Khub.info Learn TNPSC exam and online pratice

குத்துச் சண்டை - BOXING

Q1. குத்துச் சண்டை என்பது என்ன?
"இது ஒரு தனி நபர் வீர விளையாட்டு. ஆண்கள் மட்டுமே ஈடுபட்டிருந்த இந்த விளையாட்டில், சமீப காலத்தில் பெண்களும் ஈடுபடுகின்றனர்.
ஒரு நபர், கையில் மிருதுவான கையுறைகள் (GLOVES) மாட்டிக்கொண்டு, எதிராளியை, உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தாக்கி, புள்ளிகள் (தாக்கப்படும் இடத்தைப் பொருத்து) சேர்த்து, அல்லது, எதிராளி மீண்டும் போட்டியிட முடியாத வகையில் தாக்கி விழ வைப்பது - KNOCK OUT. இந்த போட்டி மூன்று நிமிடங்கள் கொண்ட (சற்று இடைவெளியுடன்) பல சுற்றுகளாக நடைபெறும். சுற்றுகளின் முடிவில் புள்ளிகள் கணக்கிலும், இடையில் KNOCK OUT முறையிலும் வெற்றியாளர் தீர்மானம் செய்யப்படுகிறார்."
Q2. குத்துச் சண்டை போடும் களம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அதன் அளவு என்ன?
ரிங் - RING. 20 X 20 அடி (6.1 மீ) சதுரம். இதன் இரு மூலைகள், வீர ர்களின் சீருடைக்கு ஏற்றவாறு ஒதுக்கப்பட்டிருக்கும்.
Q3. குத்துச் சண்டை வீரர்கள் போடும் கையுறை (GLOVES) அளவுகள் என்ன?
எடை - 10 அவுன்ஸ் - 0.28 கிகி. புள்ளிகள் கணக்கிடுவதற்காக, கையுறையில் ஒரு வெள்ளைப் பகுதி (வட்ட வடிவத்தில் வெளித் தெரியுமாறு) அமைக்கப்பட்டிருக்கும்.
Q4. குத்துச் சண்டைக்கு எத்தனை நடுவர்கள் இருப்பார்கள்?
பொதுவாக 5. ரிங் - கில் ஒருவர், புள்ளிகளை கணக்கிட நான்கு பேர்.
Q5. ஒரு குத்துச் சண்டை வீரர், எதிராளியைக் குத்துவது முக்கியமான வகைகள் யாவை?
1. HOOK,
2. STRAIGHT,
3. UPPER CUT.
Q6. குத்துச் சண்டை வீரர்கள் தற்காப்புக்காக அணியும் இரண்டு முக்கிய உபகரணங்கள் யாவை?
"1. HELMET - தலைக் கவசம் - தலையைக் காப்பாற்ற.
2. TEETH GUARD - பற்களை / தாடைகளை பாதுகாக்க."
Q7. குத்துச் சண்டை போட்டிகள் எந்த விதிகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது?
QUEENS BERRY RULES - ஜான் சேம்பர்ஸ் என்பவரால் 1867ல் தொகுக்கப்பட்டது.
Q8. குத்துச் சண்டையில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
"1. FLY WEIGHT - 108 - 112 பவுண்டு / 49-50 கிலோ.
2. FEATHER WEIGHT - 109 - 1+C19026 பவுண்டு / 54-57 கிலோ.
3. LIGHT WEIGHT - 130 - 135 பவுண்டு / 59-61 கிலோ.
4. WELTER WEIGHT - 140 - 147 பவுண்டு / 63.5-66.7 கிலோ.
5. MIDDLE WEIGHT - 154 - 160 பவுண்டு / 71-75 கிலோ.
6. HEAVY WEIGHT - 200 பவுண்டு / 91 கிலோ.C195"
Q9. குத்துச் சண்டை எப்போதிலிருந்து ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது?
1904 முதல் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டுள்ளது. 1912ல் ஸ்வீடன் நாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை. காரணம், அந்த நாட்டு விதிமுறைகள் குத்துச் சண்டையை அனுமதிப்பதில்லை.
Q10. குத்துச் சண்டை போட்டிகள் மேற்பார்வை செய்யும் உலக அமைப்புகள் யாது?
"1. சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் :
இதில் தொழில் சாரா, தொழில் சார்ந்த இரண்டு பிரிவுகள் உள்ளன - 1983 - நியூ ஜெர்ஸி, அமெரிக்கா - இது தொழில் சார்ந்த வீரர்களுக்கானது. தொழில் சாரா வீரர்களுக்கான அமைப்பு 1946ல் தொடங்கி, லூசேன், ஸ்விட்சர்லாந்தை தலைமையாகக் கொண்டுள்ளது.
2. உலக குத்துச் சண்டை சங்கம் :
1962 - அமெரிக்கா. இது தொழில் சார்ந்த குத்துச் சண்டை வீரர்களுக்கான அமைப்பு. (PROFESSIONAL BOXERS) போட்டிகள் நடத்துவது, வெற்றி வீரர்களுக்கு பட்டங்கள் வழங்குவது இதன் பணி."
