Khub.info Learn TNPSC exam and online pratice

கிரிக்கெட் - CRICKET

Q1. கிரிக்கெட் விளையாட்டு சில விதிமுறைகளுடன் முதன் முதலில் எப்போது விளையாடத் துவங்கியது?
16, 17வது நூற்றாண்டுகளிலேயே இங்கிலாந்து, அமெரிக்கா, கேனடா நாடுகளில் (ஆங்கிலேயர்கள் வசம் ஆட்சியில் இருந்த தால்) விளையாடப்பட்டது. 1774ல் இந்த விளையாட்டுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டது. இவ்வாறாக தொடங்கிய இந்த விளையாட்டை 1884 நியூயார்க் நகரில் அமெரிக்காவும் கேனடாவும் முதல் சர்வதேச போட்டியாக விளையாடியது.
Q2. கிரிக்கெட் விளையாட்டு என்பது என்ன?
மட்டை (BAT) மற்றும் பந்து (BALL) கொண்டு விளையாடும் ஒரு குழுவிளையாட்டு. பந்து போடும் குழுவாக (FIELDING SIDE) 11 வீர ர்களும், பந்தை அடிக்கும் குழுவாக (BATTING) 11 வீர ர்களும் ஆக இந்த விளையாட்டை விளையாடுவார்கள். வீசப்படும் பந்தை அடித்து ஓடி அல்லது வேறு சில வழிகளில் புள்ளிகள் (RUN) சேர்ப்பதே இந்த விளையாட்டு.
Q3. கிரிக்கெட் விளையாட்டின் ஆடுகளம் எவ்வாறு இருக்கும்?
பொதுவாக வட்ட வடிவில் - 130 லிருந்து 150 மீ விட்டம் கொண்டதாக இருக்கும். மத்தியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து மற்ற இடங்கள் புல் தரையாக பொதுவாக இருக்கும்.
Q4. கிரிக்கெட் ஆடுகளத்தின் முக்கிய விளையாட்டுப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
"பிச் (PITCH) எனப்படும் செவ்வகப் பகுதியின் நீளம் 22 கஜம் (20.12 மீ) மற்றும் அகலம் 10 அடி (3.05மீ). இதன் இரு பக்க முடிவிலும், செங்குத்தாக மூன்று கொம்புகள் (STUMPS) சிறிது இடைவெளிகளில் நடப்பட்டு இருக்கும். அந்த இடைவெளியை அடைக்குமாறு கொம்புகளின் உச்சியில் இரண்டு உருளை வடிவ கட்டைகள் (BAILS) வைக்கப்பட்டிருக்கும். இந்த செவ்வக முனையிலிருந்து ஒருவர் (BOWLER) பந்து வீச, மறுமுனையிலிருந்து மற்ற அணியின் ஒருவர் (BATSMAN ) மட்டையின் உதவியால் பந்தை அடித்து எதிர்முனைக்கு ஓடுவார். அப்போது எதிர் முனையில் இருக்கும் மற்றொரு வீரர் (BATSMAN) அடுத்த முனைக்கு வருவார். பந்து அடிக்கப்படும் தூரத்தைப் பொருத்து இந்த ஓட்டம் தொடரும். அடிக்கப்படும் பந்து எந்த வீரராலும் பிடிக்கப்படாமல் தரை வழியாக எல்லையைத் தாண்டினால் 4 ரன்னாகவும், வான் வழியாக பிடிபடாமல் எல்லையைத் தாண்டினால் 6 ரன்னாகவும் கணக்கிடப்படும். இவ்வாறாக, நிர்ணயிக்கப்பட்ட பந்து வீச்சில் அதிகபட்ச ரன்கள் எடுத்து எதிரணி பந்தை அடிக்க களம் இறங்குவர். இவர்கள் சேர்க்கும் ரன்களைப் பொருத்து ஆட்ட முடிவு இருக்கும். இது பொதுவான விளக்கம். விளையாட்டு மூன்று வழிகளில் விளையாடப்படும். பிறகு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது."
Q5. கிரிக்கெட் மட்டையின் அளவுகள் என்ன?
"கிரிக்கெட் மட்டைகள் ""வில்லோ (WILLOW)"" என்ற மரத்தினால் செய்யப்படுகிறது.
நீளம் : 38 அங்குலம் / 96.5 செ.மீ.
அகலம் : 4.25 அங்குலம் / 10.8 செ.மீ."
Q6. கிரிக்கெட் பந்தின் அளவுகள் என்ன?
"கிரிக்கெட் பந்துகள், உருண்டை வடிவ கார்க்கின் மீது நூல் சுற்றப்பட்டு அதன் மீது இரண்டு அரை வட்ட தோல் கோப்பைகளை இணைத்து தைக்கப்பட்டிருக்கும். மேலே சிகப்பு (டெஸ்ட் போட்டிகள்), வெள்ளை (ஒரு நாள் போட்டிகள்) வர்ணம் பூசப்படும். சமீப காலத்தில் இளஞ்சிவப்பு (PINK) வர்ண பந்துகளும் பயனுக்குக் கொண்டு வரப்பட்டது.
ஆண் : பந்தின் எடை - 155 - 163 கிராம். சுற்றளவு - 22.4 செமீ.
பெண் : பந்தின் எடை - 140 - 151 கிராம். சுற்றளவு - 21 - 22.5 செ.மீ.
KOOKABURRA மற்றும் SG பந்துகள் மிகவும் புகழ்பெற்றவை, அதிகமாக பயனில் உள்ளவை."
Q7. பிச் (PITCH)-ல் நிறுத்தப்படும் கொம்புகளின் (STUMP) அளவு என்ன?
"இந்த கொம்புகள் பொதுகாக ASHWOOD என்ற மரத்தினால் செய்யப்படுகின்றன.
உயரம் : 28 அங்குலம் / 71.1 செ.மீ. தரையிலிருந்து.
விட்டம் : 1.5 அங்குலம் / 3.81 செ.மீ.
இந்த மூன்று கொம்புகளும் மொத்தத்தில் 9"" அங்குலத்திற்குள் நடப்படும்."
Q8. BAIL என்பது என்ன? அதன் அளவு என்ன?
STUMP-களின் மீது கிடைமட்டமாக வைக்கப்படும்,மரத்தினால் ஆன ஒரு சிறிய கிரிக்கெட் விளையாட்டு உபகரணம். சுமார் 10.95 செ.மீ/4.5/16 அங்குலம். இரண்டு பெயில்கள் ( ஸ்டெம்ப்களின் மீது வைக்கப்படும். இவை பல காரணங்களால் இடம் பெயரும்போது, ஒரு பேட்ஸ்மேன் (இரு முனைகளிலும்) அவுட் ஆனதாக கருதப்படும்.
Q9. ஸ்டம்புகளுக்கு இணையாகவும், அதற்கு முன்பும் பிட்ச்சிலும் சற்று வெளியிலுமாக இரு இணை வெள்ளை கோடுகள் போடப்பட்டிருக்கும். அவை என்ன?
"1. ஸ்டம்புக்கு இணையாக போடப்பட்டிருப்பது BOWLING CREASE எனப்படும். சுமார் 9 அடி நீளத்திற்கு இரு பக்கங்களிலும் போடப்படும்.
2. ஸ்டம்புக்கு முன்பாக போடப்பட்டிருக்கும் இந்தக் கோடு POPPING CREASE எனப்படும். இந்தக் கோடுகள் பந்து விதிகளுக்குட்பட்டு வீசப்படுகிறதா என கணிக்கவும் (NO BALL) ரன் எடுக்க ஓடுபவர் அவுட் ஆவதை (RUN OUT) பார்க்கவும், ரன் சரியான முறையில் எடுக்கப்படுகிறாதா என பார்க்கவும் உதவுகிறது."
Q10. கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் (பந்து, மட்டை தவிர்த்து) யாவை?
"1.தலைக்கவசம் (HELMET),
2. கையுறை (GLOVES) - பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரால் போடப்படுவது.
3. பேட் (PADS) - காலில் முழங்கால் உயரத்துக்கு போடப்படுவது.
4. பாக்ஸ் (BOX) - பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் சில நேரங்களில் ஃபீல்டர்கள் - உடலின் முக்கிய உறுப்பில் போடப்படுவது.
5. ஆர்ம் பேட் (ARM PAD) : கையுறைக்கு மேல், முழங்கை வரை போடப்படுவது.
6. THIGH PAD : இடுப்புக்குக் கீழே முழங்கால் வரை போடப்படுவது
7. CHEST PAD : விலா எலும்புகள் பாதுகாப்புக்காக போடப்படுவது."
Q11. கிரிக்கெட் எத்தனை முறையில் விளையாடப்படுகிறது?
"1. டெஸ்ட் போட்டி (TEST MATCH) : 11 பேர் கொண்ட இரண்டு அணிகள், இருமுறை பேட்டிங் (BATTING) மற்றும் பந்து வீசுதல் (BOWLING) செய்து, 5 நாட்களுக்கு, 1 நாளைக்கு 90 ஓவர்கள் (6 தடவை ஒருவரே பந்து வீசுவது) வீதம் விளையாடுவது.
2. ஒரு நாள் போட்டி : ஒரு அணிக்கு 50 ஓவர்கள் வீதம் ஒரே நாளில் விளையாடி முடிப்பது.
3. 20:20 : ஒரு அணிக்கு 20 ஓவர்கள் வீதம் விளையாடுவது."
Q12. கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் (INNINGS) என்பது என்ன?
ஒரு அணியின் வீரர்கள் அனைவரும் பேட்டிங் செய்து முடிப்பது அல்லது ஒதுக்கப்பட்ட ஓவர்களை விளையாடி முடிப்பது இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவான ஆங்கில வார்த்தை.
Q13. கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச்சில் வெற்றி எவ்வாறு நிச்சயிக்கப்படுகிறது?
"முதலில் ஒரு அணி பேட்டிங் செய்து, முழுமையான வீரர்களை இழந்தோ அல்லது குறைந்த வீரர்கள் பேட்டிங் செய்து, போதும் என்று அறிவித்து, சுமார் 400 ரன் கள் எடுத்த தாக வைத்துக் கொள்வோம். இந்நிலையில் அடுத்த அணி பேட்டிங் செய்து, அதே முறையில் 400 ஐ விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரன்கள் எடுக்கலாம். (குறைவாக 300 என்றும், அதிகமாக 700 என்றும் வைப்போம்). இந்நிலையில் முதலில் ஆடிய அணி பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்ததாக வைத்தால், இரண்டாவது அணி 300 எடுத்த பட்சத்தில் இந்த அணியின் மொத்த இரண்டாவது இன்னிங்ஸின் மொத்த ரன் 400 ஆகிறது. (இரண்டாவது அணியின் முதல் இன்னிங்ஸ் ரன் 700 ஆக இருக்கும் பட்சத்தில், முதல் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகிறது). இந்நிலையில் இரண்டாவது அணி பேட்டிங் செய்ய களமிறங்கி, முழுமையான (10) வீரர்களும் அவுட்டாகாமல் 400 ஐ தாண்டினால், இந்த இரண்டாவது அணி வெற்றி பெற்றதாகிறது. மாறாக 400 ஐ விட குறைவான ரன்னில் அனைத்து வீரர்களையும் இழந்தால், முதல் அணி வெற்றி பெற்றதாகிறது. இரண்டாவது அணி இரண்டாவது முறை பேட்டிங்கில் 400 ரன்னை விட குறைவான ரன்னுடன் ஆட்ட நேரத்தில், அனைத்து வீரர்களையும் இழக்காமலிருந்தால், ஆட்டம் சம நிலை (DRAW) எனப்படும். இந்த முறை 5 நாட்களில் முடிவடைய வேண்டும். இல்லையெனில் DRAW."
Q14. கிரிக்கெட் விளையாட்டில் ஃபாலோ ஆன் (FOLLOW ON) மற்றும் இன்னிங்ஸ் தோல்வி (INNINGS DEFEAT) என்பது என்ன?
"FOLLOW ON : முதலில் பேட்டிங் செய்யும் அணி, அனைத்து வீரர்களையும் இழந்தோ, அல்லது குறைவான வீரர்களின் உதவியால், 600 ரன்கள் எடுத்ததாக வைத்துக் கொள்வோம். இந்நிலையில் இரண்டாவது அணி முதல் முறையாக பேட்டிங் செய்ய வந்து 600ஐ விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரன் எடுக்கலாம். அதிகமாக எடுக்கும் பட்சத்தில் முதல் அணி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கும். இரண்டாவது அணி, பேட்டிங் செய்து, 300 ரன் கள் அதாவது முதல் அணியை விட 300 ரன் கள் குறைவாக எடுத்து உள்ளது. இந்த வித்தியாசம் 200 ரன் களை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில், முதல் அணியின் கேப்டன், இரண்டாவது அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கலாம் அல்லது அழைக்காமல் தங்களது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடரலாம். அவ்வாறு மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கப்படும் பட்சத்தில் இது FOLLOW ON ஆகிறது.
INNINGS DEFEAT : இருமுறை பேட்டிங் செய்ய FOLLOW ON முறையில் அழைக்கப்பட்ட அணி பேட்டிங் முழுவதுமாக செய்து, முதல் அணியின் முதல் இன்னிங்ஸ் ரன் களை விட குறைவாக எடுக்கும் பட்சத்தில் அது INNINGS DEFEAT. இன்னிங்ஸ் தோல்வி ஆகிறது. இந்த முறையான தோல்வி,முதல் அணி, முதலில் பேட்டிங் செய்து, ஏற்படும் குறைவு வித்தியாசத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது."
Q15. கிரிக்கெட் டெஸ்ட் போட்டி முதல் முறையாக எப்போது எந்த நாடுகளுக்கிடையே விளையாடப்பட்டது?
15.2.1877 - இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது.
Q16. இந்தியா முதன்முதலில் எங்கு, எப்போது, யாருடன் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடியது?
25-28/6/1932 - இங்கிலாந்துடன், லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி, 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Q17. இந்தியாவில் நடந்து முடிந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி எது?
15-18/12/1933 - இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்றது. இந்தியா 9 விக்கெட்டில் தோல்வி அடைந்தது.
Q18. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாட (5 நாட்கள் போட்டி) தகுதி பெற்றுள்ள நாடுகள் எவை?
இந்தியா, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்காள தேசம்.
Q19. இந்தியாவுக்கும் மற்ற டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டிகள் எது?
"1. இங்கிலாந்து : 25 - 28/6/1932 - லார்ட்ஸ் - இங்கிலாந்து வெற்றி.
2. ஆஸ்திரேலியா : 28 நவம்பர் 1947/4/ டிசம்பர் 1947 - ஆஸ்திரேலியாவில் - இந்தியா தோல்வி.
3. பாகிஸ்தான் : அக்டோபர்1952 - இந்தியாவில் - இந்தியா வெற்றி.
4. ஸ்ரீலங்கா : செப்டம்பர் 1982 - சென்னை - நடு நிலை.
5. தென் ஆப்பிரிக்கா : நவம்பர் 1992 - தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. முடிவு பெறவில்லை.
6. மேற்கு இந்திய தீவுகள் : நவம்பர் 1948 - டெல்லி, இந்தியா - முடிவு வரவில்லை.
7. நியூசிலாந்து : நவம்பர் 1955 - ஹைதராபாத் - முடிவு வரவில்லை.
8. வங்காள தேசம் : நவம்பர் 2000 - தாக்கா - இந்தியா - வெற்றி."
Q20. இந்தியாவின் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெற்றி எது?
1952ல் - பிப்ரவரி 6 - 10; இந்தியா ஒரு இன்னிங்ஸ் 8 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. இதே ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடர் (TEST SERIES) வெற்றி பெற்றது.
Q21. இந்தியாவின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் யார்?
C.K. நாயுடு.
Q22. உலகில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளுக்கு அளிக்கப்படும் கோப்பைகளுக்கான பெயர்கள் என்ன?
