Khub.info Learn TNPSC exam and online pratice

மொழிகள்

Q1. மொழி என்பது என்ன?
வார்த்தைகளின் மூலம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் எண்ணங்களை பரிமாறிக்கொள்வது.

Q2. உலகில் சுமார் எத்தனை மொழிகள் உள்ளன?
சுமார் 6900 மொழிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 1650 இந்தியாவில் உள்ளது.
Q3. உலகில் அதிகமாக பேசப்படும் மொழி எது?
சீன மக்களிடையே பேசப்படும் "மாண்டரின்" எனப்படும் மொழி சுமார் 96 கோடி மக்களால் பேசப்படுகிறது.
Q4. பேச்சு மொழி என்பது என்ன ? dialect?
வரையறுக்கப்பட்ட எந்த மொழியையும் சாராமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை மக்களிடையே மட்டும் பேசப்படும் பேச்சு.
Q5. சர்வதேச மொழி என அழைக்கப்படுவது எது? (உலகின் இரண்டாவது பெரிய மொழி)
ஆங்கிலம் -- 40 கோடிக்கும் மேலான மக்களால் பேசப்படும் மொழி. சுமார் 50 நாடுகளுக்கும் மேலாக அலுவலக மொழியாகவும் உள்ளது. உலகளவில் ஆங்கில ஆதிக்கம் பரவியிருந்ததால், ஆங்கிலம் அலுவல் ரீதியாக இன்றும் உலகளவில் பரவி பேசப்பட்டு வருகிறது. அதனால், அநேக நாடுகள் தங்கள் மொழியுடன் ஆங்கிலத்தையும் ஒரு கட்டாய பாடமாக கற்று கொடுத்து வருகிறது.
Q6. உலகின் மூன்றாவது மிக அதிகமாக பேசப்படும் மொழி எது?
ஸ்பானீஷ் -- Spanish -- சுமார் 34 கோடி மக்களால் பேசப்படும் மொழி.
Q7. உலகளவில் அதிகமான தொடர்பு மொழியாக விளங்குவது எந்த மொழி?
ஆங்கிலம் -- English -- சுமார் 600 கோடி மக்களால் பகிர்ந்து கொள்ளப்படும் மொழி.
Q8. உலகில் அதிகமான எழுத்துக்களை கொண்ட மொழி எது?
கம்போடிய நாட்டின் கெமெர் மொழி -- 74 எழுத்துக்கள்
Q9. உலகின் எந்த மொழியில் அதிகமான வார்த்தைகளும், தொழில் நுட்ப சொற்களும் உள்ளது?
ஆங்கிலம் -- 4.5 லட்சத்திற்கும் மேலான வார்த்தைகளும், 3 லட்சத்திற்கும் மேலான தொழில் நுட்ப சொற்களும் உள்ளது. இதில் தொடர்ந்து அதிக அளவில் பயனில் உள்ளவை சுமார் 60000 சொற்களுக்கும் மேல்.
Q10. உலகில் அதிகமாக பேசப்படும் முதல் 20 மொழிகளை வரிசைப்படுத்துக?
1. சைனீஸ் மாண்டரின் 2. ஆங்கிலம் 3. ஸ்பானீஷ் 4. இந்தி (+உருது) 5. அரபு 6. போர்ச்சுகீஸ் 7. பெங்காலி 8. ரஷ்யன் 9. ஜப்பானீஸ் 10. ஜெர்மன் 11. சீன வு 12. ஜாவனீஸ் 13. கொரியன் 14. பஞ்சாபி 15. தெலுங்கு 16. ஃப்ரெஞ்ச் 17. மராத்தி 18. தமிழ் 19. இத்தாலியன் 20. சீன யு
Q11. மொழி குடும்பம் என்பது என்ன? (language family)
ஒரு குறிப்பிட்ட அடிப்படை மொழியிலிருந்து, ஒரே விதமான பல சொற்களைக் கொண்டு, ஒரே விதமாக பேசப்படும் மொழிகள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தது. உதாரணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் புராண காலத்து திராவிட மொழியிலிருந்து உருவானதாக கருதப்பட்டு ஒரு குடும்பத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
Q12. இவ்வாறாக, உலகில் பரவியுள்ள அடிப்படை "மொழிக் குடும்பங்கள்" யாவை?
1. இண்டோ ஈரோப்பியன் Indo European
2. சீனோ திபெத்தன் Sino Tibetan
3. ஆஸ்ட்ரோ ஆசியன் Austronesian
4. ஆஃப்ரோ ஆசியாடிக் Afro Asiatic
5. நிகர் காங்கோ Niger Congo
6. திராவிடியன் Dravidian
7. ஜப்பானீஸ் Japanese
8. அல்டெய்க் Altaic
9. ஆஸ்ட்ரோ ஆசியாடிக் Austro Asiatic
10. தாய் Tai
11. கொரியன் Korean
12. நிலோ சஹாரன் Nilo-Saharan
13. உராலிக் Uralic
14. அமெரிண்டியன்ச் Amerindians
15. ககாசியன் Caucasian
16. மியாவ் யாவ் Miao-yao
17. இண்டோ பசிபிக் Indo Pacific
18. கொய்சான் Khoisan
19. ஆஸ்திரேலியன் அபாரிஜின் Australian Aborigine
20. பேலியோ சைபீரியன் Palaeo Siberian.
இவை தவிர்த்து சில மொழி குடும்பங்கள் உள்ளன. அவற்றில் அம்மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளனர்.
Q13. இந்தியாவில் எத்தனை மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது?
