும் புகழ் பெற்றது?
பாஸ்மதி அரிசி.
Q256. "டெஹ்ராடூன் மாவட்டம், உத்தராகண்ட் ல் உள்ள இந்துக்களின் புகழ்பெற்ற யாத்திரை தலங்கள் எவை?"
ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ்.
Q257. ஹரித்வார் - இதன் பொருள் என்ன?
கடவுளின் வாசல் - ஹரி = கடவுள்; த்வார் = வாசல்.
Q258. "உத்தராகாண்ட் மாநிலத்தின் ரூர்கி நகரம், கல்வித்துறையில் ஒரு முக்கியத்துவம் பெற்றது. அது என்ன?"
"1847ல் இங்கு தன் இந்தியாவின் முதல் தொழில் நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது இக்கல்லூரி IIT - Indian Institute of Technology யாக இயங்குகிறது."
Q259. உத்தராகாண்ட் மாநிலத்தின் நைனிடால் - இப்பெயர் பெற்றதின் பின்னணி என்ன?
இவ்வூரில் உள்ல நைனா தேவி என்ற பெண் தெய்வக் கோவில்.
Q260. ஆக்ரா (உ.பி) நகரை நிறுவியவர் யார்?
சிக்கந்தர் லோடி - 1506.
Q261. பூட்டு தயாரிப்பில் புகழ்பெற்ற நம் நாட்டின் இரண்டு நகரங்கள் எவை?
திண்டுக்கல் - தமிழ் நாடு; அலிகார் - உத்திர பிரதேசம்.
Q262. கழுதைகளுக்கு சந்தை நடத்தும் ஒரே இந்திய நகரம் எது?
பாவ்லியா - உத்திர பிரதேசம்.
Q263. பண்டா மாவட்டம், உத்திர பிரதேசத்திலுள்ல உலகப் புராதனச் சின்னம் எது?
கஜுராஹோ குகைகள்.
Q264. "ஆசியாவின் மிகப்பெரிய கற்பூரம் தயாரிக்கும் தொழிற்சாலை உத்திரபிரதேசத்தில் எங்குள்ளது?"
பரேலி.
Q265. "கண்ணாடி பொருட்கள் மற்றும் கண்ணாடி வளையல்கள் தயாரிப்புக்கு புகழ்பெற்ற இந்திய நகரம் எது?"
ஃபிரோசாபாத், உ.பி.
Q266. "ராமரின் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்யா எந்த மற்றொரு நகரத்துடன் இணைந்து இரட்டை நகரமாக விளங்குகிறது?"
ஃபைசாபாத், உ.பி.
Q267. அயோத்யா புராணக் காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
சாக்கேத்.
Q268. "நொய்டா உ.பி. மா நிலத்தின் புகழ்பெற்ற தொழில் நகரம். இதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?"
NOIDA - New Okhla Industrial Development Authority.
Q269. நொய்டா நகரத்தின் முன்னேற்றத்துக்கு காரணமாயிருந்தவர்யார்?
சஞ்ஜய் காந்தி.
Q270. நம் நாட்டின் ஓபியம் (OPIUM) தொழிற்சாலை எங்குள்ளது?
"காஸிபூர், உ.பி. இது ஒரு போதைப்பொருள். மருத்துவ பயனுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரே தொழிற்சாலை. தனியார் துறையில் இல்லை."
Q271. உ.பி. மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற புத்தமத தலம் எது?
குஷி நகர்.
Q272. 1857 சிப்பாய் கலகம் எந்த நகரத்தில் தொடங்கியது?
மீரட், உ.பி.
Q273. பித்தளை நகரம் எனப்படுவது?
மொராதாபாத்,உ.பி.
Q274. கிருஷ்ணரின் பிறந்த நகரம்...
மதுரா, உ.பி.
Q275. திருமதி இந்திராகாந்தி குடும்பத்தினரால் தொடர்ந்து போட்டியிடும் உ.பி. நகரம்/தொகுதி...