"1. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா - THE ASHES (URN)
2. இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா - BASIL D' OLIEVERA TROPHY
3. ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் - WISDEN TROPHY
4. ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் - FRANK WORREL
5. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து - TRANS TASMAN TROPHY
6. ஆஸ்திரேலியா - இந்தியா - BORDER GAVASKAR TROPHY
7. தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்திய தீவுகள் - VIVIAN RICHARDS TROPHY"
Q23. டெஸ்ட் போட்டிகள் கோப்பையில் "ASHES" என்ற பெயர் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது. இதன் பின்னணி என்ன? (ASHES = சாம்பல்)
"இது இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டிக்கான கோப்பை. 1882ல் இந்த இரு நாடுகளுக்கிடையில் நடந்த டெஸ்ட் தொடர் போட்டியில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்தது. அதை விவரிக்கும் வகையில் இங்கிலாந்தின் பத்திரிகையாளர் ரெஜினால்டு ப்ரூம் (REGINALD BROOM) இந்த இழப்பை ஒரு ""இரங்கல்"" செய்தியாக வெளியிட்டார். அந்த வெளியீட்டில் பயன்படுத்திய ASHES மற்றும் URN = சாம்பல் கொண்ட தாழி - வார்த்தைகள் நிலைத்து விட்டன."
Q24. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி என்பது என்ன?
இரண்டு அணிகளுக்கிடையில் ஒரே நாளில் தலா 50 ஓவர் (6 பந்து வீச்சுகள்) என விளையாடும் போட்டி. இது முழு நேரமாக பகலிலோ, பகல்-இரவு பகுதிகளாகவோ விளையாடப்படுகிறது.
Q25. ஒரு நாள் குறிப்பிட்ட ஓவர் விளையாட்டுப் போட்டி எப்போது எங்கு துவங்கியது?
1962ல் இங்கிலாந்தில் சிறு பகுதிகள் (COUNTY) இடையில் விளையாடப்பட்டது.
Q26. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பிரபலம் ஆவதற்கு காரணமான நிகழ்வு என்ன?
ஆஸ்திரேலியாவில் கெர்ரி பேக்கர் (KERRY PACKER) - என்ற ஒரு பிரபல வணிகர், 1977-79களில், தொழில் ரீதியான - PROFESSIONAL - ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை, உலகின் பல பிரபல கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு, இரவு-பகல் போட்டிகளாக, வண்ண உடைகள் அணிந்த வீரர்களால்,மின்விளக்கு வெளிச்சத்தில், ஒரு திருவிழா போல நடத்தினார். ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் பேராதரவு பெருகியதால், இவ்வகைப் போட்டிகள் நிலைக்கத் தொடங்கி, சர்வதேச அங்கீகாரமும் கிடைத்தது.
Q27. அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாள் போட்டி எப்போது, யாருடன், எங்கு நடைபெற்றது?
5.1.1971 -- ஆஸ்திரேலியா -- இங்கிலாந்து -- மெல்போர்ன் மைதானம்.
Q28. கிரிக்கெட் சர்வதேச அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் யாவை?
"1. உலக க்கோப்பை - WORLD CUP : 1957ல் தொடங்கப்பட்டு, தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது.
2. சேம்பியன் கோப்பை - CHAMPION TROPHY : 1998ல் தொடங்கப்பட்டு இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
3. ஆசியா கோப்பை - ASIA CUP : 1984 முதல் ஆசிய நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் ஒரு நாள் போட்டிகள்.
4. பெண்கள் உலக க்கோப்பை - WOMEN WORLD CUP : 1998 முதல், நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டி. இவை தவிர்த்து, இரு நாடுகளுக்கிடையில் அல்லது மூன்று நாடுகளுக்கிடையில் என அவ்வப்போது நடக்கின்றன."
Q29. ஒருநாள் கிரிக்கெட் முதல் ஆண்கள் உலகக் கோப்பை எங்கு, எப்போது நடந்தது?
ஜூன் 1975, இங்கிலாந்து.
Q30. ஒரு நாள் ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்த இடங்கள் யாவை?
ஸ்ரீலங்கா
வ. எண் வருடம் நடந்த இடம் வெற்றி 2ம் இடம்
1. 1975 இங்கிலாந்து மே.இ.தீவுகள் ஆஸ்திரேலியா
2. 1979 இங்கிலாந்து மே.இ.தீவுகள் இங்கிலாந்து
3. 1983 இங்கிலாந்து இந்தியா மே.இ.தீவுகள்
4. 1987 இந்தியா -பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து
5. 1992 ஆஸ்திரேலியா நியூசிலாந்து பாகிஸ்தான் இங்கிலாந்து
6. 1996 இந்தியா ஸ்ரீலங்கா பாகிஸ்தான் ஸ்ரீலங்கா ஆஸ்திரேலியா
7. 1999 இங்கிலாந்து ஆஸ்திரேலியா பாகிஸ்தான்
8. 2003 தென் - ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா
9. 2007 மே.இ.தீவுகள் ஆஸ்திரேலியா ஸ்ரீலங்கா
10. 2011 இந்தியா ஸ்ரீலங்கா வங்காள தேசம் இந்தியா ஸ்ரீலங்கா
11. 2015 ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து
12. 2019 இங்கிலாந்து - -
13. 2023 இந்தியா - -
Q31. ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை அதிகமுறை நடத்திய நாடு எது?
இங்கிலாந்து - 4 முறை - 1975, 1979, 1983 & 1999.
Q32. ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை அதிகமுறை வென்ற நாடு எது?
"ஆஸ்திரேலியா - 5 முறை - 1987, 1999, 2003, 2007, 2015. இதைத் தொடர்ந்து, இந்தியா - 2 - 1983, 2011, மேற்கு இந்திய தீவுகள் - 2 - 1975, 1979."
Q33. இந்தியா 1983, 2011ல் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் வென்றதின் சில முக்கிய தகவல்கள் :
"1983 : கேப்டன் - கபில்தேவ்,
அதிக ரன் - கே. ஸ்ரீகாந்த் - 38,
அதிக விக்கெட் - மதன்லால் - 3,
ஆட்ட நாயகன் - மொஹிந்தர் அமர் நாத்.
தொடர் நாயகன் - விருது கிடையாது.
2011 : கேப்டன் - எம்.எஸ். தோனி
அதிக ரன் - கவுதம் கம்பீர் - 97,
அதிக விக்கெட் - ஜாகீர்கான், யுவராஜ் சிங் - 2,
ஆட்ட நாயகன் - எம்.எஸ். தோனி
தொடர் நாயகன் - யுவராஜ் சிங்"
Q34. T 20 எனப்படும் 20 ஓவெர் கிரிக்கெட் போட்டி என்பது என்ன?
டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் நடைபெறுவதாலும், பல போட்டிகளில் முடிவுகள் வராததாலும், மக்களிடையே ஆர்வம் குறையத் தொடங்கியது. இதை மாற்றும் விதமாக வந்தது தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி. இந்த போட்டிகளில் முடிவுகள் வந்தாலும், ஒரு முழு நாள் தேவைப்படுகிறது. இந்நிலையில், இன்னும் குறைவான நேரத்தில், இன்னும் வேகம், திறமை மற்றும் சுவாரஸ்யம் மிகுந்த போட்டியை மக்கள் எதிர்பார்த்தனர். அதன் விளைவால் உருவானதே 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள். ஒரு அணி 20 ஓவர்கள் விளையாடலாம். ஒரு பந்து வீச்சாளர்4 ஓவர்கள் மட்டுமே பந்து வீச முடியும். இவ்வாறாக பல விதிமுறைகளுடன், பொதுவாக மாலை 6 மணீக்கு மேல் மின் வெளிச்சத்தில் விளையாடப்படும் ஒரு போட்டி இங்கிலாந்தில் 203ல் அறிமுகப்படுத்தப்பட்டு, உலக கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு உயர்ந்து, தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மிகப் பிரபலமான தொழில் ரீதியான போட்டியாகிவிட்டது. மக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
Q35. T 20 - 20 ஓவர் கிரிக்கெட்டின் முதல் உலகக்கோப்பை போட்டி எங்கு நடந்தது?
11-24 செப்டம்பர் 2007 - தென் ஆப்பிரிக்கா.
Q36. T 20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்த இடங்கள் யாவை?
"இவ்வகையான போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 2007 முதல் நடைபெறுகிறது.
1. 2007 - தென் ஆப்பிரிக்கா - இந்தியா வெற்றி.
2. 2009 - இங்கிலாந்து - பாகிஸ்தான்.
3. 2010 - மே.இ. தீவுகள் - இங்கிலாந்து.
4. 2012 - ஸ்ரீலங்கா - மே.இ. தீவுகள்
5. 2014 - வங்காள தேசம் - ஸ்ரீலங்கா
6. 2016 - இந்தியா."
Q37. கிரிக்கெட்டில் ஆசியா கோப்பை என்பது என்ன?
1984 முதல் ஆசிய நாடுகளுக்கிடையில், ஒரு நாள் போட்டியாகவும், 20 ஓவர் போட்டியாகவும் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த போட்டிகள் :
வ.எண் வருடம்நடந்த இடம் போட்டி வெற்றி
1. 1984 ஐ.அ. நாடுகள் 50 ஓவர் இந்தியா
2. 1986 ஸ்ரீலங்கா 50 ஓவர் ஸ்ரீலங்கா
3. 1988 வங்காள தேசம் 50 ஓவர் இந்தியா
4. 1990/91 இந்தியா 50 ஓவர் இந்தியா
5. 1993 - - -
6. 1995 ஐ.அ. நாடுகள் 50 ஓவர் இந்தியா
7. 1997 ஸ்ரீலங்கா 50 ஓவர் ஸ்ரீலங்கா
8. 2000 வங்காள தேசம் 50 ஓவர் பாகிஸ்தான்
9. 2004 ஸ்ரீலங்கா 50 ஓவர் ஸ்ரீலங்கா
10. 2008 பாகிஸ்தான் 50 ஓவர் ஸ்ரீலங்கா
11. 2010 ஸ்ரீலங்கா 50 ஓவர் இந்தியா
12. 2012 வங்காள தேசம் 50 ஓவர் பாகிஸ்தான்
13. 2014 வங்காள தேசம் 50 ஓவர் ஸ்ரீலங்கா
14. 2016 வங்காள தேசம் 20 ஓவர் இந்தியா
15. 2018 இந்தியா
Q38. கிரிக்கெட் ஒரு நாள் சாம்பியன் கோப்பை எப்போது தொடங்கி, நடந்த இடங்கள் யாவை?
1998 லிருந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
-
வ.எண் வருடம் நடந்த இடம் வெற்றி 2ம் இடம்
1. 1998 வங்காள தேசம் தென் ஆப்பிரிக்கா மே.இ.தீவுகள்
2. 2000 கென்யா நியூசிலாந்து இந்தியா
3. 2002 ஸ்ரீலங்கா இந்தியா ஸ்ரீலங்கா
4. 2004 இங்கிலாந்து மே.இ.தீவுகள் இங்கிலாந்து
5. 2006 இந்தியா ஆஸ்திரேலியா மே.இ.தீவுகள்
6. 2009 தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மே.இ.தீவுகள்
7. 2013 இங்கிலாந்து இந்தியா இங்கிலாந்து
8. 2017 இங்கிலாந்து
Q39. கிரிக்கெட்டில் POWER PLAY என்பது என்ன?
"இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அனுசரிக்கப்படுவதில்லை. ஒரு நாள் மட்டும் T 20 போட்டிகளில் மட்டும் அனுசரிக்கப்படுகிறது. ஒரு நாள் போட்டியில், மொத்தம் 15 ஓவர்கள், POWER PLAY ஆகும். இதில், தொடக்க பத்து ஓவர்கள் கட்டாய POWER PLAY வாகவும், மீத 5 ஓவர்கள் பிற்பகுதியில், மட்டை வீசும் அணியின் விருப்ப்ப்படி எடுத்துக்கொள்ளும்படி விதி உள்ளது. அப்படி எடுக்கப்படாத காலத்தில் 36 முதல் 40வது ஓவர் கட்டாய POWER PLAY ஆகிறது. T 20 போட்டியில் முதல் 6 ஓவர் கட்டாய POWER PLAY ஆகும். POWER PLAY காலத்தில், பந்து வீசும் அணி - FIELDING SIDE - இரண்டு வீரர்களை மட்டுமே 30 மீ வட்டத்திற்கு வெளியில் நிறுத்த முடியும். இந்த வட்டம் PITCH-ஐ சுற்றி போடப்பட்டிருக்கும். இதற்கு 2 முக்கிய விதிகள் உள்ளது.
1. எந்த ஒரு ஓவரின் நடுவில் (ஒரு ஓவரில் இரண்டு மூன்று பந்துகள் வீசப்பட்ட பிறகு) ஆரம்பிக்க முடியாது.
2. POWER PLAY தொடங்கி விட்டால், 5 ஓவர்கள் கட்டாயமாக வீசப்பட வேண்டும்."
Q40. கிரிக்கெட்டில் NO BALL எனப்படுவது என்ன?
"1. பந்து வீசுபவர் ஓடி வந்து பந்தை வீசும்போது அவருடைய முன் கால், ஸ்டம்புகளுக்கு முன்பாக போடப்பட்டிருக்கும் POPPING CREASE கோட்டை தாண்டக் கூடாது.
2. வீசப்பட்ட பந்து, தரையைத் தொடாமல், பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே வீசப்படக் கூடாது. ஏனெனில் அது பந்து அடிப்பவரை காயப்படுத்தக் கூடும். இந்த விதிகளை மீறும் போது, வீசப்பட்ட பந்து NO BALL அறிவிக்கப்படுவதுடன், வீசப்பட்ட பந்தாக கணக்கெடுக்கப்படாமல், FREE HIT என அறிவிக்கப்படும். ஒரு ரன்னும் சேரும். FREE HIT அறிவிக்கப்பட்டால், பந்து அடிப்பவரை ரன் அவுட் (RUN OUT) தவிர வேறு வழிகளில் அவுட் ஆக்க முடியாது."
Q41. கிரிக்கெட்டில் WIDE BALL என்பது என்ன?
பந்து வீசுவதில் இதுவும் ஒரு விதிமுறை. ஸ்டம்புகளின் இரு பக்கங்களிலும் (பேட்ஸ்மேனின் வலது, இடது புறம்) ஒரு கோடு போடப்பட்டு இருக்கும். இந்த கோட்டிற்கு வெளியில் பந்து வீசப்படும் போது, பந்தை பேட்ஸ்மேனால் அடிக்க முடியாது என்பதால் WIDE BALL என அறிவிக்கப்ப்டும். பேட்டிங் அணிக்கு ஒரு ரன் சேர்க்கப்படும்.
Q42. கிரிக்கெட் பேட்ஸ்மேன் அவுட் ஆகும் முறைகள் என்ன?
"ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆவதற்கு 10 வழிகள் உள்ளன. அவை:
1. பௌல்ட் - BOWLED :
பேட்ஸ் மேனை நோக்கி வீசப்பட்ட பந்து, பேட்ஸ்மேனால் மட்டையால் தடுக்கப்படாமல், நேரடியாக ஸ்டம்புகள் மீது பட்டு, நிலைகுலைய செய்வது.
2. லெக் பிஃபோர் விக்கெட் - LEG BEFORE WICKET :
பேட்ஸ்மேனை நோக்கி வீசப்பட்ட பந்து மட்டையால் தடுக்கப்படாமல், ஸ்டம்புகளுக்கு முன்பாக, முழங்காலுக்கு கீழே படுவது. இதில் சில விதிமுறைகள் உள்ளன. நடுவரின் எண்ணப்படி, வீசப்பட்ட பந்து, ஸ்டம்புகளை வீழ்த்தக்கூடிய வாய்ப்புகள் இருந்ததாக கருதப்பட்டால், நடுவர் பேட்ஸ் மேனை அவுட் என அறிவிப்பார்.