1652 – மொழிகள் (2001 கணக்கெடுப்புப்படி). இதில் சுமார் 29 மொழிகளை பத்து லட்சத்துக்கு மேலானவர்கள் பேசுவதாகவும், சுமார் 122 மொழிகளை 10000க்கும் மேலானவர்கள் பேசுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 22 மொழிகள் இந்திய அரசாங்க அலுவல் மொழிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Q14. நம் நாட்டின் அலுவலக மொழி எது?
இந்தி -- தேவநகரி எழுத்து வடிவத்தில். நம்நாட்டில் சுமார் 70 சதவிகித மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
Q15. செப்டம்பர் 14, "இந்தி நாள்" ஆக அனுசரிக்கப்பட காரணம் என்ன?
1949ல் இந்த நாளில் இந்தி அலுவலக மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது.
Q16. இந்தியாவை தவிர்த்து, இந்தி மொழியை அதிகமாக பேசும் மக்கள் எந்த நாட்டிலுள்ளனர்?
ஃபிஜி தீவுகள் Fiji – இங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 48% மக்கள் இந்தி மொழி பேசுகின்றனர். இவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.
Q17. இந்திய அரசியல் சாசனத்தின் படி, எந்தெந்த மொழிகள், அலுவலக மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது?
22 இந்திய மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:
1. அஸ்ஸாமீஸ் Assamese
2. பெங்காலி Bengali
3. போடோ Bodo
4. டோக்ரி Dogri
5. குஜராத்தி Gujarati
6. இந்தி Hindi
7. கன்னடம் Kannada
8. கொங்கனி Konkani
9. காஷ்மீரி Kashmiri
10. மலையாளம் Malayalam
11. மணிப்பூரி Manipuri
12. மராத்தி Marathi
13. மைத்திலி Maithili
14. நேபாளி Nepali
15. ஒரியா Oriya
16. பஞ்சாபி Punjabi
17. சமஸ்கிருதம் Sanskrit
18. சிந்தி Sindhi
19. சந்தாலி Santhali
20. தமிழ் Tamil
21. தெலுங்கு Telugu
22. உருது Urdu.
இந்திய அரசியல் சாசனத்தின் 8 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகள்.
Q18. இந்தி மொழியின் தாய் மொழியாக கருதப்படுவது எந்த மொழி?
சமஸ்கிருதம் -- வேதகால மொழி.
Q19. எந்தெந்த இந்திய மொழிகளுக்கு "செம்மொழி" “Classical Status” அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது?
பழமை மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது. அவ்வாறாக 1. தமிழ் (2004), 2. சமஸ்கிருதம் (2005) மற்றும் 3. கன்னடம் & தெலுங்கு (2008) மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
Q20. இந்திய காகித நாணயத்தில், எத்தனை இந்திய மொழிகளில் மதிப்பு குறிக்கப்பட்டுள்ளது?
15 இந்திய மொழிகள் + ஆங்கிலம் == மொத்தம் 16 மொழிகள்.
Q21. “alphabet” எனப்படு ஒற்றை எழுத்து என்பது என்ன? இந்த ஆங்கிலத் தொடர் “alphabet” எவ்வாறு உருவானது?
ஒரு தனி எழுத்தை ஆங்கிலத்தில் இவ்வாறு அழைப்பர். இந்த தனி எழுத்துக்களின் வெவ்வேறு இணைப்பும் தொகுப்புமே வார்த்தை ஆகிறது. “Alphabet” என்ற ஆங்கில வார்த்தை, கிரேக்க மொழியின் முதல் எழுத்தான “alpha” மற்றும் இரண்டாம் எழுத்தான “beta” என்பதின் இணைப்பு.
Q22. ஆங்கிலத்தில் Palaeography எனப்படுவது எதைக்குறிக்கிறது?
தொல்லெழுத்துக்கலை -- கையெழுத்து மற்றும் சரித்திர காலத்து பிரதிகளை மொழி பெயர்த்து நடைமுறை மொழிக்கு மாற்றுவது.
Q23. மொழிகளைப் பற்றிய கல்வி/ஆய்வை ஆங்கிலத்தில் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள்?
LINGUISTICS – ஒரு மொழியின் பேச்சு, எழுதும் முறை/வடிவத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யும் முறை.
Q24. “Abjad” மற்றும் “Abugida” -- எழுதும் முறையுடன் தொடர்புடைய இந்த ஆங்கில தொடர்கள் எதைக் குறிக்கின்றன?
Abjad: இந்த எழுத்து முறையில் ஒவ்வொரு குறியீடும் symbol ஒரு மெய் எழுத்தை குறிப்பிடும்படியாக இருக்கும். உதாரணம் -- அரபு மற்றும் ஹீப்ரு மொழிகள்.
Abugida: மெய் எழுத்தை அடிப்படையாக, கூறு பகுதி எழுதும் முறை. மெய்யெழுத்தை அடிப்படையாகக் கொண்டு குறியீடு உடன் எழுதப்படும் முறை. இந்திய மற்றும் அநேக கிழக்கு ஆசிய எழுத்து முறைகள் பிராமி எழுத்து முறையை அடிப்படையாக கொண்டது. இவை abugidas முறையை சார்ந்தது. (ப்ராமி எழுத்து முறையும் அரமைக் எழுத்து முறையை அடிப்படையாக கொண்டது)
Q25. மிகவும் பழமையான எழுத்து முறை எனக் கருதப்படுவது ?
எகிப்திய கலாச்சாரத்து எழுத்து முறை. கி.மு. 2700 ல் 22 எழுத்துக்களுடன்/ சித்திரங்களுடன் தொடங்கியதாக தெரிகிறது.
Q26. உலகின் பிற சில புகழ் பெற்ற மொழிகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை?
லத்தீன் Latin: ரோம எழுத்துகள் எனவும் கூறுவர். 26 எழுத்துக்களைக் கொண்டது.