ரே பரேலி.
Q276. திஹார் சிறைச்சாலை எந்த மாவட்டம்/மா நிலத்தில் உள்ளது?
சஹாஜன் பூர் மாவட்டம், உ.பி.
Q277. நாராயண் வம்சம் மேற்கு வங்காளத்தின் எந்த பகுதியை ஆண்ட து?
கூச் பீஹார்.
Q278. மேற்கு வங்கத்தில் உள்ள புகழ்பெற்ற கோடை வாசத்தலம் எது?
டார்ஜிலிங்.
Q279. டார்ஜிலிங் பொருள் என்ன?
இடமுழக்கம் நிலம்.
Q280. சணல் தொழில் முன்னணியில் உள்ள மேற்கு வங்க மாவட்டம் எது?
ஹூக்ளி.
Q281. மேற்கு வங்கத்தின் எந்த பகுதி ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த து?
சந்திர நாகூர் - இப்போது சந்தன் நகர்.
Q282. மேற்கு வங்கத்தின் எந்த மாவட்டம் இரண்டு நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது?
ஜல்பைகுரி - பூடான் மற்றும் வங்காள தேசம்.
Q283. நம் நாட்டின் ஜனத்தொகை அதிகமுள்ள நகரம் எது?
கொல்கத்தா.
Q284. நம் நாட்டின் முதல் மற்றும் இரண்டாவது பெரிய நகரம் எது?
மும்பை, கொல்கத்தா.
Q285. டெல்லிக்கு முன் தலை நகராக விளங்கியது...
கொல்கத்தா (1911 வரை)
Q286. கொல்கத்தா நகர முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்தவர் யார்?
வெல்லெஸ்லி பிரபு.
Q287. "சந்தோஷ நகரம்", "தொழில் நகரம்", "கலாச்சார தலை நகர்" என அழைக்கப்படும் நகரம் எது?
ஷஹூத் மினார் (தியாகிகள் நினைவுத்தூண்)
Q288. மேற்கு வங்காள கரக்பூர் நகரின் முக்கியத்துவம் என்ன?
"1. இந்திய ரயில்வேயின் முக்கியமான சந்திப்புகளில் ஒன்று.
2. உலகின் இரண்டாவது நீளமான ரயில் நடைமேடை.
3. இந்தியாவின் முதல் IIT, 1951ல் இங்கு துவங்கப்பட்டது."
Q289. சுந்தரவன சதுப்பு நிலக் காடுகள் மேற்கு வங்கத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?
24 பர்கானாஸ்.
Q290. ஜனாதிபதி மாளிகையை வடிவமைத்தவர் யார்?
எட்வின் லுட்யென் - இங்கிலாந்து கட்டிடக் கலை நிபுணர்.
Q291. குடியரசுத்தலைவர் மாளிகையின் முன் உள்ள தோட்டத்தின் பெயர் என்ன?
முகல் கார்டன் (GARDEN).
Q292. குடியரசுத்தலைவர் மாளிகை தோட்ட த்தில் உள்ள தூணின் பெயர் என்ன?
ஜெய்ப்பூர் காலம்ன் (COLUMN)
Q293. பாராளுமன்ற இந்தியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சன்சாத் பவன்.
Q294. வட்ட வடிவில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் எத்தனை தூண்கள் உள்ளன?
257
Q295. இந்திய பாராளுமன்றத்தை வடிவமைத்தவர் யார்?
ஹெர்பர்ட் பேக்கர் - தென் ஆப்பிரிக்கா.
Q296. பாராளுமன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ள குன்றின் பெயர் என்ன?
ரெய்ஸினா ஹில்.
Q297. இந்திய வாயில் (INDIA GATE) போர் சின்னத்தை வடிவமைத்தவர் யார்?
எட்வின் லுட்யென் - இங்கிலாந்து கட்டிடக் கலை நிபுணர்.