3. காட் - CAUGHT :
பேட்ஸ்மேனால் அடிக்கப்பட்ட பந்தை, தரையில் படாமல், பந்தை வீசுபவர், அல்லது மற்ற எந்த வீரராலும் பிடிக்கப்பட்டால், பேட்ஸ்மேன் இம்முறையில் அவுட் ஆவார். இது ஆட்ட களத்தின் எல்லைக்குள் நடக்க வேண்டும்.
4. ரன் அவுட் - RUN OUT :
தன்னை நோக்கி வீசப்பட்ட பந்தை ஒரு பேட்ஸ்மேன் மட்டையால் அடித்துவிட்டு, எதிர்முனைக்கு ஓடிச் சென்று ஒரு / இரண்டு / மூன்று ரன் களை எடுக்க முயற்சிப்பார். இவர் / சக வீரர் ஓடி எதிர்முனையை அடைவதற்குள், பந்து பிடிக்கப்பட்டு, பந்தை பிடித்த வீரரால் நேரடியாகவோ, அல்லது வேறொரு வீரரின் உதவியாலோ, ஸ்டம்புகள் நிலையச் செய்யப்பட்டால், அது இவ்வகை அவுட் ஆகிறது. இந்த அவுட் இரு முனையிலும் ஏற்படலாம்.
5. ஸ்டம்ப்டு - STUMPED :
வீசப்பட்ட பந்தை அடிக்க முயற்சி செய்யும்போது சில நேரங்களில் பேட்ஸ்மேன் (POPPING CREASE) ஸ்டம்புகளுக்கு முன்னால் இருக்கும் கோட்டை தாண்டும் பட்சத்தில், ஆர் திரும்பி கோட்டுக்குள் வருவதற்கு முன் குறைந்தபட்சம் மட்டையை கோட்டுக்குள் பிடித்துக் கொண்டே வைக்க முயற்சி செய்வதற்கு முன், ஸ்டம்புக்கு பின் நிற்கும் விக்கெட் கீப்பர் (பொதுவாக) பந்தை பிடித்து ஸ்டம்புகளின் நிலையை கலைத்து விடுவது இவ்வகை அவுட் ஆகும். சில சமயங்களில் ஸ்டம்புக்கு முன் வெகு அருகில் பந்தை பிடிக்க நிற்பவர், பந்தை பிடித்து, நேரடியாகவோ அல்லது விக்கெட் கீப்பர் மூலமாக இம்முறை அவுட் செய்யலாம்.
6. ஹிட் விக்கெட் - HIT WICKET :
அடிக்கப்பட்ட பந்து, அல்லது அடிக்கும்போது மட்டையோ அல்லது உடல் உறுப்பில் ஏதேனுமோ அல்லது தலைக்கவசம், தொப்பி ஆகிய ஏதாவது ஒரு வகையில் ஸ்டம்புகள் நிலைகுலைப்பட்டால், அது இவ்வகை அவுட் ஆகும்.
7. HANDLING THE BALL :
பேட்ஸ்மேன் பந்தை அடித்து, அந்த பந்தை கையால் தடுத்து நிறுத்தும் போது, இவ்வகை அவுட் ஆகும். அடித்த பந்து நின்றவுடன், நடுவரின் அனுமதியுடன் எடுத்துப் போடலாம். காலால், பந்து ஸ்டம்பில் படாமல் தடுக்கலாம்.
8. HITTING THE BALL TWICE :
ஒரு பேட்ஸ்மேன் வீசப்படும் பந்தை ஒரு முறையே பேட்டால் தடுக்கலாம் / அடிக்கலாம். இரண்டாவது முறையாக அடித்தாலோ அல்லது ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்தை தடுத்தாலோ இவ்வகை அவுட் ஆகும்.
9. OUSTRUCTING THE FIELD :
ஒரு பேட்ஸ்மேன், ரன் எடுக்கும் நோக்கத்திலோ, அல்லது ரன் அவுட் ஆகாமல் இருக்க வேண்டும் நோக்கத்திலோ, பந்தை பிடிக்கவரும் எதிரணி வீரரை, பந்தை பிடிக்காமல் வேண்டுமென்றே தடுத்ததாகக் கருதப்பட்டால், நடுவரால் அவர் அவுட்டாகக் கருதப்படுவார்.
10. TIMED OUT :
ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி தனது அணி கூடாரத்துக்கு திரும்புவார். உடனே அடுத்த பேட்ஸ்மேன் விளையாடுவதற்கு, ஒரு குறிப்பிட்ட அவகாசத்திற்குள் 3 நிமிடங்கள் களத்தில் இறங்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், அந்த வீரர் அவுட்டானதாக க் கருதப்பட்டு, அடுத்த பேட்ஸ்மேன் களமிறங்க வேண்டும். இதுவரை எந்த அங்கீகரிக்கப்பட்ட போட்டியிலும் இந்த முறை அவுட் நடக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது."
Q43. கிரிக்கெட்டில் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் HANDLING THE BALL - பந்தை கையால் தடுக்கும் முறை மூலம் அவுட் ஆனவர்கள் யார்?
டெஸ்ட் போட்டிகளில் : 7 முறை
1. ரஸ்ஸெல் எண்டியான் - தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து - 1.1.1957.
2. ஆண்ட்ரூ ஹில்டிச் - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் - 24.3.1979.
3. மொஹ்சின் கான் - பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா - 22.9.1982.
4. டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் - மேற்கிந்திய தீவுகள் - இந்தியா - 24.11.1983.
5. க்ரஹாம் கூச் - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா - 3.6.1993.
6. ஸ்டீவ் வாஹ் - ஆஸ்திரேலியா - இந்தியா - 18.3.2001.
7. மிக்கேல் வாஹ்ன் - இங்கிலாந்து - இந்தியா - 19.12.2001
ஒரு நாள் போட்டிகளில் : 2 முறை
1. மொஹிந்தர் அமர்நாத் - இந்தியா - ஆஸ்திரேலியா - 9.2.1986.
2. டேரில் கல்லினன் - தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்திய தீவுகள் - 27.1.1999.
Q44. கிரிக்கெட்டில் தடங்கல் செய்த முறையில் (OBSTRUCTION) அவுட் ஆனவர்கள் யார் யார்?
டெஸ்ட் போட்டி - 1 முறை :
1. லென் ஹட்டன் - இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா - 16.8.1951.
ஒரு நாள் போட்டி - 6 முறை :
1. ரமீஸ் ராஸா - பாகிஸ்தான் - இங்கிலாந்து -20.11.1988.
2. மொஹிந்தர் அமர்நாத் - இந்தியா -ஸ்ரீலங்கா - 22.10.1989.
3. இன்ஸமாம் உல் ஹக் - பாகிஸ்தான் - இந்தியா - 6.2.2006.
4. முகமது ஹஃபீஸ் - பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா - 21.3.13
5. அன்வர் அலி - பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா - 27.11.2013
6. பென் ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா - 5.9.2015.
Q45. கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் துவங்கி சுமார் 140 வருடங்கள் ஆகிறது. (OBSTRUCTION) தடங்கல் செய்த முறையில் அவுட் ஆனவர் ஒரே ஒரு பேட்ஸ்மேன். அவர் யார்?
லென் ஹட்டன் - இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா - 16.8.1951.
Q46. பந்தைக் கையால் தடுத்தல், தடங்கல் செய்தல் - ஆகிய இரு முறைகளிலும் அவுட் ஆன ஒரே பேட்ஸ்மேன் யார்?
"மொஹிந்தர் அமர் நாத் - இந்தியா - இரண்டுமுறையும் ஒரு நாள் போட்டியில் ஏற்பட்டது.
1. கையால் பந்தை தடுத்தல் : 9.2.86 - ஆஸ்திரேலியா.
2. தடங்கல் செய்தல் : 22.10.1989 - ஸ்ரீலங்கா."
Q47. தடங்கல் செய்தல் (OBSTRUCTION) முறையில் அதிகமாக அவுட் ஆனவர்கள் எந்த நாட்டு வீரர்கள்?
மொஹ்சின் கான் (டெஸ்ட்); ரமீஸ் ராஸா, இன்ஸமாம் உல் ஹக், முகமது ஹஃபீஸ், அன்வர் அலி ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில்.
Q48. ஒரு நாள் போட்டிகளில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர் உலகக்கோப்பை எப்போது துவங்கி, எங்கெல்லாம் எப்போது நடந்தது?
முதன்முதலில் 1988ல் இந்த போட்டி தொடங்கியது. பிறகு 10 வருட இடைவெளி, மீண்டும் 1998ல் தொடங்கி இரண்டு வருட இடைவெளிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வ.எண் வருடம் நடந்த இடம் வெற்றி அணி
1. 1988ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
2. 1998 தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து
3. 2000 ஸ்ரீலங்கா இந்தியா
4. 2002 நியூசிலாந்து ஆஸ்திரேலியா
5. 2004 வங்காள தேசம் பாகிஸ்தான்
6. 2006 ஸ்ரீலங்கா பாகிஸ்தான்
7. 2008 மலேசியா இந்தியா
8. 2010 நியூசிலாந்து ஆஸ்திரேலியா
9. 2012 ஆஸ்திரேலியா இந்தியா
10. 2014 ஐக்கிய அரபு நாடுகள் தென் ஆப்பிரிக்கா
11. 2016 வங்காள தேசம் மே.இ.தீவுகள்
12. 2018 நியூசிலாந்து
Q49. பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சி சரித்திரம் பற்றி கூறுக.
வ.எண் வருடம் நடந்த இடம் வெற்றி அணி
1. 1973 இங்கிலாந்து இங்கிலாந்து
2. 1978 இந்தியா ஆஸ்திரேலியா
3. 1982 நியூசிலாந்து ஆஸ்திரேலியா
4. 1988 ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
5. 1993 இங்கிலாந்து இங்கிலாந்து
6. 1997 இந்தியா ஆஸ்திரேலியா
7. 2000 நியூசிலாந்து நியூசிலாந்து
8. 2005 தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா
9. 2013 இந்தியா ஆஸ்திரேலியா
10. 2017 இங்கிலாந்து
11. 2021 நியூசிலாந்து
பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு 1934ல் இங்கிலாந்து நியூசிலாந்துக்கிடையே தொடங்கியது. ஆஸ்திரேலியாவும் இதில் கலந்து கொண்டது. 1960 வரை டெஸ்ட் போட்டிகள் போன்று இந்த மூன்று நாடுகளும் விளையாடின. ஒரு நாள் போட்டி விளையாட்டு 1962ல் தொடங்கியது. 1973ல் முதல் சர்வ தேச ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நடத்தப்பட்டு இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2000 வரை, கால இடைவெளி நிர்ணயிக்கப்படாமல் நடந்து, 2005 முதல் நான்காண்டு இடைவெளிகளில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலக்க் கோப்பை நடந்த இடங்கள் விவரம் :
Q50. நம் நாட்டில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகள் யாவை?
1. ரஞ்சிக் கோப்பை :
1934ல் அறிமுகப்படுத்தப்பட்டது. நவநகர் குறுநில மன்னர் சர் ரஞ்ஜித் சிங்ஜி விபாஜி நினைவாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி மாநிலங்களுக்கிடையில் (ரயில்வே மற்றும் ராணுவ அணிகளும் சேர்த்து) டெஸ்ட் போட்டிகள் போன்று நடத்தப்படுகிறது. பாம்பே அணி இந்தப் போட்டியை 41 முறை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. வருடந்தோறும் நடக்கிறது.
2. இரானிக் கோப்பை :
1959 - 60 முதல் ரஞ்சிக் கோப்பை வென்ற அணிக்கும், மற்ற எல்லா அணிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட (Rest of India) அணிக்குமிடையில் வருடந்தோறும் நடத்தப்படும் போட்டி. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 1928 முதல் 1970 வரை பணிபுரிந்த இரானி என்பவரின் ஞாபகார்த்தமாக நடத்தப்படுகிறது.
3. NKP சால்வே போட்டி கோப்பை :
1994 - 95 முதல், ஒரு நாள் போட்டிகள் போன்று நடத்தப்பட்டு வருகிறது. இதில் 3 அணிகளே - இந்தியா - சிகப்பு, நீலம், பச்சை என பங்கேற்கின்றன.
4. துலீப் கோப்பை :
1961 - 62ல் தொடங்கப்பட்ட இந்த போட்டி, டெஸ்ட் போட்டிகளைப் போல, நவ நகர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த துலீப் சிங் ஜி யின் ஞாபகார்த்தமாக நடத்தப்படுகிறது. இவர் இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று, அந்த நாட்டுக்காக 1929 - 31 களில் விளையாடியவர், இந்த போட்டியில், இந்திய மாநில அணிகளிலிருந்து, வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, 5 அணிகளாக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய அணிகளாக விளையாடும். வருடாந்திரப் போட்டி.
5. விஜய் ஹசாரே கோப்பை :
2002 - 2003 ல் தொடங்கப்பட்ட இந்தக் கோப்பை, இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் வீரர் விஜய் ஹசாரேவின் ஞாபகார்த்தமாக, ஒரு நாள் போட்டியாக (50 ஓவர்), ரஞ்சிக் கோப்பை முன்னணி அணிகளுக்கிடையில் வருடந்தோறும் நடத்தப்படுகிறது.
6. தேவ்தார் கோப்பை :
1973 - 74ல் துவங்கப்பட்ட இந்த போட்டி, இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர் முனைவர் டி.பி. தேவ்தார் ஞாபகார்த்தமாக, ஒரு நாள் போட்டிகளாக (50 ஓவர்), வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய அணிகளுக்கு இடையே நடத்தப்படும் போட்டி.
7. கார்ப்பொரேட் கோப்பை :
இந்தியாவின் தலைசிறந்த தனியார் நிறுவன அணிகளுக்கிடையில் நடத்தப்படும் போட்டி. 8. C.K. நாயுடு கோப்பை :
இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் C.K. நாயுடு அவர்களின் நினைவாக, 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளைப் போல் நடத்தப்படும் ஒரு போட்டி.
Q51. இந்தியன் ப்ரீமியர் லீக் (INDIAN PREMIER LEAGUE) என்பது எப்போது தொடங்கப்பட்டது?
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைய தொடங்கியவுடன் நம் நாட்டிலும் தனியார் சிலர் தொழில் ரீதியான - PROFESSIONAL - போட்டிகளை துவக்கினர். இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியம் இவ்வகை போட்டியை 2008ல் துவக்கியது. இந்தப் போட்டியில் தனியார் தங்களுக்கென்று, ஒரு அணியை, வீரர்களை (இந்திய + வெளி நாடு) ஏலத்தின் மூலம் விலைக்கு வாங்கி, போட்டியில் ஈடுபடுவர். பல சர்ச்சைகள் இருந்த போதிலும், மக்களிடை பெரும் வரவேற்பும், வியாபார ரீதியாக ஒரு பெரும் வெற்றியை அடைந்துள்ள ஒரு போட்டி.
Q52. நம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாக அமைப்பு எது?
BCCI - Board of Control for Cricket in India - இந்திய கிரிக்கெட் வாரியம் - 1928 - மும்பை தலைமையகம்.
Q53. உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாக அமைப்பு எது?
ICC - International Cricket Council - சர்வதேச கிரிக்கெட் சங்கம் - 15.6.1909 - தலைமையகம் - துபாய், ஐக்கிய அரபு நாடுகள் - 106 உறுப்பினர் நாடுகள் - உலகளவில் போட்டிகள் நடத்துவது, விதிமுறைகள் வகுப்பது, நடுவர்களை அங்கீகரிப்பது, நியமனம் செய்வது, கிரிக்கெட் விளையாட்டை பரப்புவது போன்ற பணிகளை செய்கிறது.
Q54. டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனைகள்
ஸ்ரீலங்கா - 800 விக்கெட்டுகள்."