ஜெர்மன் German: 26 எழுத்துகள்
ரஷ்யன் Russian: 33 எழுத்துகள் - “Cyrillic” எழுத்துகள் எனவும் அழைப்பர்.
கிரேக்கம் Greek: 24 எழுத்துகள்
ஸ்பானீஷ் Spanish: 26 எழுத்துகள்
அரபு Arabic: 28 அடிப்படை எழுத்துகள்
Q27. அரபு எழுத்து முறையில் உள்ள சிறப்பம்சம் என்ன?
இம்மொழியின் அடிப்படை எழுத்துக்கள் 28. பல எழுத்துக்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும், அவற்றின் மேல் வைக்கப்படும் ஒன்று அல்லது இரண்டு புள்ளிகளின் அடிப்படையில் அவற்றின் ஒலி வடிவம் மாறும். உலகில் இரண்டாவது அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்துகள். இம்முறையில் உள்ள சிறப்பம்சம் -- மற்ற எழுத்து முறை (இடது-->வலது) போலல்லாமல், இந்த முறையில் வலது புறத்திலிருந்து இடது புறமாக (உருது மொழியிலும்) எழுதப்படுகிறது. இதே அடிப்படையில் ஒரு புத்தகம் வலதிலிருந்து இடமாகவே படிக்கப்படுகிறது.
Q28. சீன, ஜப்பானிய மற்றும் கொரிய எழுத்து முறைகளில் உள்ள சிறப்பம்சம் என்ன?
முக்கியமாக இவை எழுத்துகளாக கருதப்படுவது இல்லை. இவை சித்திர வடிவங்களில் இருக்கும்.
சீன Chinese: ஒவ்வொரு சித்திரமும் ஒரு வார்த்தை ஆகும். இதை சீன மொழியில் “Hanji” என அழைக்கின்றனர். சுமார் 47000 சித்திர வடிவங்கள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 4000 வடிவங்களை சிறப்பாக கற்று அறிந்தாலே சீன மொழி கற்றவராக கருதலாம். உலகின் நீளமான எழுத்து முறை.
ஜப்பானிய Japanese: சீன மொழியை போன்றது. இதில் சுமார் 2928 சித்திர வடிவங்கள் உள்ளன.
கொரிய Korean: இதில் சுமார் 52 வடிவங்கள் (Jamos) உள்ளன. இதை “Hangul” எழுத்து முறை என்பர்.
Q29. ஆங்கில எழுத்துகள் எதை அடிப்படையாக கொண்டது, இப்போது எத்தனை எழுத்துகள் உள்ளன?
லத்தீன் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய நிலையில் 26 எழுத்துகள் உள்ளன.
Q30. தொடக்க காலத்தில் ஆங்கிலத்தில் எத்தனை எழுத்துகள் இருந்தன, பிறகு எத்தனை மற்றும் எந்தெந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டன?
தொடக்கத்தில் 24 (இருபத்தி நான்கு) எழுத்துகளே இருந்தன. பிறகு U மற்றும் J (இரண்டு எழுத்துகள்) 16 வது நூற்றாண்டில் சேர்க்கப்பட்டு 26 எழுத்துகளாயிற்று.
Q31. ஆங்கில மொழியின் வளர்ச்சிக் கால அட்டவணை ?
1. பழமை ஆங்கிலம் Old English (Anglo Saxon) கி.பி. 450 – 1100
2. இடைக்கால ஆங்கிலம் Middle English கி.பி. 1100 – 1500
3. ஆரம்பகால நவீன ஆங்கிலம் Early Modern English கி.பி. 1500 – 1650
4. நவீன ஆங்கிலம் Modern English கி.பி. 1650 முதல்.
Q32. ஆங்கிலக் கவிதையின் தந்தை எனக்கருதப்படுபவர் யார்?
ஜெஃப்ரி சாஸர் --Geoffrey Chaucer.
Q33. ஆங்கில இலக்கணத்துக்கு மூல ஆதார நூல் எது?
ரென் & மார்டின் -- Wren and Martin.
Q34. எந்த இந்தியர் "ஆங்கில மேதை" என புகழப்படுகிறார்?
வி.எஸ் (வலங்கைமான் சங்கரநாராயண) . ஸ்ரீநிவாச சாஸ்திரி -- V.S.Srinivasa Sastry. 1869-1946.
Q35. ஆங்கில உயிர் எழுத்துக்கள் எனப்படும் vowels அனைத்தும் இடம்பெறும் வார்த்தைகள் சிலவற்றை கூறுக?
Dialogue, Education, Automobile, Evacuation, Remuneration, Regulation, Misbehaviour, Authorities, Authorize, Authentication, Precaution, Preambulation.
Q36. ஐந்து ஆங்கில உயிர் எழுத்துகளையும் கொண்ட சிறிய ஆங்கில வார்த்தை எது?
5 எழுத்துகளில் --IOUEA -- A GENUS OF SPONGES
6 எழுத்துகளில் -- EUNOIA -- Goodwill a speaker cultivates between himself and the audience.
7 எழுத்துகளில் -- SEQUOIA -- (genus) a genus with one living and several fossil species.
Q37. ஆங்கிலத்தில் “anagram” என்பது என்ன?
ஒரு சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைத்து மற்றொரு அர்த்தமுள்ள சொல் ஏற்படுத்துவது. உதாரணமாக, Angel என்ற சொல்லிலிருந்து Glean என்ற சொல் உருவாக்குவது.
Q38. ஆங்கிலத்தில் “acronym” (சுருக்கப்பெயர்) என்பது என்ன?