Q298. இந்திய வாயில்-ல் எப்போதும் சுடர் விட்டு எரியும் விளக்கின் பெயர் என்ன?
அமர் ஜவான் ஜோதி.
Q299. டெல்லி செங்கோட்டையை கட்டியவர் யார்?
ஷாஜஹான் - 1639 - 1650
Q300. டெல்லியிலுள்ள குதுப்மினார் யாரால் கட்டப்பட்டது?
குத்புதீன் ஐபெக் - ஆல் தொடங்கப்பட்டு, இல்துமிஷால் 1368ல் முடிவுற்றது.
Q301. டெல்லியிலுள்ள "தாமரைக் கோவில்" (LOTUS TEMPLE) எம்மதத்தினருடையது?
இஸ்லாமியர்களின் பஹாய் (Bahaii) பிரிவினர்கள்.
Q302. டெல்லியிலுள்ள மூன்று முக்கிய தலைவர்களின் சமாதிகள் எவை?
ராஜ்காட் - காந்திஜி;
சாந்திவனம் - நேரு;
சக்தி ஸ்தல் - இந்திரா காந்தி.
Q303. டெல்லியில் நடக்கும் வினோதமான சந்தை வியாபார முறை என்ன?
மிதக்கும் சந்தை. சிறு வியாபாரிகள் தினம் தினம் ஒரு இடத்தில் வியாபாரம் நடத்துவார்கள்.
Q304. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலை நகர் போர்ட் ப்ளெயர் அப்பெயர் பெற்ற காரணம்...
"ஆங்கிலேயர்கள் கிழக்கு இந்திய கம்பெனியின் கப்பல் படை சர்வேயராக பணிபுரிந்து 1788/89 களில் இத்தீவுகளை சர்வே செய்தவர். அதன் முடிவில் தான் ஆங்கிலேயர்கள் இத்தீவுகளை கைப்பற்றினர். அவருடைய பெயர் ஆர்ச்சி பால்டு ப்ளேயர்."
Q305. புதுச்சேரி நகரை வடிவமைத்தவர் யார்?
ரோஜர் ஆங்கர் - ஃப்ரெஞ்ச் வடிவமைப்பாளர்.
Q306. இந்தியாவின் முதல் "புகையில்லா நகரம்" என அறிவிக்கப்பட்டது...
"சந்திகர். பொது இடங்களில் புகை பிடிப்பது நம் நாட்டில் முதன் முறையாக 15.7.2007 முதல் இங்கு அமல்படுத்தப்பட்டது."
Q307. கட்சத்தீவுகள் எப்போது ஸ்ரீலங்காவிற்கு கொடுக்கப்பட்டது?
1974 - சுதந்திரத்துக்கு முன்பாக இது ராமநாதபுரம் மன்னர் வசம் இருந்த பகுதி.
Q308. இந்தியக் குடியரசு என்பது இந்தியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாரத் கன்ராஜ்யா - BHARAT GANRAJYA.
Q309. பழுப்பு நிலக்கரி - லிக்னைட் அதிகமாக கிடைக்கும் தமிழ் நாடு நகரம் எது?
நெய்வேலி.
Q310. நிஜாம்களின் நகரம் எனப்படுவது...
ஹைதராபாத்.
Q311. புதுச்சேரியில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன? அதில் சிறியது எது?
நான்கு. சிறியது மாஹே.
Q312. இந்து மற்றும் சீக்கிய மக்களின் புனித தலமான மணிகரன் எங்குள்ளது?
குளு மாவட்டம், இமாச்சல பிரதேசம். இங்கு சுடு நீர் ஊற்றுகள் அதிகம்.
Q313. ஸ்ரீநகர் நகரத்தை உருவாக்கியவர்...
இரண்டாம் ப்ரவரசேனா மன்னர் - வக்கடாக்கா வம்சம் - 5ம் நூற்றாண்டு.
Q314. இந்தியாவுடன் இணையும்போது ஜம்மு காஷ்மீர் ஆட்சி புரிந்தவர்...