வ. எண். சாதனைகள் சாதனையாளர்
1 அதிகமான டெஸ்ட் மேட்ச் சச்சின் டெண்டுல்கர் - 200
2 அதிகமான டெஸ்ட் ரன்கள் சச்சின் டெண்டுல்கர் - 15921
3 அதிகமான டெஸ்ட் சதம் சச்சின் டெண்டுல்கர் - 51
4 அதிகமான டெஸ்ட் அரை சதம் சச்சின் டெண்டுல்கர் - 119
5 டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகமான ரன் ப்ரையன் லாரா - 400 ( இவர் ஒருவர் மட்டுமே)
6 ஒரு டெஸ்ட் மேட்ச்சில் (இரண்டு இன்னிங்ஸ்) அதிகமான ரன் க்ரஹாம் கூச், இங்கிலாந்து - 456 (333+123)
7 டெஸ்ட் போட்டிக ளில் அதிக சராசரி உடையவர் டான் ப்ராட்மேன், ஆஸ்திரேலியா - 99.94
8 ஒரு ஓவரில் அதிகமான ரன் அடித்தவர் "ப்ரையன் லாரா, மே.இ. தீவுகள், ஜார்ஜ் பெய்லி, ஆஸ்திரேலியா - 28 ரன் கள்."
9 மிகக் குறைவான பந்தில் சதம் அடித்தவர் ப்ரெண்டன் மெக்கெல்லம், நியூசிலாந்து - 54 பந்து - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
10 அதிகமான இரட்டை சதம் அடித்தவர் டொனால்ட் ப்ராட்மேன், ஆஸ்திரேலியா - 12 முறை.
11 அதிகமான 300+ ரன் கள் ஒரே இன்னிங்ஸில் அடித்தவர் "1. டொனால்ட் ப்ராட்மேன்,
2. வீரேந்தர் ஷேவாக்,
3. க்றிஸ் கெய்ல்,
4. ப்ரையன் லாரா -
அனைவரும் 2 முறை."
12 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் "முத்தையா முரளீதரன்,
13 டெஸ்ட்டின் ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர் "1 ஜிம் லேக்கர், இங்கிலாந்து - 10/56 ரன் கள் - ஆஸ்திரேலியா - 1956,
2. அனில் கும்ளே - இந்தியா - 10/74 ரன் கள் - பாகிஸ்தான் - 1998 - 1999."
14 ஒரு டெஸ்ட் போட்டியில் (இரு இன்னிங்ஸ்) அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் 1. ஜிம் லேக்கர், இங்கிலாந்து - 1956, 19/90 ரன்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
15 டெஸ்ட் போட்டிகளில் அதிகமான கேட்ச் பிடித்தவர் ராகுல் ட்ராவிட், இந்தியா, 164 கேட்ச்சுகள்
16 விக்கெட் கீப்பராக அதிக கேட்ச் பிடித்தவர் மார்க் பௌச்சர், தென் ஆப்பிரிக்கா, 532 - கேட்ச்.
17 விக்கெட் கீப்பராக அதிக ஸ்டம்பிங் செய்தவர் பெர்ட் ஓல்டு ஃபீல்டு - ஆஸ்திரேலியா - 52 முறை.
18 அதிக டெஸ்ட் மேட்ச்சுகளில் கேப்டனாக இருந்தவர் க்ரீம் ஸ்மித், தென் ஆப்பிரிக்கா - 109 போட்டி
19 கேப்டனாக அதிக டெஸ்ட் மேட்ச்சுகளை வென்றவர் க்ரீம் ஸ்மித், தென் ஆப்பிரிக்கா - 53 போட்டி.
20 இரண்டு பேட்ஸ் மேன்கள் சேர்ந்து (PARTNERSHIP) அதிக ரன்கள் எடுத்தவர்கள் குமார் சங்கக்காரா & மஹேலா ஜெயவர்த்தனே, ஸ்ரீலங்கா - 624 ரன்கள் - தென்ஆப்பிரிக்கா - 2006
21 தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து வென்ற அணி ஆஸ்திரேலியா - 16 போட்டிகள்
22 டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த அணி ஸ்ரீலங்கா - 952/6 விக்கெட் - இந்தியாவுக்கு எதிராக - 1997ல்
23 டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகக் குறைந்த ரன் கள் எடுத்த அணி நியூசிலாந்து - 26 ரன் கள் - இங்கிலாந்து எதிராக - 1955ல்
24 டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆனவர் ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா - 15 முறை.
25 டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 0 ரன் எடுத்தவர் கர்ட்னி வால்ஷ் - மே.இ. தீவுகள் - 43 முறை.
26 டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக நேரம் விளையாடியவர் ஹனீஃப் முகமது, பாகிஸ்தான் - 1958 - 978 நிமிடங்கள் - 337 ரன்கள்
27 டெஸ்ட் போட்டியில் அதிக நேரம் விளையாடி ரன் எதுவும் எடுக்காதவர் ஜெஃப் ஆலட், நியூசிலாந்து - 101 நிமிடம், 77 பந்துகள் - 1999 - தென் ஆப்பிரிக்கா.
28 அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி 675 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை 1928 - 29ல் வீழ்த்தியது.
29 டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்தவர் சார்லஸ் பேனர்மேன், ஆஸ்திரேலியா - 165 ரன் கள் - 1877 - இங்கிலாந்துக்கு எதிராக.
Q55. ஒரு நாள் போட்டியில் உலக சாதனைகள்
வ. எண். சாதனைகள் சாதனையாளர்
1 பிப்ரவரி 2016 நிலையில் அதிகமான போட்டிகள் விளையாடியிருக்கும் நாடு இந்தியா - 896 (இந்த எண் மாறக்கூடியது)
2 அதிகமான வெற்றிகளை பெற்றுள்ள நாடு ஆஸ்திரேலியா - 538 (இந்த எண் மாறக்கூடியது)
3 50 ஓவர்களில் அதிகமான ரன் கள் எடுத்த நாடு 443/9 - ஸ்ரீலங்கா - நெதர்லாந்துக்கு எதிராக 2006
4 ஒரு நாள் போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த நாடு 35 ரன் கள் - ஜிம்பாப்வே - ஸ்ரீலங்காவுக்கு எதிராக - 2004.
5 அதிகமான ஒரு நாள் போட்டியில் விளையாடி இருப்பவர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா - 463.
6 ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக அதிக ரன்கள் எடுத்து உள்ளவர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா - 18,426 ரன்கள்.
7 ஒரு நாள் போட்டியில் ஒரு போட்டியில் அதிகமான ரன் அடித்தவர் யார்? ரோஹித் சர்மா - 264 - ஸ்ரீலங்காவுக்கு எதிராக 13.11.2014 - கொல்கத்தா.
8 ஒரு நாள் போட்டிகளில் அதிகமான சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர் - 49 சதம்.
9 ஒரு நாள் போட்டிகளில் அதிகமான அரை சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர் - 96 சதம்.
10 ஒரு நாள் போட்டியில் குறைவான பந்தில் சதம் அடித்தவர் ஏ.பி.டிவில்லியர்ஸ் - தென் அமெரிக்கா - 31 பந்தில் மே.இ. தீவுக்கு எதிராக - 2014 -1 5ல்.
11 ஒரு நாள் போட்டியில் முதல் சதம் அடித்தவர் டென்னிஸ் அமிஸ் - இங்கிலாந்து - 1972 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
12 ஒரு நாள் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்தவர் "சச்சின் டெண்டுல்கர் - இந்தியா - 200 - 24.2.10 - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.
பெலிண்டா க்ளார்க் (பெண்) - ஆஸ்திரேலியா - 229 - 2011 - டென்மார்க் -க்கு எதிராக."
13 ஒரு நாள் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் "முத்தையா முரளீதரன், ஸ்ரீலங்கா - 534 விக்கெட்டுகள்."
14 ஒரே போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் சமிந்தா வாஸ், ஸ்ரீலங்கா 8 விக்கெட் - 19 ரன்னுக்கு.
15 குறிப்பிட்ட 10 ஓவர்களில் அதிகமான ரன் கொடுத்தவர் மிக் லூயிஸ், ஆஸ்திரேலியா 113 ரன்கள், விக்கெட் எதுவுமில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.
16 அதிகமான முறை 5 விக்கெட்டுகளை ஒரு போட்டியில் வீழ்த்தியவர் வக்கார் யூனிஸ், பாகிஸ்தான் - 13 முறை
17 ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் அடித்தவர் ரோஹித் சர்மா, இந்தியா - 264, 209
18 ஒரு நாள் போட்டிகளில் மிக வேகமாக இரட்டை சதம் அடித்தவர் க்றிஸ் கெய்ல், மே.இ. தீவுகள், 138 பந்துகளில் 219 ரன் கள்.
19 ஒரு நாள் போட்டிகளில் அதிகமான சிக்ஸர்கள் அடித்தவர் ஷாஹித் அஃப்ரிடி, பாகிஸ்தான் - 351
20 ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ஃபோர் (4) அடித்தவர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா - 2016.
21 ஒரு போட்டியில் அதிகமான சிக்ஸர்கள் அடித்தவர் ரோஹித் சர்மா, இந்தியா - 16.
22 ஒரு போட்டியில் அதிகமான ஃபோர் (4) அடித்தவர் ரோஹித் சர்மா, இந்தியா - 33.
23 ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தவர் "1. ஹெர்ஷெல் கிப்ஸ், தென் ஆப்பிரிக்கா 2006-7 - நெதர்லாந்துக்கு எதிராக.
2. யுவராஜ் சிங், இந்தியா - 2007 - இங்கிலாந்துக்கு எதிராக - 20 ஓவர் உலகக்கோப்பை."
24 ஒரு நாள் போட்டிகளில் அதிகமான கேட்ச் பிடித்தவர் மஹேலா ஜெயவர்த்தனே - ஸ்ரீலங்கா - 218.
25 ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆனவர் மறவன் அத்தபட்டு, ஸ்ரீலங்கா - 41 முறை
26 விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் குமார் சங்கக்காரா, ஸ்ரீலங்கா - 482
27 ஒரு நாள் போட்டியை தொடர்ந்து அதிகமுறை வென்ற நாடு ஆஸ்திரேலியா - 21 முறை.
Q56. கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளை அதிகமுறை தொடர்ந்து வெற்றிபெற்ற நாடு எது?
ஆஸ்திரேலியா - 16 முறை. ஒட்டுமொத்த வெற்றியிலும் இந்த நாடே முன்னணியில் உள்ளது.
Q57. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்களுடன் முன்னணியில் இருப்பவர் யார்?
சச்சின் டெண்டுல்கர் - 15921 ரன்கள் மற்றும் 51 சதங்கள்.
Q58. டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்து இருப்பவர் யார்?
"ப்ரையன் லாரா, மே.இ. தீவுகள் - 400 ரன் கள் (அவுட் ஆகாமல்) - இங்கிலாந்துக்கு எதிராக - ஏப்ரல் - 2004. "
Q59. டெஸ்ட் போட்டியில் வேகமான சதம் அடித்தவர் யார்?
ப்ரெண்டன் மெக்கெல்லம், நியூசிலாந்து - 54 பந்து - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
Q60. டெஸ்ட் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யார்?
முத்தையா முரளீதரன், ஸ்ரீலங்கா - 800 விக்கெட்டுகள்.
Q61. டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பந்து வீச்சாளர் யார்?
"1. ஜிம் லேக்கர் - இங்கிலாந்துக்கு எதிராக - 1956ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - மான்செஸ்டர் நகரில்.
2. அனில் கும்ப்ளே - இந்தியா - 1999ல் - பாகிஸ்தானுக்கு எதிராக - டெல்லி நகரில்."
Q62. ஒரு டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் யார்?
ஜிம் லேக்கர் - இங்கிலாந்துக்கு எதிராக - 1956ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 19 விக்கெட்டுகள்.
Q63. டெஸ்ட் போட்டிகளில் அதிகமான கேட்ச் பிடித்தவர் யார்?
164 கேட்ச்சுகள் - ராகுல் த்ராவிட், இந்தியா.
Q64. விக்கெட் கீப்பராக அதிக கேட்ச் பிடித்தவர் யார்?
மார்க் பௌச்சர், தென் ஆப்பிரிக்கா, 532 - கேட்ச்.
Q65. விக்கெட் கீப்பராக அதிக ஸ்டம்பிங் செய்தவர் யார்?
பெர்ட் ஓல்டு ஃபீல்டு - ஆஸ்திரேலியா - 52 ஸ்டம்பிங் - 1930களில்.
Q66. அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் யார்?
க்ரீம் ஸ்மித் - தென் ஆப்பிரிக்கா - 109 போட்டிகள். இவர் தான் அதிக - 53 - போட்டிகளையும் வென்றவர்.
Q67. ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த அணி?
ஸ்ரீலங்கா - 1997ல் இந்தியாவுக்கு எதிராக 952க்கு 6 விக்கெட்டுகள் இழப்பு.
Q68. ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் குறைந்த ரன் எடுத்த அணி?
நியூசிலாந்து - 26 ரன் கள் - இங்கிலாந்து எதிராக - 1955ல்
Q69. டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை ரன் அவுட் ஆனவர் யார்?
ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா - 15 முறை.
Q70. டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 0 ரன்கள் எடுத்தவர் யார்?
"கர்ட்னி வால்ஷ் - மே.இ. தீவுகள் - 43 முறை.
இந்திய தரப்பில் - பி.எஸ். சந்திரசேகர் - 28 முறை."
Q71. ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக நேரம் விளையாடியவர் யார்?
ஹனீஃப் முகமது, பாகிஸ்தான் - 1958 - 970 நிமிடங்கள் - 337 ரன்கள்
Q72. டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக நேரம் விளையாடி ரன் எடுக்காமல் ஆடியவர் யார்?
ஜெஃப் ஆலட், நியூசிலாந்து - 101 நிமிடம், 77 பந்துகள் - 1999 - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.
Q73. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த பேட்ஸ்மேன் யார்?
சார்லஸ் பேனர்மேன், ஆஸ்திரேலியா - 165 ரன் கள் - 1877 - இங்கிலாந்துக்கு எதிராக.
Q74. அதிகமான டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள நாடு எது?
ஆஸ்திரேலியா - 788 போட்டிகள் (பிப்ரவரி 2016). (இந்த எண்ணிக்கை அவ்வப்போது மாற்றத்துக்குரியது)
Q75. அதிகமான ஒரு நாள் சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ள நாடு எது?
இந்தியா - 896 - பிப்ரவரி 2016 (இந்த எண்ணிக்கை அவ்வப்போது மாற்றத்துக்குரியது)
Q76. ஒரு நாள் போட்டிகளில் அதிகமான வெற்றிகளை பெற்றுள்ள நாடு?
ஆஸ்திரேலியா - 538 போட்டிகள் (பிப்ரவரி 2016) (இந்த எண்ணிக்கை அவ்வப்போது மாற்றத்துக்குரியது).
Q77. 50 ஓவர்களில் - ஒரு நாள் போட்டியில் - அதிகமான ரன்களை எடுத்துள்ள நாடு?
ஸ்ரீலங்கா - 2006ல் நெதர்லாந்துக்கு எதிராக 443 ரன்கள் - 9 விக்கெட்டுகள்.
Q78. அதிகமான ஒரு நாள் போட்டிகளை விளையாடியுள்ள வீரர் யார்?
சச்சின் டெண்டுல்கர் - 463 போட்டிகள்.
Q79. ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக அதிக ரன்கள் எடுத்து உள்ளவர் யார்?
சச்சின் டெண்டுல்கர் - 18426 போட்டிகள்.
Q80. ஒரு நாள் போட்டிகளில் அதிகமான சதங்களை அடித்துள்ளவர் யார்?
சச்சின் டெண்டுல்கர் - 49 சதம்.