ஒரு சொல்லின் எழுத்துக்களிலிருந்து, ஒரு சில எழுத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒரு சுருக்க இணைப்பை ஏற்படுத்தி, அதை காலப்போக்கில் பழக்கத்தில் கொண்டு வருவது. உதாரணமாக, 1. HOD -- for Head of the Dept., 2. UN -- for United Nations 3. ISRO -- Indian Space Research Organization., etc.,
Q39. ஆங்கிலத்தில் “Palindrome” என்பது என்ன?
ஒரு சொல்லை, இடமிருந்து வலம், வலமிருந்து இடம் படிக்கும் போது அதே சொல்/பொருள் அமைவது. உதாரணமாக -- Madam, Malayalam, மேகமே, தோணாதோ -- போன்றவை.
Q40. ஆங்கிலத்தில் “Orthography” (எழுத்திலக்கணம்) என்பதன் பொருள் என்ன?
ஒரு சொல்லின் எழுத்துக்களை சொல்லும் முறை. Any method of spelling.
Q41. ஆங்கிலத்தில் “transliteration” ?
ஒரு மொழிச் சொல்லை மற்றொரு மொழி எழுத்துக்களைக் கொண்டு அதே போல் எழுதுவது. உதாரணமாக -- English == இங்க்லீஷ்
Q42. ஆங்கிலத்தில் “Abbreviation” என்பதன் பொருள் என்ன?
ஒரு நீண்ட சொல்/சொல் தொடரின் சுருக்கம். உதாரணமாக -- VIP for Very Important Person. (similar to acronym).
Q43. ஆங்கிலத்தில் “Portmanteau” என்பதன் பொருள் என்ன?
இரண்டு சொற்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து ஒரு புது வார்த்தை உருவாக்கிக் கொள்வது. அவ்வாறு உருவாக்கப்பட்ட சொல், அந்த இரண்டு சொற்களின் பொருளையும் சேர்த்து அளிப்பதாக அமைவது. உதாராணமாக: Motor + Hotel = Motel (highway hotels), Breakfast + Lunch = Brunch etc.,
Q44. ஆங்கிலத்தில் “Homonym” என்பதன் பொருள் என்ன?
இரண்டு சொற்கள், ஒரே ஒலி வடிவம் கொண்டு, வெவ்வேறு பொருள் கொண்டதாக இருப்பது. உதாரணமாக : Son, Sun; Die, Dye; Know, No; etc.,
Q45. ஆங்கிலத்தில் “Homophone” என்பதன் பொருள் என்ன?
இரண்டு வெவ்வேறு சொற்கள், வெவ்வேறு எழுத்து தொகுப்புகள் கொண்டு, ஒரே ஒலி வடிவம் கொண்டதாக அமைவது. உதாரணம் : Know, No;
Q46. ஆங்கிலத்தில் “Heteronym” என்பதன் பொருள் என்ன?
இரண்டு சொற்கள், ஒரே வகையான எழுத்து தொகுப்பு கொண்டு, வெவ்வேறு பொருளைக் கொண்டதாக இருப்பது. உதாரணமாக : August -- ஆங்கில மாதம், ஒரு மரியாதைக்குரிய சொல்லாகவும் பயன்படுத்தப் படுகிறது. ( On 15th August, in the august presence of dignitaries .............. word with the same spelling as another but with a different meaning and pronunciation.
Q47. ஆங்கிலத்தில் “ Toponym “ என்பது என்ன ?
ஒரு இடத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டு உருவான சொல். உதாரணம்: பிள்ளையார்பட்டி.
Q48. ஆங்கிலத்தில் “Epithalamium” என்பது என்ன?
ஒரு திருமணத்தைப் போற்றி எழுதப்படும் கவிதை.
Q49. ஆங்கிலத்தில் பல லட்சம் வார்த்தைகள் இருப்பினும், ஒரே ஒரு சொல் மட்டும் ‘mt’ என்ற இரண்டு எழுத்துக்களுடன் முடிகிறது. அது என்ன?
Dreamt.
Q50. ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகள் மட்டுமே “dous” என முடிகின்றது. அவை யாவை?
Tremendous, Horrendous, Stupendous and Hazardous.
Q51. தட்டச்சு முறையில் இடது கையால் மட்டுமே அடிக்கக்கூடிய நீண்ட ஆங்கில சொல் எது?
A. Stewardesses.
Q52. ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ள, நீளமான சொல் (தொழில் சாராத) எது?
FLOCCINAUCINIHILIPILIFICATION – ஒரு பொருள்/விஷயத்தை பயனற்றது என அனுமானித்தல்.
Q53. ஆங்கில எழுத்து வரிசை மாறாமல் எழுதக்கூடிய நீளமான சொல் எது?
Almost.
Q54. ஆங்கிலத்தில் சில சொற்களைக் கொண்டு, உதாரணமாக -- Monkey, Dog, Red, Yellow, Culture, Phobia etc அதன் முன்போ, பின்போ சில சொற்களைச் சேர்த்து, ஒரு சொற்றொடரை அமைத்து, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளைக்கொண்டதாக அமைந்திருக்கும். அவற்றுள் சில உதாரணங்கள்:
MONKEY:
Have a Monkey on One’s Back: An addicts dependence on a drug or any such habit.
Make a Monkey Of: Some one made to look a fool.
Monkey With: To meddle fool or tinker/play tricks.
To Monkey: to initiate.
Monkey Business: Mischievous, dishonest act or behaviour.
Monkey Jacket: A short close fitting jacket.
Monkey Cap: A cap covering the entire head leaving the face side open.
Monkey Nut: Another name for peanut.
Monkey Suit: A type of male evening dress.
Monkey’s Wedding: Combination of rain and sunshine.
Monkey Tricks: Mischievous Behaviour.
DOG:
Dog Days: Hot period of Summer.
Dog Ear: To fold down the corner of a page.
Dog End: An informal name for cigarette ends.
