Khub.info Learn TNPSC exam and online pratice

கஹட்வாலா வம்சம் -- GAHADVALAS – கி.பி. 1080 -1194

Q1. கஹட்வாலா வம்சத்தை நிறுவியவர் யார், அவர்கள் ஆட்சி செய்த பகுதி எது?
யஸோ விக்ரகா -- YASO VIGRAHA – கனௌஜ் (உ.பி) (தலைநகரும்) பகுதியை ஆண்டனர்.

Q2. கஹட்வாலா வம்சத்தின் இதர முக்கிய மன்னர்கள் யாவர்?
சந்திர தேவா -- CHANDRADEVA – இவர் காலத்தில் அலஹாபாத் முதல் வாரணாசி வரையிலான அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு, வாரணாசி இரண்டாவது தலைநகராக விளங்கியது.
கோவிந்த சந்திரா -- GOVINDACHANDRA – இந்த வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர். பாலா வம்சத்தினரிடமிருந்து மகத பகுதியையும், சாண்டெல்லா வம்சத்தினரிடமிருந்து மாளவா பகுதியையும் கைப்பற்றினார். இவருடைய அரசவையில் லக்ஷ்மிதாரா என்ற அமைச்சரும் புகழ்பெற்ற அறிஞரும் இருந்தார். இவருடைய இலக்கிய படைப்பு ""க்ருதிய கல்பதாரு/ கல்பதாரு"" -- சட்டம் அதை நடைமுறைப்படுத்துவது பற்றி விளக்கும் நூல்.
ஜெயசந்திரா -- JAYACHANDRA – 1170ல் பதவியேற்றார். 1193ல் முயுஸூதீன் முகமது கோரி- உடன் சாந்த்வார்-எட்டாவா இடையில் நடந்த போரில் தோல்வி அடைந்தார். இந்த பகுதி அவருடைய மகன் கோவிந்தசந்திரா 2 விடம் ஒப்படைக்கப்பட்டு சுல்தானியர்கள் கீழ் ஆண்டு வந்தார். இவ்வாறாக, ஆறு நூற்றாண்டு இந்திய மன்னர்களால் ஆளப்பட்டு வந்த கனௌஜ் பகுதி, சுல்தானியர்களிடம் கைமாறியது.