Q11. ஒலிம்பிக்கில் ஹெவி வெயிட் (HEAVY WEIGHT) பிரிவில் தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கங்கள் வென்றவர்கள் யார்?
"1. லேஸ்லோ பாப் - LAZLO PAPP - ஹங்கேரி - 1948 (லண்டன்), 1952 (ஹெல்சிங்கி), 1956 மெல்போர்ன்.
2. தியோஃபிலோ ஸ்டீவன்ஸன் - TEOFILO STEVENSON - க்யூபா - 1972 (முனிச்), 1976 (மான்ட்ரீல்), 1980 (மாஸ்கோ).
3. ஃபெலிக்ஸ் சேவோன் - FELIX SAVON - க்யூபா - 1992 (பார்சிலோனா), 1996 (அட்லாண்டா), 2000 (சிட்னி)."
Q12. ஹெவி வெயிட் பிரிவில், உலக சாம்பியன் பட்டம் வென்ற சகோதரர்கள் யார்?
மைக்கேல் மற்றும் லியான் ஸ்பிங்க்ஸ், அமெரிக்கா.
Q13. ஹெவி வெயிட் பிரிவில், உலக சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்றவர் யார்?
மைக் டைசன், 20 வருடம் நான்கு மாதங்கள் - நவம்பர் 22, 1986 - அமெரிக்கா.
Q14. குத்துச் சண்டையில், ஒவ்வொரு சுற்று (3 அல்லது நிமிடம்) இடையில் அளிக்கப்படும் இடைவெளி எவ்வளவு?
ஒரு நிமிடம்.
Q15. "BROWN BOMBER" என்ற சிறப்புப்பெயர் கொண்ட குத்துச் சண்டை வீரர் யார்?
ஜோ லூயிஸ், அமெரிக்கா.
Q16. "SMOKING JOE" என அழைக்கப்பட்ட குத்துச் சண்டை வீரர் யார்?
ஜோ ஃப்ரேசியர்.
Q17. குத்துச் சண்டையில் அதிக நேரம் நடந்த போட்டி எது?
ஆண்டி பொவென்-க்கும் - ஜேக் பர்க்-க்கும் இடையில் 6.4.1893ல் நடந்த போட்டி, 111 சுற்றுக்கு, 7 மணி நேரம் 19 நிமிடங்கள் நடந்தது. இருவரும் அமெரிக்கர்கள்.
Q18. குத்துச் சண்டையில் "காதைக் கடித்துத் துப்பிய" நிகழ்ச்சி எப்போது யாரிடையே நடந்தது?
எவாண்டர் ஹோலிஃபீல்டு மற்றும் மைக் டைசன் இடையே 29.6.1997 அன்று நடந்த போட்டியில், மைக் டைசன் ஹோலி ஃபீல்டின் காதைக் கடித்துத் துப்பியது உலகக் குத்துச் சண்டையில் ஒரு முக்கிய அசம்பாவிதம்.
Q19. உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் கருப்பு இன வீரர் யார்?
ஜேன் ஜாக்ஸன் - அமெரிக்கா - 1908 - 1915.
Q20. "வண்ணத்துப் பூச்சியைப் போல் பறந்து, தேனீயைப் போல் கொட்டு" இந்த புகழ்பெற்ற தொடருக்கு சொந்தமான குத்துச் சண்டை வீரர் யார்?
முகமது அலி (கேஸியஸ் க்ளே).
Q21. "ROPE A DOPE" என்ற தொடர் முகமது அலி குத்துச் சண்டையில் ஜார்ஜ் ஃபோர்மேனுக்கெதிரான ஒரு யுக்தி. அது என்ன?
முதல் 5 சுற்றுகளை, களத்தின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளின் மீது சாய்ந்து கொண்டு ஜார்ஜ் ஃபோர்மேன் கொடுக்கும் குத்துகளை தடுத்து / வாங்கிக் கொண்டு கடத்தினார். இதன் மூலம் ஜார்ஜ் ஃபோர்மேன் மிகவும் சோர்வடைந்தார். இந்த சமயத்தை பயன்படுத்தி, முகமது அலி அவரை சரமாரியாகத் தாக்கி வெற்றி பெற்றார்.
Q22. முகமது அலியை அடித்து வீழ்த்தி, எழுந்திருக்க முடியாதவாறு KNOCK OUT முறையில் வெற்றிப் பெற்ற ஒரே குத்துச் சண்டை வீரர் யார்?
லேரி ஹோம்ஸ் - LARRY HOLMES.
Q23. "வனத்தில் ஒரு உறுமல்" "RUMBLE IN THE JUNGLE" என்ற தொடர் குத்துச் சண்டை உலகில் ஒரு புகழ்பெற்ற தொடர், எவரிடையே நடந்த போட்டியினால் இத்தொடர் உருவாயிற்று?
முகமது அலி மற்றும் ஜார்ஜ் ஃபோர்மேன்.