Dogging: To pursue or follow like a dog.
Dog’s Life: A wretched existence.
Dog’s Chance: No Chance at all.
Dogged: Obstinately determined.
Dog in the Manger: A person who prevents others using something which has no use.
Dog Leg: A sharp bend or angle.
Dog Star: Another name for Star SIRIUS.
Dog Tired: exhausted.
YELLOW:
Yellow Belly: A sla
g for coward. Yellow Card: A way of showing caution for a player committing an offence.
Yellow Streak: A cowardly or weak trait.
Yellow Journalism: Journals seeking sensationalism, exaggeration for attraction.
Yellow Pages: A classified telephone directory.
Yellow Line: On the road-crossing an offence.
RED
Red Carpet Welcome: A welcome extended to royals, VVIPs on a red carpet.
Red Letter Day: A moment of history.
Red Tapism: A term used against delays in Government processes.
Red Hot: Strike it when it is red hot – meaning the appropriate time to strike.
CULTURE:
Agriculture: A practice or profession of farming.
Horticulture: Science of plant cultivation including the process of preparing soil for plantation.
Floriculture: Cultivation of ornamental and flowering plants.v
Api Culture: Practice of Bee Rearing.
Seri Culture: Silk farming.
Aquaculture: Farming of aquatic organisms.
Pisciculture: A practice of farming fish.
Monoculture: The practice of producing or growing one single crop over a wide area.
Mariculture : Cultivation of marine organisms.
Silviculture : Growing of trees and forests.
Q55. திராவிட மொழிகளில் அதிகமாக பேசப்படுவது எந்த மொழி?
தெலுங்கு.
Q56. திராவிட மொழிகளில் எது மிக இளமையானது (சமீபத்தியது) ?
மலையாளம் ( தமிழ் + சமஸ்கிருதம் கலந்து உருவான மொழி)
Q57. ரஷ்ய எழுத்து முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிரிலிக் Cyrillic.
Q58. மொழிவாரியாக, எந்த தீவு நாடு மிகவும் பல்வேறு வகைப்பட்டது?
பப்புவா நியூ கினி -- சுமார் 700 பேசும் மொழிகளைக் கொண்டது. 700 dialects.
Q59. உலகில் அதிகமாக பேசப்படும் மொழி எது?
சைனீஸ் மேண்டரின் -- Chinese Mandarin.
Q60. எஸ்கிமோ மக்கள் பேசும் மொழியின் பெயர் என்ன?
இனுக்டிடுட் -- Inuktitut.
Q61. எந்த இந்திய மொழிகள் வெளிநாடுகளில் கணிசமான மக்கள் தொகை கொண்டுள்ளது?
1. அஸ்ஸாமீஸ் Assamese – பூட்டான்
2. பெங்காலி Bengali - வங்காள தேசம்
3. போஜ்பூரி Bhojpuri – நேபாளம்
4. இந்தி Hindi – ஃபிஜி, கையானா, சுரினாம்
5. இந்துஸ்தானி Hindustani – மொரிஷியஸ்
6. பஞ்சாபி Punjabi – பாகிஸ்தான்
7. சிந்தி Sindhi – பாகிஸ்தான்
8. தமிழ் Tamil – மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீ லங்கா
Q62. ஆங்கிலத்தில் “Limerick” என்பது என்ன, இதில் புகழ் பெற்றவர் யார்?
ஐந்து வரிகள் கொண்ட நகைச்சுவை வசனம் கொண்டது. இங்கிலாந்தின் எட்வர்ட் லியர் என்பவர் இதில் புகழ் பெற்றவர்.
Q63. ஆங்கிலத்தில் “acrostic” பாடல்/கவிதை என்பது என்ன?
இவ்வகை பாடல்களின் வரும் வரிகளின் முதல் எழுத்துக்களை மட்டும் இணைத்தால் ஒரு அர்த்தமுள்ள சொல் உருவாகும்.
Q64. எந்த மொழியில் அதிகமான சொல்லகராதி உள்ளது?
ஆங்கிலம்
Q65. ஆங்கிலத்தில் “Majuscule” மற்றும் “Miniscule” என்பது எதைக்குறிக்கிறது?
Majuscule – பெரிய எழுத்துக்கள். பொதுவாக ஒரு சொல் தொடரின் முதல் எழுத்து. Upper case or Capital Letters. Miniscule – ஒரு சொல் தொடரின் பெரிய எழுத்துக்களை தொடர்ந்து வரும் சிறிய எழுத்துக்கள். Lower Case or Small Letters
Q66. கிரேக்க எழுத்து முறையின் கடைசி எழுத்து என்ன?
ஓமேகா -- Omega
Q67. ஆங்கிலத்தில் நிறுத்தற்குறிகள் punctuation பற்றிய விதிமுறைகள் அடங்கிய முதல் புத்தகம் எது?
Aldo Manuzzio, இத்தாலி.
Q68. இங்கிலாந்து நாட்டின் எந்த ஆசிய கலாச்சார, மொழி, வரலாற்று மேதை பல மொழிகளில் நிபுணராக திகழ்ந்தார்?
வில்லியம் ஜோன்ஸ் William Jones – 1746-1794 – இவர் 13 மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இதைத் தவிர்த்து 28 மொழிகளிலும் திறமை படைத்தவராக இருந்தார்.
Q69. ஆங்கிலத்தில் “hyperpolyglot” என அழைக்கப்படுபவர் யார்?
எவர் ஒருவர் பல மொழிகளில் புலமை பெற்றிருப்பவர்.
Q70. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். அவருடைய பெயர் என்ன?
Jose Rizal – 1861--1896 -- இவர் சுமார் 22 மொழிகளில் திறமை படைத்தவராக இருந்தார்.