ஹரிசிங்.
Q315. ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பகுதிகள் எவ்வாறு ஆங்கிலேயர் வசம் வந்தது?
"ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலமாக இருந்த பகுதி - 1846ல் லாகூர் உடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி, குலாப் சிங் - கை மன்னராக நியமித்தனர்."
Q316. சமஸ்கிருதத்திலேயே முழுமையாக பேசும் நகரம் எங்குள்ளது?
மத்தூர் (மட்டூர்) ஷிவமோகா மாவட்டம், கர்நாடகா.
Q317. டெல்லி அருகிலுள்ள முனிர்கா கிராமம் எதற்கு புகழ் பெற்றது?
இந்தியாவின் சில புகழ்பெற்ற நீச்சல் வீரர்களை உருவாக்கிய கிராமம். (கஜன் சிங் மற்றும் சிலர்)
Q318. ஜனவரி 14 அன்று - மகர சங்கராந்தி - சர்வ தேச பட்டம் விடுதல் போட்டி நடைபெறும் இடம்...
அஹமதாபாத், குஜராத்.
Q319. இந்திய மாநிலத்தில் எந்த பெயரில் அதிகமான ஆங்கில உயிரெழுத்துகள் - VOWEL - உள்ளன?
அருணாச்சல பிரதேசம்.
Q320. சமீப காலங்களில் பெயர் மாற்றம் பெற்ற மாநிலம்/ மாவட்டம் / நகரங்கள் யாவை?
"1. Trivandrum - Thiruvanandhapuram - 1991
2. Bombay - Mumbai - 1995
3. Madras - Chennai - 1996.
4. Calcutta - Kolkatta - 2001.
5. Bangalore - Bengaluru - 2006.
6. Uttaranchal - Uttarakhand - 2006.
7. Mysore - Mysuru - 2014
8. Mangalore - Mangaluru - 2014"
Q321. யூனியன் பிரதேசங்களுள் பெரியது எது?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
Q322. வாரணாசி என்ற பெயர் வரக் காரணம்...
வருணா மற்றும் அஸ்ஸி நதிகளுக்கிடையில் அமைந்திருப்பதால்.
Q323. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசம் ஆவதற்கு முன்பு...
மஹாராஷ்டிரா மாநிலத்துடன் இணைந்திருந்தது.
Q324. ஆங்கிலேயர்கள் காலத்தில் மிஸோரம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
லுஷாய் மலை மாவட்டம் - LUSHAI HILL DISTRICT.
Q325. குடிசைப்பகுதி அதிகமுள்ள நகரம் எது?
மும்பை.
Q326. இரண்டு மாநிலங்களுக்கு முதல் அமைச்சராக பணியாற்றிய பெருமை யாருடையது?
நாராயண் தத் திவாரி - உத்திரபிரதேசம் மற்றும் உத்தராகாண்ட்.
Q327. புவி வெப்பமடைவதை உணர்த்த நேபாள அரசு ஒரு வினோதமான வகையில் ஒரு கூட்டம் நடத்தியது. அது என்ன?

இக்கூட்டத்தை, காலா பத்தர் (கரும்பாறை) சமவெளி, எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் 4.12.2009 அன்று நடத்தியது.

Q328. கேரள மாநிலத்தின் மலப்புரம் பஞ்சாயத்து மற்றும் மாவட்டத்தின் சாதனை என்ன?

1. இந்தியாவிலேயே முதல் ISO உலகத் தரம் சான்றிதழ் பெற்ற பஞ்சாயத்து.
2. அனைவருக்கும் இலவச WIFI தொடர்பு அளித்த முதல் மாவட்டம்.

Q329. நம் நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன? அவற்றுள் எத்தனை மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது?

640 - பின்தங்கிய மாவட்டங்கள் 250. (இந்த எண்ணிக்கை மாற்றத்துக்குரியது)