Q81. ஒரு நாள் போட்டியில் முதலில் இரட்டை சதம் அடித்தவர் யார்?
"சச்சின் டெண்டுல்கர் - 200 ரன் கள் - 24.2.2010 - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.
இவருக்கு பின்னால் ஆஸ்திரேலியாவின் பெண் வீரர் பெலிண்ட க்ளார்க் 2011ல், டென்மார்க்-க்கு எதிராக 229 ரன்கள் எடுத்தார்."
Q82. ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ரன்களை அடித்துள்ளவர் யார்?
ரோஹித் சர்மா - 264 - ஸ்ரீலங்காவுக்கு எதிராக 13.11.2014.
Q83. ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை எத்தனை பேர் இரட்டை சதம் அடித்துள்ளனர்?
"1. சச்சின் டெண்டுல்கர் - 200 - 24.2.2010 -தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.
2. வீரேந்தர் ஷேவாக் - 219 - 8.12.2011 - இந்தூர், ம.பி.
3. ரோஹித் சர்மா - 1. 209 -- 2.11.2013 -- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக; 2. 264 - 13.11.2014 - ஸ்ரீலங்காவுக்கு எதிராக.
4. பெலிண்டா க்ளார்க் - ஆஸ்திரேலிய பெண் வீராங்கனை - 229 - டென்மார்க் -க்கு எதிராக.
இவர்களில், ரோஹித் சர்மா மட்டுமே ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டுமுறை இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. "
Q84. ஒரு நாள் போட்டியில் முதல் சதம் அடித்தவர் யார்?
டென்னிஸ் அமிஸ் - இங்கிலாந்து - 1972 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
Q85. ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யார்?
முத்தையா முரளீதரன் - ஸ்ரீலங்கா - 534 விக்கெட்டுகள்.
Q86. ஒரே நாள் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யார்?
சமிந்தா வாஸ், ஸ்ரீலங்கா - 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை 2001ல் ஜிம்பாப்வேக்கு எதிராக வீழ்த்தினார்.
Q87. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை இரட்டை சதம் அடித்தவர் யார்?
"ரோஹித் சர்மா - 2 முறை -
1. 209 - ஆஸ்திரேலியா - 2.11.2013 - பெங்களூரு
2. 264 - ஸ்ரீலங்கா - 13.11.2014 - கொல்கத்தா. ."
Q88. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மிக வேகமான இரட்டை சதம் அடித்தவர் யார்?
க்ரிஸ் கெய்ல் - மே.இ. தீவுகள் - 219 -2014-15ல் ஜிம்பாப்வேக்கு எதிராக.
Q89. ஒரு நாள் போட்டிகளில் அதிகமான சிக்ஸர்களை அடித்துள்ளவர் யார்?
ஷாஹீத் அஃப்ரிடி, பாகிஸ்தான் - 351.
Q90. ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ஃபோர்களை அடித்துள்ளவர் யார்?
சச்சின் டெண்டுல்கர் - 2016.
Q91. ஒரு நாள் போட்டிகளில் அதிகமான சிக்ஸர்களை அடித்துள்ளவர் யார்?
ரோஹித் சர்மா - இந்தியா - 16 சிக்ஸர்கள் - ஸ்ரீலங்காவுக்கு எதிராக.
Q92. ஒரு ஒரு நாள் போட்டியில் அதிகமான ஃபோர்களை அடித்துள்ளவர் யார்?
ரோஹித் சர்மா - இந்தியா - 33 ஃபோர்கள் - ஸ்ரீலங்காவுக்கு எதிராக.
Q93. ஒரு ஓவரில் (6 பந்துகள்) 6 சிக்ஸர்கள், போட்டியில் அடித்தவர்கள் யார்?
"1. ஹெர்ஷெல் கிப்ஸ், தென் ஆப்பிரிக்கா 2006-2007 - ஒரு நாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக.
2. யுவராஜ் சிங், இந்தியா - 2007 - இங்கிலாந்துக்கு எதிராக - 20 ஓவர் உலகக்கோப்பையில்,
இதற்கு முன்பாக மே.இ. தீவுகளின் கேரி சோபர்ஸ் மற்றும் இந்தியாவின் ரவி சாஸ்திரியும் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவை சர்வதேச அல்லது அங்கீகரிக்கப்போட்டிகளில் அல்ல."
Q94. ஒரு நாள் போட்டிகளில் அதிகமான கேட்ச் பிடித்துள்ளவர் யார்?
மஹேலா ஜெயவர்த்தனே - ஸ்ரீலங்கா - 218.
Q95. ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆனவர் யார்?
மறவன் அத்தபட்டு, ஸ்ரீலங்கா - 41 முறை
Q96. விக்கெட் கீப்பராக ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் யார்?
குமார் சங்கக்காரா, ஸ்ரீலங்கா - 482 முறை.
Q97. ஒரு நாள் போட்டியை தொடர்ந்து அதிகமுறை வென்ற நாடு எது?
ஆஸ்திரேலியா 21 முறை.
Q98. ஒரே டெஸ்ட் போட்டியில் அதிகமான கேட்ச்சுகளை பிடித்து உலக சாதனை படைத்துள்ள இந்திய வீரர் யார்?
அஜிங்க்யா ரஹானே - 8 கேட்ச்சுகள் - ஸ்ரீலங்காவுக்கு எதிராக - ஆகஸ்ட் 2015.
Q99. 20 ஓவர் போட்டியில் தனிப்பட்ட அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் யார்?
ஆரோன் ஃபிஞ்ச் - 156 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக - 2013.
Q100. 20 ஓவர் ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளவர் யார்?
அஜந்தா மெண்டிஸ் -6 விக்கெட் 8 ரன் கொடுத்து, ஜிம்பாப்வேக்கு எதிராக.
Q101. 20 ஓவர் போட்டியில் முதல் சதம் அடித்தவர் யார்?
க்ரிஸ் கெய்ல் - மே.இ. தீவுகள் - 117 ரன்கள் - 11.9.2007 அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.
Q102. 20 ஓவர் சர்வதேசப் போட்டிகளில் சதம் அடித்த வீரர்கள் யாவர்?
மார்ச் 2016 நிலையில் 20 வீரர்கள் சதம் அடித்துள்ளனர். அவை
Q103. எந்த டெஸ்ட் விளையாடும் நாடு அதிகமான தோல்விகளை தொடர்ந்து பெற்றுள்ளது?
வங்காள தேசம் - 21 தொடர் தோல்விகள்.
Q104. டெஸ்ட் போட்டியில் மிக அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாடு எது?
"1. இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை 1928 - 29 ல் 675 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2. இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை 1938ல் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 579 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது."
Q105. டெஸ்ட் போட்டியில் 1 ரன்/விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி எத்தனை முறை ஏற்பட்டது?
"1. 12 முறை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
2. 1 ரன் வித்தியாசத்தில் ஒரு முறையும் வெற்றி ஏற்பட்டுள்ளது."
Q106. டெஸ்ட் போட்டிகளில் "TIE - டை" என்பது என்ன?
டை - TIE என்பது இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவது முறையாக பேட்டிங் செய்து சமமான ரன்கள் இருக்கும்போது அனைத்து விக்கெட்டுகள் இழப்பின் அது டை - TIE எனப்படும். உதாரணமாக, இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி, 200 ரன்கள் எடுத்தால் சம நிலையும், 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கி, 200 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தால் அது டை - TIE எனப்படும்.
Q107. டெஸ்ட் போட்டி சரித்திரத்தில் எத்தனை முறை டை - TIE முடிவு ஏற்பட்டுள்ளது?
"இருமுறை ஏற்பட்டுள்ளது.
1. 1960 - 61ல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குமிடையில் ஏற்பட்ட து.
2.1986-87ல் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான சென்னையில் நடந்த போட்டி இந்த நிலையில் முடிவுற்றது.
கடைசியாக அவுட் ஆனவர் மனிந்தர் சிங்."
Q108. டெஸ்ட் போட்டிகளில், ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் யார்?
"28 ரன் கள் - இருவர் உள்ளனர்.
1. ப்ரையன் லாரா - மே.இ. தீவுகள் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக - 2003 - 2004ல்.
2. ஜார்ஜ் பெய்லி - ஆஸ்திரேலியா - 2013-14ல் - இங்கிலாந்துக்கு எதிராக."
Q109. டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த முதல் ஐந்து பெயர்கள் :
"1. 400 - ப்ரையன் லாரா - மே.இ. தீவுகள் - 2003 -04ல் இங்கிலாந்துக்கு எதிராக.
2. 380 - மேத்யூ ஹேய்டன் - ஆஸ்திரேலியா - 2003 -2004ல் ஜிம்பாப்வேக்கு எதிராக.
3. 375 - ப்ரையன் லாரா - மே.இ. தீவுகள் - 1993 - 94ல் இங்கிலாந்துக்கு எதிராக.
4. 374 - மஹேலா ஜெயவர்த்தனே - ஸ்ரீலங்கா - 206ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரில்.
5. 365 - கேரி சோபர்ஸ் - மே.இ.தீவுகள் - 1957 -58 பாகிஸ்தானுக்கு எதிராக."
Q110. டெஸ்ட் போட்டிகளில் ஜோடியாக (PARTNERSHIP) அதிக ரன்களை எடுத்துள்ள ஜோடி எது?
624 ரன் கள் - குமார் சங்க க்காரா மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே - 2006ல் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.
Q111. ஒரு டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் அதிகமான ரன்களை எடுத்து வெற்றி பெற்ற அணி எது?
2002-2003ல் மேற்கிந்திய தீவுகள் அணி 418 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி கண்ட து.
Q112. டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்துள்ள முதல் ஐந்து பெயர்கள் :
"1. சச்சின் டெண்டுல்கர் - இந்தியா - 15921
2. ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா - 13378
3. ஜேக்கஸ் கல்லீஸ் - தென் ஆப்பிரிக்கா - 13289
4. ராகுல் ட்ராவிட் - இந்தியா - 13288
5. குமார் சங்கக்காரா - ஸ்ரீலங்கா - 12400"
Q113. டெஸ்ட் போட்டிகளில் 10000 ரன்களைத் தாண்டிய முதல் பேட்ஸ்மேன் யார்?
சுனில் கவாஸ்கர் - இந்தியா.
Q114. டெஸ்ட் போட்டிகளில் அதிகமான சதங்களை அடித்த முதல் 5 பேர் :
"1. சச்சின் டெண்டுல்கர் - இந்தியா - 51
2. ஜேக்கஸ் கல்லீஸ் - தென் ஆப்பிரிக்கா - 45
3. ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா - 41
4. குமார் சங்கக்காரா - ஸ்ரீலங்கா - 38
5. ராகுல் ட்ராவிட் - இந்தியா - 36"
Q115. டெஸ்ட் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஐந்து பேர் :
"1. முத்தையா முரளிதரன், ஸ்ரீலங்கா - 800
2. ஷேன் வார்ன், ஆஸ்திரேலியா - 708
3. அனில் கும்ப்ளே, இந்தியா - 619
4. க்ளென் மேக்க்ராத், ஆஸ்திரேலியா - 563
5. கர்ட்னி வால்ஷ், மே.இ.தீவுகள் - 519"
Q116. கிரிக்கெட்டில் ஹாட் ட்ரிக் (HAT TRICK) என்பது என்ன?
கிரிக்கெட்டின் எந்த விளையாட்டாக இருந்தாலும், ஒரு பந்து வீச்சாளர் மூன்று தொடர் பந்து வீச்சில் (இடையில் ஓவர் அல்லது இன்னிங்ஸ் இருந்தாலும்) மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவது.
இதுவரை பிப்ரவரி 2016 நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 41 முறையும், ஒரு நாள் போட்டியில் 39 முறையும், 20 ஓவர் போட்டியில் நான்கு முறையும் எற்பட்டுள்ளது.
(இந்த ஹாட்ரிக் HATTRICK என்ற தொடர் பொதுவானது. எந்த ஒரு செயலுக்கும் இந்த சொல் பொருந்தும்.
Q117. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் எடுக்கப்பட்ட முதல் ஹேட்ரிக் எது?
"டெஸ்ட் :
2.1.1879 - ஃப்ரெட் ஸ்போஃபோர்த், ஆஸ்திரேலியா - இங்கிலாந்துக்கு எதிராக.
ஒரு நாள் :
செப்டம்பர் 1982 - ஜலாலுதீன், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
,u>20 ஓவர் :
2007 - ப்ரெட் லீ, ஆஸ்திரேலியா - வங்காள தேசத்துக்கு எதிராக - இதுவே 20 ஓவர் உலகக்கோப்பையின் முதல் ஹேட்ரிக்கும் ஆகும்.
ஒரு நாள் உலகக்கோப்பை :
சேத்தன் சர்மா, இந்தியா - 31.10.1987 - நியூசிலாந்துக்கு எதிராக."
Q118. டெஸ்ட் போட்டிகளில் முதல் ஹேட்ரிக் எடுத்த இந்திய வீரர் யார்? இதர வீரர்கள் யார்?
"1. ஹர்பஜன் சிங் - இந்தியா - 11.3.2001 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
2. இர்ஃபான் பத்தான் - இந்தியா - 29.1.2006 - பாகிஸ்தானுக்கு எதிராக."
Q119. ஒரு நாள் போட்டிகளில் ஹேட்ரிக் எடுத்த இந்திய வீரர்கள் யார்?
"1. சேத்தன் சர்மா, இந்தியா - 31.10.1987 - நியூசிலாந்துக்கு எதிராக (உலகக்கோப்பை).
2. கபில் தேவ் - இந்தியா - 4.1.1991 - ஸ்ரீலங்காவுக்கு எதிராக."
Q120. டெஸ்ட் போட்டியின் மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட சதம் எது?
முடாஸ்ஸர் நஸார் - பாகிஸ்தான் - 557 நிமிடங்கள் - இங்கிலாந்துக்கு எதிராக.
Q121. உலகக்கோப்பை ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணி எது?
ஆஸ்திரேலியா - 2015 உலக க்கோப்பை - 417 ரன் கள் - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக.
Q122. ஒரு நாள் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்து, அதிக ரன்களை துரத்தி அடித்து வெற்றி பெற்ற அணி எது?
ஆஸ்திரேலியா முதலில் விளையாடி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 ஓவர்களில் 434 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் இழப்பில், ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 438 ரன்கள் எடுத்து, 2005-6ல் வெற்றி பெற்றது.
Q123. ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து அதிகமான தோல்வியை தழுவிய நாடு எது?
வங்காள தேசம் - 23
Q124. ஒரு நாள் போட்டியில், ஜோடியாக (PARTNERSHIP) அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்?
372 ரன்கள் - க்றிஸ் கெய்ல் மற்றும் மார்லன் சேமுவேல் - மே.இ. தீவுகள் - 2014-15ல் ஜிம்பாப்வேக்கு எதிராக - இது ஒரு உலகக்கோப்பை சாதனையும் ஆகும்.
Q125. ஒரு நாள் போட்டியில் அதிகமான முறை 0 ரன்களில் அவுட் ஆனவர் யார்?
சனத் ஜெய சூர்யா - 34 முறை.
Q126. ஒரு நாள் போட்டியில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் எடுத்துள்ளவர் யார்?
183 - மஹேந்திர சிங் தோனி - இந்தியா - ஸ்ரீலங்காவுக்கு எதிராக - விசாகப்பட்டினத்தில் - 2005ல்.
Q127. கிரிக்கெட்டின் "பைபிள்" எனப்படுவது எது?
விஸ்டன் கிரிக்கெட் சாதனைப் பதிவு புத்தகம். ( )
Q128. பெண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தனி நபராக அதிக ரன்கள் எடுத்த சாதனையை படைத்தவர் யார்?
"1. கிரன் பலூச் - பாகிஸ்தான் - 242 ரன் கள் - மே.இ.தீவுகள்.
2. மித்தாலி ராஜ் - இந்தியா - 214 ரன் கள்."