Q71. பல மொழிகளை படித்து திறமை பெறுவதை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
Philology – மொழிகளைப் பற்றி படிப்பது.
Q72. எந்த இந்திய பிரதமர் பல மொழிகளில் புலமை பெற்ற மேதையாக இருந்தார்?
பி.வி. நரசிம்மராவ் -- P.V.Narasimha Rao – தாய் மொழி தெலுங்கு. இதைத் தவிர்த்து, ஆங்கிலம், இந்தி, உருது, ஒரியா, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, தமிழ், ஃப்ரெஞ்ச், அரபு, ஸ்பானீஷ், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மற்றும் பாரசீக மொழிகளையும் அறிந்திருந்தார்.
Q73. தென் ஆப்பிரிக்காவில் அதிகமாக பேசப்படும் மொழி எது?
Quecha.
Q74. ஆங்கிலம் உருவாகக் காரணமான இரண்டு அடிப்படை மொழிகள் யாவை?
லத்தீன் மற்றும் கிரேக்கம். Greek and Latin.
Q75. ஆங்கிலத்தில் “elison” எனப்படுவது எதைக் குறிக்கிறது?
ஆங்கிலத்தில் எழுதும் போது “we will” என்பதை “we’ll” என சுருக்கி எழுதுவது.
Q76. ஆங்கிலத்தில் அதிகமாக புழக்கத்தில் உள்ள எழுத்து எது?
E
Q77. கால் புள்ளி -- Comma (,) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுவது எந்த மொழியிலிருந்து எடுக்கப்பட்டது?
கிரேக்கம் -- Greek.
Q78. பல ஆசிய மொழிகளையும் சேர்த்து, பல மொழிகளில் மேதையாக விளங்கிய இத்தாலியர் யார்?
Giuseppe Tucci – 1894-1984 – திபெத்திய கலாச்சாரம் மற்றும் புத்த மத ஆய்வில் வல்லுநர். இவர் பல ஐரோப்பிய மொழிகள் மட்டுமின்றி ஆசிய மொழிகளான சமஸ்கிருதம், பெங்காலி, பாலி, ப்ரக்ரித், சீன மற்றும் திபெத்திய மொழிகளையும் அறிந்திருந்தார்.
Q79. உலகைச் சுற்றியுள்ள மொழிகள் -- LANGUAGES AROUND THE WORLD:
v
எண் மொழி பேசப்படும் நாடுகள்.
A
1.அல்பேனியன் Albanianஅல்பேனியா
2.அரபு Arabicஅல்ஜீரியா, பஹ்ரைன், சாட், கொமொரோஸ், டிபௌட்டி, எகிப்து, இரான், இராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், லிப்யா, மௌரிட்டானியா, மொராக்கோ, ஒமான், கத்தார், சௌதி அரேபியா, சராவி குடியரசு, சொமாலியா, சூடான், சிரியா, துனிசியா, துருக்கி, அரபு ஐக்கிய நாடுகள், யெமன்.
3.அர்மெனியன் Armenianஅர்மெனியா, ரஷ்யா, சிரியா
4.அஸெரி Azeriஅஸர்பைஜான்
5.அஸ்ஸாமீஸ் Assameseஅஸ்ஸாம், பூட்டான்.
6.அய்மாரா Aymaraபொலிவியா, பெரு
7.அஃப்பார் Affarடிபௌட்டி
8.அம்பாரிகா Ambarikaஎத்தியோப்பியா
9.அமெரிண்டியன் Amerindianமெக்ஸிகோ
10.அஸர்பைஜானி Azerbaijaniஅஸர்பைஜான், ரஷ்யா
11
12
B
13.பெர்பெர் Berberஅல்ஜீரியா, மொரொக்கோ
14.பண்ட்டு Bantuஅங்கோலா, கேபோன், மொஸாம்பிக், ஸாம்பியா
15.பெங்காலி Bengaliமேற்கு வங்காளம், கிழக்கிந்திய மாகாணங்கள், வங்காள தேசம்.
16.பெலொரஷ்யன் Belorussianபெலாரூஸ், ரஷ்யா
17.பல்கேரியன் Bulgarianபல்கேரியா
18.பூபி Bubiஇக்குவேடேரியல் கினி
19.பர்மீஸ் Burmeseமியான்மார்
20.பாசா Bhasaஇந்தோனேசியா
21.பம்பாரா Bambaraமாலி
22.பிஸ்லாமா Bislamaவனுவாட்டு
23.போஜ்பூரி Bhojpuriபீஹார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட்
24.பலூச்சி Baluchiபலுசிஸ்தான்/பாகிஸ்தான்
25.ப்ரஹ்வி Brahviபாகிஸ்தான்
26
27
C
28.கேடலான் Catalanஅண்டோரா, ஸ்பெயின்
29.சக்மா Chakmaவங்காள தேசம்
30.கொமொரன் Comoranகொமொரோஸ்
31.காங்கோ Congoகாங்கோ
32.செக் Czechசெக்
33.செச்சேவா Chechewaமாளவி
34.க்ரோஷியன் Croatianபோஸ்னியா & ஹெர்ஸெகோவினா, க்ரோஷியா, செர்பியா, மாண்டிநீக்ரோ
35.சைனீஸ் Chineseப்ரூணே, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்
36.சைனீஸ் மாண்டரின் Chinese Mandarin சீனா, தைவான்
37.க்ரையூலோ Criouloகேப் வெர்டி, கினி பிஸ்ஸாவ்
38.க்ரியோல் Creoleகையானா, ஹைத்தி
39
40
D
41.டரி Dariஆப்கானிஸ்தான்
42.ஸாங்கோ Dzongkaபூடான்
43.டேனிஷ் Danishடென்மார்க்
44.டச் Dutchநெதர்லாந்து, இந்தோனேசியா, சுரிநாம்
45.திவேஹி Divehiமாலத்தீவு
46.ஜெர்மா Djermaநிகர்
47. திங்கா Dinkaசூடான்
48.டுபியன் Dubianசூடான்
49
50
E
51.இஜிப்ஷியன் Egyptianஎகிப்து
52.எஸ்தோனியன் Estonianஎஸ்தோனியா
53
F
54.ஃப்ரெஞ்ச் Frenchஃப்ரான்ஸ், அல்ஜீரியா, அண்டோரா, பெல்ஜியம், பெனின், புருண்டி, பர்கினோ ஃபாஸோ, கம்போடியா, கேமரூன், கேனடா, சாட், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, கோட்டே டி ஐவரி, காங்கோ ஜனநாயக குடியரசு, டிபௌட்டி, டொமினிகா, கேபோன், க்ரெனடா, கினி, ஹைத்தி, லாவோஸ், லெபனான், லக்ஸம்பர்க், மாலி, மடகாஸ்கர், மொரிஷியஸ், மௌரிடானியா, மொனேகோ, நிகர், ரவாண்டா, சீஷெல்ஸ், ஸ்விட்சர்லாந்து, டோகோ, துனிசியா, வனுவாட்டு, வியட்நாம்.
55.ஃப்ளெமிஷ் Flemishபெல்ஜியம்
56.ஃபான் Fonபெனின்
57.ஃபாங் Fangஇக்குவேடோரியல் கினி
58.ஃபிஜியன் Fijianஃபிஜி தீவுகள்
59.ஃபின்னிஷ் Finnishஃபின்லாந்து
60.ஃபிலிப்பினோ Filippinoபிலிப்பைன்ஸ்
61
62
G
63.க்ரீக் Greekக்ரீஸ், அல்பேனியா, சைப்ரஸ்
64.ஜெர்மன் Germanஜெர்மனி, அஸர்பைஜான், ஆஸ்திரியா, பெல்ஜியம், லிச்சென்ஸ்டீன், லக்ஸம்பர்க், நமீபியா, ரொமானியா, ஸ்விட்சர்லாந்து.
65.குருங் Gurungபூடான்
66.ஜியார்ஜியன் Georgianஜியார்ஜியா, ரஷ்யா
67.கில்பெர்டீஸ் Gilberteseகிரிபாட்டி
68.குர்ரானி Gurraniபாராகுவே
69.கலியோயன் Galioianஸ்பெயின்
70.கேலிக் Gaelicஐக்கிய ராஜ்யம்
71
72
H
73.இந்தி Hindiவட இந்தியா, ஃபிஜி, கையானா, சுரிநாம்
74.ஹங்கேரியன் Hungarianஹங்கேரி, ரொமானியா
75.ஹீப்ரூ Hebrewஇஸ்ரேல்
76.இந்துஸ்தானி Hindustaniமொரிஷியஸ்
77.ஹன்சா Hansaநிகர், நைஜீரியா
78. ஹக்கா Hakka Dialectsதென் சீனா
79
80
I
81.இத்தாலியன் Italianஇத்தாலி, அர்ஜெண்டினா, மொனாகோ, சான் மரினோ, சோமாலியா, ஸ்விட்சர்லாந்து.
82.இஸ்ஸா Issaடிபௌட்டி
83.ஐஸ்லாண்டிக் Icelandicஐஸ்லாந்து
84.ஐரிஷ் Irishஅயர்லாந்து
85.இபா Ibaநைஜீரியா
86
87
J
88.ஜாவனீஸ் Javaneseஇந்தோனேசியா, சுரிநாம்
89.ஜப்பானீஸ் Japaneseஜப்பான், மார்ஷல் தீவுகள்
90
91
K
92.கிருண்டி Kirundiபுருண்டி
93.கெமெர் Khmerகம்போடியா
94.கிஸ்வாஹிலி Kiswahiliகாங்கோ ஜனநாயக குடியரசு, கென்யா, தன்ஸானியா
95.குர்திஷ் Khurdishஇரான், இராக், சிரியா, துருக்கி
96.கஸாக் Kazakhகஸகிஸ்தான்
97.கிகுயு Kikuyuகென்யா
98.கொரியன் Koreanகொரியா
99.கிர்கிஸ் Kirghizகிர்கிஸ்தான்
100.கரென் Karenமியான்மார்
101.கின்யார்வாண்டா Kinyarwandaரவாண்டா
102
103
L
104.லாட்சாம் Lhotsamபூடான்
105.லிங்காலா Lingalaகாங்கோ, காங்கோ ஜனநாயக குடியரசு
106.லாவோ Laoலாவோஸ், தாய்லாந்து
107.லாட்வியன் Latvianலாட்வியா
108.லித்துவேனியன் Lithuanianலித்துவேனியா, லாட்வியா
109.லக்ஸம்பர்கிஷ் Luxembourgishலக்ஸம்பர்க்
110.லோம்வே Lomweமாளவி
111.லுகாண்டா Lugandaஉகாண்டா
112.லத்தீன் Latinவட்டீகன்
113
114
M
115.மாக் Maghவங்காள தேசம்
116.மலாய் Malayப்ரூணே, சிங்கப்பூர், தாய்லாந்து
117.மண்டிங்கா Mandinkaகாம்பியா
118.மாசெடோனியன் Macedonianமாசெடோனியாv
119.மலகாசி Malagasyமடகாஸ்கர்
120.மால்டீஸ் Malteseமால்டா
121.மன்ஹாலீஸ் Manhaleseமார்ஷல் தீவுகள்
122.மொனெகாஸ்க் Monegasqueமொனேகோ
123.மங்கோலியன் Mongolianமங்கோலியா
124.மைத்ரி Maithriநேபாளம்
125.மாவோரி Maoriநியூசிலாந்து
126.மெலனேசியன் Melanesianபப்புவா நியூ கினி
127.மக்யார் Magyarஸ்லோவாகியா
128
129
N
130.நவ்ரூவன் Nauruanநவ்ரூ
131.நேபாளி Nepaliநேபாளம்
132.நார்வேஜியன் Norwegianநார்வே
133.ண்டிபெலா Ndebelaஜிம்பாப்வே
134
135
O
136.ஓரோமினா Orominaஎத்தியோப்பியா
137
138
P
139.பப்புவான் Papuanபப்புவா நியூ கினி
140.பலாவன் Palauanபலாவ்
141.பஷ்டோ Pushtoஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்
142.பஞ்சாபி Punjabiபஞ்சாப், இந்தியா, பாகிஸ்தான்