Q129. கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டி எந்த நகரில் நடந்தது?
மெல்போர்ன், ஆஸ்திரேலியா - 15-19 மார்ச், 1877.
Q130. பெண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்துள்ளவர் யார்?
"1. ஜேன் ப்ரிட்டின்-இங்கிலாந்து - 5 சதங்கள்,
2.சந்தியா அகர்வால், இந்தியா - 4 சதங்கள்."
Q131. பெண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் யார்? (பிப்ரவரி 2016)
மேரி டக்கன், இங்கிலாந்து - 77 விக்கெட்டுகள்.
Q132. பெண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் யார்?
நீத்து டேவிட், இந்தியா - 8/53 - இங்கிலாந்துக்கு எதிராக.
Q133. பெண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்சுகள் பிடித்துள்ளவர் யார்?
கேரோல் ஹாட்ஜஸ், இங்கிலாந்து - 25.
Q134. பிப்ரவரி 2016 நிலையில், பெண்கள் ஒரு நாள், கிரிக்கெட் போட்டிகள் அதிகம் விளையாடியுள்ள நாடு எது?
இங்கிலாந்து - 300.
Q135. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிகமான தொடர் வெற்றிகள் பெற்றுள்ள நாடு எது?
ஆஸ்திரேலியா - 17.
Q136. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்துஅதிகமான தோல்விகள் கண்ட நாடு எது?
நெதர்லாந்து - 22 முறை.
Q137. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அணியாக அதிக ரன்களை குவித்துள்ள நாடு எது?
455 ரன் கள் - நியூசிலாந்து - 1997/98ல் பாகிஸ்தானுக்கு எதிராக.
Q138. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைவான ரன்களை எடுத்துள்ள நாடு எது?
22 ரன் கள், நெதர்லாந்து - 2008ல் மே.இ. தீவுகளுக்கு எதிராக.
Q139. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனி நபராக அதிகமான ரன்கள் எடுத்துள்ள பெண்மணி யார்?
பெலிண்டா க்ளார்க் - ஆஸ்திரேலியா - 229 ரன் கள், டென்மார்க்குக்கு எதிராக - 16.12.1997.
Q140. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்துள்ள பெண் வீராங்கனை யார்?
சார்லோட்டி எட்வர்ட்ஸ் - இங்கிலாந்து - 9 (மித்தாலி ராஜ் - இந்தியா - 5).
Q141. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளவர் யார்?
சஜ்ஜிதா ஷா - பாகிஸ்தான் - 7 விக்கெட் - 4 ரன் கள் மட்டுமே கொடுத்து - 21.7.2003.
Q142. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பிப்ரவரி 2016 நிலையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் யார்?
கேத்தரின் ஃப்ரிட்ஸ் பேட் ரிக் - ஆஸ்திரேலியா - 180 விக்கெட்டுகள் - (இந்தியாவுக்கு ஜூலன் கோஸ்வாமி 175 விக்கெட்டுகள்).
Q143. மார்க் டெய்லர் முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன், இவர் ஒரு டெஸ்ட் போட்டியின் போது எடுத்த முடிவு உலகப் புகழையும் பாராட்டையும் பெற்றது. அது என்ன?
"அக்டோபர் 1998ல் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தனது தனி ரன் கணக்கு 334ஐ எட்டியபோது, தனது அணியின் ஆட்டத்தை போதுமென்று நிறுத்திக் கொண்டார். (DECLARED - 599/4). இதன் காரணம் - உலகின் மிகவும் புகழ் மற்றும் மரியாதைக்கும் உரிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் ப்ராட்மேன் அவர்களின் தனி நபர் ரன் - அதிக பட்சம் - 334. இதை மீறி அவருடைய புகழையும் சாதனையையும் குறைக்கக் கூடாது என்ற உயர்ந்த உள்நோக்கம்.
இந்த செயல் அவருக்கு பெரும் புகழை ஈட்டியது."
Q144. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமேஷ்சந்திர கங்காராம் நட்கர்னி (R.G.Nadkarni) (பாபு நட்கர்னி) என்ற பந்து வீச்சாளர் செய்துள்ள சாதனை இன்றளவும் நிலைக்கிறது
"1963-64ல் இங்கிலாந்துக்கு எதிராக இவர் 29 ஓவர் பந்து வீசினார். இதில் 26 ஓவர்களில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.
அந்த 26 ஓவர்களில் 21 ஓவர்கள் தொடராக ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. மீதமுள்ள ஓவர்களில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. தொடர்ந்து 131 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போட்டியில் இவர் பேட்டிங்கில் ஒரு சதமும் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது."
Q145. ஒரு கால கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடி பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாடி கேப்டனாகவும் விளங்கினார். அவர் யார்?
கெப்ளர் வெஸ்ஸெல்ஸ்.
Q146. கிரிக்கெட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் ஒருஜோடி சகோதரர்கள் இருவரும் சதம் அடித்தனர். அவர்கள் யார்?
இயன் மற்றும் க்ரெக் சேப்பல் சகோதரர்கள். 1972 - இங்கிலாந்துக்கு எதிராக - ஓவல் மைதானம்.
Q147. 1948-49ல் இந்தியா - மேற்கு இந்திய தீவுகளின் இடையே நடந்த டெஸ்ட் தொடரின் 5வது போட்டியின் கடைசி நாளன்று நடுவர் ஒருவர் செய்த தவறால், இந்தியா 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை தவறவிடப்பட்டது. அது என்ன?
நடுவர் ஏ.ஆர். ஜோஷி. நாள் முடிவுக்கு இன்னும் ஒரு ஓவர் இருக்கும்போதே ஆட்டம் முடிந்துவிட்டதாக அறிவித்து விட்டதால், இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது.
Q148. மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர் யார்?
ஹசன் ராஸா- பாகிஸ்தான் - 14 வயது - 1996ல் விளையாடினார்.
Q149. மிக அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வீரர் யார்?
விஃல்ப்ரெட் ரோட்ஸ் - இங்கிலாந்து - 52+ வருடம்.
Q150. இந்தியாவுக்காக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்தவர் யார்?
லாலா அமர் நாத் - 1933 - 34ல் இங்கிலாந்துக்கு எதிராக.
Q151. டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த இந்திய வீரர்கள் யார்?
எண்பெயர்ரன்தேதிஎதிரணி
1. லாலா அமர் நாத் 11815.12.1933 இங்கிலாந்துடன்
2. தீபக் ஷோதன்110 12.12.1952 பாகிஸ்தானுடன்
3. க்ரிபால் சிங் 100 10.11.1955 நியூசிலாந்துடன்
4. அப்பாஸ் அலிபெய்க் 112 23.07.1959 இங்கிலாந்துடன்
5. ஹனுமந்த் சிங் 105 08.02.1964 இங்கிலாந்துடன்
6. விஸ்வ நாத் 137 15.11.1969 ஆஸ்திரேலியாவுடன்
7. சுரிந்தர் அமர் நாத் 124 24.01.1976 நியூசிலாந்துடன்
8. முகமது அசாருதீன்110 31.12.1984 இங்கிலாந்துடன்
9. ப்ரவீன் ஆம்ரே103 13.11.1992 தென் ஆப்பிரிக்கா
10. சௌரவ் கங்குலி131 20.06.1996 இங்கிலாந்துடன்
11. வீரேந்தர் ஷேவாக் 105 03.11.2001 தென் ஆப்பிரிக்கா
12. சுரேஷ் ரெய்னா120 26.07.2010 ஸ்ரீலங்கா
13. ஷிகர் தவான்187 14.03.2013 ஆஸ்திரேலியா
14. ரோஹித் ஷர்மா177 06.11.2013 மே.இ. தீவுகள்
Q152. மிகக்குறைந்த வயதில் ஒரு நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனவர் யார்? (அதேபோல் இந்திய அணியின் கேப்டன்)
"1. ததேந்த தைபு - ஜிம்பாப்வே - 20+ 358 நாட்கள் வயது - ஸ்ரீலங்காவுக்கு எதிராக - 2003 - 2004ல்.
2. நவாப் பட்டௌடி (மன்சூர் அலிகான்) - 21 வருடம், 77 நாட்கள் - மே.இ. தீவுகளுக்கு எதிராக - 1961-62ல்."
Q153. ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
விஜய் ஹசாரே - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 1947 - 48ல் - 116, 145 ரன்கள்.
Q154. ஒரு நாள் போட்டியில் நடந்த முதல் பகல் இரவுப் போட்டி எது?
28.11.1978 - சிட்னி, ஆஸ்திரேலியாவில் தனியாரால் நடத்தப்பட்ட போட்டி.
Q155. இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய தோல்வி எது?
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக - 1958 - 59ல் - ஒரு இன்னிங்ஸ் மற்றும் 336 ரன் கள் வித்தியாசத்தில் தோற்றது.
Q156. டான் ப்ராட்மேனின் டெஸ்ட் சராசரி 99.94% இது 100% ஆகாமல் தடுத்த பந்து வீச்சாளர் யார்?
எரிக் ஹாலிஸ், இங்கிலாந்து. 1948ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஐந்தாவது போட்டியில் டான் ப்ராட்மேன் 4 ரன் கள் எடுத்து இருந்தால் அவரது சராசரி 100 ஆக இருந்திருக்கும். ஆனால் 0வில் எரிக் ஹாலிஸ் ஆல் அவுட் ஆக்கப்பட்டார்.
Q157. டெஸ்ட் போட்டிகளில் முதலில் 400 விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் யார்?
ரிச்சர்டு ஹட்லி - நியூசிலாந்து. இவர் மொத்தமாக 431 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த சாதனையை கபில்தேவ் (434 விக்கெட்டுகள்) முறியடித்தார்.
Q158. 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் யார்?
ஜாஹீர் கான் - 75 ரன் கள் - வங்காள தேசம்.
Q159. 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக ரன்கள் அடித்துள்ள (உலகளவில்) வீரர் யார்?
ஆஷ்டன் அகர் - ஆஸ்திரேலியா - 98 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக - 2013ல்.
Q160. எந்த கிரிக்கெட் வீரர் தனது 100வது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்தார்?
ரிக்கி பாண்ட்டிங் - ஆஸ்திரேலியா.
Q161. இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டின் முதல் கேப்டன் யார்?
அஜித் வடேகர்.
Q162. ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த முதல் வீரர் யார்?
வாரன் பார்ட்ஸ்லி - ஆஸ்திரேலியா - ஆகஸ்ட் 1909ல் இங்கிலாந்துக்கு எதிராக (2016 மார்ச் நிலையில் உலகில் 81 பேர் இந்த சாதனை புரிந்துள்ளார்கள்).
Q163. ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்துள்ள இந்திய வீரர்கள் யார்?
எண் பெயர்
1. விஜய் ஹசாரே
2. சுனில் கவாஸ்கர்
3. சுனில் கவாஸ்கர்
4. சுனில் கவாஸ்கர்
5. ராகுல் ட்ராவிட்
6. ராகுல் ட்ராவிட்
7. விராத் கோஹ்லி
8. அஜிங்க்யா ரஹானே
Q164. இந்திய கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் முதல் பந்தை வீசியவர் யார்?
முகமது நிசார்.
Q165. கிரிக்கெட் உலகின் முதல் பெண் வர்ணனையாளர் (COMMENTATOR) யார்?
சந்திரா நாயுடு. இந்தியாவின் முதல் கேப்டன் C.K. நாயுடுவின் மகள்.
Q166. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் யார்?
கபில் தேவ் - 175 - 1983 - உலக க்கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக.
Q167. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முதல் தலைவர் யார்?
R.E. GRANT GOVAN.
Q168. "கருப்பு ப்ராட்மேன்" (BLACK BRADMAN) என அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் யார்?
ஜார்ஜ் ஹெட்லி - மேற்கு இந்திய தீவுகள்.
Q169. அசோக் மண்காட் (இந்தியா) மைக் ஸ்மித் (இங்கிலாந்து) மற்றும் ஜோ சாலமன் (மே.இ.தீவுகள்) - இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை என்ன?
இந்த மூவருமே தங்களது தொப்பி கழன்று ஸ்டம்பில் விழுந்து, பெயில்கள் நகர்த்தப்பட்டு, ஹிட் அவுட் (HIT OUT) முறையில் அவுட் ஆனவர்கள்.
Q170. மேற்கிந்திய தீவுகளின் மூன்று W -க்கள் எனப்படும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் யார்?
FRANK WORREL, CLYDE WALCOTT, WEEKES EVERTON.
Q171. எந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முதல் மற்றும் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்கள்?
"1. ரெக்கி டஃப் - ஆஸ்திரேலியா,
2. பில் பான்ஸ்ஃபோர்டு - ஆஸ்திரேலியா,
3. க்ரெக் சாப்பல், ஆஸ்திரேலியா,
4. முகமது அசாருதீன் - இந்தியா."
Q172. ஒரே இன்னிங்ஸில் 1000 ரன் களுக்கு மேல் அடித்து உலக சாதனை படைத்துள்ள இந்திய பள்ளி சிறுவன் யார்?
ப்ரணவ் தனவாடே - மும்பை - 1009 ரன் கள் -337 பந்துகளில் - இது ஜனவரி 2016ல் இரண்டு பள்ளிகளுக்கிடையே நடந்த போட்டி.
Q173. இந்தியாவின் எந்த கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் ஃபீல்டிங் செய்யும் போது தலையில் பந்து அடிபட்டு துயர மரணம் அடைந்தார்?
ராமன் லம்பா - டெல்லி - இந்தியாவுக்காக ஓரிரு போட்டிகளில் விளையாடியவர் - இவர் வங்காள தேசத்தில், 23.2.1998 அன்று, அபாமி அணிக்காக ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, எதிரணி பேட்ஸ் மேன் மெஹ்ராப் ஹூசைன் அடித்த பந்து இவரது தலையில் பட்டு, மருத்துவ உதவி பலனின்றி துயர மரணம் அடைந்தார்.
Q174. தங்கள் நாடுகளுக்காக கிரிக்கெட் விளையாடிய புகழ் பெற்ற சகோதரர்கள் யார்?
"ஆஸ்திரேலியா :
1. மிச்செல் மற்றும் ஷான் மார்ஷ்
2. ஸ்டீவ் மற்றும் மார்க் வாஹ்
3. இயன், க்ரெக் மற்றும் ட்ரெவர் சேப்பல் (3 பேர்)
4. சார்லஸ் மற்றும் அலெக் பேனர்மேன்
5. தேவ் மற்றும் நெட் க்ரெகரி
6. மைக் மற்றும் டேவிட் ஹஸ்ஸி
7. ரிச்சி மற்றும் ஜான் பெனாட்
நியூசிலாந்து :
1. மார்ட்டின் மற்றும் ஜெஃப் க்ரோ
2. ப்ரெண்டன் மற்றும் நாதன் மெக்கல்லம்
3. ஹேமிஷ் மற்றும் ஜேம்ஸ் மார்ஷல்
4. ப்ரெண்டன் மற்றும் ஜான் ப்ரேஸ் வெல்
5. லான்ஸ் மற்றும் க்றிஸ் கெய்ர்ன்ஸ்
தென் ஆப்பிரிக்கா :
1. அல்வி மற்றும் மார்னெ மார்கெல்
2. பீட்டர் மற்றும் க்ரீம் பொல்லாக்
மேற்கு இந்திய தீவுகள் :
1. ட்வெய்ன் மற்றும் டேரன் ப்ராவோ
2. மர்லன் மற்றும் ராபர்ட் சாமுவேல்ஸ்
3. ஜெஃப்ரி மற்றும் விக்டர் ஸ்டால்மேயர்
பாகிஸ்தான் :
1. கம்ரான் மற்றும் உமர் அக்மல்
2. மன்சூர், ஸஹூர் மற்றும் சலீம் இலாஹி
3. இம்ரான் மற்றும் ஹுமாயும் ஃபர்ஹத்
4. மொய்ன் மற்றும் நதீம் கான்
5. ஹனீஃப், முஷ்டாக், சாகிக் முகமது
6. வாசிம் மற்றும் ரமீஸ் ராஸா
இந்தியா :
1. சுரிந்தர் & மொஹிந்தர் அமர் நாத்
2. யூசுப் மற்றும் இர்ஃபான் பத்தான்
3. க்ரிபால் மற்றும் மில்கா சிங்
4. வாஸிர் மற்றும் நாசிர் அலி
5. அமர்சிங் மற்றும் லதா ராம்ஜி
6. சுபாஷ் குப்தே மற்றும் பாலு குப்தே
7. மற்றும் நாயுடு
8. மாதவ் மற்றும் அரவிந்த் ஆப்தே.