143.பெர்ஷியன் Persianஆப்கானிஸ்தான், இரான்
144.போர்ச்சுகீஸ் Portugueseபோர்ச்சுகல், அங்கோலா, ப்ரேசில், கேப் வெர்டி, கிழக்கு திமோர், கினி பிஸ்ஸாவ், மொஸாம்பிக், ஸாவ் தோமே & ப்ரிண்ஸிபே
145.படாய்ஸ் Patoisடொமினிகா, செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ்
146.பட்ஜின் இங்லீஷ் Pudgin Englishஇக்குவேடோரியல் கினி, சாலமன் தீவுகள்
147.புலார் Pularமௌரிடானியா
148.போலிஷ் Polishபோலாந்து
149
150
Q
151.க்வெச்சுவா Quechuaபொலிவியா, பெரு
152.க்வெச்சுவான் Quechuanஇக்குவேடார்
153
154
R
155.ரஷ்யன் Russianரஷ்யன், பெலாரூஸ், ஜியார்ஜியா, கஸகிஸ்தான் கிர்கிஸ்தான், லாட்வியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உக்ரெய்ன், உஸ்பெகிஸ்தான்.
156.ரொமானியன் Romanianரொமானியா, மால்டோவா
157.ராஸ்க் Rosqueஸ்பெயின்
158.ரோமாஞ்ச் Romanchஸ்விட்சர்லாந்து
159
160
S
161.ஸ்பானீஷ் Spanishஸ்பெயின், அண்டோரா, அர்ஜெண்டினா, பெலிஸ். பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, க்யூபா, டொமினிக்க குடியரசு, இக்குவேடார், எல்சல்வேடார், இக்குவேடோரியல் கினி, கௌத்தமாலா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிக்கரகுவா, பனாமா, பாரகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, வெனிசுலா.
162.செர்ப் Serbசெர்பியா & மாண்டிநீக்ரோ, க்ரோஷியா, பாஸ்னியா & ஹெர்ஸெகோவினா.
163.ஸெட்ஸ்வானா, சிஷோனாபோட்ஸ்வானா
164.சூடானிக் Sudanicபர்கினோ ஃபாஸோ
165.சாங்கோ Sanghoமத்திய ஆப்பிரிக்க குடியரசு
166.சோனிங்கே Soninkeமௌரிட்டானியா
167.ஷான் Shanமியான்மார்
168.ஸ்வீடிஷ் Swedishஸ்வீடன், ஃபின்லாந்து
169.செஸோதோ Sesothoலெசோதோ
170.சிந்தி Sindhiஇந்தியா, பாகிஸ்தான்
171.ஸ்வாஹிலி Swahiliரவாண்டா
172.சமோவன் Samoanசமோவா
173.ஸ்லோவக் Slovakஸ்லோவகியா
174.ஸ்லோவேனியன் Sloevenianஸ்லோவேனியா
175.சோமாலி Somaliசோமாலியா
176.சிங்களா Sinhalaஸ்ரீ லங்கா
177.சரண்டெங்கோ Sarantengoசுரிநாம்
178.ஸ்வாஸி Swaziஸ்வாஸிலாந்து
179.ஸ்காட்ஸ் Scotsஐக்கிய ராஜ்யம்
180.ஷோர்ரா Shorraஜிம்பாப்வே
181
182
T
183.டர்கிஷ் Turkishதுருக்கி, அஸர்பைஜான், பல்கேரியா, சைப்ரஸ், இரான்.
184.டேகே Tekeகாங்கோ
185.டெடும் Tetumகிழக்கு திமோர்
186.தமிழ் Tamilஇந்தியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மலேசியா, இந்தோனேசியா.
187.டிக்ரிகானா Tigriganaஎரிட்ரியா, எத்தியோப்பியா
188.தைவானீஸ் Taiwaneseதைவான்
189.தட்ஸிக் Tadzhikதஜிகிஸ்தான்
190.தாய் Thaiதாய்லாந்து
191.டோங்கன் Tonganடோங்கா
192. துவாளுவன் Tuvaluanதுவாளு
193.துருக்மெனிஷ் Turkmenishதுருக்மெனிஸ்தான்
194
195
U
196.உருது Urduபாகிஸ்தான், கையானா, இந்தியா
197.உக்ரெனியன் Ukrainianஉக்ரெய்ன், மால்டோவா, ரஷ்யா
198.உஸ்பெக் Uzbekஉஸ்பெகிஸ்தான், ரஷ்யா
199
200
V
201.வியட்நாமிஸ் Vietnameseவியட்நாம்
202
203
W
204.வெல்ஷ் Welshஐக்கிய ராஜ்யம்
205.ஒலோஃப் Wolofமௌரிட்டானியா, செனெகல்
206
Y
207.யொரூபா Yorubaபெனின், நைஜீரியா
208.யாவ் Yaoமாளவி
209
210
Z