அயர்லாந்து :
1. கெவின் மற்றும் நீ; ஓப்ரையன்
2. ஆன்ட்ரூ மற்றும் ஸ்டூவர்ட் பாய்ண்டர்
வங்காள தேசம் :
நஃபீஸ் மற்றும் தமீம் இக்பால்
இங்கிலாந்து :
1. அலெக் மற்றும் எரிக் பெட்ஸெர்
2. ஆர்தர் மற்றும் ஹெரால்டு கில்லிகன்
3. மற்றும் க்ரேஸ்
4. டோனி மற்றும் இயன் க்ரெக்
5. ஆடம் மற்றும் பென் ஹோலியேக்
கென்யா :
1. காலின்ஸ், டேவிட் மற்றும் கென்னடி ஒபுயோ
2. எட்வர்ட் மற்றும் மாரிஸ் ஒடும்பே
3. டோனி மற்றும் மார்ட்டின் சுஜி
4. டேவிட் மற்றும் ஸ்டீவ் டிகோலா.
ஜிம்பாப்வே :
1. சீன் மற்றும் க்ரெய்க் எர்வின்
2. க்ராண்ட் மற்றும் ஆண்டி ஃப்ளவர்
3. ஹேமில்டன், ஷிங்கிராய் மஸகட்ஸா
4. ப்ரையன் மற்றும் பால் ஸ்ட் ரேங்
5. ஆன்ட் ரூ மற்றும் கைவிட்டால்.
ஸ்ரீலங்கா :
1. அர்ஜுனா, தம்மிகா, சஞ்ஜீவ, நிஷாந்தா ரணதுங்கா
2. துலிப் மற்றும் திலன் சமரவீரா"
Q175. 1983 ஒரு நாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் ஒரு வீரர் அத்தொடரின் எந்த போட்டியிலும் இடம் பெறவில்லை. அவர் யார்?
சுனில் வால்சன்.
Q176. ஒரு நாள் போட்டி மற்றும் உலகக்கோப்பையில் ஆட்ட நாயகன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் யார்?
ஃபாரூக் இஞ்சினியர் - 1975 - உலகக்கோப்பையில்.
Q177. ஒரு நாள் உலகக்கோப்பையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற முதல் நாடு எது?
இந்தியா -- 1975 உலகக்கோப்பையில் கிழக்கு ஆப்பிரிக்கா ஜூன் 11, 1975 அன்று வென்றது. இதுவே நம் நாட்டின் முதல் ஒரு நாள் போட்டி வெற்றியும் ஆகும்.
Q178. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முன் இறுதி (செமிஃபைனல்) மற்றும் இறுதி (ஃபைனல்) ஆகிய இரு ஆட்டங்களிலும் "ஆட்ட நாயகன்" பட்டம் வென்ற வீரர்கள் யார்?
"1983 - மொஹிந்தர் அமர் நாத் - இந்தியா.
1999 - ஷேன் வார்னே - ஆஸ்திரேலியா."
Q179. கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை தொடர்ந்து நான்கு பந்துகளில் வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் யார்?
லசித் மலிங்கா - ஸ்ரீலங்கா - 2007 - 20 ஓவர் உலகக்கோப்பை - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.
Q180. ஜூன் 25க்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு?
"1932ல் முதல் டெஸ்ட் போட்டி விளையாடியது.
1983ல் முதன்முதலாக ஒரு நாள் கிரிக்கெட் உலக க்கோப்பையை வென்றது."
Q181. அண்டார்டிகாவில் கிரிக்கெட் போட்டி நடந்து உள்ளதா?
"ஆம்.
11.1.1985ல் அங்கு பணிபுரிந்த விஞ்ஞானிகள் இரு அணிகளாக பிரிந்து ஒரு போட்டி விளையாடினர்."
Q182. இந்தியாவுக்காக கிரிக்கெட் மட்டுமில்லாமல் வேறு விளையாட்டிலும் இந்தியாவுக்காக விளையாடியவர்கள் யார்?
"1. சி. ராமசாமி : இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளும், 1952-53ல் டென்னிஸ் டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் பங்கு பெற்றார்.
2. C.R. ரங்காச்சாரி : இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஹாக்கியிலும் விளையாடி உள்ளார்."
Q183. ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை அதிக முறை நடத்திய நாடு எது?
இங்கிலாந்து - 4 முறை. 1975, 1979, 1983, 1999. ஐந்தாவது முறையாக 2019ல் நடக்க உள்ளது. ஹெட்டிங்லி நகர் அதிகமான உலக்க் கோப்பை போட்டிகளை (12) நட த்தியுள்ளது.
Q184. தடங்கல் ஏற்படும்போது, ரன்கள்/விக்கெட்டுகள் கணக்கிட உதவும் டக்ஒர்த் லூயிஸ் சூத்திரம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1996-97ல் இங்கிலாந்து. ஜிம்பாப்வேக்கிடையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரின்போது.
Q185. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த மூத்த வீரர்கள் யார்?
"டெஸ்ட் : ஜேக் ஹாப்ஸ் - இங்கிலாந்து - 142 ரன் கள் - 1929ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 46+ வயது.
ஒரு நாள் : சனத் ஜெயசூர்யா - ஸ்ரீலாங்கா - 107 ரன் கள் - 2009ல் இந்தியாவுக்கு எதிராக - 39 வயது 212 நாட்கள்."
Q186. 2007ல் 20 ஓவர் கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை யுவராஜ் சிங் அடித்த து உலக சரித்திரம். அவருடைய இந்த சாதனையால் பாதிக்கப்பட்ட பந்து வீச்சாளர் யார்?
ஸ்டூவர்ட் ப்ராட், இங்கிலாந்து.
Q187. இந்தியாவில் நடந்த முதல் டெஸ்ட் மேட்ச் எங்கு நடந்தது?
ஜிம்கானா மைதானம், பாம்பே - 1933.
Q188. ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் யார்?
சவ்ரவ் கங்குலி - 183 ரன் கள் - 1999 உலக க்கோப்பையில் - ஸ்ரீலங்காவுக்கு எதிராக.
Q189. 2007 -- 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வென்றது கிரிக்கெட் சரித்திரம். அந்த போட்டியின் முடிவில் சம்பந்தப்பட்ட வீரர்கள் யார்?
"பந்து வீசியது - ஜொகிந்தர் ஷர்மா, இந்தியா.
கேச் பிடித்த து - ஸ்ரீசாந்த்.
கேப்டன் - மகேந்திர சிங் தோனி.
அவுட்டான பேட்ஸ்மேன் - மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான்."
Q190. உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது?
செய்ல் - CHAIL - கிரிக்கெட் மைதானம், ஹிமாச்சல பிரதேசம் - 1893ல் பட்டியாலா மன்னர் பூபிந்தர் சிங் அவர்களால் கட்டப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
Q191. முதல் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் போட்டி இந்த இரு நாடுகளுக்கிடையில் 1844ல் நடந்தது. ஆனால் அந்த இரு நாடுகள் இப்போது கிரிக்கெட் உலகில் இல்லை. அவை எந்த நாடுகள்?
கேனடா மற்றும் அமெரிக்கா.
Q192. முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் டாம் கேரெட் மற்றும் வில்லியம் கன் இவர்களுக்கிடையில் இருந்த ஒற்றுமை என்ன?
இருவரும் இங்கிலாந்துக்காக ஒரே டெஸ்ட் மேட்சில் விளையாடியவர்கள். பிறகு வேறொரு போட்டியில் இருவரும் நடுவர்களாக இருந்தனர்.
Q193. WG க்ரேஸ் என்ற கிரிக்கெட் வீரர், ஒரு அணியில் கேப்டனாக இருக்கும்போது, தனது தனிப்பட்ட ரன் 93 இருக்கும்போது, தனது அணியின் ஆட்டத்தை போதுமென்று நிறுத்திக் கொண்டார். அதற்கு அவர் அளித்த காரணம் என்ன?
அவருடைய கிரிக்கெட் ரன் எண்ணிக்கைகளில் 93 மட்டுமே இல்லாதிருந்ததற்காக (1லிருந்து 100க்குள்) அவ்வாறு செய்ததாக கூறினார்.
Q194. JHWT டக்ளஸ் என்பவர் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர். இவருடைய மற்றொரு சாதனை என்ன? (ஜானி டக்ளஸ்)
குத்துச் சண்டையில் 1908 லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர்.
Q195. JHWT டக்ளஸ் அவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் வேறு ஒரு அரிய சாதனை உள்ளது. அது என்ன?
அவர் ரன் அவுட் ஆனதே இல்லை.
Q196. டெஸ்ட் போட்டிகளில் 11 நிலைகளிலும் (all positions ) பேட்டிங் செய்ய களமிறங்கியவர்கள் யார்?
"1. வில்ஃபர் ரோட்ஸ், இங்கிலாந்து
2. வினு மன்காட், இந்தியா."
Q197. பிப்ரவரி 1999 டெல்லி டெஸ்ட்டில் அனில் கும்ப்ளே ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் (பாகிஸ்தான்) வீழ்த்தியது உலக சாதனை. அவுட் ஆகாமல் (RUN OUT) எஞ்சிய பாகிஸ்தான் வீரர் யார்?
வக்கார் யூனிஸ். இதே போட்டியில் அனில் கும்ப்ளே-யின் 10வது விக்கெட்டாக வீழ்ந்தவர் வாசிம் அக்ரம்.
Q198. இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் முதல் இரண்டு சதங்களும் இரட்டை சதங்கள். அவர் யார்?
வினோத் காம்ப்ளி.
Q199. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக, முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தவர் யார்?
மாட் ப்ரையர் - இங்கிலாந்து - 127 ரன் கள் - 2007ல் மே.இ. தீவுகளுக்கு எதிராக.
Q200. நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடிய முதல் இரட்டையர் (TWINS) சகோதரர்கள் யார்?
ஸ்டீவ் மற்றும் மார்க் வாஹ், ஆஸ்திரேலியா.
Q201. மிகவும் மூத்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஆட்டம் ஆடியவர் (DEBUT TEST)
ஜேம்ஸ் சதர்ட்டன் - இங்கிலாந்து - 49 வருடம் 111 நாட்களில் - 1877ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
Q202. இந்திய மண்ணில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி எது?
இந்தியா - இங்கிலாந்து - அஹமதாபாத் - 25.11.1981. சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம்.
Q203. மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கிரிக்கெட் வீரர் யார்?
"முகமது அஷ்ரஃபுல் - 17 வருடம் 78 நாட்கள் - வங்காள தேசம் - 2001ல் ஸ்ரீலங்காவுக்கு எதிராக .
இந்தியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் - 17 வருடம் 107 நாட்கள்."
Q204. டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதன் முதலாக 0 எடுத்தவர் யார்?
நெட் க்ரெகரி - ஆஸ்திரேலியா - 1877 - இங்கிலாந்துக்கு எதிராக.
Q205. ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்து, இருமுறையும் அவுட் ஆகாமல் இருந்த ஒரே கிரிக்கெட் வீரர் யார்?
அரவிந்த டி சில்வா - ஸ்ரீலங்கா - 1997ல் பாகிஸ்தானுக்கு எதிராக. 138, 105 ரன் கள். தனது கடைசி போட்டியிலும் சதம் அடித்தவர்.
Q206. டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 300+ ரன்கள் அடித்த முதல் வீரர் யார்?
ஆண்டி சாந்தம் - - இங்கிலாந்து - 3.4.1930 - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக - 325 ரன் கள் (39 வருடம் 275 நாட்கள் வயது) இவருடைய கடைசி போட்டி.
Q207. டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 300+ ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் யார்?
வீரேந்தர் ஷேவாக் - 309 ரன் கள் - 28.3.2004 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக. இதற்குப் பிறகு 26.3.2008ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன் கள் எடுத்து இந்திய சாதனை புரிந்துள்ளார்.
Q208. டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 300+ ரன்கள் எத்தனை பேர் அடித்துள்ளனர். அவர்களில் ஒரு முறைக்கு மேல் அடித்துள்ளவர்கள் யார்?
"மார்ச் 2016 நிலையில், 28 பேர் அடித்துள்ளனர். அவர்களில் கீழ்க்கண்டவர்கள் ஒரு முறைக்கு மேல் அடித்துள்ளனர்.
1. டான் ப்ராட்மேன், ஆஸ்திரேலியா - 334, 304
2. ப்ரையன் லாரா, மே.இ. தீவுகள் - 375, 400 (உலக சாதனை)
3. க்றிஸ் கெய்ல், மே.இ.தீவுகல் - 317, 333
4. வீரேந்தர் ஷேவாக், இந்தியா - 309, 319 (இந்திய சாதனை)
இவர்களில் ப்ரையன் லாரா மட்டும் 400 ரன்கள் (Not out) எடுத்து சாதனை புரிந்துள்ளார்."
Q209. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் (அங்கீகரிக்கப்பட்ட) முதல் பந்தை வீசியவர் யார்? அதை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் யார்?
பந்து வீச்சாளர் - க்ரஹாம் மெக்கென்ஸி, ஆஸ்திரேலியா. பேட்ஸ்மேன் - ஜெஃப்ரி பாய்காட், இங்கிலாந்து, 1971ல்.
Q210. டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்ய முதல் வீரராக களமிறங்கி, அதிக முறை 0வில் அவுட் ஆனவர் யார்?
மைக்கேல் ஆர்த்தர்டன் - இங்கிலாந்து - 17 முறை.
Q211. ஒரு நாள் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்டு மிகக்குறைந்த ரன்களை எடுத்த மிகவும் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
சுனில் கவாஸ்கர் - 36 ரன் கள் -174 பந்துகளில் - 1975 உலக க்கோப்பையில் - இங்கிலாந்துக்கு எதிராக.
Q212. ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸின் ஒரு நாளில் அதிகமான ரன்கள் எடுத்த வீரர் யார்?
டான் ப்ராட்மேன் - ஆஸ்திரேலியா - 304 ரன்கள் - 20.7.1934 - இங்கிலாந்துக்கு எதிராக.
Q213. டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றி கண்ட இந்திய கேப்டன் யார்?
விஜய் ஹசாரே -1974 ல் - இங்கிலாந்துக்கு எதிராக - சென்னையில்.
Q214. டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் இந்தியா எடுத்த குறைந்த பட்ச ரன் எது?
42ரன் கள் - 1974ல் - இங்கிலாந்துக்கு எதிராக. இதையே ஆங்கில வர்ணனையாளர்கள், ஊடகங்கள் 42 என குறிப்பிடுவர்.
Q215. டெஸ்ட் போட்டியில், எந்த நாட்டுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது?
2010ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 337 ரன் கள் வித்தியாசத்தில வெற்றி கண்டது.
Q216. கிரிக்கெட் வீரர்களும் புனைப் பெயர்களும் :
வ. எண் பெயர் / நாடு புனைப் பெயர்
1 பால் ஆடம்ஸ், தெ. ஆப்பிரிக்கா GOGGA
2 அஜித் அகர்கர், இந்தியா BOMBAY DUCK
3 ஷோகேப் அக்தர், பாகிஸ்தான் RAWAL PINDI EXPRESS
4 வாசிம் அக்ரம், பாகிஸ்தான் SULTAN OF SWING
5 மொஹிந்தர் அமர் நாத், இந்தியா JIMMY
6 ஷாஹித் அஃப்ரிடி, பாகிஸ்தான் THE BOOM
7 டான் ப்ராட்மேன், ஆஸ்திரேலியா THE DON
8 ஷிவ் நாராயண் சந்தர்பால், மே.இ. தீவுகள் TIGER
9 மன்சூர் அலிகான் பட்டௌடி, இந்தியா TIGER
10 மைக்கேல் க்ளார்க், ஆஸ்திரேலியா PUP
11 பால் காலிங்வுட், இங்கிலாந்து NICE GINGER
12 காலின் கௌட்ரி, இங்கிலாந்து KIPPER
13 அரவிந்த டிசில்வா, ஸ்ரீலங்கா MAD MAX
14 கபில்தேவ், இந்தியா HARYANA EXPRESS
15 தோனி, இந்தியா MAHI, THE COOL
16 ஆலன் டொனால்ட், தெ. ஆப்பிரிக்கா WHITE LIGHTNING
17 ராகுல் ட்ராவிட், இந்தியா JAMMY, THE WALL
18 க்ரீம் ஃப்வ்ளர், ஜிம்பாப்வே FOXY
19 சவ்ரவ் கங்குலி, இந்தியா DADA, PRINCE OF KOKATTA
20 ஜோயல் கார்னர், மே.இ. தீவுகள் BIG BIRD
21 சுனில் கவாஸ்கர், இந்தியா SUNNY BHAI, LITTLE MASTER
22 க்றிஸ் கெய்ல், மே.இ. தீவுகள் CRAMPS
23 ஹெர்ஷெல் கிப்ஸ், தெ.ஆப்பிரிக்கா SCOOTER, THE SACK MAN
24 ஆடம் கில்க்றிஸ்ட், ஆஸ்திரேலியா GILLY, CHURCHY, DEMOLITION MAN
25 ஆ ஷ்லிகைல்ஸ், இங்கிலாந்து ASH, KING OF SPAIN
26 ஜேசன் கில்லெஸ்பி, ஆஸ்திரேலியா DIZZY
27 டேரன் காஃப், இங்கிலாந்து RHIND, DAZZLER
28 க்ரேஸ், இங்கிலாந்து CORONER
29 க்ரேஸ், இங்கிலாந்து DOCTOR
30 ரிச்சர்டு ஹட்லி, நியூசிலாந்து PADDLES
31 மேத்யூ ஹெய்டன், ஆஸ்திரேலியா HAYDOS, UNIT
32 ஜார்ஜி ஹெட்லி, மே.இ.தீவுகள் BLACK BRADMAN
33 இயன் ஹூலி, ஆஸ்திரேலியா HEALS
34 ப்ராட் ஹாஜ், ஆஸ்திரேலியா POSTMAN
35 மிக்கேல் ஹோல்டிங், மே.இ. தீவுகள் WHISPERING DEATH
36 மிக்கேல் ஹஸ்ஸி, ஆஸ்திரேலியா MR. CRICKET
37 இன்ஸமாம் உல் ஹக், பாகிஸ்தான் ALOO, INZY
38 சனத் ஹெயசூர்யா, ஸ்ரீலங்கா THE MATARA MAULER
39 ஜேக்கஸ் கல்லீஸ், தெ. ஆப்பிரிக்கா KALAHARI, JACKES
40 இம்ரான் கான், பாகிஸ்தான் THE LION OF LAHORE, KING OF SWING
41 லான்ஸ்க்ளூஸ்னர், தெ. ஆப்பிரிக்கா ZULU
42 அனில் கும்ப்ளே, இந்தியா JUMBO
43 ப்ரையன் லாரா, மே.இ. தீவுகள் THE PRINCE
44 லக்ஷ்மண், இந்தியா VERY VERY SPECIAL
45 ப்ரெட்லீ, ஆஸ்திரேலியா BING
46 க்ளைவ் லாய்ட், மே.இ. தீவுகள் SUPER CAT
47 டேவிட் லாய்ட், இங்கிலாந்து BUMBLE
48 சஞ்சய் மஞ்ச்ரேகர், இந்தியா SANJ
49 விஜய் மஞ்ச்ரேகர், இந்தியா THE WANDERER
50 ஜெஃப் மார்ஷ், ஆஸ்திரேலியா SWAMPY
51 ராட் மார்ஷ், ஆஸ்திரேலியா IRON GLOVES
52 க்ளென் மேக்க்ராத், ஆஸ்திரேலியா THE PIGEON
53 டாம் மூடி, ஆஸ்திரேலியா LONG
54 முத்தையா முரளிதரன், ஸ்ரீலங்கா SMILING ASSASSIN
55 ஷோஹெப் மாலிக், பாகிஸ்தான் TERMINATOR
56 பார்த்தீவ் பட்டேல், இந்தியா BACHHA
57 ஷான் பொல்லாக், தெ. ஆப்பிரிக்கா GINGER, NIBBLER
58 ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா PUNTER
59 அப்துல் காதர், பாகிஸ்தான் QADU
60 வெங்கடபதி ராஜூ, இந்தியா MUSCLES
61 ரவி ராம்பால், மே.இ. தீவுகள் FRISCO KID
62 ரஞ்சித் சிங்ஜி, இந்தியா BLACK PRINCE OF CRICKETERS
63 பால் ரீஃபெல், ஆஸ்திரேலியா PISTOL
64 விவியன் ரிச்சர்ட்ஸ், மே.இ.தீவுகள் MASTER BLASTER
65 முகமது சாமி, பாகிஸ்தான் KARACHI EXPRESS
66 நவ்ஜோத்சிங் சித்து, இந்தியா SHERRY
67 ஹர்பஜன் சிங், இந்தியா TURBANATOR, BAJJI
68 யுவராஜ் சிங், இந்தியா YUVI
69 க்ரீம் ஸ்மித், தெ. ஆப்பிரிக்கா BIFF
70 ஜவகல் ஸ்ரீ நாத், இந்தியா BABU
71 ஸ்காட் ஸ்டைரிஸ், நியூசிலாந்து PIG
72 ஆண்ட் ரூ சிமண்ட்ஸ், ஆஸ்திரேலியா SYMO, ROY, GOLDEN BOLLOCKS
73 ச ச்சின் டெண்டுல்கர், இந்தியா LITTLE MASTER, MASTER BLASTER
74 டெரிக் அண்டர்வுட், இங்கிலாந்து DEADLY
75 திலீப் வெங்க்சர்க்கார், இந்தியா COLONEL
76 டேனியல் வெட்டோரி, நியூசிலாந்து LUCAS, DANNY
77 லூ வின்சென்ட், நியூசிலாந்து FLUSHER
78 ஷேன் வார்னே, ஆஸ்திரேலியா SHEIKH OF TWEAK
79 ஸ்டீவ் வாஹ், ஆஸ்திரேலியா TUGGA, ICEMAN
80 மார்க் வாஹ், ஆஸ்திரேலியா JUNIOR
81 ஜான் ரைட், நியூசிலாந்து SHAKE
82 வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், பாகிஸ்தான் SULTAN OF REVERSE SWING
83 யூசுஃப் யொஹானா, பாகிஸ்தான் YOYO
84 வக்கார் யூனிஸ், பாகிஸ்தான் BURUWELA BOMBER
85 ஜெய சிம் ஹா, இந்தியா CULTIVATED STYLIST
86 மார்க் வாஹ், ஆஸ்திரேலியா BEAR
Q217. கிரிக்கெட் வீரர்களும் - புத்தகங்களும் :
எண் பெயர் / நாடு புத்தகம்
1 டான் ப்ராட்மேன், ஆஸ்திரேலியா MY CRICKET LIFE, ART OF CRICKET, FAREWELL TO CRICKET
2 ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலியா WALKING TO VICTORY
3 ராகுல் ட்ராவிட், இந்தியா NICE GUYS WHO FINISHED FIRST
4 க்ரெக் சாப்பல், ஆஸ்திரேலியா MAKING OF CHAMPION
5 டேவிட் கோவர், இங்கிலாந்து WITH THE TO SPARE
6 ஜிம் லேக்கர், இங்கிலாந்து SPINNING ROUND THE WORLD, OVER TO ME
7 முஷ்டாக் அலி, பாகிஸ்தான் CRICKET DELIGHT FUL
8 ப்ரையன் க்ளோஸ், இங்கிலாந்து CLOSE TO CRICKET
9 ஜான் ஸ்னோ, இங்கிலாந்து CRICKET REBEL
10 ஃப்ரெட் ட்ரூமேன், இங்கிலாந்து BALL OF FIRE
11 ரெபள்ளி ப்ரசன்னா, இந்தியா ONE MORE OVER
12 சுனில் கவாஸ்கர், இந்தியா SUNNY DAYS
13 இம்ரான் கான், பாகிஸ்தான் IMRAN
14 டக்ளஸ் ஜார்டின், மே.இ. தீவுகள் SPARTAN CRICKETER
15 டோனி லூயிஸ், இங்கிலாந்து PLAYING DAYS
16 பீட்டர் மே, இங்கிலாந்து A GAME ENJOYED
17 ப்ரையன் லாரா, மே.இ. தீவுகள் BEATING THE FIELD
18 டொமினிக் கார்க், இங்கிலாந்து UNCORKED
19 டேவிட் பூன், ஆஸ்திரேலியா UNDER THE SOUTHERN CROSS
20 மார்க் டெய்லர், ஆஸ்திரேலியா TIME TO DECLARE
21 கர்ட்னி வால்ஷ், மே.இ. தீவுகள் HEART OF THE LION
22 ஆலன் டொனால்ட், தென் ஆப்பிரிக்கா WHITE LIGHTNING
23 இயன் ஹூலி, ஆஸ்திரேலியா HANDS AND HEALS
24 டேவிட் லாய்ட், இங்கிலாந்து ANYTHING BUT MURDER
25 ஃபசல் முகமது, பாகிஸ்தான் FROM DUSK TO DAWN
26 மைக் ஆர்தர்டன், இங்கிலாந்து OPENING UP
27 ஜாவேத் மியாண்டாட், பாகிஸ்தான் CUTTING EDGE
28 டேரன் லேமான், ஆஸ்திரேலியா WORTH THE WAIT
29 பேசில் டி ஆலிவேரா, இங்கிலாந்து CRICKET AND CONSPIRACY
30 நாசர் ஹூசைன், இங்கிலாந்து PLAYING WITH FIRE
31 கபில் தேவ், இந்தியா STRAIGHT FROM THE HEART
32 அலெக் ஸ்டூவர்ட், இங்கிலாந்து PLAYING FOR KEEPS
33 கேரி க்றிஸ்டென், தென் ஆப்பிரிக்கா GAZZA
34 மைக்கேல் வான், இங்கிலாந்து CALLING THE SHOTS
35 ஸ்டீவ் வாஹ், ஆஸ்திரேலியா OUT OF MY COMFORT ZONE
36 ஜிம் லேக்கர், இங்கிலாந்து NINETEEN FOR NINETY
37 வாசிம் கான், பாகிஸ்தான் BRIM FULL OF PASSION
38 முஷ்டாக் அஹமத், பாகிஸ்தான் TWENTY 20 VISION
39 க்ரஹாம் தார்ப், இங்கிலாந்து RISING FROM THE ASHES
40 இயன் பாத்தம், இங்கிலாந்து HEAD ON
41 மாண்டி பனேசர், இங்கிலாந்து MAONTY'S TURN
42 ஷேன் வார்ன், ஆஸ்திரேலியா PORTRAIT OF A GENIUS
43 ப்ரையன் லாரா, மே.இ. தீவுகள் CRICKET'S TROUBLED GENIUS
44 டன் கன் ஃப்ளெச்சர், இங்கிலாந்து BEHIND THE SHADES
45 அலிஸ்டர் குக், இங்கிலாந்து STARTING OUT
46 சச்சின் டெண்டுல்கர், இந்தியா THE DIFINITIVE BIOGRAPHY
47 க்ளென் மேக்க்ராத், ஆஸ்திரேலியா LINE AND STRENGTH
48 ஆடம் கில்க்றிஸ்ட், ஆஸ்திரேலியா TRUE COLOURS
49 மாத்யூ ஹெய்டன், ஆஸ்திரேலியா STANDING MY GROUND
50 ஜெஃப் தாம்ஸன், ஆஸ்திரேலியா THOMMO SPEAKS OUT
51 ஹென்றி ஒலோங்கோ, ஜிம்பாப்வே BLOOD, SWEAT AND TREASON
52 மைக்கேல் ஹோல்டிங், மே.இ. தீவுகள் NO HOLDING BACK
53 ரிச்சி பெர்னார்டு, ஆஸ்திரேலியா OVER BUT NOT OUT
54 இயன் பாத்தம், இங்கிலாந்து THE POWER AND THE GLORY
55 க்ரீம் ஸ்வான், இங்கிலாந்து THE BREAKS ARE OFF
56 யுவராஜ் சிங், இந்தியா THE TEST OF MY LIFE, FROM CRICKET TO CANCER AND BACK
57 ஸ்டூவர்ட் ப்ராட், இங்கிலாந்து MY WORLD IN CRICKET
58 ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா AT THE CLOSE OF PLAY
59 மேட் ப்ரையர், இங்கிலாந்து THE GLOVES ARE OFF
60 சச்சின் டெண்டுல்கர், இந்தியா PLAYING IT MY WAY
61 கர்ட்லி ஆம்ப்ரோஸ், மே.இ. தீவுகள் TIME TO TALK

"இந்த புத்தகங்களில் பல, வீர்ர்களால் நேரடியாகவும், அவர்கள் சார்பாக மற்றவர்களாலும் எழுதப்பட்டுள்ளன.
இவை தவிர்த்து, WG க்ரேஸ், அரவிந்தா டிசில்வா, சர் விவியன் ரிச்சர்ட்ஸ், இயன் பாத்தம், கேரி சோபர்ஸ்,மார்க் வாஹ், ஷேன் வார்ன், டென்னிஸ்லில்லி, ஆண்ட்ரூ ட்ராஸ் என பலர் தங்கள் சுய சரிதைகளை எழுதி உள்ளனர்."
Q218. "கிரிக்கெட் மைதானங்கள் : கிரிக்கெட் விளையாடும் பல நாடுகளில் 100க்கும் மேற்பட்ட மைதானங்கள் உள்ளன. அவற்றுள் சில அழகான, முக்கியமான மைதானங்கள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது."
எண் மைதானங்கள்
1. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், ஆஸ்திரேலியா - 1854.
2. தி லார்ட்ஸ், லண்டன், இங்கிலாந்து - 1814.
3. சிட்னி கிரிக்கெட் மைதானம், ஆஸ்திரேலியா - 1884
4. இ மாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், தரம் ஷாலா, இமாச்சல பிரதேசம்.
5. தி ஓவல், லண்டன், இங்கிலாந்து - 1880.
6. ஈடன் பார்க், ஆக்லேண்ட், நியூசிலாந்து
7. தி வாண்டரர்ஸ், ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா - 1956.
8. தி வாக்கா, பெர்த், ஆஸ்திரேலியா
9. நியூ லாண்ட்ஸ், கேப் டவுன், தென் ஆப்பிரிக்கா.
10. ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா, இந்தியா - 1864.
11. ஓல்ட் ட்ராஃபோர்டு, மான்செஸ்டர், இங்கிலாந்து - 1854.
12. கால்லி மைதானம், ஸ்ரீலங்கா.
13. பல்லிகெலே மைதானம், கண்டி, ஸ்ரீலங்கா
14. ப்யூஸ் ஜோர், செயிண்ட் லூசியா, மே.இ. தீவுகள்
15. கராச்சி நேஷனல் மைதானம், பாகிஸ்தான்

இன்னும் பல மைதானங்கள் உள்ளன.